Home Blog Page 3830

‘கொரோனாவால் 15 கோடி பேர் வறுமைக்குள் தள்ளப்படுவர்’ – உலக வங்கி தகவல்

கொரோனாவால் அடுத்த ஆண்டுக்குள் உலகமெங்கும் 15 கோடி பேர் கொடிய வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் கோரப்பிடியில் உலகம் சிக்கி தவித்து வருகிறது. 3 கோடியே 63 லட்சத்து   91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  இந்த தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.  இது மட்டுமின்றி தொடர் ஊரடங்கு, பொதுமுடக்கத்தால் தொழில், வர்த்தகம் முடங்கின. பல கோடி பேர் வேலை இழப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அடுத்த ஆண்டுக்குள் உலகமெங்கும் 8.8 கோடி பேர் முதல் 15 கோடி பேர் வரை கொடிய வறுமைக்கு ஆளாவார்கள் என்று உலக வங்கி கூறுகிறது. பொருளாதார பாதிப்பின் எதிரொலிதான் இது.

கொரோனா மட்டும் தாக்காமல் இருந்திருந்தால் நடப்பு ஆண்டில் வறுமை விகிதம் 7.9 சதவீதமாக குறைந்திருக்கும் என்றும் உலக வங்கி சொல்கிறது.

இதையொட்டி உலக வங்கி தலைவர் டேவிட் மாஸ்பாபாஸ் கூறுகையில், “கொரோனா வைரஸ் பெருந்தொற்றும், உலகளாவிய பொருளாதார மந்த நிலையும் உலக மக்கள் தொகையில் 1.4 சதவீதத்தினரை கொடிய வறுமையில் தள்ளிவிடும்” என குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும்போது, “இந்த கடுமையான பின்னடைவை மாற்றி அமைத்து, வளர்ச்சியில் முன்னேற்றம், வறுமை குறைப்பு போன்றவற்றை அடைவதற்கு கொரோனாவுக்கு பின்னர் உலக நாடுகள் மாறுபட்ட பொருளாதாரத்துக்கு தயாராக வேண்டும். மூலதனம், தொழிலாளர் திறன் மற்றும் புதுமைகளை புதிய தொழில்கள் மற்றும் துறைகளில் செல்ல அனுமதிக்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே அதிக வறுமை விகிதங்களை கொண்ட நாடுகளில்தான் புதிய ஏழைகள் இருப்பார்கள் என்றும், நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் கணிசமான மக்கள் தீவிர வறுமைக்கோட்டுக்கு கீழே செல்வதை காண முடியும் என்றும் உலக வங்கி கூறுகிறது.

இதையொட்டிய அறிக்கையில் இந்தியாவுக்கான சமீபத்திய தரவுகள் இல்லாததால், அது உலகளாவிய வறுமையை கண்காணிக்கும் திறனை கடுமையாக தடுக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

தீவிர ஏழைகளை பெருமளவு கொண்ட பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியா குறித்த சமீபத்திய தகவல்கள் இல்லாமல் இருப்பது, உலகளாவிய வறுமையின் தற்போதைய மதிப்பீடுகளை சுற்றி கணிசமான நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது என்று உலக வங்கி குறிப்பிடுகிறது.

பயனுள்ள அணுகுமுறைகளாலும் மற்றும் சமூக உறுப்பினர்களின் திறன்களாலும், அர்ப்பணிப்பாலும், தாராவியில் கொரோனா வைரசின் அதிவேக பரவலை மாநகராட்சி அதிகாரிகளால் தடுக்க முடிந்தது எனவும் உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.

கோட்டா, மஹிந்தவுடன் நேரில் பேச சீன உயர்குழு இன்று தீடீர் பயணம்!

சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்குழு உறுப்பினருமான yang jiechi தலைமை யிலான உயர் மட்டக்குழு ஒன்று இன்று கொழும்பு வரவுள்ளது.

