Home Blog Page 3828

‘ஹரின் பெர்ணான்டோவுக்கு கொரோனா தொற்றவில்லை’

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்றில்லை என்பது பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், ஹரின் பெர்ணான்டோ எம்.பி., தாமாக முன்வந்து தனியார் வைத்தியசாலையொன்றில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டிருந்தார்.
அதன் முடிவை வெளியிட்டுள்ளார். அதில் ஹரினுக்கு கொரோனா தொற்று இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு புத்தக கண்காட்சியில் பங்கேற்றவருக்கு கொரோனா! நுவரெலியாவுக்கும் சுற்றுலா வந்துள்ளார்!!

கொழும்பு, சர்வதேச புத்தக கண்காட்சியை பார்வையிடவந்த சிலாபத்தை சேர்ந்த 36 வயதுடைய நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதியே இவர் புத்தக கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளார் எனவும், செப்டம்பர் 30 ஆம் திகதி நுவரெலியாவுக்கும் சுற்றுலாச்சென்றுள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேவேளை, உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர் ஒருவருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. சிலாபம் ஆராய்ச்சிகட்டு பகுதியைச் சேர்ந்த மாணவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

‘கொட்டகலையில் இறுக்கமான சுகாதார நடைமுறை – இல்லையேல் சட்டம் பாயும்’

” சுகாதார அமைச்சால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கள் முழுமையாக பின்பற்றப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.” -இவ்வாறு கொட்டகலை பொதுசுகாதார பரிசோதகர் சௌந்தராகவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபங்களின் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வுக்கூட்டம் இன்று (9) முற்பகல் கொட்டகலை கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.

கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர், கிராம சேவகர் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது திருமண நிகழ்வு உட்பட மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வுகளின்போது சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்படவேண்டும் என வலியுறுத்திய சுகாதார பரிசோதகர் சௌந்தராகவன்,  கடந்த காலங்களில் அவ்வாறு பின்பற்றப்படவில்லை என கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், சுகாதார அமைச்சால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்கள் முழுமையாக பின்பற்றப்படவேண்டும், தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் விழுந்து பலி – சாமிமலையில் சோகம்!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, டீசைட் தோட்டத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்று வீட்டின் அருகாமையிலுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது. இத்துயர் சம்பவம் இன்று (9) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பிரசாத் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள சுமார் மூன்றடி ஆழமான கிணற்றில் குழந்தை விழுந்து கிடப்பதை கண்ட, குழந்தையின் தாத்தா கூச்சலிட்டதை தொடர்ந்து வீட்டிலுள்ளவர்கள் ஓடி வந்து குழந்தையை மீட்டெடுத்து 1990 க்கு அழைப்பு ஏற்படுத்திவிட்டு ஆட்டோ மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தையின் உயிர் பிரிந்தது விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சடலம் பிரேத ப‌ரிசோதனை‌க்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இத்துயர் சம்பவத்தால் தோட்டமே சோகத்தில் மூழ்கியுள்ளது. எவரும் வேலைக்கு செல்லவில்லை.

இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

(சாமிமலை ஞானராஜ் )

மொக்கா தோட்டத்தில் மூவருக்கு பீசீர் பரிசோதனை! 17 பேர் சுய தனிமையில்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா தோட்டத்தில் மிட்லோஜியன் பிரிவில் இரண்டு குடும்பங்களைச்சேர்ந்த 17 பேர் கடந்த 7 ஆம் திகதி இரவு முதல் அவர்களின் வீடுகளுக்குள்ளேயே சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்றிரவு (8) மூன்று பேரை மாத்திரம் கொரோனா தடுப்பு முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்து தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிய மஸ்கெலியா, மொக்கா தோட்ட மிட்லோஜியன் பிரிவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களும், ஒரு யுவதியும் கடந்த 3 ஆம் திகதி புகையிரதத்தின் மூலம் அட்டனுக்கு வந்து, அங்கிருந்து பஸ்ஸில் மஸ்கெலியா ஊருக்கு சென்றுள்ளனர்.

