Home Blog Page 3833

‘நுவரெலியாவில் இருந்து மாலைதீவுக்கு மரக்கறி ஏற்றுமதி’ – தூதுவருடன் ஜீவன் பேச்சு!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் உமர் அப்துள் ரசாக்குக்கும் இடையிலான சந்திப்பு அமைச்சில் நடைபெற்றது.

நுவரெலியா மாவட்டத்தில் விவசாய துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து மாலைதீவுக்கு மரக்கறி வகைகளை ஏற்றுமதி செய்தல் மற்றும் இளைஞர் யுவதிகளின் விளையாட்டு திறமை மேம்படுத்துவதற்கான உதவித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

‘சிலோன் டீயை அழிக்கும் முள்ளுத்தேய்காய்’ – சபையில் வேலுகுமார் கேள்வி

“இலங்கையில்  பெருந்தோட்டத்துறையின் பிரதான அடையாளமாக ‘சிலோன் டீ’ என்பதே இருக்கின்றது. அந்த நாமத்தை பெற்றுத்தந்த தேயிலை உற்பத்தியை  கட்டங் கட்டமாக அழித்து, அதற்கு பதிலாக முள்ளுத்தேங்காய் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. இயற்கைக்கும், நீர்வளத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முள்ளுத்தேங்காய் உற்பத்தி தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.எனவே, அவற்றை முழுமையாக அகற்றுவதற்கான வேலைத்திட்டம் என்ன.”

– இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி – பதில் நேரத்திலேயே வேலுகுமார் எம்.பி. மேற்படி வினாவை தொடுத்தார்.

இதற்கு பதிலளித்த பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ பத்திரண,

” முள்ளுத்தேங்காய் பயிரிடுவதற்கு 2019 ஆம் ஆண்டு நவம்பரில் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.இவ்விவகாரம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையொன்று இடம்பெற்றுவருகின்றது.  தற்போதைய நடைமுறை தொடரட்டும் என எமக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  எனவே, நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் கொள்கை அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படும்.” – என்றார்.

அத்துடன்  முள்ளுத்தேங்காய் உற்பத்தியை அகற்றும்போது அத்தொழில் துறையில்  ஈடுபட்டுள்ள ஊழியர்களின் நலன்புரிசார் விடயங்கள் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை என்னவென்று மற்றுமொரு கேள்வியை வேலுகுமார் எம்.பி. எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், ” இறப்பர் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான இடங்களிலேயே முள்ளுத்தேங்காய் பயிரிடப்பட்டுள்ளது. சில இடங்களில் தேயிலை பயிரிடப்பட்ட இடத்திலும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிரிடப்பட்டுள்ளவற்றை அகற்றுவதற்கு முடிவெடுக்கப்படவில்லை. எனினும், அவ்வாறானதொரு முடிவை எடுத்தால் இறப்பர், தெங்க, தேயிலை உற்பத்தியில் ஆர்வம் காட்டுமாறு கம்பனிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

கம்பஹா பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 6 மணி முதல் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய, மினுவாங்கொட மற்றும் வெயாங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஏற்கனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 246 பேருக்கு கொரோனா!

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுள் மேலும் 246 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது – என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (06) தெரிவித்தார்.

மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு  கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அத்தொழிற்சாலையில் ஊழியர்களிடம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுவருகின்றது.

இப்பரிசோதனையின் மற்றுமொரு முடிவு இன்று (6)  மதியம் வெளியானது. இதில் திவுலப்பிட்டிய பெண் பணியாற்றிய ஆடை தொழிற்சாலையில் மேலும் 246 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டது. அவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த நேற்று 101 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இன்று இதுவரையில் 446 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் 16 மாவட்டங்களில் முகவரிகளைக் கொண்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அடுத்த 48 மணி நேரம் மிகவும் எச்சரிக்கையான காலகட்டம் என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இதனால் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் நடத்துக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

‘கொரோனா’ – விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஹட்டனில் முன்னெடுப்பு!

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்புபெறுவதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று (06.10.2020) ஹட்டன் நகரில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பொதுவெளிக்குவரும்போது முகக்கவசம் அணிதல், சமுகஇடைவெளியைப் பின்பற்றுதல், கைகளை கழுவுதல் உட்பட எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டது.

ஆசனங்களின் எண்ணிக்கைக்கேற்பவே பயணிகள் ஏற்றப்படவேண்டும் எனவும், நாளாந்தம் பஸ்களில் தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு தொற்றுநீக்கம் செய்யப்படவேண்டும் எனவும் அரச மற்றும் தனியார் பஸ்களின் பொறுப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

ஹட்டன் நகரசபையில் பொதுசுகாதார அதிகாரிகளாலேயே இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

க.கிசாந்தன்

‘10,579 ஹெக்டேயரில் முள்ளுத்தேங்காய் பயிர்செய்கை’

இலங்கையில் 9 பெருந்தோட்டக் கம்பனிகள், 10 ஆயிரத்து 579 ஹெக்டேயரில் முள்ளுத்தேங்காய் பயிரிட்டுள்ளன – என்று பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரால் தொடுக்கப்பட்ட வினாவுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

  1. வட்டவல பெருந்தோட்டக் கம்பனி
  2. பொகவந்தலாவ பெருந்தோட்டக் கம்பனி
  3. கொட்டகல பெருந்தோட்டக் கம்பனி
  4. எல்பிட்டிய பெருந்தோட்டக் கம்பனி
  5. அகலவத்த பெருந்தோட்டக் கம்பனி
  6. அல்வத்த பெருந்தோட்டக் கம்பனி
  7. ஹெரன பெருந்தோட்டக் கம்பனி
  8. கேகால்ல பெருந்தோட்டக் கம்பனி
  9. நமுனுகல பெருந்தோட்டக் கம்பனி

ஆகியனவே நாட்டில் முள்ளுத்தேங்காய் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் கம்பனிகளாகும்.