இக்குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை மட்டும் சந்திக்கும் எனவும், சர்வதேச தொற்று நோயாக உருவெடுத்துள்ள கொரோனாவை எதிர் கொள்வது மற்றும், பொருளாதார உறவுகளைப் புதுப்பிப்பது போன்ற இரு தரப்பு விடயங்களையிட்டு ஆராய்வதற்காகவே இந்தக் குழு அவசர
மாக இலங்கை வருகின்றது.எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாளை ஜனாதிபதியையும் பிரதமரையும் இக்குழுவினர் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பைத் தவிர வேறு இடங்களுக்கு இவர்கள் செல்லமாட்டார்கள்எனவும், ஜனாதிபதி, பிரதமரைத் தவிரவேறு சந்திப்புக்களில் ஈடுபடமாட்டார்கள்எனவும் தெரிவிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சினால் தெரிவிக்கப்படும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகளுடனேயே இவர்களுடைய விஜயம்இடம்பெறும். கொரோனாத் தொற்று பரவத் தொடங்கியதையடுத்து இலங்கைக்கு வரும் முதலாவது வெளிநாட்டு உயர்ட்டக்குழு இது என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவிடமும் மண்டியிட்டது சென்னை அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது.

13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அபுதாபியில் அரங்கேறிய 21-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதின.

சுப்மான் கில்லுடன் தொடக்க வீரராக ராகுல் திரிபாதி இறக்கப்பட்டார். கில் 11 ரன்னிலும், அடுத்து வந்த நிதிஷ் ராணா 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு களம் புகுந்த சுனில் நரின், பிராவோவின் பந்து வீச்சில் சிக்சர், பவுண்டரி அடித்த திருப்தியோடு நடையை கட்டினார். நரின் (17 ரன்) தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு பக்கம் ஜடேஜா பாய்ந்து விழுந்து பிடித்தார். லைனை தொடுவதற்குள் பந்தை தூக்கிபோட அதை பிளிஸ்சிஸ் கேட்ச் செய்தார்.

விக்கெட் சரிவுக்கு மத்தியில் திரிபாதி நிலைத்து நின்று விளையாடி கொல்கத்தாவின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். அத்துடன் ஐ.பி.எல்.-ல் தனது 5-வது அரைசதத்தையும் கடந்தார். மறுபக்கம் நரினுக்கு பிறகு வந்த அபாயகரமான வீரர்கள் இயான் மோர்கன் (7 ரன்), ஆந்த்ரே ரஸ்செல் (2 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.

விக்கெட் கீப்பர் டோனியிடம் சிக்கினர். இதனால் கொல்கத்தாவின் ரன்வேகம் சற்று தளர்ந்தது. திரிபாதி தனது பங்குக்கு 81 ரன்கள் (51 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசிய நிலையில் கேட்ச் ஆனார். கடைசி கட்டத்தில் கம்மின்ஸ் (17 ரன்) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை.

20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 167 ரன்களுக்கு அல்-அவுட் ஆனது. சென்னை தரப்பில் வெய்ன் பிராவோ 3 விக்கெட்டும், சாம் கர்ரன், ஷர்துல் தாகூர், கரண் ஷர்மா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பிராவோவுக்கு நேற்று 37-வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து 168 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டு பிளிஸ்சிஸ்சும், ஷேன் வாட்சனும் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 30 ரன்கள் எடுத்து இவர்கள் பிரிந்தனர். பிளிஸ்சிஸ் 17 ரன்களில் (10 பந்து, 3 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் வாட்சனும், அம்பத்தி ராயுடும் கைகோர்த்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர். ஸ்கோர் 99 ரன்களை (12.1 ஓவர்) எட்டிய போது அம்பத்தி ராயுடு 30 ரன்களில் வெளியேறினார். அடுத்து கேப்டன் டோனி வந்தார்.

தொடர்ந்து 2-வது அரைசதத்தை பூர்த்தி செய்த வாட்சன் 50 ரன்களில் (40 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) சுனில் நரினின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் வாட்சனுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. அவரது விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

சிறிது நேரத்தில் டோனி (11 ரன்) வருண் சக்ரவர்த்தியின் சுழலில் கிளீன் போல்டு ஆனார். சாம் கர்ரனும் (17 ரன்) ஏமாற்றினார். இதனால் சென்னை அணிக்கு நெருக்கடி உருவானது. கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது.

கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா களத்தில் இருந்தனர். பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஆந்த்ரே ரஸ்செல் கச்சிதமாக வீசி தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார். 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 157 ரன்களே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜாதவ் 7 ரன்னுடனும், ஜடேஜா 21 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

6-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 4-வது தோல்வியாகும். கொல்கத்தா அணிக்கு 3-வது வெற்றியாகும்

 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிசிஆர் பரிசோதனை – ஹரின் கோரிக்கை

” அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்.” – என்று சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவிடம், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹரின் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்தார்.

ஹரின் பெர்ணான்டோ தன்னை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டமை தொடர்பில் சபையில் நேற்று (7) ஆளுங்கட்சி எம்.பியால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் இடம்பெறும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையில் எனக்கு அதிருப்தி இல்லை. நேற்றுகூட 900 பரிசோதனைதான் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு முன்வரவில்லை. இந்நிலையில் நான் முன்வந்து, அந்த பரிசோதனைகளை செய்யுங்கள், வலிக்காது என்ற தகவலை மக்களுக்கு வழங்கியுள்ளேன். தேவையென்றால் கேள்வி எழுப்பிய எம்.பிக்கு பிரசோதனை அறிக்கையின் முடிவையும் அனுப்புகின்றேன்.

நாட்டில் தற்போது தனியார் வைத்தியசாலைகளிலும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. இது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. அரச வைத்தியசாலைகளில் மட்டுமே பிசிஆர் பரிசோதனை நடக்கின்றது என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு இல்லை. தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்றது. வீடுகளுக்கே வந்து மாதிரிகளை பெறுகின்றனர்.  அதற்கு கட்டணம் செலுத்தவேண்டும்.

அதேவேளை,  அனைத்து எம்.பிக்களையும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

பாடசாலை மாணவி தற்கொலை – மஸ்கெலியாவில் சோகம்!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன சோளங்கந்தை தோட்டத்தில் பாடசாலை மாணவியொருவர் இன்று (7) முற்பகல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சோளங்கந்தை தோட்டத்தை சேர்ந்த 19 வயதுடைய தனுசியா என்ற உயர் மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இம்முறை உயர்தரப்பரீட்சைக்கு அவர் தோற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
குறிப்பிடத்தக்கது.

குறிப்பு – (எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை என்பது தீர்வல்ல, அது கோழைத்தனமான முயற்சி – முடிவாகும். எனவே, வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினை, எப்படிவந்தாலும் எதிர்நீச்சல் போடுவதற்கு நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.) 

‘போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பதற்கான பொறிமுறை பலப்படுத்தப்படும்’

கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்தை தடுப்பது தொடர்பில் காணப்படும் பொறிமுறையை பலப்படுத்துவதற்கும், விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதில் காணப்படும் மோசமான சுகாதார நிலைமைகள் தொடர்பில் சமூகத்தை விழிப்பூட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்   பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (2020.10.07) கேள்வி நேரத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கஞ்சா பயன்பாட்டின் உடலியல், உளவியல், சமூக மற்றும் பிற பாதகமான விளைவுகள் தொடர்பான செய்தியை மக்களுக்கு கொண்டு செல்வதற்கு தேசிய போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டம் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அத்துடன், சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் கஞ்சா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்கான செயற்பாடுகள் மற்றும் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் எதிர்பார்ப்பதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

மதுபானம், சிகரெட் மற்றும் போதைப்பொருள் என்பன இன்றளவில் உலகம் முழுவதும் பரவிவரும் ஒரு தொற்றாகும். எவ்வாறாயினும் இதுவரை சுகாதார காரணங்கள் மற்றும் பொருளாதார தாக்கத்தை உணர்ந்து கொள்வதன் மூலம் தற்போதைய சமூகம் சிகரெட் பாவனையிலிருந்து ஒதுங்கி காணப்படுவது மகிழ்ச்சியான விடயம். புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபை உள்ளிட்ட தரப்பினரின் நீண்டகால முயற்சியின் பலனாக இன்றளவில் சிகரெட் பாவனை குறைந்துள்ளமையை சமூகத்தில் காணக்கூடியதாக உள்ளது.

சிகரெட் விற்பனை வீழ்ச்சியடைந்தமை தொடர்பில் சான்றுகள் இருப்பினும், அதற்கு உள்நாட்டு மட்டத்தில் சிகரெட்டிற்கு பதிலாக மாற்று உற்பத்தி தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இதுவரை அறியப்படாததுடன், கஞ்சாவினை அதற்கான சிறந்ததொரு மாற்றீடாக தெரிவுசெய்வது தொடர்பாகவும் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

எனினும், தற்போது இணையம் மற்றும் சமூக வலைத்தள பயன்பாட்டின் ஊடாக கஞ்சா தொடர்பில் சாதாரண மக்கள் மத்தியில் நேர்மறையான அணுகுமுறைகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நபர்கள் செயற்பட்டு வருகின்றமை காணக்கூடியதாக உள்ளது.

கஞ்சாவினை சட்டபூர்வமாக்குவதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கும் இடமளிக்கப்படவில்லை. பல்வேறு நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மருத்துவ நடவடிக்கைகளுக்காக கஞ்சா வளர்ப்பிற்கும், இறக்குமதி செய்வதற்கும் கோரியுள்ளனர். அதற்கு மேலதிகமாக ஆயுர்வேத திணைக்களத்தின் ஊடாகவும் அவர்களுக்கு தேவையான உள்நாட்டு ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பிற்கு உரிய தரத்துடனான கஞ்சா பெற்றுக் கொள்வதற்கு அதனை வளர்ப்பதற்கு அனுமதி கோரியுள்ளனர்.

அதனால், 1984 ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க ஆபத்தான ஒளடத கட்டுப்பாட்டு தேசிய சபை சட்டத்தின் 8ஆவது பிரிவிற்கமைய இலங்கையில் கஞ்சா செடி வளர்ப்பு மற்றும் அது தொடர்பான உற்பத்திகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு மற்றும் அதன் மோசமான தாக்கங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நிபுணர் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் கல்விசார் வேலைத்திட்டங்களை பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், பணியிடங்கள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சமூக குழுக்களுக்கு விழிப்பூட்டும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களுக்கான விழிப்புணர்வு செயல்திட்டங்களும் இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.” – என்றார்.

‘புபுரஸ்ஸ, நிவ்போரஸ்ட் தோட்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று’!

கம்பளை, புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி, நிவ்போரஸ்ட் டிவிசனில் ‘மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை’ பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. பிசிஆர் பரிசோதனைமூலம் வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டது.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இரு பெண்கள்,  கம்பளை, புபுரஸ்ஸ – மணிக்கட்டி, நிவ்போரஸ்ட் டிவிசனில் உள்ள தமது வீடுகளுக்கு சில நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் வந்துள்ளனர்.

இந்நிலையில் மினுவாங்கொடை கொத்தணி பரவலையடுத்து இவ்விரு பெண்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். அத்துடன், நிவ்போரஸ்ட் டிவிசனும் முடக்கப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவு இன்று வெளியானது. இதில் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

நிவ்போரஸ்ட் பகுதியில் இருந்து எவரும் வெளியில் செல்வதற்கும், வெளியிடங்களில் இருந்து அப்பிரிவுக்கு வருவதற்கும் ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது. நிவ்போரஸ்ட் டிவிசனில் சுமார் 28 குடும்பங்கள் வாழ்வதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இப்பகுதி தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்.

ஆடைத் தொழிற்சாலைக்கு இந்தியர் வரவில்லை : மூலத்தைத் தேடுவதிலும் சிக்கல்கள் : இராணுவத் தளபதி

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலைக்கு இந்தியர்கள் வந்ததாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று இராணுவத் தளபதி லெடினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, எனினும், இதற்கான `மூலத்தை’க் கண்டறிய முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இதேவேளை, குறித்த ஆடைத் தொழிற்சாலைக்கு அண்மையில் இந்தியாவில் இருந்து அதிகாரிகள் சிலர் வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து இராணுவத் தளபதியிடம் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, இந்தியர் வந்ததாக எவ்விதத் தகவல்களும் இல்லை என்று தெரிவித்தார்.

அத்துடன், கொவிட் கொத்து ஒன்று ஏற்பட்டுள்ளதால் எங்கு, யாரிடமிருந்து இந்த தொற்று பரவியது என்பதைக் கண்டறிவது சவால்மிக்கது என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் சிலர் கடந்த 21ஆம் திகதி முதலே இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகளுக்காக விடுமுறையில் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அடுத்த கூட்டு ஒப்பந்தமும் வரப்போகின்றது, 1000 ரூபா எங்கே? திகா கேள்வி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். அத்துடன் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைக்கப்படவேண்டும் – என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று (7) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“இன்று நாட்டு மக்கள் தாங்க முடியாத வாழ்க்கைச் சுமையுடன் கஸ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.நாட்டு மக்களின் வருமான வழி குறைந்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக நான் பிரதிநிதித்துவப் படுத்தும் மலையக மக்கள்அத்தியாவசியபொருட்களின் விலை உயர்வு காரணமான பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அந்த மக்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தது.கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் 1000 ரூபா தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.