மினுவாங்கொட கொரோனா கொத்தணி பரவலையடுத்து மேற்படி மூவரும் அவர்களின் உறவினர்களும் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் மினுவாங்கொடயில் இவர்கள் வசித்த குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மேற்படி குறித்த மூவரிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக அம்புலன்ஸ் வண்டி மூலம் நேற்றிரவு (8) ரந்தம்பே தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

இவர்களின் உறவினர்கள் வீடுகளுக்குள்ளேயே தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

க.கிசாந்தன்

லிந்துலையில் இறந்தநிலையில் சிறுத்தைக்குட்டி மீட்பு!

தலவாக்கலை – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தைக்குட்டியொன்று இன்று (09/10/2020) மீட்கப்பட்டுள்ளளது.

குறித்த தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும்போதே தேயிலை மலையிலிருந்து குறித்த சிறுத்தை குட்டி மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக லிந்துலை பொலிஸ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சிறுத்தையின் சடலம் பரிசோதனைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

பஞ்சாப்பை வீழ்த்தி வெற்றிக்கனியை ருசித்தது ஐதராபாத்!

ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தி ஐதராபாத் அணி 3ஆவது வெற்றியை ருசித்தது. பேர்ஸ்டோ 3 ஓட்டங்களில் சதத்தை நழுவ விட்டார்.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் நேற்றிரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின.

பஞ்சாப் அணியில் மூன்று மாற்றமாக கிறிஸ் ஜோர்டான், ஹர்பிரீத் பிரார், சர்ப்ராஸ்கான் நீக்கப்பட்டு முஜீப் ரகுமான், அர்ஷ்தீப்சிங், விக்கெட் கீப்பர் சிம்ரன்சிங் ஆகியோர் இடம் பிடித்தனர். ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்லையும் இந்த ஆட்டத்தில் களம் இறக்க பஞ்சாப் அணி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக (புட்பாய்சனால் பாதிப்பு) அவரை சேர்க்க இயலாமல் போய் விட்டது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.

இதன்படி வார்னரும், பேர்ஸ்டோவும் தொடக்க வீரர்களாக களம் புகுந்தனர். காட்ரெலின் முதல் ஓவரில் வார்னர் 2 பவுண்டரியுடன் அதிரடிக்கு சுழி போட்டார். நங்கூரம் பாய்ச்சியது போல் தங்களை நிலை நிறுத்திக்கொண்டு விளையாடிய இவர்கள் பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் சேர்த்தனர்.

இந்த சீசனில் பவர்-பிளேயில் ஐதராபாத்தின் சிறந்த செயல்பாடு இதுவாகும். இதற்கிடையே பேர்ஸ்டோ 19 ரன்னில் கொடுத்த கொஞ்சம் கடினமான கேட்ச் வாய்ப்பை லோகேஷ் ராகுல் வீணடித்தார்.

அதன் பிறகு பேர்ஸ்டோ ரன்வேகத்தை தீவிரப்படுத்தினார். சுழற்பந்து வீச்சாளர்களை குறி வைத்து தாக்குதல் தொடுத்த அவர், ரவி பிஷ்னோய், மேக்ஸ்வெல், முஜீப் ரகுமானின் ஓவர்களில் தலா 2 சிக்சர் வீதம் தெறிக்க விட்டார். இந்த ஜோடியை கட்டுப்படுத்த வழி தெரியாமல் பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் விழிபிதுங்கிப் போனார். ரன்ரேட் 11-க்கு மேலாக எகிறியது.

அணியின் ஸ்கோர் 160 ரன்களாக (15.1 ஓவர்) உயர்ந்த போது வார்னர் (52 ரன், 40 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோயின் பந்து வீச்சை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அதே ஓவரில் பேர்ஸ்டோ (97 ரன், 55 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆக, 3 ரன்னில் சதத்தை தவற விட்டார்.

முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. பிறகு டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்து பஞ்சாப் சாதகமான தீர்ப்பை பெற்றது. தொடர்ந்து மனிஷ் பாண்டே (1 ரன்), அப்துல் சமத் (8 ரன்), பிரியம் கார்க் (0) அடுத்தடுத்து வெளியேற இறுதி கட்டத்தில் ஐதராபாத்தின் ரன்வேகத்துக்கு முட்டுக்கட்டை விழுந்தது.

