Home Blog Page 3837

நடிகர் சிம்புவுக்கு இப்படியும் ரசிகர்களா…?

நடிகர் சிம்புவிற்கு திருமணம் நடக்க வேண்டுமென வேண்டிக்கொண்டு, அவரது ரசிகர்கள் ரத்தினகிரி முருகன் கோயில் படிகளில் மண்டியிட்டு ஏறி பிரார்த்தனை.

கையில் சிம்பு படத்தை வைத்துக் கொண்டு மனதில் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை வைத்துக் கொண்டு மண்டியிட்டு படியேறிச் சென்று முருகனை தரிசித்தனர் சிம்புவின் தீவிர ரசிகர்கள்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் மச்சி மதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிம்பு ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.

பிரார்த்தனைக்கு முன்னதாக சாலையோரங்களில் ஆதரவின்றி தவித்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினர் சிம்பு ரசிகர்கள்.

இலங்கையர்கள் ஐவர் படுகொலை! பிரான்ஸில் பயங்கரம்!!

குடும்பப் பிணக்குகள் வன்முறைகளாக வெடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துவரும் பின்னணியில் மற்றொரு படுகொலை நேற்று பட்டப்பகலில் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் புறநகரில் இடம்பெற்றுள்ளது.

நபர் ஒருவரின் மோசமான தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

அவர்களில் மூவர் ஆபத்தான கட்டத்தில்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக் கக் கூடும் என அஞ்சப்படுகின்றது.

உயிரிழந்த அனைவரும் இலங்கையுடன் தொடர்புடைய தமிழர்கள் எனத்தெரிகின்றது. நேற்றுப் பகல் நிகழ்ந்த இந்தக் குடும்பப் படுகொலைகள் தொடர்பில் வெளியான தகவல்கள் வருமாறு:-

பாரிஸ் புறநகரான நுவாஸி – லூ -செக் கில் வீடொன்றில் உயிரிழந்தவர்க ளது மாமனார் என்று கூறப்படும் ஆண் ஒருவர் கத்தி மற்றும் சுத்தியல் கொண்டு வெறித்தனமாகப் பலரைத் தாக்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது.

அவரது பிடியில் இருந்து தப்பியோடியஇளைஞர் ஒருவர் அருகேயுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்துப்பொலிஸாரும் அவசர சேவையினரும்அங்கு அழைக்கப்பட்டுள்ளனர். மூன்று மாடிகள் கொண்ட வீட்டின்கதவை உடைத்து உள் நுழைந்த பொலிஸார் அங்கே கோரமான காட்சிகளைக் கண்டுள்ளனர். குழந்தைகள் உட்பட ஐவர்இரத்த வெள்ளத்தில் சடலங்களாகக்காணப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியநபரும் கோமா நிலையில் மீட்கப்பட்டார் எனத் தெரிகின்றது.

அவருக்கு அருகேகத்தி, சுத்தியல் என்பன காணப்பட்டுள்ளன.தேசிய மற்றும் நகரப் பொலிஸாரால் சம்பவம் நடந்த பகுதி உடனடியாக மூடப்பட்டு வெளியாள்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. பஸ் மற்றும் வாகனப் போக்குவரத்துகள் மாற்று வழிகளில் திசை திருப்பப்பட்டுள்ளன.

பக்கத்துப் பக்கத்தில் இருந்த – உறவினர்களான – இரு குடும்பத்தவர்களுக் கிடை யிலான பிணக்கே விபரீதத்துக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

கம்பஹாவில் பெண்ணொருவருக்கு கொரோனா – 55 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

கம்பஹா, திவுலப்பிட்டிய பகுதியில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மினுவாங்கொடை பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த 39 வயதுடைய பெண்ணொருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அவர்  அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காய்ச்சல் காரணமாக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர், சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்புகையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைமூலமே வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலை அதிகாரிகள் 15 பேர் , அவர் தொழில் புரிந்த இடத்திலுள்ள 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து இன்னும் கொரோனா அச்சுறுத்தல் நீங்கவில்லை, எனவே, சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு சமுகத்தில் இருந்து தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவருக்கு எவ்வாறு வைரஸ் பரவியது என்பதை கண்டறிவதற்கான விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

 

வலி சுமந்த பயணம் – எப்போது வழி பிறக்கும்?

