Home Blog Page 3829

‘சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள் – வதந்திகளை நம்பவேண்டாம்’ – ஜனாதிபதி

” தற்போதைய சவாலான சூழ்நிலையில், சுகாதார அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதோடு, பல்வேறுபட்ட பொய்ப்பிரச்சார குழுக்களால் பரப்பப்படும் தவறான பிரச்சாரத்திற்கு ஏமாறாமல், உத்தியோகபூர்வ அரசாங்க தகவல் சேவைகளிலிருந்து தேவையான தகவல்களைப் பெற்று அதன் படி செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

COVID-19 அச்சுறுத்தல் உலகெங்கும் பரவிக்கொண்டிருந்த வேலையில், ஒரு பலமான தேசமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதனை தோற்கடித்து வெற்றிகண்டோம்.

தற்போது , COVID-19 மீண்டும் நம் நாட்டிற்குள் வந்துள்ளது. முன்னரை போலவே, எமது சுகாதார, பாதுகாப்பு மற்றும் பிற சேவை துறைகளை சேர்ந்தவர்கள் இந்த அச்சுறுத்தலில் இருந்து நம்மைப்பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.

இந்த சவாலான சூழ்நிலையில், சுகாதார அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதோடு, பல்வேறுபட்ட பொய்ப்பிரச்சார குழுக்களால் பரப்பப்படும் தவறான பிரச்சாரத்திற்கு ஏமாறாமல், உத்தியோகபூர்வ அரசாங்க தகவல் சேவைகளிலிருந்து தேவையான தகவல்களைப் பெற்று அதன் படி செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நிர்வாகத்தின் கெடுபிடிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்!

மஸ்கெலியா பிளான்டேசனுக்கு உரித்தான ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் பணியாற்றிவரும் தொழிலாளர்கள் இன்று (8) பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கான தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியுமே தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

” நாளாந்தம் 18 கிலோ பச்சை கொழுந்து பறித்தால் மட்டுமே ஒரு நாளுக்கான வேதனம் வழங்கப்படுகின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் அரை நாளுக்கான சம்பளமே பதிவிடப்படுகின்றது. கொழுந்து இன்மையால் 12 கிலோ மாத்திரமே பறிக்ககூடியதாக இருக்கின்றது. அதற்காக காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை கடுமையாக உழைக்கவேண்டியுள்ளது.

எனவே, எமக்கு தொழில் சலுகைகள் வழங்கப்படவேண்டும். உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். அதனை வலியுறுத்தியே இந்நடவடிக்கையில் இறங்கினோம்.” – என்றார்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

தடகள போட்டி – உலக சாதனை படைத்த உகண்டா வீரர்

ஸ்பெயினில் நடந்த தடகள போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் உகாண்டா வீரர் உலக சாதனை படைத்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் வேலன்சியா நகரில் துரியா ஸ்டேடியத்தில் நடந்த தடகள போட்டியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறைந்த அளவிலான நபர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இவற்றில் விளம்பரதாரர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட 400 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்தனர்.

இந்த தடகள போட்டியின் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் உகாண்டா நாட்டை சேர்ந்த தடகள வீரர் ஜோசுவா செப்டெகி (வயது 24) கலந்து கொண்டு 26 நிமிடங்கள் 11.02 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்துள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த தடகள வீரர் கெனெனிசா பெகெலே 26 நிமிடங்கள் 17.53 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்திருந்தது உலக சாதனையாக இருந்தது. இதனை ஜோசுவா முறியடித்து உள்ளார்.

அவர் கடந்த ஆண்டு தோஹாவில் நடந்த உலக சாம்பியன்சிப் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார். கடந்த ஆகஸ்டில் மொனாக்கோ நகரில் நடந்த டையமண்ட் லீக் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் பிரிவில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

இவை தவிர்த்து, கடந்த டிசம்பரில் வேலன்சியா நகரில் நடந்த 10 கிலோ மீட்டர் ரேசிங் பிரிவில் கலந்து கொண்டு இலக்கை அடைந்து, 6 வினாடிகள் வித்தியாசத்தில் 10 ஆண்டு கால சாதனையை ஜோசுவா முறியடித்திருக்கிறார்.

‘இலங்கையில் 4,459 பேருக்கு கொரோனா’ – 1,168 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை! 3,278 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 4 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,278 ஆக அதிகரித்துள்ளது.

ஆயிரத்து 168 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது.

