Home Blog Page 3832

கம்பஹா மாவட்டத்தில் மேலும் 14 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்

கம்பஹா மாவட்டத்தில்  ஜா-எல, கந்தான மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவுகளில் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கம்பஹா,  கிரிந்திவெவல, தொம்பே, பூகொட, கனேமுல்ல, வீரகுல, வெலிவேரிய, மல்வத்துஹிரிபிட்டிய, நிட்டம்புவ, மீரிகம, பல்லேவெல, யக்கல, ஜாஎல மற்றும் கந்தான ஆகிய 14 பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று காலை முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய, மினுவாங்கொட, வெயாங்கொட  ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆக கம்பஹா மாவட்டத்தில் 17 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுலில் உள்ளது. 

ஊரடங்கில் அடங்கமறுத்த 64 பேர் கைது!

ஊரடங்கு உத்தரவைமீறிய 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

திவுலப்பிட்டிய, மினுவாங்கொட மற்றும் வெயாங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இருந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நேற்று முன்தினம் முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்று இரவு முதல் நேற்று இரவு வரையே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுமா? நாளை முடிவு!

பாராளுமன்ற, சபை நடவடிக்கைகளையும், ஆலோசனை குழு கூட்டங்களையும் தொடர்ந்து நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது தொடர்பில் நாளை (7) நடைபெறும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்  பாராளுமன்ற கட்டடத்தொகுதியிலுள்ள சபாநாயகர் அலுவலகத்தில் இன்று (6) நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கொரோனா தாக்கம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போதே கொரோனா சுகாதார நிலைமைகளை கணக்கில் எடுத்து நாளை தீர்மானம் எடுக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 124 பேருக்கு கொரோனா!

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுள் மேலும் 124 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு  கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அத்தொழிற்சாலையில் ஊழியர்களிடம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுவருகின்றது.

இப்பரிசோதனையின் மற்றுமொரு முடிவு சற்று நேரத்துக்கு முன்னர் வெளியானது. இதில்   ஆடை தொழிற்சாலையில் மேலும் 124 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டது.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த நேற்று 101 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இன்று இதுவரையில் 832 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 252 ஆக அதிகரித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவில் திருத்தம் செய்தது பொலிஸ் – 4 இடங்களில் மட்டும் அமுல் !

திவுலபிட்டிய ,மினுவாங்கொட,வெயாங்கொட, கம்பஹா ஆகிய நான்கு பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது

ஏற்கனவே குறிப்பிட்டபடி கம்பஹா பிரிவில் 15 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுலாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

‘எங்குசென்றிருந்தாலும் உண்மையை சொல்லுங்கள்’ – பிரதி பொலிஸ்மா அதிபர் கோரிக்கை

” கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியிருந்தவர்கள் எங்கு சென்றிருந்தாலும் பரவாயில்லை, உண்மையை சொல்லுங்கள். இரகசியம் பாதுகாக்கப்படும்.” – என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (06) கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா தொடர்புகளைத்தேடி பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் செல்லும்போது உரிய தகவல்களை வழங்குவதற்கு சிலர் தயங்குகின்றனர். ஏனெனில் சிலவேளைகளில் தவறான இடங்களுக்கு சென்றுள்ளனர். (உதாரணமாக சட்டவிரோத மது விற்பனை நிலையம்.)

இவ்வாறு சட்டவிரோதமான இடங்களுக்கு சென்றதால் வழக்கு தொடுக்கப்படலாம் என அஞ்சுகின்றனர். ஆனால் வழக்கு தொடுப்பது எமது நோக்கம் அல்ல,
அந்த இடத்தில் யார், யார் இருந்தார்கள் என்பது உட்பட தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு தேவையான தகவல்களை திரட்டுவதே பிரதான நோக்கமாகும்.

அத்துடன், எங்கு சென்றார்கள், எப்படி சென்றார்கள் போன்ற விபரங்களை எல்லாம் வெளியிடமாட்டோம். எனவே, அதிகாரிகளிடம் உண்மையை கூறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

அதேவேளை, ஊரடங்கு உத்தரவைமீறிய 50பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

பாடசாலையில் பரிசோதனை : 101 பேருக்கு கொரோனா தொற்று இல்லை…!