வார்னர் – பேர்ஸ்டோ ஆடிய விதத்தை பார்த்த போது அவர்களின் ஸ்கோர் 220 ரன்களை தாண்டும் போல் தோன்றியது. கடைசியில் 200 ரன்களை எட்டுவதே பெரும்பாடாகிப்போனது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஐதராபாத் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கேன் வில்லியம்சன் 20 ரன்களுடன் (10 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். அபிஷேக் ஷர்மா 12 ரன்னில் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார்.

பின்னர் 202 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் (9 ரன்), கேப்டன் லோகேஷ் ராகுல் (11 ரன்) ஏமாற்றம் அளித்தனர். இதன் பின்னர் நிகோலஸ் பூரன் ஒரு பக்கம் ருத்ரதாண்டவம் ஆட இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் குறிப்பிட்ட இடைவெளியில் சரிந்தது.

எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 7 ரன்னில் ரன்-அவுட் ஆனார். தனிநபராக போராடிய நிகோலஸ் பூரன் 77 ரன்களில் (37 பந்து, 5 பவுண்டரி, 7 சிக்சர்) ரஷித்கானின் சுழலில் கேட்ச் ஆனார். அத்துடன் பஞ்சாப் அணியின் நம்பிக்கை தகர்ந்தது.

முடிவில் பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் 132 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் ஐதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரஷித்கான் 3 விக்கெட்டும், நடராஜன், கலீல் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 6-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். பஞ்சாப் சந்தித்த 5-வது தோல்வியாகும்.

கம்பஹாவில் ஊரடங்கு தொடரும்! கட்டுப்பாடுகளுடன் வர்த்தக நிலையங்கள் திறப்பு!

பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவைமீறிய 91 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 23 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடரும் என்றும், இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை சுகாதார கட்டுப்பாட்டுகளுடன் சில வர்த்தக நிலைங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் மாத்திரமே வெளியில் செல்லுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள இடங்களில் மருந்தகங்கள், சுப்பர் மார்க்கட்கள் , மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையங்கள் , சதொச விற்பனை நிலையங்கள் என்பன காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சனி, ஞாயிறுகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டமா? பிரதி பொலிஸ்மா அதிபர் வழங்கும் பதில்!

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (9) காலை தெரிவித்தார்.

கடந்தகாலங்களைப்போல வார இறுதி நாட்களில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” அவ்வாறானதொரு எண்ணம் தற்போதைக்கு இல்லை. பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முடிவுகளை அடிப்படையாகக்கொண்டே முடிவு எடுக்கப்படும். சிலவேளை மேலும் சில பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தவேண்டி வந்தாலும் முழு நாட்டிலும் நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடரும். இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை சுகாதார கட்டுப்பாட்டுகளுடன் சில வர்த்தக நிலைங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் மாத்திரமே வெளியில் செல்லுங்கள்.” – என்றார்.

‘பீசீஆர் பரிசோதனை மட்டுமே – சீனக்குழுவினர் தனிமைப்படுத்தப்படமாட்டர்’

சீன தூதுக்குழுவினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படமாட்டார்கள். பீசீஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே இங்கு வருகின்றனர். எமது நாட்டில் வைத்தும் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஒருநாள் பயணமே மேற்கொள்கின்றனர்.” – என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தில் இன்று (8) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, சீனக்குழுவினரின் இலங்கை பயணம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுகாதார அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். 
அதேவேளை, உரிய சுகாதார நடைமுறை பின்பற்றியே சந்திப்புகள் நடைபெறவுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இதன்போது குறிப்பிட்டார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்!

0
நூற்றாண்டு நோக்கிய பயணம்: கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்! தொலஸ்பாகை, கலமுதுனை தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பன நிகழ்வு எதிர்வரும் மே 2 ஆம் திகதி பாடசாலை...

ஈரான் தனித்துவிடப்படவில்லை: ரஷ்யாவுக்கு நன்றி தெரிவிப்பு!

0
ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினை இன்று (27) சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது ஈரானுக்கு ரஷ்யா வழங்கிவரும் உறுதியான தொடர் ஆதரவிற்கு அரக்ச்சி...

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால தங்குமிடங்கள் அமைப்பது குறித்து ஆராய்வு!

0
‘தித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான இடைக்கால தங்குமிடங்கள் அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம், பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) தலைமையில் நேற்று (ஏப்ரல் 26) இராணுவத் தலைமையகத்தில்...