Home Blog Page 3839

‘ஊடகங்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்காதீர்’ – அனுசா சாட்டையடி

” அரசாங்கத்தில் இருக்கும்போது மக்களை மறந்து விட்டு, விபத்துக்கள் ஏற்படும்போது மட்டும் ஊடகங்களுக்காக சில அரசியல்வாதிகள் முதலைக்கண்ணீர் வடிப்பதால் ஒரு பயனுமே இல்லை.” – என்று மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சந்திரசேகரனின் மகளான சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

டிக்கோயா போடைஸ் பாதையில் இன்று ஏற்பட்ட பஸ் விபத்து தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இப்பாதையில் விபத்து ஏற்படுவது இது முதன் முறையல்ல, ஆனால் மக்கள் பிரதிநிதிகளாக தங்களை வளர்த்துக் கொள்பவர்களின் கவனயீனமே இவ்வாறான விபத்துக்கள் தொடருவதற்கு காரணமாகின்றன.

தேர்தல் வந்தவுடன் நான் பாராளுமன்றம் சென்றால்தான் உங்களுக்கெல்லாம் விமோசனம் எனக்கூறி குறுக்கு வழியில் வெற்றிபெற்றதும் – அமைச்சர் பதவி அல்லது பிரதி அமைச்சுப் பதவி  ஆகக்குறைந்தது இராஜாங்க அமைச்சாவது கிடைத்தால்தான் மக்களுக்கு விமோசனம் என்று கூறி அதையும் சாதித்து கொண்டு பின்னர் மறந்து விடுகிறார்கள்.

தாங்கள் அரசாங்க அமைச்சர்களாக இருக்கும் போது இப்பாதைக்கு நிதி ஒதுக்கி இதனை அகலமாக்கியிருந்தால்  இன்று இவ்விபத்தினை தடுத்திருக்கலாம்.ஆனால் அமைச்சு வாய்ப்பு ஏற்பட்டவுடன் வாகனம் சுகபோகம் என்று மயக்க நிலைக்கு சென்று விடுகிறார்கள்.

எவ்வளவு நிதி, எவ்வளவு கமிஷன் என்பது மாத்திரமே சிலரது சேவையாகி விடுகிறது. தேர்தல் காலங்களில் இப்பாதையில் எத்தனை முறை இவர்கள் பயணித்திருப்பார்கள், அப்போதெல்லாம் இது பற்றி அமைதியாக இருந்து விட்டு விபத்து நடந்தவுடன் யார் முதலில் அனுதாபம் தெரிவிப்பது யார் முதலில் வைத்தியசாலைக்கு செல்வது அதனை எப்படி முகநூல் மற்றும் ஊடகங்களில் பதிவிடுவது போன்ற செயல்களால் எந்த பயனுமே இல்லை.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியோ அமைச்சு அந்தஸ்தோ உண்மையான மக்கள் சேவையின் ஊடாக கிடைக்க வேண்டும். இது குறுக்கு வழியில் கிடைக்கும் போதுதான் தடுமாற்றமும் உளறல்களும் ஏற்படுகின்றன. இப்போது கூட காலம் தாழ்த்தாது இப்பாதையை அகலமாக்கி பாதுகாப்பாக மாற்றுவதற்கு இவர்கள் முன்வர வேண்டும். இதற்கு என் தந்தையின் கடந்த கால வேவைகளை இவர்கள் முன்னுதாரணமாகக் கொண்டு செயற்பட்டால்  நான் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டேன்.” – என்றார்.

‘போடைஸ் விபத்துக்கு அரச அதிகாரிகளின் அசமந்தபோக்கே காரணம்’

” ஹட்டன் போடைஸ் பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்திற்கு காரணம் அரசாங்க அதிகாரிகளின் அசமந்த போக்காகும். இந்த பாதை தொடர்பாகவும் இந்த பாதையின் பாதுகாப்பு தொடர்பாகவும் நாங்கள் அனைத்து கட்சியை சார்ந்தவர்களும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடிப பொழுதும் இது தொடர்பான உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவில்லை. இது அதிகாரிகளின் அசமந்த போக்கையே காட்டுகின்றது.” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
” ஹட்டன் போடைஸ் பிரதான பாதை தொடர்பான குறறைபாடுகள் தொடர்பாக கடந்த ஒருவருடத்திற்கு மேலாக அனைத்து கட்சியை சார்ந்தவர்களும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டியிருந்தோம். குறிப்பாக இது தொடர்பாக அந்த பிரதேச சபையின் தலைவர் குழந்தைவேல் ரவியும் இது தொடர்பாக தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
அதே போல பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரமும் இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.ஆனால் அதிகாரிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறி விட்டனர்.அதன் காரணமாக இன்று பாரிய விபத்து ஏற்பட்டு பாடசாலை மாணவர்களும் பொது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதே போன்று பல அரச நிறுவனங்களில் அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடக்கின்ற காரணத்தால் பாதிக்கப்படுகின்றவர்கள் பொது மக்களே.நாங்கள் அரசியல் வாதிகள் என்ற வகையில் அலுத்தங்களை கொடுக்க முடியும் அதனை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளிடமே இருக்கின்றது.அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இது மட்டுமல்ல இன்னும் பல பாதைகள் நுவரெலியா மாவட்டத்தில் பாதுகாப்பில்லாமல் இருக்கின்றது. அதனையும் உடனடியாக திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரச அதிகாரிகளை பொறுத்த அளவில் அவர்கள் செய்கின்ற தவறுகளுக்கு பொது மக்கள் எங்களையே குறை கூறுகின்றார்கள். இவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது தொடர்பாக அடுத்து நடைபெறவுள்ள நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எனது எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளதுடன் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவும் எனது அலுத்தத்தை கொடுப்பேன்.
அரசாங்க அதிகாரிகள் தங்களுடைய கடமைகளை சரியாக செய்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும்.அதே நேரம் பொலிஸ் திணைக்களமும் இந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு உரியவர்களுக்கு சரியான தண்டனையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘கொரோனா’- இலங்கையில் 3,382 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 12 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,245 ஆக அதிகரித்துள்ளது.

