Home Blog Page 3841

‘மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம்’ – பிரதமர் பெருமிதம்

கொவிட் – 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பாடசாலையை கூடிய விரைவில் ஆரம்பிக்குமாறு மாணவர்கள் விடுத்த கோரிக்கையை, அவர்களின் பாதுகாப்பு குறித்த மிகுந்த அக்கறையுடன் தமக்கு நிறைவேற்ற முடிந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று 2020.09.30 தெரிவித்தார்.

கொழும்பு இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்து கல்லூரியின் 2019ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு இதன்போது பிரதமரினால் சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கல்லூரியின் அதிபர் டி.பீ.பரமேஸ்வரனால் பிரதமருக்கு 2019ஆம் ஆண்டுக்கான கல்லூரி மலரும், நினைவு பரிசொன்றும் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

‘இக்கல்லூரியின் பரிசளிப்பு விழாவிற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பில் நான் பெருமகிழ்சியடைகின்றேன். இக்கல்லூரி, தமிழ் மக்களின் மொழி பண்பாட்டு அம்சங்களைக்கொண்டு இயங்கும் ஒரு தேசிய பாடசாலை என்பதுடன் சிறந்த கல்விமான்களையும் சமூகப்பொறுப்புள்ள மாணவர்களையும் எதிர்காலத்தின் நற்பிரஜைகளையும் இக்கல்லூரி தந்துள்ளது. இந்த மாணவர்களே நாட்டின் எதிர்கால தலைவர்களாவர்.

1951 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி ஆண்கள் பாடசாலையாக மிளிர்வதுடன் தமிழ், ஆங்கில மொழிமூலமான கற்கைநெறிச் செயற்பாட்டைக்கொண்டு சிறப்பாக இயங்கி வருகின்றது. மாணவர்களை பண்படுத்தி வழிப்படுத்துவதில் பாடசாலைகளே முதன்மை வகிக்கின்றன. ‘ஒரு பாடசாலை திறக்கப்படும்போது ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படும்’ என்பது பழமொழி.

நல்ல மாணவர்களை உருவாக்குதல் பாடசாலைகளின் பணியாவதுடன், அவர்களின் எதிர்காலத்தினை நல்வழிப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பும் கடப்பாடும் அதிபர் மற்றும் ஆசிரியர்களுடையதாகும்.

‘கற்றாங்கு ஒழுகுக’ என்ற குறிக்கோளுடன் இயங்கும் இக் கல்லூரியானது ஒழுக்கம் மற்றும் கல்வி நிலையில் மேன்மைபெற்ற பல மேதைகளை உருவாக்குவதில் விசேட கவனம் செலுத்தி வருகின்றமையை நான் அறிவேன்.

நாட்டின் வளம் என்பது நல்ல மாணவர்களை உருவாக்கி கல்வியில் முன்னிலையில் இருப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்து சுபீட்சமான வாழ்வினைக் கொண்டாடும் சமூகச்சூழலை ஏற்படுத்தி முழு நாட்டினையையும் செல்வச் செழிப்புடன் ஆக்கும் ஒருபெரும் முயற்சியாகும். கல்வியால் ஏற்படுத்த முடியாத மாற்றத்தை எக்காரணியும் ஏற்படுத்த முடியாது என்பதில் ஐயமில்லை.

கல்விச் செல்வமே அழியாததும் பிறர் கொள்ளை கொண்டு போக முடியாததுமாகும். கல்வியை வழங்கும் ஒவ்வொரு நிறுவனமும் நாட்டிற்குரிய நற்பிரஜைகளை உருவாக்கும் உன்னத சேவையை ஆற்றுகின்றன. அந்தவகையில் கொழும்பு இந்துக்கல்லூரியின் மூலமும் மாணவர்களுக்கு முறையான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

30 ஆண்டுகால யுத்தத்தை நிறைவுசெய்து நாட்டில் சமாதானத்தினை கட்டியெழுப்பி நாட்டின் அபிவிருத்தியை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். போரின் பின்னர் நாட்டினை கட்டியெழுப்ப வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல திட்டங்களை எமது அரசாங்கம் அன்று கொண்டுவந்தது. இன்று மக்கள் மீண்டும் எம்மை ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளனர். அவர்களின் ஆணையின் மூலம் மேலும் பல நிலைபேண்தகு அபிவிருத்தி செயற்திட்டங்களை மேற்கொள்ள எமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கல்விச் செயற்பாடுகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி எம் நாட்டின் கல்வி வளர்ச்சியை மேன்நிலைக்கு கொண்டுசெல்வதே எமது இலட்சியமாகும்.