பாடசாலையில் பரிசோதனை : 101 பேருக்கு கொரோனா தொற்று இல்லை…!

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுடைய பெண்ணின் மகளின் பாடசாலையில் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனையில் 101 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

திவுலப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களில் 706 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த கொவிட் கொத்தில் முதல் முதலாக அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த 16 வயது மகள் கல்வி பயின்றுவந்த பாடசாலையில் உள்ள சக மாணவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடம் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், 101 பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

#srilanka #lka #COVID19SL

மனச் சோர்வில் உள்ளீர்களா? இதோ உங்களுக்கான Chatline

எயார்டெல் மற்றும் NIMH இலங்கையின் முதலாவது Chatlineஐ அறிமுகம் செய்கின்றன.

உணர்ச்சி ரீதியான மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்பவர்களுக்கு உதவியளிக்கும் வகையில் இலங்கை தற்போது Text-Based உதவிகளை வழங்குகிறது. எயார்டெல் லங்கா, தேசிய மனநல நிறுவனம் (NIMH) உடன் இணைந்து Text-Based தளமான 1926ஐ அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இது சிறந்த மனநிலையை ஊக்குவிப்பதற்கான ஒரு பிரத்தியேக உதவியளிக்கும் சேவை முறையாகும்.

இந்த சேவை எயார்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதுடன் பிற கையடக்க நெட்வேர்க்குகளின் வாடிக்கையாளர்களுக்கும் பெற்றுக் கொள்ள முடியும். தேவைப்படும் பொழுது ஒரு பாவனையாளர் 1926க்கு எளிய முறையிலான Text-Based தகவலை மட்டுமே அனுப்ப வேண்டும், இதற்கு NIMHஇன் மனநல நிபுணர் ஒருவர் உடனடியாக பதிலளிப்பார்.

2020 உலக மனநல தினமான ஒக்டோபர் 10ம் திகதியிலிருந்து இந்த உதவியளிக்கும் சேவைத் தளம் இயங்குவதுடன் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் கிடைக்கும் தொழில்முறை ஆலோசகர்களுடன் பாவனையாளர்களுக்கு இணைய முடியும்.

எயார்டெல்லின் ‘1926’ Text-based உதவி முறையானது அதிகமான இளைஞர்களை, தொழில் வல்லுநர்களை அணுகுவதற்கு ஊக்குவிக்கும் என நம்பப்படுகிறது, குறிப்பாக அவர்கள் மன அழுத்தங்களை அனுபவிக்கும் போது மற்றும் பாதுகாப்பான மற்றும் அநாமதேய சூழலில் அவர்களின் மனநல கவலைகளுக்கு வழிகாட்டுதல்கள் தேவைப்படலாம்.