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட தோத்தலா தோட்டம், மஸ்கெலிய நகரில் இருந்து சுமார் ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. சுமார் 350 குடும்பங்கள் வாழும் இத்தோட்டத்தில்  70 குடும்பங்களின் உறுப்பினர்களே தோட்டத்தில் தொழில் செய்துவருகின்றனர்.

மேற்படி தோட்டத்திலிருந்து பாடசாலை மாணவர்கள் முதல் கர்ப்பிணி தாய்மார்கள் வரை தமது அனைத்து தேவைகளுக்கும் மஸ்கெலிய நகருக்கே செல்லவேண்டியுள்ளது. அவ்வாறு செல்வதாயின் கால்நடையாகவோ வாடகை வாகனங்கள் மூலமாகவோ செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது.

எனினும், மஸ்கெலியா நகருக்கு செல்வதற்கான பாதை சீரின்மையால் வாடகை வாகனங்களுக்கும் கூடுதலான பணம் அறவிடபடுவதாகவும் குறித்த நேரத்தில் தமது பணிகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் பாடசாலை பிள்ளைகள் தினமும் கரடு முரடான சேற்று பாதையை கடந்தே பாடசாலைக்கு செல்லவேண்டியுள்ளதாகவும்  மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

” பாதை சீரின்மையால் எனது முச்சக்கர வண்டி விரைவில் பழுதடைந்துவிடுகின்றது. கூடுதலான எரிபொருள் செலவாகின்றது. தேர்தல் நேரத்தில் மட்டும் எங்கள் தோட்டப்பாதையை சீர் செய்து தருவதாக மலையக தலைவர்களால் வாக்குறுதி வழங்கியிருந்தாலும் தேர்தல் முடிந்த பிறகு வாக்குறுதிகளை மறந்துவிடுகிறார்கள். புதிய அரசாங்கத்தின் மூலமாக எமக்கு தீர்வு கிடைக்க வழி செய்ய வேண்டும்.” – என்று ஆட்டோ சாரதி ஒருவர் குறிப்பிட்டார்.

” இங்கிருந்து புளூம்பீல்ட் பாடசாலைக்கே 35 பேர் செல்கின்றோம் சுமார் 3 கி .மீ தூரம் வரை நடந்தே செல்ல வேண்டும். பாதை சீரின்மையால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்து செல்ல வேண்டும். மழை காலங்களில் உடைகள் , சப்பாத்து எல்லாம் சேற்று நீரால் அழுக்காகிவிடுகிறது . எனவே இந்த பாதையை சீர் செய்து தருமாறு கேட்கின்றோம்.” – என பாடசாலை மாணவர்கள் கருத்து வெளியிட்டனர்.

பெங்களூரு அணி அபார வெற்றி – புள்ளி பட்டியலிலும் முதலிடம்!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றிபெற்றது.

அபுதாபியில் ஐபிஎல் கிரிக்கெட்டின் 15ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சும் இன்று மோதின.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் முதலாவதாக களமிறங்கினர்.

இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மகிபால் லோம்ரோர் 47 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சார்பில் சாஹல் 3 விக்கெட்டுகளும், உதானா 2 விக்கெட்டுகளும், சைனி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்படி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் பட்டிக்கல் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அந்த ஜோடியில் ஆரோன் பிஞ்ச் 8(7) ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து கேப்டன் விராட் கோலி, பட்டிக்கலுடன் ஜோடி சேர்ந்தார்.

சிறப்பான ஆட்டத்த்தினை வெளிப்படுத்திய இந்த ஜோடியில், இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின்னர் பட்டிக்கல் 63(45) ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் விராட் கோஹ்லி 72(53) ரன்களும், டி வில்லியர்ஸ் 8(9) ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 19.1 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து, 158 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றிபெற்றது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக விராட் கோஹ்லி 72 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக கோபால், ஆர்ச்சர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

மலையக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட தலைவர் தேர்தல் நாளை

மலையக மக்கள் முன்னணியின் இணை அமைப்பான மலையக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட தலைவர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை (04) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை 17 மாவட்ட காரியாலயங்களில் நடைபெறவுள்ளது.

17 தலைவர்களை தெரிவுசெய்வதற்காக 384 பேர் வாக்களிக்கவுள்ளனர். 43 பேர் போட்டியிடுகின்றனர். 59 பேர் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளனர். முடிவுகள் பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும்.