இன்று கொவிட் – 19 பிரச்சினையை உலகளாவிய சவாலாக எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம். எமது நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன் இப்பெரும் சவாலை கட்டுக்குள் வைத்துள்ளோம். இந்த பிரச்சினைகளினால் பாடசாலை பிள்ளைகளாகிய உங்களின் கல்வி பாதிப்படையக்கூடாது. கொரோனா நிலைமை காரணமாக பாடசாலை விடுமுறை காலத்தில் நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக மாணவர்களுக்கு செவிமடுக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன்போது பாடசாலையை விரைவாக ஆரம்பிக்குமாறு மாணவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர். அதற்கேற்ப முடங்கிக்கிடந்த நாட்டின் நிலைமைகளை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்து பாடசாலை நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பிக்கும் முயற்சியில் நாம் வெற்றிகண்டோம். பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறை செலுத்தப்பட்டது.

கல்வியில் போன்றே மாணவர்கள் விளையாட்டு துறையிலும் ஈடுபட வேண்டும். உங்களை போன்றே வடக்கு கிழக்கு மற்றும் மலையக மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டமை அறிய முடிந்தது.
எதிர்காலத்தின் தலைவர்களாக விளங்கும் நீங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்.

அதேபோன்று இக்கல்லூரியானது ஏனைய பிரதேச பாடசாலைகளுக்கு முன் உதாரணமான பாடசாலையாக விளங்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தமிழில் உரையாற்றி பிரதமர், ‘என் அன்பார்ந்த மாணவர்களே, நீங்கள் தான் எமது நாட்டின் எதிர்கால தலைவர்கள். உங்கள் அனைவரையும் இன்று நான் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில், இந்து மதகுருமார்களான ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள், கலாநிதி எஸ்.சந்தீர் அவர்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இந்துக்கல்லூரியின் அதிபர் டி.பீ.பரமேஸ்வரன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நுவரெலியாவில் போதைப் பொருள் பொதி மீட்பு?

நுவரெலியாவில் குப்பைகளை சேகரிக்கும் இடத்தில் இருந்து போதை பொருள் என சந்தேகிக்கப்படும் பொதி ஒன்று நுவரெலியா பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா கிரகறி வாவிக்கு அருகாமையில் பொலிதீன் சேகரிக்கும் இடத்தில் போதை பொருள் என சந்தேகிக்கப்படும் பொதி ஒன்று நுவரெலியா பொலிசாரால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா அரச புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இந்த பொதியை நுவரெலியா குற்றத் தடுப்பு பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
விளையாட்டு துறை அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த காணியில் நுவரெலியா மாநகர சபை ஊழியர்களால் வெற்று போத்தல்கள் பொலிதின் போன்றவற்றை இந்த இடத்தில் சேகரித்து களஞ்சியப்படுத்தியுள்ளனர்.இதன் ஒரு பகுதியிலேயே மிகவும் சூட்சுமமான பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிக்கப்பட்ட பொதியில் இருப்பது போதை பொருளா என்பதை அறிந்து கொள்வதற்காக இந்த பொதியை அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
நுவரெலியா பொலிஸ் நிலைய அதிகாரி புலனாய்வுத்துறை உடுகம சூரியவின் பணிப்புரையின் பேரில் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விஜேசூரிய தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