124 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 382 ஆக அதிகரித்துள்ளது.

‘கோலமாவு கோகிலாவில் ஶ்ரீதேவியின் மகள்’

நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தனது தாயின் வழியிலேயே நடிப்பில் இறங்கிவிட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் நடிப்பில் குஞ்சன் சக்சேனா என்கிற படம் வெளியானது. அவர நடிப்புக்கு ஓரளவு வரவேற்பும் கிடைத்தது.

இந்த நிலையில் தமிழில் கடந்த 2018இல் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை இந்தியில் அறிமுக இயக்குனரான சித்தார்த் சென் குப்தா என்பவர் இயக்க உள்ளார்.

பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆனந்த் எல்.ராய் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்திக்கு ஏற்றமாதிரி இந்த படத்தின் கதையில் மாற்றம் செய்யும் வேலை கதாசிரியர் பங்கஜ் மேத்தா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருமணம் குறித்து நயன்தாரா எடுத்துள்ள திடீர் முடிவு…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா திருமணத்திற்காக அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். அவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்துவருகிறார். அது தவிர ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார்.

நயன்தாரா டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலிப்பதும் இருவரும் திருமணத்தை தள்ளிப்போட்டுவிட்டு ஒன்றாக வசிக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். இந்நிலையில் திருமணத்தை பொறுத்தவரை நயன்தாரா புது முடிவு எடுத்துள்ளார்.

தேசிய விருது பெற்ற பின்னர் தான் திருமணம் என முடிவு எடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். நயன்தாராவுக்கு முன்பே அறம் படத்துக்காக தேசிய விருது கிடைக்க வேண்டியது. பல்வேறு பாராட்டுகளும் விருதுகளும் குவிந்தாலும் அவருக்கு இன்னும் தேசிய விருது மட்டும் கிடைக்கவில்லை.

ஹட்டன் – போடைஸ் வீதியில் தொடர் விபத்துகள்! காரணம் என்ன?

டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் செல்லும் பாதை அகலப்படுத்தப்படாததாலேயே அடிக்கடி விபத்துகள் இடம்பெறுவதாகவும், எனவே, வீதியை புனரமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ், டயகம – ஹட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் 02.10.2020 அன்று காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 49 பேர் காயமடைந்தனர்.

இதனால் அப்பகுதி மக்கள் கவலையுடனும், கொதிப்படைந்த நிலையிலும் காணப்படுகின்றனர். வீதி அகலப்படுத்தப்படாததாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

” இவ்வீதியை அகலப்படுத்துமாறு பல தடவைகள் கோரியிருந்தோம். இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எதிர்திசையில் வரும் வாகனத்துக்கு இடம் கொடுப்பதற்குகூட பெரும் சிரமம். இதற்கு முன்னரும் விபத்துகள் இடம்பெற்றுள்ளன. பாடசாலை மாணவர்களே அதிகம் பாதிக்கின்றனர். தொழிலுக்கு செல்பவர்களும் இருக்கின்றனர். விபத்துகளால் சிலர் உடல் அவயங்களையும் இழந்துள்ளனர். எனவே, இனியும் விபத்துகள் இடம்பெறுவதை தடுப்பதற்காக வீதியை அகலப்படுத்திக்கொடுப்பதற்கும், குன்றும், குழியுமாக காணப்படும் பகுதிகளை புனரமைப்பதற்கும் சம்பந்தப்பட்ட தரப்புகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதேவேளை, இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நோர்வூட் பிரதேச சபை தலைவர் ரவி குழந்தைவேலு,

” ஒன்றரை வருடங்களுக்கு முன் இவ்வீதியில் பாரிய கல்லொன்று விழுந்திருந்தது. அதனை அகற்றுவதற்கு மாகாண மற்றும் மத்திய வீதி அபிவிருத்தி அதிகார சபைகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நோர்வூட் பிரதேச சபை ஊடாகவே நிதி ஒதுக்கி அதற்கான நடவடிக்கையை நாம் முன்னெடுத்தோம்.

அதுமட்டுமல்ல மாகாண அதிகாரசபை ஊடாக இவ்வீதியை புனரமைக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம். நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்திலும் இது சம்பந்தமாக சுட்டிக்காட்டியிருந்தேன்.விபத்து இடம்பெற்றதும் கதைப்பதில் பயனில்லை, எனவே, வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக புனரமைப்பு பணி இடம்பெறவேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தேன்.

இன்று நடைபெற்ற விபத்தில் பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்து கண்டிக்கு சிகிச்சைக்காக அனுப்பட்டுள்ளார். எனவே, உடனடியாக வீதியை அகலப்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் பிரதேச சபை ஊடாக வீதியைமூட நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

க.கிசாந்தன்

‘போடைஸ் வீதியை மூடுவேன்’ – நோர்வூட் பிரதேச சபை தலைவர் எச்சரிக்கை

” ஹட்டன், போடைஸ் பகுதி வீதியை அகலப்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்காவிட்டால் அவ்வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ரவி குழந்தைவேல் எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” ஒன்றரை வருடங்களுக்கு முன் இவ்வீதியில் பாரிய கல்லொன்று விழுந்திருந்தது. அதனை அகற்றுவதற்கு மாகாண மற்றும் மத்திய வீதி அபிவிருத்தி அதிகார சபைகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நோர்வூட் பிரதேச சபை ஊடாகவே நிதி ஒதுக்கி அதற்கான நடவடிக்கையை நாம் முன்னெடுத்தோம்.

அதுமட்டுமல்ல மாகாண அதிகாரசபை ஊடாக இவ்வீதியை புனரமைக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம். நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்திலும் இது சம்பந்தமாக சுட்டிக்காட்டியிருந்தேன்.விபத்து இடம்பெற்றதும் கதைப்பதில் பயனில்லை, எனவே, வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக புனரமைப்பு பணி இடம்பெறவேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தேன்.

இன்று நடைபெற்ற விபத்தில் பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்து கண்டிக்கு சிகிச்சைக்காக அனுப்பட்டுள்ளார். எனவே, உடனடியாக வீதியை அகலப்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் பிரதேச சபை ஊடாக வீதியைமூட நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

க.கிசாந்தன்

எஸ்.பி.பிக்கு கம்பளையில் புகழஞ்சலி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92 ஜனன தின நிகழ்வும், உலகப்புகழ்பெற்ற பாடகர் ‘பாடும் நிலா’ எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கான புகழஞ்சலியும் கம்பளையில் நேற்று (02.10.2020) நடைபெற்றது.

வர்த்தகர் எஸ். கணேசன் சதீஸின் ஏற்பாட்டில் கம்பளை சபாயரில் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்திஜீவிகள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள், வர்த்தகர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

சினிமாத்துறையில் தடம்பதித்த இருவரின் உருவப்படங்களுக்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், புகழுரையும் இடம்பெற்றது.

இசைக்கலைஞர்களின் நிகழ்வும் இடம்பெற்றது

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கும் கொரோனா தொற்று!

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜனாதிபதி  டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இந்த தகவலை டிரம்ப் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

‘தகுதியான அதிபர்களை நியமிக்கவும்’ – ஊவா ஆளுநருக்கு அரவிந்தகுமார் கடிதம்

பதுளை மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகள் பலவற்றில் அதிபர்களின் பற்றாக்குறை நிலவுகின்றது. இப்பற்றாக்குறை இருந்து வரும் பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களுக்கு தகைமையுள்ள அதிபர்களை நியமிக்குமாறுகோரி பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம் முசம்மிலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் “தமிழ்ப் பாடசாலைகளில் ஏற்பட்டிருக்கும் அதிபர் வெற்றிடங்களுக்கு அதிபர் தகைமையற்றவர்களை நியமிப்பதன் மூலம்இ  தமிழ்ப் பாடசாலைகள் கல்வி தொடர்ந்தும் பெரும் பின்னடைவுகளையே எதிர்நோக்கும்.

ஆகவே இது விடயத்தை தங்களின் மேலான கவனத்திற்கு எடுத்து அதிபர் தகைமையுள்ளவர்களினால்  ஏற்பட்டிருக்கும் அதிபர் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்யும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

அரசின் கவனம் மாவட்ட தமிழ்ப் பாடசாலைகள் விடயத்தில் இல்லாத நிலை தென்படுகின்றது. அவற்றினை நிவர்த்தி செய்து  பாடசாலைகளின் அபிவிருத்தி ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இந்நிலையில்  அதிபர் நியமனங்களையும் முறையாக மேற்கொள்ளாதவிடத்து மாகாண தமிழ்க்கல்வி மேலும் பாரிய பின்னடைவினை எதிர்கொள்ளும். இதனால் பாதிக்கப்படுபவர்கள் மாணவ மாணவிகளேயாவார்.

ஆகவே இது குறித்து தங்களின் மேலான கவனம் செழுத்தப்பட்டு, அதிபர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் விடயங்களில் அதிபர் தகைமையுள்ளவர்களை நியமிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!

0
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். தையிட்டிக் கிராமத்தில்...

யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...

நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...