Home Blog Page 3826

தோட்டப்பகுதிகளுக்கு கொரோனா பரவுவதை தடுக்க விசேட வேலைத்திட்டம்

இலங்கையில் கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறுகோரி அது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் மலையக பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

சுகாதார வைத்தியர்கள், சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராமசேவர்கள் இணைந்தே இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த மார்ச்சில் கொரோனா முதலாவது அலை ஏற்பட்டிருந்தவேளை அது பெருந்தோட்டப்பகுதிக்கு அச்சுறுத்தலாக அமையவில்லை. தோட்டப்பகுதியில் இருந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை. கடற்படை இரண்டாவது அலையின்போது அதன் தாக்கம் தோட்டப்பகுதிகளில் ஏற்படவில்லை.

எனினும், 3 ஆவது அலையாக மாறியுள்ள மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவலால் பெருந்தோட்டப்பகுதிகளிலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அத்தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் பலர் தமது இருப்பிடங்கள் இருக்கும் தோட்டப்பகுதிகளுக்கு வந்துள்ளனர்.

இவ்வாறு வந்தவர்களில் புபுரஸ்ஸ, நிவ்போரஸ்ட் பிரிவில் பெண்ணொருவருக்கு வைரஸ் தொற்று பரவியதையடுத்து 190 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், மஸ்கெலியா மொக்கா தோட்டம், நுவரெலியா – கந்தப்பளை உட்பட மேலும் சில தோட்டப்பகுதிகளில் மினுவாங்கொட ஊழியர்கள் வந்ததால் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகின்றது.

நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அறிவிக்குமாறும், முகக்கவசம் அணியுமாறும், வெளியில் அத்தியாவசிய சேவைக்கு வந்தால் சமூகஇடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருகின்றன.

க.கிசாந்தன்

மஸ்கெலியாவில் குளவிக்கொட்டு – ஆறுபேர் பாதிப்பு!

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மறே தோட்ட நூக்குவத்தை பிரிவில் இன்று மதியம் 12 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு தொழிலாளிகள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருக்கையில், மரத்தில் இருந்த குளவிக்கூடுமீது கழுகு மோதியதாலேயே குளவிகள் கலைந்துவந்து கொட்டியுள்ளன.இதனால் ஐந்து பெண் தொழிலாளர்களும், ஆணொருவரும் பாதிக்கப்பட்டனர்.
மஸ்கெலியா வைத்தியசாலையில் இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அத்துடன், குளவிக்கூடுகளை அகற்றி தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் கோருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 10 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 10 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,306 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஆயிரத்து 204 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 523 ஆக அதிகரித்துள்ளது.

இதில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவலாலேயே அதிகளவானோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கொழும்பிலிருந்து, பதுளை வந்த லொறி விபத்து – சாரதி படுகாயம்!

கொழும்பிலிருந்து பதுளைக்கு கம்பி மற்றும் இரும்பு வகைகளை ஏற்றிவந்துவந்த லொறியொன்று, பண்டாரவளை,குலத்தனை பகுதியில் இன்று (10) முற்பகல் 11 மணியளவில் விபத்துக்குள்ளானது.

விபத்தில் லொறி சாரதி லொறியில் நசிங்குண்ட நிலையில் மீட்கப்பட்டு, தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிரசிகிச்சைக்குற்படுத்தப்பட்டுள்ளார்.

பண்டாரவளைப் பொலிஸார் இவ் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். சாரதியின் நித்திரைகலக்கமே, இவ் விபத்திற்குகாரணமென்று தெரியவந்துள்ளது.

எம். செல்வராஜா, பதுளை

எஸ்.பி.பி.யின் நினைவாக பக்தி பாடல்கள் பாடி தீபம் ஏற்றிய பாடகர்கள்

மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவாக அருணாசலேஸ்வரர் கோவிலில் பின்னணி பாடகர்கள் மோட்ச தீபம் ஏற்றி பக்திப்பாடல்கள் பாடினர்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த சில தினங்களுக்கு முன் இறந்து விட்டார். அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த பின்னணி பாடகர்கள் அவரது நினைவாக மோட்ச தீபம் ஏற்றினர்.

நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியின் சகோதரியும், பின்னணி பாடகியுமான எஸ்.பி.சைலஜா, அவரது கணவர் சுபலேகா சுதாகர், பின்னணி பாடகர்கள் மனோ, அனுராதாஸ்ரீராம், நகைச்சுவை நடிகர் மயில்சாமி, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் பின்னணி பாடகர்கள், உள்ளூர் இசை கலைஞர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பாடகர்கள் எஸ்.பி.சைலஜா, மனோ, அனுராதாஸ்ரீராம் ஆகியோர் பக்தி பாடல்கள் பாடினர். பின்னர் அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

சட்டசபைத் தேர்தலில் வைகோ தனிவழி பயணம்

தமிழக சட்டசபைத் தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுகவுடன் கூட்டணி அமைத்து உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

‘புலமைப்பரீட்சைக்கு தோற்றவுள்ள 3 மாணவர்களுக்கு கொரோனா’ – பரீட்சை எழுத விசேட ஏற்பாடு

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மூன்று மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அத்துடன், மேலும் ஒரு மாணவர்களுக்கு வைரஸ் தொற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவர்கள் ஐவரும் பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகள் ஐ.டி.எச். வைத்தியசாலை வளாகத்தில் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாளை , சுகாதார பாதுகாப்புடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நேற்று மாத்திரம் 5,333 பீசீஆர் பரிசோதனைகள் – 10 ஆயிரம் பேர் தனிமையில்….

இலங்கையில் நேற்று மாத்திரம் 5 ஆயிரத்து 333 பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  பரிசோதனை முடிவுகள் இன்றும் நாளையும் வெளிவரும்.

அத்துடன், 89 தனிமைப்படுத்தல் முகாம்களில் 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தைமீறும் வகையில் செயற்பட்ட ஆறு பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவைமீறிய 97 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 27 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் சுமார் 130 பொலிஸார் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மினுவங்கொடை, கடவத்த மற்றும் மருதானை ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

‘லொக்டவுன்’ செய்யப்பட்டுள்ள நிவ்போரஸ்ட் தோட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் இல்லை’

“புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி, நீவ்போரஸ்ட் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களும், சுகாதார வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் அரசாங்கத்தின் சார்பில் பாராளுமன்றத்தில் உறுதியளித்தார். அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் நிவ்போரஸ்ட் தோட்டத்துக்கு வந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அத்தோட்டம் முடக்கப்பட்டுள்ளது. சுமார் 190 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இவர்களுக்கு தேவையான வாழ்வாதார மற்றும் சுகாதார ஏற்பாடுகளை செய்துகொடுக்குமாறு பாராளுமன்றத்தில் வைத்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தேன். முதல் நாள் ஆளுங்கட்சி பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும், மறுநாள் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவும் உறுதிமொழி வழங்கினர். தேவையான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும் எனவும் கூறினர். ஆனால் அம்மக்களுக்கு தேவையான ஏற்பாடுகள் இன்னும் செய்துகொடுக்கப்படவில்லை. இது கண்டிக்கதக்க விடயமாகும். உடனடியாக அரசாங்கம் செயற்படவேண்டும் என வலியுறுத்துகின்றேன்.” – என்றார்.

பசறையில் விபத்து – இருவர் காயம்

பதுளை, பசறை நகரில் இன்று (10 ) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அம்பத்தனையிலிருந்து பசறை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும், ஆட்டோவொன்றும் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே காயமடைந்துள்ளனர். பெண்ணொருவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றயவருக்கு சிறு காயமே ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள...

களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா!

0
களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா! கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னையா ஜெயக்குமாருக்கான வரவேற்பு நிகழ்வும், களுத்துறை மாவட்டத்தின் தமிழ் பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களையும், ஓய்வுநிலை அதிபர்களையும்...

கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்!

0
நூற்றாண்டு நோக்கிய பயணம்: கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்! தொலஸ்பாகை, கலமுதுனை தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பன நிகழ்வு எதிர்வரும் மே 2 ஆம் திகதி பாடசாலை...