Home Blog Page 3835

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிப்பு

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. உலகின் மிக உயரிய விருதாக இந்த விருதுகள் கருதப்படுகின்றன.

இதில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான பிரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நோர்வேயில் அறிவிக்கப்படுகிறது.

அவ்வகையில் 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளான இன்று பிற்பகல் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. 7ம் திகதி வேதியியலுக்கான நோபல் பரிசும், 8 ஆம் திகதி இலக்கியத்திற்கான நோபல் பரிசும், 9ம் திகதி அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்படுகிறது. அதன்பின்னர் 12ம் திகதி ஆல்பிரட் நோபலின் நினைவாக ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் வழங்கும் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.

உலகளவில் 3 கோடியே 53 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 41 ஆயிரத்தை கடந்தது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 41 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 53 லட்சத்து 98 ஆயிரத்து 976 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 77 லட்சத்து 33 ஆயிரத்து 778 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 509 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 2 கோடியே 66  லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 214,611
பிரேசில் – 146,375
இந்தியா – 102,714
மெக்சிகோ – 79,088
இங்கிலாந்து – 42,350
இத்தாலி – 35,986

வெளிநாடுகளில் 64 இலங்கையர்கள் கொரோனாவால் பலி – 2,600 பேர் பாதிப்பு

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளுக்காக சென்றுள்ள இலங்கையர்கள் 64 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்றுவரை வெளிநாட்டில் பணிபுரியும் 2600 இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மேற்படி பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

ஜோர்தான் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த இலங்கையர் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளார். அந்த ஆடைத்தொழிற்சாலையில் 350 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஜோர்தானில் சாக்கடலுக்கு அருகிலுள்ள மத்திய நிலையத்தில் மருத்துவக் கண்காணிப்புக்குஉட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேற்படி நபர்கள் தொடர்பில் அந்தந்த நாடுகளிலுள்ள தூதுவராலயங்கள் செயற்பட்டு வருகின்றன. அதேவேளை கொரோனா தொற்றினால் மரணமடைகின்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு 5 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இராணுவத் தளபதி T-20 போட்டித்தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களின் பங்கேற்புடன் முதல் முறையாக இராணுவ தளபதி ரி 20 லீக் தொடர் இன்று 5 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இராணுவ தளபதி ரி 20 தொடரில் 4 அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், 12 நாட்களுக்கு தொடர் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும், தொம்பேகொட இராணுவ கிரிக்கெட் மைதானம் மற்றும் சாலியபுர கஜபா கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளதுடன், இறுதிப் போட்டி 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

விளையாடவுள்ள நான்கு அணிகளும் நொர்தென் வொரியர்ஸ், ஈஸ்டர்ன் வொரியர்ஸ், சௌதெர்ன் வொரியர்ஸ் மற்றும் வெஸ்டர்ன் வொரியர்ஸ் என பெயரிடப்பட்டுள்ளன. குறித்த இந்த அணிகளை முறையே, தேசிய அணி வீரர்களான சீகுகே பிரசன்ன, அசேல குணரத்ன, தினேஷ் சந்திமால் மற்றும் திசர பெரேரா ஆகியோர் வழிநடத்தவுள்ளனர்.

தொடருக்கான அணிகளில் இராணுவ கிரிக்கெட் கழகத்தின் வீரர்கள் இணைக்கப்படவுள்ளதுடன், கீழே பெயரிடப்பட்டுள்ள தேசிய அணி வீரர்களும் தொடருக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

நொர்தென் வொரியர்ஸ்

சீகுகே பிரசன்ன (தலைவர்), தசுன் ஷானக, அகில தனன்ஜய, பானுக ராஜபக்ஷ

ஈஸ்டர்ன் வொரியர்ஸ்

அசேல குணரத்ன (தலைவர்), குசல் மெண்டிஸ், சந்துன் வீரகொடி, சதுரங்க டி சில்வா

சௌதெர்ன் வொரியர்ஸ்

தினேஷ் சந்திமால் (தலைவர்), சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க, வெஸ்டர்ன் வொரியர்ஸ்

வெஸ்டர்ன் வொரியர்ஸ்

திசர பெரேரா (தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, தம்மிக்க பிரசாத், நுவன் பிரதீப்

நாட்டில் ஏனைய பகுதிகளிலும் ஊரடங்கு அமுலாகுமா? பிரதி பொலிஸ்மா அதிபர் வழங்கிய பதில்

” கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பொலிஸ் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்படுமா என்ற கேள்விக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இன்று (5) காலை பதிலளித்துள்ளார்.

இதன்போது அவர் கூறியதாவது,

” நாட்டில் மூன்று பொலிஸ் பிரிவுகளுக்குதான் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கும் எண்ணம் இல்லை. எனினும், வைரஸ் தாக்கத்தை அடிப்படையாகக்கொண்டே இது விடயத்தில் முடிவெடுக்கப்படும். இன்றைய நாளுக்குள் அது பற்றி அறியமுடியும். ” – என்றார்.

திவுலப்பிட்டியவில் 31 பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் தனிமைப்படுத்தலில்

கொரோனா தொற்று ஏற்பட்ட ஆடைத் தொழிற்சாலை பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, குறித்த 16 மகள் கல்வி பயிலும் வகுப்பு மாணவிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த மாணவிகளின் குடும்பத்தாரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மகள் திவுலப்பிட்டியவில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விபயில்கின்றமை குறப்பிடத்தக்கது. அத்துடன், தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவி, கடந்த மாதம் முழுவதும் பாடசாலைக்கு இடைவிடாது வருகை தந்துள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த மாணவியின் சக வகுப்பு மாணவிகளையும், அவர்களின் குடும்பத்தாரையும், ஆசிரியர் சிலரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு ஆடைத் தொழிற்சாலையிலேயே கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்று தற்போது வரை நடத்தப்பட்டுள்ள விசாரணைகளுக்கமைய சந்தேகிப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும், இதற்கான மூலம் இதுவரை உறுதியாக கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்தர – புலமைப் பரிசில் பரீட்சைகள் குறித்து விசேட அறிவிப்புக்கள்

இம்முறை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சைகள் திகதிகளில் எவ்வித மாற்றங்களையும் இதுவரை செய்யவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் பீ.சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த பரீட்சைகளைத் திட்டமிட்டப்படி நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும், பரீட்சைத் திகதிகளில் மாற்றங்களைச் செய்வதற்கான எவ்வித தீர்மானமும் இதுவரை இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, மாணவர்கள் திட்டமிட்டபடி பரீட்சைகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது ஏற்பட்டுள்ள ஏற்பட்டுள்ள புதிய கொரோனா நெருக்கடியினால் இலங்கை பரீட்சைகள் திணைக்களம், சான்றிதழ் வழங்கும் பணிகளை ஒன்லைன் முறையில் மட்டும் முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அனைவரது சுகாதார பாதுகாப்பிற்காக பரீட்சைகள் திணைக்களத்திற்குள் பொதுமக்களின் வருகையைக் கட்டுப்படுத்தியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி மறு அறிவித்தல் வரை, ஒருநாள் மற்றும் சாதார சேவைக் கூடங்கள் தற்காலிகமாக மூடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கம்பபா, கொழும்பு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் அனைத்துவித மேலதிக வகுப்புக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு பிரதேசங்களில் சிக்கியுள்ள மக்களுக்கான அறிவித்தல்

திவுலப்பிட்டிய மற்றும் மினுவாங்கொட, ஆகிய பிரதேசங்களில் ஊரடங்கு காலத்தில் பயணிப்பதற்கான அனுமதிப் பத்திரம் தேவைப்படுவோர் மினுவாங்கொட பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகரைத் தொடர்புகொண்டு தகவல் அறிய முடியும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் சீ.பீரிஸ் உடன் 071 8591617 எனும் இலக்கத்தில் தொடர்பை ஏற்படுத்தி தகவல் தெரிந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

இதேவேளை, திவலப்பிட்டிய மற்றும் மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த துறைமுகத்தில் தொழில்புரிபவர்களை மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை தொழில் நடவடிக்கைகளுக்கு சமூகமளிக்க வேண்டாம் என இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.

அதேபோல, மினுவங்கொடை, திவுலப்பிட்டிய பகுதிகளில் வசிக்கும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை சேவைக்கு சமூகமளிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திவுலப்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்ட நிலையில் நாடு முழுவதும் கொரோனா சமூகப் பரவல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

‘பஞ்சாப்பை பந்தாடி சென்னை அணி அமோக வெற்றி’

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் பஞ்சாப்பை பந்தாடி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 179 ஓட்டங்கள் இலக்கை சேசிங் செய்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

துபாயில் நேற்றிரவு நடந்த 18ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடன் மோதியது.

இதில் ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நுழைந்தனர். அவசரம் காட்டாமல் நிதானமாக ஆடிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் தந்தனர்.

மயங்க் அகர்வால் 26 ரன்களில் (19 பந்து, 3 பவுண்டரி) பியுஷ் சாவ்லாவின் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த மன்தீப்சிங் தனது பங்குக்கு 27 ரன்கள் (16 பந்து, 2 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதைத் தொடர்ந்து லோகேஷ் ராகுலும், நிகோலஸ் பூரனும் ஜோடி போட்டு ஸ்கோரை எகிற வைக்கும் முனைப்புடன் ஆக்ரோஷமாக ஆடினர். ஜடேஜாவின் பந்து வீச்சில் பூரனும், ஷர்துல் தாகூரின் ஓவரில் ராகுலும் சிக்சர், பவுண்டரிகளை சாத்தினர்.

ராகுல் தனது 18-வது அரைசதத்தை நிறைவு செய்தார். 16 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது, 200 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது.

ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் கடைசி கட்டத்தில் ரன்வேகம் சற்று தளர்ந்தது. நிகோலஸ் பூரன் 33 ரன்களிலும் (17 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), லோகேஷ் ராகுல் 63 ரன்களிலும் (52 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆனார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்தது. சர்ப்ராஸ் கான் 14 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 11 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். சென்னை தரப்பில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், ஜடேஜா, பியுஷ் சாவ்லா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து 179 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷேன் வாட்சனும், பாப் டு பிளிஸ்சிசும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு அபாரமாக ஆடினர். முந்தைய ஆட்டங்களில் சொதப்பியதால் கடும் விமர்சனத்திற்குள்ளான வாட்சன் அதற்கு பரிகாரம் தேடும் வகையில் மட்டையை பக்குவமாக சுழட்டினார். பிளிஸ்சிஸ்சின் பேட்டிங்கும் நேர்த்தியாக இருந்தது. கிறிஸ் ஜோர்டானின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார்.

பவர்-பிளேயில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் திரட்டியது. இந்த கூட்டணியை உடைக்க பஞ்சாப் கேப்டன் ராகுல் யுக்திகளை பலவாறு மாற்றி அமைத்தும் கடைசி வரை பலன் இல்லை.

வாட்சன், சர்வசாதாரணமாக பந்துகளை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டார். இதில் ஒரு பந்து 101 மீட்டர் தூரத்திற்கு பறந்தது. இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் சென்னை அணியின் வெற்றிப்பயணம் சுலபமானது. ஷமியின் பந்து வீச்சில் சிக்சர், பவுண்டரியுடன் ஆட்டத்தை பிளிஸ்சிஸ் தித்திப்பாக முடித்து வைத்தார்.

சென்னை அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது. வாட்சன் 83 ரன்களுடனும் (53 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்), பிளிஸ்சிஸ் 87 ரன்களுடனும் (53 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.

5-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். தொடர்ந்து 3 தோல்விகளுக்கு பிறகு வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறது. அதே சமயம் பஞ்சாப் அணிக்கு இது 4-வது அடியாகும்.

நடிகை தமன்னாவுக்கும் கொரோனா தொற்று

நடிகை தமன்னா கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு நடிகர், நடிகைகளும் சிக்கி வருகிறார்கள். ஏற்கனவே நடிகர்கள் அமிதாப்பச்சன், விஷால், அபிஷேக் பச்சன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், சுமலதா. இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமாகி மீண்டனர்.

இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக நடிகை தமன்னா தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தற்போது தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

பாகுபலி மூலம் நடிப்பு திறமையை வெளிப்படுத்திய அவர் தற்போது தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

அர்ச்சுனா எம்.பி. கைது!

0
கைத்துப்பாக்கியைகாட்டி மிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். இளவாலைப் பொலிஸாரினால் அவர் இன்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பெரியவிளான் பகுதியிலுள்ள காணி தொடர்பில்...

பதுளையில் சென் ஜோன் அம்புலன்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறைவு – 22 பேருக்கு சான்றிதழ்

0
பதுளையில் சென் ஜோன் அம்புலன்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறைவு – 22 பேருக்கு சான்றிதழ்கள் பதுளை மாவட்ட சென் ஜோன் அம்புலன்ஸ் படையணியினால் ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட இரு நாள் பயிற்சி நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது....

தோட்டத்தில் கூலிப்படை வேண்டாம்: 05 ஆம் திகதி கொழும்பில் போராட்டம்!

0
“தோட்டத்தில் கூலிப்படை வேண்டாம்” என வலியுறுத்தும் “ “நீலகாமம் சாத்வீகப் போராட்டம்” எதிர்வரும் மே 05 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில், தொழிலாளர் குடியிருப்பொன்று அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. தோட்ட நிர்வாகத்தின்...