Home Blog Page 3840

மௌன்ஜீன் தோட்ட மக்களை அச்சுறுத்தும் ‘குளவிக்கூடு’!

வட்டவளை மௌன்ஜீன் தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதிக்கு அருகிலுள்ள தேயிலை மலையில் குளவிக் கூடு கட்டியுள்ளமையால் தாம் பெரும் அச்சத்துடன் இருப்பதாக தோட்ட மக்கள் கவலைத்தெரிவிக்கின்றனர்.

எவ்வேளையிலும் குளவிக்கூடு கலைந்து வந்து தாக்கும் அபாயம் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வீதியானது வட்டவளை புகையிரத நிலையத்திற்கு செல்வதற்கான பிரதான பாதையுமாகும். அத்துடன் 1000 ற்கும் மேற்பட்ட மௌன்ஜீன் தோட்ட மக்கள் பிரதான பாதையாக இதை பயன்படுத்தி வருகின்றனர்.

பாடசாலை மாணவர்களும் இந்த வீதியின் ஊடாக தான் வட்டவளை, செனன், கடவலை,குயில்வத்த ஆகிய பாடசாலைகளுக்கு நடந்து சென்று வருகின்றனர். எனவே இக்குளவிக் கூடு பாடசாலை மாணவர்களுக்கும் ஆபத்தானதாக இருக்கின்றது. குளவிக்கூடு காரணமாக மாணவர்கள் இந்த வீதி வழியாக நடந்துசெல்ல அச்சமடைவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

தேயிலை செடிகள் இருக்கும் பகுதியில் குளவிக்கூடு கட்டியுள்ளமையால் அச்சத்துடன் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கின்றனர். இதனால் தோட்ட மக்கள் பல்வேறு வகையிலும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். எனவே குளவிக் கூட்டினை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் நடவடிக்கை எடுக்குமாறு தோட்ட மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

‘கொரோனா’வுக்கு மத்தியில் டெங்குவும் தாண்டவம் – 27, 733 பேர் பாதிப்பு!

இலங்கையின் கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு தொற்றுநோயின் அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் பணிப்பாளர் அநுர ஜெயசேகர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

டெங்கு தொற்று அபாயநிலைக்கு செல்லாதபோதும் மழைக் காலமாகையால் எதிர்வரும் மாதங்களில் அது தீவிரமாவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பொதுமக்கள் நுளம்புகள் பெருகாமல் இருக்கும் வகையில் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று ஜெயசேகர கோரியுள்ளார்.

இலங்கையில் கடந்த ஜனவரி மாததில் இருந்து இதுவரை 27ஆயிரத்து 733 டெங்கு தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 11,608 தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர். இந்த எண்ணிக்கையில் மேல்மாகாணத்தில் மாத்திரம் 8014 தொற்றாளிகள் உள்ளடங்கியிருந்தனர்.

பஞ்சாப் அணியை வீழ்ச்சி மும்பை அணி வெற்றிநடை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றிபெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13ஆவது ஆட்டம் நேற்று அபுதாபியில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் குயின்டான் டி டாக், ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே காட்ரெல் வீசிய பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் குவிண்டன் டி காக் டக் அவுட் ஆனார்.

அடுத் வந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இஷான் கிஷன் 28 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய பொல்லார்டு ரோகித் சர்மாவுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 45 பந்தில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.

5-வது விக்கெட்டுக்கு பொல்லார்டு உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ருத்ர தாண்டவம் ஆடியது. 17 ஓவரில் 129 ரன்கள் எடுத்திருந்த மும்பை அணி ஹர்திக், பொல்லார்டு ஜோடியின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.

20 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர் உள்பட 47 ரன்களுடன் பொல்லார்டும், 11 பந்தில் 3 பவுண்டரி 2 சிக்சர் உள்பட 30 ரன்களும் ஹர்திக் பாண்ட்யாவும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

பஞ்சாப் தரப்பில் கட்ரோல், ஷமி, கௌதம் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் கேப்டர் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

18 பந்தில் 25 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கருண் நாயர் 3 பந்துகளை சந்தித்து குர்னால் பாண்ட்யா பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் மும்பை வீரர் ராகுல் சாஹர் பந்துவீச்சில் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய நிக்கோலஸ் பூரன் 27 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 44 ரன்கள் குவித்து பேட்டிசன் பந்துவீச்சில் வெளியேறினார். ஆனால், மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

மும்பை தரப்பில் பேட்டிசன், பும்ரா, ராகுல் சாஹர் ஆகிய வீரர்கள் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் – ராகுல் காந்தி சூளுரை

” உலகில் நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன்.” என்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 151ஆவது பிறந்த தினமான இன்று, அவருக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,

“ உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்; யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன் . பொய்யை உண்மையுடன் வெல்வேன்; பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.

போடைஸ் பகுதியில் பஸ் விபத்து – 49 பேருக்கு காயம்!

டயமகவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று டயகம அட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

டயகம பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஹட்டன் பகுதிக்கு சென்ற குறித்த பஸ்  இன்று (2)  காலை 7 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 49 பேர் காயமடைந்துள்ளனர்.

பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 49 பேரில் ஒருவர் பேராதெனிய வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வாறு காயமமைந்தவர்களில் 24 பேர் பாடசாலை மாணவர்களும் அடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.இவ்விபத்து தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

எலிக் காய்ச்சல் எச்சரிக்கை : இரத்தினபுரியில் அதிகமானோர் பாதிப்பு

இலங்கையில் எலிக் காய்ச்சல் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழைக் காலங்களில் எலிக் காய்ச்சல் பரவும் ஆபத்து இருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுகத் சமரவீர தெரிவித்தார்.