இன்னும் சம்பளம் தரவில்லை – பிக்பாஸ்மீது கஸ்தூரி குற்றச்சாட்டு

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு ஆண்டாகியும் தனக்கான சம்பளம் தரவில்லை என்று நடிகை கஸ்தூரி குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வதேச அளவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. கொரோனா காரணமாக தள்ளிப்போன பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் வரும் அக்டோபர் 4ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது. வழக்கம் போல் நடிகர் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு ஆண்டாகியும் தனக்கான சம்பளம் தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதே ஆதரவற்ற குழந்தைகளோட ஆபரே‌ஷன் செலவுக்காகத்தான். நான் எப்போதுமே பொய் வாக்குறுதிகளை நம்புவதில்லை. ஆனால் இதிலும் அப்படியே நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

இதை கண்ட ரசிகர்கள் பலர் கஸ்தூரிக்கு ஆதரவாக கருத்து கூறினால் சிலரோ எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஓராண்டு கழித்து இப்படி ஒரு முறைப்பாட்டை கூறுவது ஏன்? இதுவும் வீண் விளம்பரத்திற்காகவா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கொழும்பு – நுவரெலியா பஸ்களில் அரங்கேறும் ‘பயங்கரம்’ – பயணிகளே அவதானம்!!

கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணிக்கும் பேருந்துகளில் பயணிகளுக்கு அதிக போதை ஊட்டக்கூடிய மாத்திரைகளை கொடுத்து மயங்கச் செய்து அவர்களின் பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையடிக்கின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

” சில பேருந்துகளில் சில பயணிகளை ஏமாற்றி அவர்களுக்கு அதிக போதை ஊட்டக்கூடிய மாத்திரைகளை உணவுடனும் குடி நீருடனும் கொடுத்து அவர்களை மயங்கச் செய்து அவர்கள் நித்திரையாகிய பின்பு அவர்களிடம் உள்ள பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பித்துச் செல்லும் நபர்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.” – என்று நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது திட்டமிட்ட அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 27 ஆம் திகதி கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பாதிரியார் ஒருவர் இந்த மோசமான சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதுடன் இவர் அன்றைய தினம் அதாவது 27 ஆம் திகதி இரவு மயங்கிய நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் மேலும் குறிப்பிடுகின்றார்.

கொழும்பில் இருந்து ஹட்டன் வழியாகவும் கொழும்பில் இருந்து கண்டி வழியாகவும் நுவரெலியா நோக்கி பயணிக்கும் பேருந்துகளிலேயே இந்த சம்பவம் அதிக அளவில் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறுவதாக தெரியவருகின்றது.

இந்த சம்பவமானது தனியார் அரச பேருந்துகளில் திட்டமிடப்பட்ட குழுவினரால் அல்லது நபர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்ட்ட 8 பேர் கடந்த வாரங்களில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த விசேட வைத்தியர் மேலும் தெரிவிக்கின்றார்.

குறித்த திட்டமிட்ட குழுவினரால் வழங்கப்படுகின்ற அதிக சக்திவாய்ந்த போதை பொருள் காரணமாக இதனை உட்கொள்கின்ற நபர்கள் சுமார் 72 மணித்தியாலங்கள் சுய நினைவை இழப்பதாகவும் அவர்களுடைய மனநிலை மாற்றமடையவதாகவும் அந்த விசேட வைத்தியர் இது தொடர்பாக குறிப்பிடுகின்றார்.

நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடந்த 27 ஆம் திகதி இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்த ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத பாதிரியார் ஒருவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்

தான் கொழும்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இரண்டாம் நிலை பாதிரியாராக சேவை செய்து வருவதாகவும் நுவரெலியாவில் அமைந்துள்ள தங்களுடைய கிறிஸ்தவ தேவாலயத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றுவதற்காக கடந்த 26 ஆம் திகதி பகல் 1.00 மணியளவில் அரசாங்க பேருந்து ஒன்றில் கொழும்பில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்ததாகவும் மிகவும் குழப்பமடைந்த நிலையில் பயணி ஒருவர் பேருந்தில் வேறு ஆசனங்கள் இருந்த பொழுதும் தனது இருக்கைக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டு தானும் நுவரெலியாவிற்கு பயணம் செய்வதாகவும் கூறினார்.