பொங்கலுக்கு கிடைக்கும் தீபாவளிக்கு கிடைக்கும் என்றார்கள். தற்போது இந்த மக்களுக்கு பொங்கலும் தீபாவளியும் இல்லாது போகும் நிலை வந்துள்ளது.கம்பனிகள் தோட்டங்களை முறையாக பராமரிப்பதில்லை. அதனால் பல தோட்டங்களில் தேயிலை மலைகள் மூடப்பட்டுள்ளன.

சிறுத்தை உள்ளிட்ட மிருகங்கள் மக்களின் வீடுகளை நோக்கி வருவதை அவதானிக்க முடிகிறது.வேலை நாட்கள் குறைந்துள்ளன. தொழிலாளர்களுக்கு ஒரு கிலோ கொழுந்துகுறைந்தாலும் முழுநாள் பெயர் வழங்கப்படுவதில்லை.

கம்பனிகளின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. இதற்கு மத்தியில் குளவிகள் நாள்தோரும் மக்களை விரட்டிக் கொண்டு இருக்கின்றன. அந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படவில்லை.மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் கஸ்டத்திற்கு மேல் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

இன்று மலையகத்தில் அதிகமாக கனவுகள் காணப்படுகிறது. 1000 ரூபா சம்பள கோரிக்கையும் அதுபோன்ற கனவாகவே இன்றுவரை இருக்கிறது.உடனடியாக இந்த மக்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட 1000 ரூபா அடிப்படை நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

இன்னும் சில மாதங்களில் அடுத்த கூட்டு ஒப்பந்ததம் வந்துவிடும். அதிலும் இந்த 1000 ரூபா பற்றியே பேசுவர். கிடைக்குமா என்பது தெரியாது.போதிய அளவு வேலை நாட்கள், போதிய அளவு சம்பளம் இல்லாமல் கஸ்டப்படும் பெருந்தோட்ட மலையக மக்கள் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மிகவும் சிரமத்தை அனுபவிக்கின்றனர்.

எனவே இவ்விடயங்களை கருத்திற் கொண்டு அரிசி, கோதுமா மா, சீனி, பருப்பு, தேங்காய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும்.விலை குறைப்பின் மூலமாவது மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

புதிய சட்டங்களை கொண்டு வந்து மக்களை ஆட்சி செய்ய நினைப்பதை விட மக்களின் கஸ்டங்களை போக்கி அவர்களை ஆட்சி செய்யும் முறையை அரசாங்கம் கடைபிடித்தால் நீண்ட பயணம் செல்லலாம் என்பதை சுட்டிக்காட்டி விடைபெறுகிறேன்.” – என்றார்.

‘மலையக பல்கலைக்கழகம்’ – கல்வி அமைச்சில் விசேட கலந்துரையாடல்!

மலையகத்துக்கான பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (7) கல்வி அமைச்சில் நடைபெற்றது. கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா. உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
மலையகத்துக்கான பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ள இடத்தினை தெரிவு செய்து, அவ்விடத்தினை உயர் கல்வி அமைச்சின் கீழ் உள்வாங்கி, விரைவில் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், அமைச்சின் செயலாளர் டி. பி. ஜி. குமாரசிறி, பிரதமரின்  இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான்,   மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

செம்மணி மனிதப் புதைகுழி: 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்!

0
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று காலை 9 மணியளவில் குறித்த வழக்கு விசாரணைக்கு...

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் கூலிப்படைகளைக் கொண்டு நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் சம்பவத்தை, கண்டி மாவட்ட காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வன்மையாகக் கண்டித்துள்ளார். அநீதிகளுக்கு எதிராக இரத்தினபுரி...

ஏணியிலிருந்து தவறி வீழ்ந்த மூதாட்டி உயிரிழப்பு! மாத்தளையில் துயரம்!!

0
மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணமுரேகம பகுதியில் ஏணியிலிருந்து தவறி வீழ்ந்த பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இவர் ரணமுரேகம பகுதியில் தங்கியிருந்த...