ரிஷாட் – சமல் சந்திப்பால் தெற்கில் அரசியல் கொந்தளிப்பு!

ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ளக்கூடாது என ஆளுங்கூட்டணியின் பங்காளிக்கட்சிகளும், சிங்கள தேசியவாத அமைப்புகளும் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

வன்னிக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர் சமல் ராஜபக்ச, ரிஷாட்டை சந்தித்தபோது புன்னகையுடன் வரவேற்று உரையாற்றினார். இது தொடர்பான புகைப்படம் வெளியானதும் சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

தேர்தல் காலத்தில் ரிஷாட்டை விமர்சித்தவர்கள், 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்காக அவரை நாடுகின்றனர் என்ற கோணத்திலும் சொற்கணைகள் தொடுக்கப்பட்டுவருகின்றன.
அத்துடன், எதிரணிகளும் அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது என குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

இந்நிலையில் 20 தொடர்பில் தமது கட்சி நிலைப்பாட்டை அறிவிக்காமல் ரிஷாட் பதியுதீனின் கட்சி மௌனம் காத்துவருகின்றது. இதனால் அக்கட்சி அரசுடன் இணையக்கூடும் என்ற ஊகமும் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ரிஷாட் வந்தால் விரட்டியடிப்போம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

அதேபோல் ரிஷாட் பதியுதீன் இருக்கும் அரசில் தான் இருக்கப்போவதில்லை என்ற உத்தரவாதத்தை ஏற்கனவே தூய ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பிலவும் குறிப்பிட்டுள்ளார்.

” அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதால் ஆதரவு தேவையில்லை. எதிரணில் இருந்து வேண்டுமானால் சட்டமூலங்களுக்கு ஆதரவு வழங்கலாம்.” – என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ரிஷாட்டை இணைத்துக்கொண்டால் சிங்கள மக்களின் ஆதரவை வழங்கநேரிடும் என்று அரசுக்கு சிங்கள தேசியவாத அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் தான் ரிஷாட்டை சந்திக்கவில்லை என சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

‘இருவரும் விரைவில் குணமடைய வேண்டும்’

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் , அவரின் பாரியார் ஆகியோர் கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடையவேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
“இந்த கடிமான காலத்தில் இலங்கை மக்களின் பிராத்தனைகள் என்றும் உங்களுடன் இருக்கும்.” ஜனாதிபதி என்றும் தெரிவித்துள்ளார். 

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 9 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 9 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,254 ஆக அதிகரித்துள்ளது.

121 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 388 ஆக அதிகரித்துள்ளது.

‘இந்த விழிகள் யாருக்கு? அவளை தேடும் படக்குழு’

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்த சில்க் ஸ்மிதாவை அவள் அப்படித்தான் படக்குழு தேடிவருகின்றனர்.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தென்னிந்திய திரைப்பட இயக்குனர்களாலும் தயாரிப்பாளர்களாலும் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா.

அவருக்கு முன்னாலே பல கவர்ச்சி நடிகைகளை சினிமா உலகம் பார்த்து இருக்கிறது என்றாலும் தன்னுடைய மயக்கும் விழிகளாலும், வாளிப்பான உடல் கட்டினாலும் மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கட்டிப் போட்ட ஒரு கவர்ச்சி நடிகை அவர்.

ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறுவயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம். கணக்கிலடங்காத திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை “அவள் அப்படித்தான்” என்ற பெயரிலே காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர்.

பல விளம்பரப் படங்களை இயக்கியவரும் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்ற வெற்றிப் படத்தை இயக்கியவருமான மணிகண்டன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

“சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் அவருடைய காந்தக் கண்கள். அப்படிப்பட்ட அழகான கண்கள் உடைய ஒரு அழகான பெண்ணை இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

சூப்பர் ஓவரில் லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா

0
ஐபிஎல் 2026 தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றி பெற்றது. லக்னோ ஏகானா மைதானத்தில்...

மரக்கறி விலைப்பட்டியல் (27.04.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

“மலையக மகிழ்ச்சி”: பதுளையில் 34 புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு விழா!

0
"மலையக மகிழ்ச்சி" திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் இரண்டு புதிய வீட்டுத் திட்டங்களுக்கு நேற்று (26) அடிக்கல் நாட்டப்பட்டது. மண்சரிவு அபாயம் மிகுந்த பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாக்கும் வகையிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட...