Home Blog Page 3836

திகாம்பரம் நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டார் – புத்திரசிகாமணி குமுறல்!

தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் திகாம்பரம் நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டார் என்று பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் முன்னாள் தலைவர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தினகரி வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு,

கேள்வி – நடந்து முடிந்த தேர்தலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?  படுதோல்வி நிச்சயம் என்பது அனைவரும் அறிந்திருக்க ரணில் தலைமையிலான ஐ.தே.க வேட்பாளராக போட்டியிடத் துணிந்தது எப்படி? அரசியல் கணக்கில் தவறு நேர்ந்துவிட்டதா?

பதில் – ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியடைந்து எங்கள் கட்சியின் தலைவரும் படுந்தோல்வியடைந்தார். நானும் தோல்வியடைந்தேன். அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை. இந்நாட்டில் மலையக மக்களுக்காக சேவையாற்றிய மிகப்பெரிய கட்சி ஐ.தே.க. இவர்களுடைய ஆட்சிக் காலத்திலேயே மலையக மக்கள் சிறப்பாக வாழ்ந்தார்கள். ஆனால் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் மலையகத்தில் பணம்தான் பெரிதாக பேசப்பட்டது. பணத்தை வீசியவர்கள் வென்றார்கள். புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் கூட இந்த தேர்தலில் ஐ.தே.க.வை விட இரு மடங்கு வாக்குகளைப் பெற்றார்கள். பணம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.

குறிப்பாக பணம் என்று பார்க்கும்போது சாராய போத்தல்களும் போதைப்பொருட்களும் நடந்து முடித்த தேர்தலின்போது இளைஞர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. நான் தோட்டப் பகுதிகளுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றவேளை மக்கள் அனைவரும் ஐ.தே.க.வுக்கே வாக்களிப்பதாக கூவித் திரிந்தார்கள். ஆனால் தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது என்னவாயிற்று என்பதே தெரியவில்லை.

நான் முதன் முதலாக அரசியலுக்கு வந்தபோது நுவரெலியா மாநகர சபையிலேயே போட்டியிட்டேன். அப்போது 2000 ரூபா மாத்திரமே எனது தேர்தல் செலவாக அமைந்தது. அன்று நான் பணம் செலவழிக்காமல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றமையால் இன்றுவரை பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருந்ததில்லை.

கேள்வி – நீங்கள் ஏன் கட்சி மாறிக்கொண்டே இருக்கிறீர்கள்? நன்பகத்தன்மையற்றவர் என்ற பிம்பத்தை அல்லவா இது உருவாக்கும்?

பதில் – நான் மட்டுமா கட்சி மாறுகின்றேன். எத்தனைபேர் கட்சி மாறிக்கொண்டேதான் இருக்கின்றார்கள். எத்தனை கட்சி மாறிவிட்டதாக எண்ணி என்னிடம் இக்கேள்வியை கேட்கிறீர்கள்?

என்னைப் பொறுத்தவரை ஒரேயொரு முறைதான் கட்சி மாறியிருக்கின்றேன். ஐ.தே.க.விலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு மாறியிருக்கின்றேன். அதற்கு காரணம் அன்று ஐ.தே.க.வில் எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காமையால் அங்கிருந்து செல்ல வேண்டியதாயிற்று. நடந்து முடிந்த தேர்தலின்போதும் ஐ.தே.க.விலேயே போட்டியிட்டேன். அக்கட்சியில்தான் தொடர்ந்து இருக்கின்றேன்.

2014ம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவுடன் நான் இருக்கவில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களுடனே இருந்தேன். ஒரு தீபாவளித் தினத்தன்று ஐ.தே.வுக்கு எதிராக பெரிய போராட்டம் ஒன்றை நடாத்தினர். நாம் தீபாவளி தினமாததால் போராட்டத்தை அன்றைய தினம் நடாத்த வேண்டாம் என்று கூறினேன்.

தமிழர்கள் அதிகமாக வாழும் கொழும்பில் தீபாவளித் தினத்தன்று ஒரு போராட்டமா அதனை பின்தள்ளி போடுமாறும் கேட்டேன். அதற்கு அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. ஆதலால் அன்றே அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் ஐ.தே.கவுக்குச் சென்றேன்.

கேள்வி – 2015 இல் ட்ரஸ்டின் தலைவரானீர்கள். 2019 தேர்தலில் உங்களுக்கு பதவி வழங்கிய திகாம்பரத்தை விட்டு விலகி ஐ.தே.க.வுக்கு தாவினீர்கள். இது என்னவிதமான அரசியல்?

பதில் – திகாம்பரத்தை விட்டு வரக்காரணம் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் மனித அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக பணியாற்றினேன். சம்பளம் எதுவும் இல்லாமல் கெளரவ பதவியாகவே அதனை செய்தேன். மூன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் சிறிய ஒரு கொடுப்பனவை திகாம்பரம் வழங்கினார். நான் அதனைக்கூட பொருட்படுத்தவில்லை.

2015 ம் ஆண்டு திகாம்பரத்துடன் இணைந்தபோது அப்போது இடம்பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாக கூறியிருந்தார். ஆனால் வழங்கவில்லை. திலகராஜுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை நான் ஏற்றுக்கொண்டேன். பின்னர் தேசியப் பட்டியலில் வாய்ப்பளிப்பதாக தெரிவித்தார். அதனை மனோகணேசனின் நெருங்கிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தோழி ஒருவருக்கு வழங்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எனக்கு நிச்சயமாக திகாம்பரம் வாய்ப்பளிப்பார் என்ற நம்பிக்கையிலேயே இருந்தேன். ஆனால் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார். அப்போது ஐக்கிய மக்கள் சக்தியில் நான் போட்டியிடுவதற்கு திகாம்பரமே காரணமாக இருந்தார்.

மனோ கணேசனுக்கும் திகாம்பரத்திற்கும் கூறிவிட்டே ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தில் கையொப்பமிட்டு விட்டு வீட்டுக்கு சென்றேன். வீட்டுக்கு சென்று சில நிமிடங்களில் மின்னஞ்சல் ஒன்று வந்தது. நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக. மறுநாளே திகாம்பரத்திடம் சென்று கேட்டேன். ஏன் என்னை கட்சியை விட்டு விலக்கிவிட்டீர்கள்? உங்கள் விருப்பத்தின் பேரில்தானே அங்கு சென்றேன். இப்போது என்னை கட்சியிலிருந்து விலக்கிவிட்டதாக கூறுகிறீர்கள் என்றேன்.

அதற்கு அவர் பதில் கூறவில்லை. மறுநாள் ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்திற்கு சென்று பார்க்கும்போது என்ன நடந்தது என்று எனக்கே தெரியவில்லை. என்ன மாயாஜாலமோ தெரியவில்லை. நான் கையொப்பமிட்ட படிவங்கள் எதுவும் அங்கு இருக்கவில்லை. ஆனால் முதல் நாள் நான் மாத்திரமே தேர்தல் வேட்பு மனுவில் கையொப்பமிட்டிருந்தேன். ஏதோ சூழ்ச்சி நடந்துள்ளதை எண்ணி மனம் உடைந்த நிலையில் அங்கிருந்து வெளியேறி ஐ.தே.க.வுக்கு சென்று தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். உடனடியாக அந்த வாய்ப்பினை எனக்கு தந்தார்கள். ஆனால் இத்தேர்தலில் ஐ.தே.க.வின் தலைவரும் கட்சியும் தோல்வியடைந்தது பெரிய விடயமல்ல.

கேள்வி – உங்கள் எதிர்கால அரசியல்…?

பதில் – எதிர்கால அரசியல் என்றால் அது ஐ.தே.க.தான். நான் அரசியலை ஆரம்பித்ததே ஐ.தே.க.வில்தான் அதனால் தொடர்ந்தும் அதிலேயே இருப்பேன். எதிர்காலத்தில் ஐ.தே.க எவ்வாறான முடிவுகளை எடுக்கின்றதோ அதற்கு கட்டுப்பட்டு செயற்படுவேன்.

சீக்கிரமே 2025க்கு சென்று விடுவோம். அப்போது மலையக சமூகத்தின் நிலைமைகளும் தேவைகளும் மாறி இருக்கும். கேள்வி என்னவென்றால், எதிர்காலத்துக்கு ஏற்றமாதிரி எவ்வாறான மாற்றங்களை செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?

எனக்கு அவசரமாக செய்யக்கூடிய விடயங்கள் என எதுவும் இல்லை. எதையும் அவசரமாக செய்யவும் முடியாது. ஐ.தே.க படுதோல்வியடைந்துள்ள நிலையில் அடுத்த தலைவர் யார்? அதன் செயற்பாடுகள் எப்படி இருக்க போகின்றது என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் நான் மீண்டும் ஐ.தே.க.வில் சேர்ந்தமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது.

எனது அரசியல் அனுபவத்துக்கோ கல்வி தகமைக்கோ தகுந்த மரியாதை தொழிலாளர் தேசிய சங்கத்தில் கொடுக்கவில்லை. இவை அனைத்துமே எனக்கு ஐ.தே.க.வில் கிடைத்தது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஒரு சில கூட்டங்களின்போது நான் அமர்வதற்கு ஆசனமே கொடுத்ததில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களின்போது நான் மிகவும் வேதனையடைந்தும் இருக்கின்றேன். ஒரு மனிதனுக்கு மரியாதைதான் முக்கியம். அந்த அங்கீகாரம் ஐ.தே.க.வில்தான் எனக்கு கிடைத்தது.

நேர்கண்டவர் – பி.கேதீஸ்

‘மக்களுக்கு சுகாதார அமைச்சர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு’

” கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். அதற்கு தேவையான அதிஉச்ச ஒத்துழைப்பை வழங்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்று சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சுகாதார ஆலோசனைகளை மக்கள் உரியவகையில் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்கியதாலேயே கடந்த காலங்களில் கொரோனா சமூகத்தொற்றை எம்மால் கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது. இந்நிலையில் தற்போது ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனவே, வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள். அதேபோல் சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட 56 நடைமுறைகள் நிச்சயம் நிறுவனங்களில் கடைபிடிக்கப்படவேண்டும். அவ்வாறு பின்பற்றப்படுகின்றனவா என்பது கண்காணிக்கப்படும்.

நோய் அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்லுங்கள். பொதுவெளியில் நடைபெறும் நிகழ்வுகளை தவிர்த்துக்கொள்ளவும்.” – என்றார்.

’20’ ஐ ஆதரிக்க தயார் – வடிவேல் சுரேஷ் விடுத்துள்ள அறிவிப்பு!

” மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வுகளை வழங்கி, தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்கினால் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஆதரிப்பதற்கு தயார்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

நுவரெலியாவில் வைத்து இன்று (04) 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” 19 ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து, அதனை வலுப்படுத்துவதற்காக 19 பிளஸ் திருத்தம் முன்வைக்கப்படுமானால் அதற்கு நிச்சயம் ஆதரவு வழங்குவேன். அதுவே எனது நிலைப்பாடு.

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 20 திருத்தச்சட்டமூலத்தில் என்ன உள்ளது? எமது மக்களுக்கு நன்மை பயக்ககூடிய எவையும் அதில் இல்லை.

குறிப்பாக மலையக மக்களுக்கு காணி உரிமையும், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதாகவும் அதேபோல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணைக்கையை அதிகரிப்பதாகவும் அரசாங்கம் உறுதியளித்தால் இரு கரங்களை உயர்த்தி இருபதை 20 ஆதரிக்க நான் தயார்.

ஆனால் உப்புச் சப்பு இல்லாத தெளிவாக சொன்னால் தாய், தந்தை இல்லாத இருபதை ஆதரிக்க நான் தயாரில்லை. 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் வாசித்து அறிந்தவர்கள் எவரும் 20 ஐ ஆதரிக்கமாட்டார்கள். ” – என்றார்.

இதன்போது தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் மூபா சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் ஊடகியலாளர்கள் வினவினர்.இதற்கு பதிலளித்த அவர்…

” இது தொடர்பில் தீர்மானிக்க முதலாளிமார் சம்மேளனத்திற்கு தொழில் அமைச்சர் இரண்டு வாரகால அவகாசத்தை வழங்கியுள்ளார். அது தொடர்பில் முடிவெடுக்க வழங்கப்பட்ட இருவாரத்தில் 4 நாட்கள் முடிவடைந்துள்ளது. இன்னும் 10 நாட்கள் உள்ளன. எனவே அவர்களின் பதிலுக்காக காத்திருக்கின்றோம். ” – என்றார்.

க.கிசாந்தன்

திவுலப்பிட்டிய பெண்ணின் மகளுக்கும் கொரோனா தொற்று!

திவுலப்பிட்டிய பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணின் மகளுக்கு (வயது -16) கொரோனா தொற்றியுள்ளமை பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திவுலப்பிட்டியவை சேர்ந்த 39 வயதான பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை நேற்றிரவு கண்டறியப்பட்டது. இது தொடர்பில் இன்று காலை அனைத்து தரப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கம்பஹா மாவட்டத்தில் மினுவங்கொட, திவுலபிட்டிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

அத்துடன், குறித்த பெண்ணுடன் தொடர்பைபேணிய சுமார் 400 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப்பரிசோதனையிலேயே அவரின் மகளுக்கு வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மஸ்கெலியா டீசைட் தோட்டத்தில் ‘மொபைல்’ திருடன்!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை டீசைட் தோட்டத்தில் கடந்த இரு நாட்களாக கையடக்க தொலைபேசிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

லயன் குடியிருப்பொன்றை மையப்படுத்தியே இக்கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மூன்று வீடுகளில் இவ்வாறு கையடக்க தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளன என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். தனி நபரொருவர் இதன் பின்னணியில் செயற்படுகின்றாரா அல்லது குழுவொன்று இயங்குகின்றதா என்ற கோணத்திலும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

சாமிமலை நிருபர் ஞானராஜ்

திவுலப்பிட்டிய பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா தொற்றியது?விசாரணை தீவிரம்!

திவுலப்பிட்டிய பகுதி பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியது என்பதை கண்டறியும் புலனாய்வுத் தேடல் ஆரம்பமாகியுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி வரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, இதுவரை குறித்த பெண்ணுக்கு தொற்று எங்கிருந்து ஏற்பட்டது என்பது கண்டறியப்படவில்லை . விசாரணைகள் தொடர்கின்றன. இன்றைய நாளுக்குள் கண்டறியமுடியும் என நம்புகின்றோம்.

அத்துடன், இந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட தொற்று சமூக தொற்றாக மாறுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முகக்கவசம் அணிதல், சமூகஇடைவெளியைப் பின்பற்றுதல், கைகளை கழுவுதல் போன்ற சுகாதார நடைமுறைகளை மக்கள் பின்பற்றவேண்டும். கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.” – என்றும் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்தார்.

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை முதல் இரண்டாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

அத்துடன், தனியார் வகுப்புகளை நடத்துவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் 9 ஆம் திகதி வழங்கப்படவிருந்தது.

எனினும், திவுலப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்தே , வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்கூட்டியே விடுமுறை வழங்கப்படுகின்றது.

கம்பஹா மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கு நாளை (05) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில்  நடைபெறும் அனைத்து தனியார் வகுப்புகளுக்கும் இக்காலப்பகுதியில் விடுமுறை வழங்குமாறும் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

‘நீர்கொழும்பு கடலில் மூழ்கிய மூவரும் மலையக இளைஞர்கள்’

நீர்கொழும்பு, கொச்சிக்கடை கடலில் நேற்று குளிக்கச் சென்று காணாமல்போன இளைஞர்களில் இருவர் தலவாக்லை, ஸ்டேலின் தோட்டத்தைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

முத்துகுமார் சிந்துஜன் வயது (24) ,மனோகரன் சசிகுமார் வயது (22) ஆகிய இருவரும் மேற்படி தோட்டத்தை சேர்ந்தவர்களாவர்.

குறித்த இளைஞர்கள் கொழும்பிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் நேற்று (03) மாலை குளிப்பதற்காக தனது ஏழு நண்பர்களுடன் நீர்கொழும்பு கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் தீடீரென அலைக்கு சிக்குண்டு கடலினுள் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போய்யுள்ளனர்.

காணமல் போன இளைஞர்கள் மூவரில் மற்றுமொருவர் பதுளை நமுனுகல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.காணாமல் போனவர்களை தேடும் பணிகளை நேற்று (03.10.2020) மாலை கடற்படையினரும் சுழியோடிகளும் முன்னெடுத்து வருகின்றனர்.இது குறித்து மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

க.கிசாந்தன்

திவுலப்பிட்டிய, மினுவங்கொட பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு!

கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய, மினுவங்கொட பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்குவரும்வரையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு செல்வதற்கும், அங்கிருந்து வெளியேறுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திவுலபிடிய பகுதியில் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையிலேயே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பைபேணிய பலர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

தோட்டத்தில் கூலிப்படை வேண்டாம்: 05 ஆம் திகதி கொழும்பில் போராட்டம்!

0
“தோட்டத்தில் கூலிப்படை வேண்டாம்” என வலியுறுத்தும் “ “நீலகாமம் சாத்வீகப் போராட்டம்” எதிர்வரும் மே 05 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில், தொழிலாளர் குடியிருப்பொன்று அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. தோட்ட நிர்வாகத்தின்...

சூப்பர் ஓவரில் லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா

0
ஐபிஎல் 2026 தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றி பெற்றது. லக்னோ ஏகானா மைதானத்தில்...

மரக்கறி விலைப்பட்டியல் (27.04.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...