எயார்டெல்லினால் நிர்மாணிக்கப்பட்ட Video உரையாடல் கருவியான Airtel Blue Jeansஇல் இணைந்து கொண்ட பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான Ashish Chandra, டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவது இளைஞர்களிடையே கற்றல், சமூக மயமாக்கல் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றை மாற்றியமைக்கின்றது. எங்களது இலச்சினை இலங்கையிலுள்ள இளைஞர்கள் மத்தியில் பெரிதும் ஈடுபாடுள்ளதால் அவர்கள் டிஜிட்டல் முறையில் தொடர்புகளை மேற்கொள்ள விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். பெரும்பாலும் நேரடியாகவோ அல்லது குறுந்தகவல்கள் மூலமாகவோ இதனை மேற்கொள்கின்றனர். எயார்டெல்லின், மனித தேவைகளுடன் தொழில்நுட்பத்தை சேர்ப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள இணைப்புக்களை உருவாக்குவதற்கான வழிகளை நாங்கள் எப்போதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம், இது அத்தகைய செயற்பாடுகளுக்கான ஒரு முயற்சியாகும்.” என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த NIMHஇன் சிரேஷ்ட ஆலோசகர் மனநல வைத்தியர் டொக்டர் புஷ்பா ரனசிங்க, “2018இல் ‘1926’ Text-based உதவி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் மக்களின் எண்ணிக்கையில் படிப்படியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, பதட்டம், மனச்சோர்வு மன அழுத்தம் மற்றும் பிற மனநலப் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு உதவியை நாடுவது மற்றும் அவர்களை மிக அருகிலுள்ள பராமரிப்பு மத்திய நிலையத்திற்கு அனுப்புவது என்பதாகும்.” என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “மொபைல் போன்கள் மற்றும் குறிப்பாக குறுந்தகவல்களை அனுப்புவது இளைஞர்களிடையே விருப்பமான தகவல் தொடர்பு சாதனமாக மாறியுள்ளது, இது தொலைபேசிகளுடன் தொடர்புபட்ட கலாச்சாரத்தை உருவாக்குகிறது. சுகாதார நிபுணர்களாக, தொழில்நுட்பத்தை நம்பியிருப்பது முன்பைவிட இப்போது முக்கியமாகவுள்ளது. அதன் முன்னேற்றங்களின் விளைவாக உதவி தேவைப்படுபவர்களுக்கு அணுகக்கூடிய மேம்பட்ட வழிகளைக் கண்டறிய முடிகிறது. ‘1926’ ஒரு Text-Based உதவி முறையை உருவாக்க உதவிய எயார்டெல்லுக்கு நாங்கள் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.” என தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது அதிக முதலீடுகள் மற்றும் அணுகல் மூலம் அனைவருக்கும் மன ஆரோக்கியத்தை நிவர்த்தி செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வின் போது மனநல ஆலோசகர் ஷானுகி டி அல்விஸ், சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் மனநல மருத்துவருமான டொக்டர் புஷ்பா ரனசிங்க, உளவியலாளர் நிவேந்திர உதுமான் மற்றும் எயார்டெல் லங்காவின் மனித வள தலைவர் கனிஷ்க ரனவீர ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அதிகரித்து வரும் பொதுவான சுகாதாரப் பிரச்சினைகள் காரணமாக ஏற்படும் கவலைகள் மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 2018ஆம் அண்டில் NIMHஇனால் ‘1926’ தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.

-முற்று-

Bharti Airtel Lanka வை பற்றி

ன2009 ஜனவரி 12ஆம் திகதி இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் (எயார்டெல் லங்கா) நிறுவனம் தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும். தமது வணிக செயற்பாடுகளை ஆரம்பித்த 2009ஆம் ஆண்டிலிருந்து 3 வருட குறுகிய காலப்பகுதிக்குள் எயார்டெல் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்த சேவையை வழங்கியதோடு இன்று நாடு முழுவதிலும் தமது சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு www.airtel.lk என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்.

#BhartiAirtelSri lanka #airtel

மோட்டர் வாகனத் திணைக்கள நாரஹேன்பிட்டி, வெஹஹெர அலுவலகங்களுக்கு பூட்டு

மோட்டர் வாகனத் திணைக்களத்தின் நாரா`னன்பிட்டி, வெஹஹெர அலுவலகங்கள் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

திவுலப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 701 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#srilanka #lka #COVID19SL

திவுலப்பிட்டிய ஊழியர்களில் மேலும் 139 பேருக்கு கொவிட் தொற்று

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 139 ஊழியர்கள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

அவர்களுடன் இன்றுமட்டும் 582 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்த 708 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்த சுமார் 1500 ஊழியர்களிடம் பீ.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#srilanka #lka #COVID19SL

 

 

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் கூலிப்படைகளைக் கொண்டு நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் சம்பவத்தை, கண்டி மாவட்ட காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வன்மையாகக் கண்டித்துள்ளார். அநீதிகளுக்கு எதிராக இரத்தினபுரி...

ஏணியிலிருந்து தவறி வீழ்ந்த மூதாட்டி உயிரிழப்பு! மாத்தளையில் துயரம்!!

0
மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணமுரேகம பகுதியில் ஏணியிலிருந்து தவறி வீழ்ந்த பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இவர் ரணமுரேகம பகுதியில் தங்கியிருந்த...