புயணத்தின் இடை நடுவில் குறித்த அந்த நபர் தன்னிடம் இருந்த எல்லு உருண்டைகளை தான் மிகவும் ரசித்து உண்ண ஆர்ம்பித்தார்.அதே நேரம் என்னிடமும் ஒரு சில எல்லு உருண்டைகளை கொடுத்து உண்ணுமாறு கூறினார்.நான் பிறகு அதனை உட்கொள்வதாக கூறி எனது கைப்பையில் வைக்க முற்பட்ட பொழுது அவருடைய வற்புறுத்தல் காரணமாக நான் அதனை உட்கொண்டேன்.எனக்கு நிட்டம்புவை நெருங்கும் பொழுது எனது சுய நினைவை இழந்ததாக நான் நினைக்கின்றேன்.

இதனை தொடர்ந்து எனக்கு 28 ஆம் திகதி நுவரெலியா வைத்தியசாலையில் வைத்தே சுய நினைவு திரும்பியது.தான் ஒரு பாதிரியார் என்பதை புரிந்து கொண்ட அவன் என்னிடம் எதனையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை.ஆனால் அவன் நுவரெலியா தொடர்பாக நன்கு அறிந்து வைத்திருந்தான் எனவும் அவனை மீண்டும் ஒரு முறை கண்டால் தன்னால் அடையாளம் காண முடியும் எனவும் அந்த பாதிரியார் குறிப்பிடுகின்றார்.

மேலும் அரசாங்கமும் காவல் துறையினரும் இது தொடர்பாக மக்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தனியார் அரச பேருந்துகளின் நடத்துனர்கள் மற்றும் அதிகாரிகளும் அதிக கவனத்துடன் செயற்பட முன்வரவேண்டும் இல்லாவிட்டால் இந்த நிலைமை ஏனைய பகுதிகளிலும் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் – 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 12 ஆயிரத்தை கடந்தது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 12 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 38 லட்சத்து 44 ஆயிரத்து 343 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 76 லட்சத்து 83 ஆயிரத்து 273 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 917 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 2 கோடியே 51 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 210,785
பிரேசில் – 143,010
இந்தியா – 96,318
மெக்சிகோ – 76,603
இங்கிலாந்து – 42,072
இத்தாலி – 35,875
பெரு – 32,396
பிரான்ஸ் – 31,893
ஸ்பெயின் – 31,614
ஈரான் – 25,986
கொலம்பியா – 25,828

தொழிலாளியின் தலையில் சுமை : கம்பனி நிர்வாகத்திற்கு செந்தில் கடும் எச்சரிக்கை : வெள்ளிக்குள் தீர்வு வேண்டுமென உத்தரவு

மல்வத்த பிளான்டேசனுக்குச் சொந்தமான பதுளை – ஊவா ஹைலன்ஸ் தோட்டத்தில் கொழுந்துகளை நிறுப்பதற்கு பெண் தொழிலாளர் பயன்படுத்தப்படுகிறார்கள்.

தேயிலைக் கொழுந்து நிறுப்பதற்கு தோட்டத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி, அவர்களை உடல் ரீதியாக மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.

குறிப்பாக தேயிலைக் கொழுந்து நிறுக்கும் கட்டை ஒருபுறத்தில் சுவரில் பொருத்தியிருக்க, மற்றுமொரு புறத்தில் அதனை தோட்டத் தொழிலாளி தலையில் சுமக்கும் படம், பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், இதுகுறித்து பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், குறித்த தோட்ட கம்பனியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சமர திவாகரவை தொடர்புகொண்டு, இதுகுறித்து எச்சரித்துள்ளார்.

முன்னதாக இதனை மறுத்த தோட்ட நிர்வாகம், இந்தப் படங்களை அனுப்பிவைத்த பின்னர், தமது பக்க தவறை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் இதற்கான தீர்வைப் பெற்றுத்தருவதாக கம்பனியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.

கொழுந்து நிறைபார்ப்பதில் தொடர்ச்சியான சிக்கல்கள் இருந்து வரும் நிலையில், மேலும் தொழிலாளர்கள் மீது தோட்ட நிர்வாகங்கள் சுமைகளை அதிகரிப்பது கண்டித்தக்கதாகும்.

 

சாமிமலையில் தனிவீட்டு திட்டத்துக்கு பணம் வசூலிப்பு – பயனாளிகளுக்கு சிக்கல்!