‘கொரோனா’ தாக்கம் – வெளித்தோட்டங்களில் இருந்து வந்தால் பதிவு அவசியம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைக்கு அமைவாக முக கவசம்  அணிதல், சமூக இடைவெளியை பேணுதல், கைகளைக் கழுவுதல்  போன்ற சுகாதார முறைகளை கடைபிடிக்குமாறு இ.தொ.காவின் உப செயலாளரும் சர்வதேச வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பாளருமான  பாரத் அருள்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

” மலையக பகுதி எங்கும் தொற்று நோய் பாதுகாப்பிற்காக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பல விசேட வேலைத் திட்டங்கள் முன்னெடுத்துள்ளார்.

அனைத்து தோட்டப் பகுதிகளிலும் வெளி பிரதேசங்களில் இருந்து வருகைதருவோரின் விபரங்களை தோட்ட நிர்வாகம் மற்றும் தோட்ட சமூகநல உத்தியோகத்தர்கள் திரட்ட வேண்டும் என பணிக்கபட்டுள்ளது.

இதேவேளை நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை இரத்தினபுரி, கேகாலை ஆகிய பகுதியில் உள்ள அரசாங்க அதிபர்களுக்கும் இதுதொடர்பில் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியம் மற்றும் அமைச்சின் ஊடாக சுகாதார நிலைமைகளை கண்காணிப்பதற்கு குழு ஒன்றை அமைத்து ஒவ்வொரு பிரதேசங்களிலும் அதாவது நுவரெலியா, ஹட்டன், கண்டி மாத்தளை, காலி, கேகாலை, இரத்தினபுரி பதுளை போன்ற அனைத்து மனித வள அபிவிருத்தி நிதியத்தின் கிளைப் பணிமனையில் உள்ள அதிகாரிகள் அப்பிரதேச சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில்  தனிமைபடுத்தபட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வதற்கு அங்குள்ள தோட்ட நிர்வாகத்திடம் கலந்துரையடபட்டுள்ளது, அவர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க நாம் தயாராக உள்ளோம் என்றும் பாரத் அருள்சாமி குறிப்பிட்டார்.

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான ஆலோசனைகள்

எதிர்வரும் ஞாயிறுக்கிழமை இடம்பெறவுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கலந்துகொள்ளவுள்ள மாணவர்கள் அவர்களுக்கான பரீட்சை இலக்கத்தை சீருடையின் வலது புறத்தில் அணிந்திருக்க வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு பரீட்சாத்திகள் பரீட்சை மண்டபங்களுக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறை பரீட்சைக்கு முதல் முறையாக பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். பரீட்சாத்திகளை அழைத்து வரும் பெற்றோர் பரீட்சை மத்திய நிலைய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது.

இடைவேளை நேரத்திலும் இவர்களின் பெற்றோருக்கு பரீட்சை மத்திய நிலைய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது. இது தொடர்பான மேலதிக விபரங்களை 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும்.

இம்முறை நடைபெறவுள்ள கல்வி பொது தாராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளுக்காகவும் விடேச அலோசனைகளை வழங்கியுள்ளது.

இதற்கு அமைவாக இந்த பரீட்சை ஆரம்பமாகவுள்ள தினத்தன்று காலை 7.30 மணியளவில் அனைத்து பரீட்சாத்திகளும் பரீட்சை மத்திய நிலையத்திற்கு சமுகமளிக்க வேண்டும். பரீட்சை எதிர்வரும் திங்கட் கிழமை 12 ஆம் திகதி காலை 8.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

‘இரண்டாம் குத்து’ படத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு!

வாழைப் பழத்தை குறிகளாக செய்து அதைக் கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுசெல்லும் இரண்டாம் குத்து என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? என்று கண்டித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

” சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. சினிமாவினால் மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப்பட்டிருக்கிறது. நேர்மையும் துணிவுமிக்க இளைஞர்களை உருவாக்குவது சாத்தியப்பட்டிருக்கிறது. உலகெங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மனம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனை சாத்தியமற்றவைகள் சாத்தியப்பட்டிருக்கிறது.

இவையெல்லாம் சாதாரணமல்ல. பல கலைஞர்கள் கட்டியமைத்த கூடு, தார்மீக பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக்காத்த சினிமாவை இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன்.

சினிமா வியாபாரமும்தான்.ஆனால் வாழைப்பழத்தை குறிகளாக செய்து அதைக் கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுசெல்லும் நிலைக்கு அவ்வியாபாரம் வந்து நிற்பது வேதனையடைய செய்கிறது.

இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள் சேர்ந்து இந்த சினிமாவை கட்டமைத்தார்கள்?
சினிமா வாழ்க்கை முறையைச் சொல்லலாம், தப்பில்லை. இலைமறை காய்மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத்தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்பது? நான் கலாச்சார சீர்கேடு எனக்கூவும் நபரல்ல, ஆனால் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன்.

கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பும் ஆழ விழுந்து ரசிப்பவன். ஆனால் ரண்டாம் குத்து என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன்.

இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப்பார்க்கக் கூசியிருக்கும்? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தை போதிக்கவா முன்வந்தோம்? இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிடக்கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்க வைக்கிறது.

நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலைகொள்கிறேன்.  இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண்மக்கள் இல்லையா? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா? அவர்கள் கண்டிப்பார்களோ இல்லையோ நான் இங்கிருக்கும் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் கண்டிப்பேன்.

இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதெற்கெல்லாம் கிடுக்கிப்பிடி வேண்டும் என்று அரசையும் சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன்.சமூக சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள்.. எத்தனை குழந்தை சிதைவுகள்? போதாதா? இப்படிப்பட்ட படங்களும் சித்தனையும் கழிவுகளையே சாப்பாட்டுத்தட்டில் வைக்கின்றன என்பதை மக்களும் உணர்ந்துகொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்

‘லொக்டவுன்’ செய்யப்பட்டுள்ள நிவ்போரஸ்ட் தோட்ட மக்கள் குறித்து அரசு விடுத்துள்ள அறிவிப்பு!

புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி, நிவ்போரஸ்ட் டிவிசனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண இன்று (8) தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி – பதில் நேரத்தில் வேலுகுமார் எம்.பியால் எழுப்பட்ட வினாவுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

” மினுவாங்கொட தொழிற்சாலையில் பணிபுரிந்த புபுரஸ்ஸ, நிவ்போரஸ்ட் தோட்டத்து பெண்ணுக்கு ஊருக்குவந்தவேளை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், நிவ்போரஸ்ட் பிரிவு ‘லொக்டவுன்’ செய்யப்பட்டுள்ளது.

இதனால் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சுகாதார ஏற்பாடுகளை வழங்குவதற்கும், நிவாரண திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமா” – என்று வேலுகுமார் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர்,

” தோட்ட கம்பனியின் (அரச நிர்வாகத்தின்கீழ் இயங்கும் கம்பனி) தலைவருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. மக்களின் சமூகநலன்சார் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது. அம்மக்களுக்கு தேவையான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கும்.” – என்றார்.

நேற்று மாத்திரம் 5,608 பிசிஆர் பரிசோதனைகள்

நாட்டில் நேற்று (7) மாத்திரம்5 ஆயிரத்து  608 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் நாளொன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய பிரிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை இதுவாகும்.

அதேபோல் நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 800 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஊவாவிலும் மேலதிக வகுப்புகளுக்கு தடை!

ஊவா மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்டுவந்த மேலதிக வகுப்புக்களை உடன் தடை செய்யுமாறு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதிலும் ஒருவித அச்ச நிலை பொதுமக்களிடையை ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே, பாதுகாப்புநலன் கருதி இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ் வகுப்புத் தடை மறு அறிவித்தல் வரை தொடருமென ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.மாகாணத்தில் மேலதிக வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முடிவுகளை மேற்கொள்ளும் அதிகாரம் மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

பெருந்தோட்டங்களில் அடியாட்களை வைத்திருப்பது சட்டவிரோதம்: அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்ற போர்வையில் பெருந்தோட்ட பகுதிகளில் அடியாட்களை வைத்திருப்பது சட்டவிரோதம் எனவும், நீலகாமத்துக்கு சென்றவர்கள் தொடர்பில்...

மே தினக் கூட்டத்தில் இணையுமாறு ஐ.தே.கவுக்கு சஜித் பகிரங்க அழைப்பு

0
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள மே தினப் பேரணியில் தம்மோடு கைகோர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு...

செம்மணி மனிதப் புதைகுழி: 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்!

0
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று காலை 9 மணியளவில் குறித்த வழக்கு விசாரணைக்கு...