Home Blog Page 3831

‘கொரோனா எந்தவொரு தகவலையும் அரசு மறைக்கவில்லை’ – சுகாதார அமைச்சர்

” நாட்டை முடக்கவேண்டிய அவசில்லை தற்போது இல்லை. அத்துடன் கொரோனா தொடர்பில் எந்தவொரு தகவலையும் அரசாங்கம் மறைக்கவில்லை. ” – என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (7) கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இந்த விடயத்தை சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் தொடர்பில் அரசியலை மையப்படுத்தி அரசாங்கம் முடிவுகளை எடுப்பதில்லை. மாறாக சுகாதார நிபுணர்களால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை அடிப்படையாகக்கொண்டே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தற்போது நாட்டை முடக்கும் எண்ணம் இல்லை.

நேற்று மாத்திரம் 4 ஆயிரத்து 800 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா தொடர்பில் எந்தவொரு தகவல்களையும் அரசாங்கம் மறைக்கவில்லை. நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதை அடிப்படையாகக்கொண்டே ஊரடங்கு பிறப்பிக்கப்படுகின்றது. ” – என்றார்.

‘உயர்தரப்பரீட்சை திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும்’ – கல்வி அமைச்சர்

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை , 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை , 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக நடத்தப்படும். பரீட்சைகள் ஒத்திவைக்கப்படாது.

‘உயர்தர, புலமைப்பரிசில் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்’

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளும், புலமைப் பரிசில் பரீட்சையும் திட்டமிட்டபடி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

”கம்பஹா மாவட்டத்தில் பரீட்சை எழுதும் மாணவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும். பரீட்சை நிலையங்கள் மிகக் கவனமாக கண்காணிக்கப்படும். அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பரீட்சை எழுதச் செல்லும் மாணவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும். அத்துடன், வெளி மாவட்டங்களில் இருந்து கம்பஹா மாவட்டத்திற்கு பரீட்சை எழுத வரும் மாணவர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும். அத்துடன், பரீட்சை நிலையங்கள் மிகக் கவனமாக தூய்மைப்படுத்தப்படும். அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்கும் ஏற்பாடுகள் செய்வதற்கான நடவ க்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.” என்று கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

எதிர்வரும் 11ஆம் திகதி 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 190 பேருக்கு கொரோனா!

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுள் மேலும் 190 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அத்தொழிற்சாலையில் ஊழியர்களிடம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுவருகின்றது.

இப்பரிசோதனையின் மற்றுமொரு முடிவு சற்று நேரத்துக்கு முன்னர் வெளியானது. இதில் ஆடை தொழிற்சாலையில் மேலும் 190 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டது.

மினுவாங்கொட கொத்தணி பரவல்மூலம் இதுவரையில் ஆயிரத்து 22 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது.

சீதுவ பொலிஸ் பிரதேசத்திலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்

கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட சீதுவ பொலிஸ் பிரிவிலும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி கம்பஹா மாவட்டத்தில் தற்போது 18 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.

‘தோட்டப்பகுதிகளுக்கும் கொரோனா பரவும் அபாயம்’ – சபையின் கவனத்தை ஈர்த்தார் வேலுகுமார் எம்.பி.

” நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில் தோட்டப்பகுதிகளுக்கும் வைரஸ் பரவக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. எனவே, இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, தேவையான சுகாதார ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.” – என்று என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தினார்.

அத்துடன், கொவிட் – 19 தாக்கத்தால் புபுரஸ்ஸ, லெவலன்ட் தோட்டத்திலுள்ள நிவ்போரஸ்ட் பிரிவு முடக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 28 குடும்பங்களுக்குமேல் வாழ்கின்றன. எனவே, அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (07) விசேட வினாவொன்ற எழுப்பி கருத்து வெளியிட்ட வேலுகுமார் எம்.பி., இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

” கண்டி மாவட்டத்தில், தொழுவ பிரதேச செலயகத்துக்குட்பட்ட லெவலன்ட் தோட்டத்தில் நிவ்போரஸ்ட் பிரிவு ‘லொக்டவுன்’ செய்யப்பட்டுள்ளது. ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் இருவருக்கு வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இத்தோட்டத்தில் சுமார் 28 குடும்பங்கள் வாழ்கின்றனர்.

கொவிட் – 19 முதல் அலையின்போது தோட்டப்பகுதிகளுக்கு ஆபத்து ஏற்படவில்லை. எனினும், தற்போது எச்சரிக்கைநிலை உருவாகியுள்ளது. தோட்டப்பகுதிகளில் உரிய சுகாதார ஏற்பாடுகளும் இல்லை.

எனவே, இது தொடர்பில் கலந்துரையாடி விசேட வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா, தோட்டப்பகுதிகளில் உள்ளவர்கள் பொருளாதார ரீதியிலும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றனர். ‘லொக்டவுன்’ செய்யப்பட்டால் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதா”- என்றார்.

இதற்கு சுகதார அமைச்சின் சார்பிலோ அல்லது பெருந்தோட்டத்துறை அமைச்சின் சார்பிலோ உரிய பதில் வழங்கப்படவில்லை. மாறாக ‘மக்களுக்கு தேவையான ஏற்பாடுகள்’ செய்துகொடுக்கப்படும் என்று ஆளுங்கட்சி பிரதமகொறடா ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ சமாளிப்புபோக்கில் பதிலளித்தார்.

பிரவுன்லோ தோட்ட வீதி எப்போது புனரமைக்கப்படும்?

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரவுன்லோ தோட்ட வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

மேற்படி தோட்டத்தில் 49 குடியிருப்புகள் காணப்படுகின்றன. 130 இற்கும் மேற்பட்டோர் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் இவ்வீதியையே பயன்படுத்திவருகின்றனர்.

இவ்வீதி புனரமைக்கப்படாமையால்  மழைக் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கும் சேற்றில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இப்பாதையை பல அரசியல் கட்சி தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என அனைவரும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். எனினும், புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என் மக்கள் தெரிவிக்கின்றனர்.

”  நகரத்திற்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்து, திரும்பும் போது ஆட்டோவோன்றை வாடகைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமானால் 500 ரூபாவுக்கு மேல் செலுத்தவேண்டியுள்ளது.  எனவே, வீதியை புனரமைத்து தருமாறு கோருகின்றோம்.” – எனவும் குறிப்பிட்டனர்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

வெற்றிக்கனியை ருசித்தது மும்பை அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானை பந்தாடிய மும்பை அணி 4ஆவது வெற்றியை சுவைத்தது.

8 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. அபுதாபியில் நேற்றிரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த மும்பை அணி பவுண்டரியுடன் கணக்கை தொடங்கியது.

கேப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் (4.5 ஓவர்) சேர்த்து வலுவான தொடக்கம் அமைத்து தந்தனர். டி காக் 23 ரன்களில் கேட்ச் ஆனார். சிறிது நேரத்தில் ரோகித் சர்மா (35 ரன், 23 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஸ்ரேயாஸ் கோபாலின் சுழலில் சிக்கினார். அதே ஓவரில் இஷான் கிஷனும் (0) ஆட்டம் இழந்தார்.

இதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவுடன், குருணல் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று மட்டையை சுழட்டிய சூர்யகுமார் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு துரத்தினார். என்றாலும் ரன்வேகம் சற்று மந்தமானது. தடுமாற்றத்துடன் ஆடிய குருணல் பாண்ட்யா 12 ரன்னில் (17 பந்து) வெளியேறினார். 10-ல் இருந்து 14-வது ஓவருக்குள் மும்பை அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆனால் இறுதி கட்டத்தில் மும்பை பேட்ஸ்மேன்கள் அதிரடியில் வெளுத்து கட்டினர். சூர்யகுமாரும், ஹர்திக் பாண்ட்யாவும் தொடுத்த தாக்குதலில் மும்பை அணி 190 ரன்களை கடந்தது. 20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் 68 ரன்கள் திரட்டினர்.

ஐ.பி.எல்.-ல் தனது அதிகபட்ச ரன்களை பதிவு செய்த சூர்யகுமார் யாதவ் 79 ரன்களுடனும் (47 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 30 ரன்களுடனும் (19 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். அதிரடி புயல் பொல்லார்ட்டுக்கு களம் காண வாய்ப்பே கிடைக்கவில்லை. அவரை முன்கூட்டியே இறக்கியிருந்தால் மும்பை அணி 200 ரன்களை கடந்திருக்கலாம்.