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட  சாமிமலை டீசைட் தோட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் வீடமைப்பு திட்டத்தில் பயனாளிகளிடம் பணம் அறவிடப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

2018 ஆகஸ்ட்   28ஆம் திகதி முன்னாள் அமைச்சர் பழணி திகாம்பரத்தால் மேற்படி தோட்டத்தில் 16 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன .

குறித்த வீடமைப்பு திட்டம் முழுமை பெறாத நிலையில் சுமார் ஒரு வருட காலமாக பிற்போடப்பட்டு தற்போது புதிய அரசாங்கத்தின் மூலமாக, மீண்டும் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த வீடமைப்பு திட்டத்தில் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து பயனாளிகளிடம் ஒப்பந்தக்காரர்களால் பணம் வசூலிக்க படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர் .

அந்த வகையில் வீட்டிற்கு அத்திவாரம் இடுவதற்கு ஒவ்வருவரிடமும் தலா ஆறாயிரம் ரூபாவும், மலசலகூடம் அமைப்பதற்காக பத்தாயிரம் ரூபாவும் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது வீட்டின் உள்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயிலுக்கு நிலை பொருத்துவதற்காக ஒவ்வருவரிடமும் 3600/_ ரூபாய் பணம் செலுத்துமாரு கோரப்பட்டுள்ளது .அதன் உண்மையான விலை சுமார் 2400/ ரூபாய் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீடமைப்பு திட்டத்தில் தோட்டகமிட்டி முக்கியஸ்தர்கள் உதவியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். அவர்கள் மூலமாகவே ஒப்பந்தகாரரால் இவ்வாறு பணம் வசூலிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே குறித்த விடயம் சம்பந்தமாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .

சாமிமலை நிருபர் ஞானராஜ்

இரண்டாம் நாள் பரீசிலனை இன்று – ’20’ குறித்த தீர்ப்பு 21 இற்குள்!

அரசியலமைப்பின் 20 சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 39 மனுக்கள்மீதான பரீசிலனை இன்று (30) இரண்டாவது நாளாக நடைபெறுகின்றது.

பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் மனுக்கள்மீதான பரிசீலனையை நிறைவு செய்ய முடியும் என பிரதம நீதியரசர் நேற்று அறிவித்தார்.

மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு – சட்டவிளக்கம் ஒக்டோபர் 21 ஆம் திகதிக்கு முன்னர் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்படும் என பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின்போது திருத்தப்படும் என சட்டமாஅதிபர் நேற்று நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளி இரு வாரங்களில்

இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியை இரு வாரங்களுக்குள் அறிவிக்கவுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கு முன்னர் பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுடன் அது தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக உள்ளீர்ப்பிற்கான 36 தேர்வுகளின் பெறுபேறுகள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் இம்முறை சுமார் 40,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 10,000 மாணவர்கள் மேலதிகமாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவ, பொறியியலாளர் உள்ளிட்ட பீடங்கள் சிலவற்றிற்கு உள்ளீர்க்கப்படும் எண்ணிக்கையில் இம்முறை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நானுஓயா மாணவி மரணத்தின் மர்ம முடிச்சு இன்று அவிழ்க்கப்படும்

நானுஓயா, டெஸ்போட்தோட்ட ஆற்றிலிருந்து  சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற – டெஸ்போட் தோட்டத்தில் கீழ்பிரிவில் வசித்த  யசோதா என்ற மாணவியே நேற்று காலை  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

” மகள் நேற்றிரவு (28) 10.30 மணிவரை கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நாம் நித்திரைக்கு சென்றுவிட்டோம். பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் எழுந்துபார்க்கும் போது மகளை காணவில்லை. இதனையடுத்து தேட ஆரம்பித்தோம்.” என யசோதாவின் தாயார் நானுஓயா பொலிஸாரிடம் நேற்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று இடம்பெறவுள்ள பிரதே பரிசோதனை ஊடாக மரணத்திற்கான காரணம் தெரியவரும் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!

0
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். தையிட்டிக் கிராமத்தில்...

யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...

நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...