அத்துடன், இதுவரை 6096 பேருக்கு இதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாகவும், இவர்களில் அதிகமானோர் இரத்தினபுரி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவடடத்தில் மட்டும் இதுவரை 1341 பேருக்கு இந்த அறிகுறிகள் ஏறு;பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இதுவரை இந்த நோயின் அறிகுறிகள் இருந்த 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், அநுராதபுரம், கேகாலை, களுத்துறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

பதுர் பாபா நிறுவனரின் உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும், சிறுவர்களுக்கு கிடைக்க வேண்டிய அன்பு, அவதானத்தினை வழங்கவும் திடசங்கற்பம் பூணுவோம்.

மனிதனிடம் காணப்படும் மிகவும் உன்னதமான வளம் பிள்ளைகள் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. அவர்களது வாழ்வினை மேம்படுத்துவதற்கு எந்தவொரு அர்ப்பணிப்பினையும் செய்ய பெற்றோர்  தயாராக இருப்பதை பல நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது  அவதானித்தவைகள் என்னுள் அளப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

“எங்கள் நாடு, எங்கள் கைகளில்” என்பது உலக சிறுவர் தினக் கருப்பொருளாகக் காணப்படும்போது, சிறுவர்கள் தொடர்பாக எமது கடமைப் பொறுப்பு யாது என்பதைப் புதிதாக சிந்திப்பதற்கு இக்கருப்பொருள்கள் எம்மை ஊக்குவிக்கின்றன.

ஒருபுறத்தில் போட்டித்தன்மை வாய்ந்த கல்வி ஒழுங்கின் பிடியில் குழந்தைப் பருவம் சிக்கியுள்ளதுடன், மறுபுறத்தில் நவீன தொடர்பாடல், தொழிநுட்ப முன்னேற்றம் சிறுவர் உலகினை ஆக்கிரமித்து வருகிறது. மதுபானம், போதைப் பொருட்களின் அச்சுறுத்தல், சிறுவர் துஷ்பிரயோகங்கள், சிறுவர்களைத் தவறான வழியில் பயன்படுத்தல் போன்றனவும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறுகின்றன. இந்த எல்லா வகையான தடைகளின் மத்தியிலும் வாழ்வினை ஒழுங்கமைப்பதற்கு வளர்ந்தோரான எமது உதவியும் வழிகாட்டலும் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டியுள்ளது.

உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும், அன்பு, அவதானத்தினை வழங்கவும் அணைவரும் திடசங்கற்பம் பூணுவோம்.

தேசைமானி தேசகீர்த்தி பதுருத்தீன்
சமூக செயற்பாட்டாளர்
நிறுவனர் பதுர் பாபா பவுண்டேஷன்

ஒக்டோபர் 9 முதல் நவம்பர் 8வரை பாடசாலை விடுமுறை!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு ஒக்டோபர் 09 ஆம் திகதி முதல் இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் நவம்பர் 09 ஆம் திகதி மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எஸ்.பி. லியனகே மொட்டு கட்சியுடன் சங்கமம்?

பிரபல வர்த்தகரும், இலங்கை தொழில் கட்சியின் தலைவருமான ஏ.எஸ்.பி. லியனகே விரைவில் மொட்டு கட்சியுடன் சங்கமிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ராஜபக்சக்களுக்கு நெருக்கமானவரான லியனகே, 2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த மண்கவ்விய பின்னர், தனது ‘பீகொக்’ மாளிகையைக்கூட மஹிந்தவுக்காக வழங்குவதற்கு முன்வந்திருந்தார்.எனினும், காலப்போக்கில் மைத்திரியுடன் சங்கமித்து வெளிநாட்டு தூதுவர் பதவியொன்றையும் பெற்றுக்கொண்டார்.

அவ்வப்போது ‘சமாளிப்பு அரசியலுக்காக’ ராஜபக்சக்களை விமர்சித்தாலும் மனதுக்குள் மரியாதையை தக்கவைத்துக்கொண்டிருந்தார்.

மஹிந்தவின் மகன் கட்டார் சென்றிருந்தவேளை, விமானநிலையத்துக்கேசென்று வரவேற்பளித்து சர்ச்சையிலும் சிக்கினார்.

கடைசியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் யானை சின்னத்தின்கீழ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். ஆனால் அவரின் கட்சி நுவரெலியாவில் தனித்து களமிறங்கியிருந்தது. தமிழ் வாக்குகளை சிதறடிப்பதற்கான உபாயமே இதுவெனவும் விமர்சிக்கப்பட்டது.

தற்போது தேர்தல் முடிவடைந்துவிட்டதால் மொட்டு கட்சியிடம் சரணடைவதற்கு ஏ.எஸ்.பி. லியனகே தயாராகிவிட்டதாகவும், இதற்காக தூதனுப்பியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், மைத்திரிக்கு ஆதரவாக செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மெஹான் லால் கிரேரும் மொட்டு கட்சியுன் விரைவில் இணையவுள்ளார்.

’20’ ஆல் முற்போக்கு கூட்டணிக்குள் குழப்பம்!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தால் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

’20’ ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி இருக்கின்றது.

எனினும், 20 இற்கு ஆதரவளித்து அல்லது வாக்களிப்பின்போது நடுநிலை வகித்து ஆளுங்கட்சிக்கு நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கமும், இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியும் இருக்கின்றது.

இதற்காரணமாகவே 20 தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தமது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளது எனவும் தெரியவருகின்றது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!

0
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். தையிட்டிக் கிராமத்தில்...

யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...

நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...