முள்ளுத்தேங்காய் பயிர்ச்செய்கைக்கு 2019 நவம்பர் முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, இறப்பர், தென்னை, தேயிலை ஆகிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுமாறு கோரப்பட்டுள்ளது.” – என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

‘கொரோனா’ அச்சம்! நிவ்போரஸ்ட் பிரிவுக்கு பயணக்கட்டுப்பாடு!!

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இரு பெண்கள், கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கம்பளை, புபுரஸ்ஸ – மணிக்கட்டி, நிவ்போரஸ்ட் டிவிசனில் உள்ள தமது வீடுகளுக்கு இரு நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் வந்துள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவரிடமும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முடிவு இன்று மாலை வெளிவரும் என எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், நிவ்போரஸ்ட் பகுதியில் இருந்து எவரும் வெளியில் செல்வதற்கும், வெளியிடங்களில் இருந்து அப்பிரிவுக்கு வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நிவ்போரஸ்ட் டிவிசனில் சுமார் 28 குடும்பங்கள் வாழ்வதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

‘கோட்டா அரசு வந்து 12 மாசம் ஆகப்போகுது, ஒன்றையும் காணோம்’

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியின் முகநூல் பதிவு வருமாறு,
“ரிசாத் பதீதூனின் ஆதரவை பெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என, அரசாங்கத்தின் முதலாமவர் முதல் கடைக்குட்டி வரை கிளிப்பிள்ளை கணக்கில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்..!
அரசுக்குள்ளே பதீதூனையோ, அவர் கட்சி எம்பிகளையோ உள்வாங்குவது இருக்கட்டும்..!
எனக்கென்ன சிரிப்பு கேள்வி என்றால், கடந்த நவம்பர் மற்றும் இந்த ஆகஸ்ட் தேர்தல்கள் வரைக்கும், நீங்கள் தானப்பா, சட்டமா அதிபர் மாதிரி குற்றப்பத்திரிகை வாசித்தீர்கள்.
ரிசாத்துக்கும், சஹரானூக்கும் தொடர்புண்டு. ரிசாத் தம்பிக்கு நேரடி தொடர்புண்டு. நல்லாட்சி அரசியல் காரணங்களால் இவற்றை மூடி மறைக்கிறது. பொலிஸ் மீது அழுத்தம் செலுத்தி விசாரணையை தடுக்கிறது என்றெல்லாம் நீட்டி முழக்கி, எமது ஆட்சிக்கு எதிராக சிங்கள மக்களை உசுப்பேத்தினீர்கள்.
முத்தாய்ப்பாக, இந்த வீரவன்ச, கம்மன்பில இரட்டையர்கள் சொன்னதுதான் “ஹைலைட்ஸ்”..!
“நாம் அம்புட்டு ஆதாரங்களையும் அடுக்கி வைச்சிருக்கோம். நம்ம கோட்டா ஆட்சி வரட்டும். ஒரே வாரத்தில், ரிசாத் உட்பட, இந்த சஹரான் கும்பலை பிடித்து உள்ளே போடுவோம்” என்றார்கள்..!
இப்போ, கோ-ஆட்சி வந்து, 12 மாசம் ஆகப்போகுது. ஒன்றையும் காணோம். விசாரணை போற போக்கை பார்த்தால் இன்று அரசுக்கு உள்ளே இருக்கும் மைத்திரிதான் உள்ளே போக வேண்டும் போல் தெரிகிறது..!
இடையில், சிங்கள மக்களை, பெளத்த தேரர்களை சமாளிக்க, ரிசாத் தம்பியை கண்டபடி பேசி, ஆர்ப்பாட்டமாக பிடித்து, இப்போ சத்தமில்லாமல் விட்டும் விட்டீர்கள்..!
எல்லா கதையும் காத்தோட போச்சு..!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,733 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 733 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தின் 111 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதில் 101 பேர் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களாவர்.

மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் சில ஊழியர்களடம் நேற்று பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவு இன்று காலை வெளியானது. இதன்போது 220 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

இதன்படி ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவலால் இதுவரையில் 321 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. அதேவேளை, இலங்கையில் 3 ஆயிரத்து 259 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று!

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுள் மேலும் 220 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது – என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (06) தெரிவித்தார்.

மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு  கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அத்தொழிற்சாலையில் ஊழியர்களிடம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுவருகின்றது.

இப்பரிசோதனையின் மற்றுமொரு முடிவு இன்று (6) காலை வெளியானது. இதில் திவுலப்பிட்டிய பெண் பணியாற்றிய ஆடை தொழிற்சாலையில் மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டது. அவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த 101 பேர் நேற்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

ரஷ்யாவில் களமிறங்கினார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

0
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை , ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா மற்றும் ஓமானுக்கான விஜயத்தை ஈரான் வெளிவிவகார அமைச்சர் மேற்கொண்டுள்ளார். அவர் தற்போது...

வாட்ஸ்அப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை: பண்டாரவளை பகுதியில் 9 பேர் கைது!

0
பண்டாரவளை பகுதியில் வாட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஹோட்டல் சமையல்காரர் ஒருவர் உட்பட 9 பேரை, பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் நேற்று (26) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து...