அடுத்து 194 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (0) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய கேப்டன் ஸ்டீவன் சுமித் (6) பும்ராவின் பந்து வீச்சை விளாச முயற்சித்த போது அது பேட்டில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது. தொடர்ந்து சஞ்சு சாம்சன் (0), லோம்ரோர் (11 ரன்) ஆகியோரும் நடையை கட்டினர்.

இதற்கு மத்தியில் மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் போராடினார். ராகுல் சாஹர், குருணல் பாண்ட்யா ஆகியோரது சுழற்பந்து வீச்சில் 4 சிக்சர்களை பறக்க விட்டார். இதனால் ராஜஸ்தானுக்கு லேசான நம்பிக்கை பிறந்தது. ஸ்கோர் 98 ரன்களை எட்டிய போது ஜோஸ் பட்லர் (70 ரன், 44 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) பேட்டின்சனின் ஓவரில் பந்தை தூக்கியடித்தார். அதை எல்லைக்கோடு அருகே பொல்லார்ட் தட்டிவிட்டு சூப்பராக கேட்ச் செய்தார். அத்துடன் ராஜஸ்தானின் வெற்றி வாய்ப்பு சிதைந்தது.

முடிவில் ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 136 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் பும்ரா 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஐ.பி.எல்.-ல் அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். டிரென்ட் பவுல்ட், பேட்டின்சன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மும்பை அணிக்கு இது 4-வது வெற்றியாகும். இதன் மூலம் மறுபடியும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வியாகும்.

‘இவ்வாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி’- உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை

” இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது.” – என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் தற்போது 9 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு போன்ற கட்டுபாடுகளை பல்வேறு நாடுகள் விதித்த போதிலும் தொற்று பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக ஊரடங்கு விதித்த நாடுகளும் பின்னர் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொண்டன. இதனால், தடுப்பூசி எப்போது கிடைக்கும் என பெரும் எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உள்ளது.

தடுப்பூசி கண்டுபிடிக்கும் மும்முரமாக நடந்து வருகிறது. மருத்துவ பரிசோதனையின் இறுதி கட்டங்களில் உள்ள தடுப்பூசிகள் எப்போது பொது பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்பதே பல நாடுகளின் ஏக்கமாக உள்ளது. இந்த நிலையில், இந்நிலையில், கொரோனா தடுப்பூசி எப்போது என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி தயாரான உடன் அவை அனைவருக்கும் சமமான விகிதத்தில் விநியோகம் செய்ய உலக நாடுகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி நிச்சயம் தேவைப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது” என்றார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 9 மாதங்களில் 6,063 முறைப்பாடுகள்!

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு  2020 ஜனவரி முதல் செப்டம்பர்வரையான காலப்பகுதியில் 6 ஆயிரத்து 63 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (6) தேசிய மக்கள் சக்தியின் எம்.பி. கலாநிதி ஹரினி அமரசூரியவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

” இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள 6 ஆயிரத்து 63 முறைப்பாடுகளில் 3 ஆயிரத்து 900 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளன. இவற்றில் 330 முறைப்பாடுகள் தொடர்பிலேயே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தவதற்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ” – என்றும் பீரிஸ் குறிப்பிட்டார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

செம்மணி மனிதப் புதைகுழி: 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்!

0
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று காலை 9 மணியளவில் குறித்த வழக்கு விசாரணைக்கு...

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் கூலிப்படைகளைக் கொண்டு நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் சம்பவத்தை, கண்டி மாவட்ட காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வன்மையாகக் கண்டித்துள்ளார். அநீதிகளுக்கு எதிராக இரத்தினபுரி...

ஏணியிலிருந்து தவறி வீழ்ந்த மூதாட்டி உயிரிழப்பு! மாத்தளையில் துயரம்!!

0
மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணமுரேகம பகுதியில் ஏணியிலிருந்து தவறி வீழ்ந்த பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இவர் ரணமுரேகம பகுதியில் தங்கியிருந்த...