Home Blog Page 3843

பலி எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது – உலக நாடுகளை புரட்டி எடுக்கும் கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 35 லட்சத்து 49 ஆயிரத்து 873 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 76 லட்சத்து 65 ஆயிரத்து 370 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 318 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 2 கோடியே 48 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 6 ஆயிரத்து 379 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 209,808
பிரேசில் – 142,161
இந்தியா – 96,351
மெக்சிகோ – 76,603
இங்கிலாந்து – 42,001
இத்தாலி – 35,851
பெரு – 32,324
பிரான்ஸ் – 31,808
ஸ்பெயின் – 31,411
ஈரான் – 25,779
கொலம்பியா – 25,641

உச்சகட்ட பரபரப்பு – சூப்பர் ஓவரில் வெற்றிக்கனியை ருசித்தது பெங்களூரு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் துபாயில் நேற்று இரவு நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது.

மும்பை அணியில் சவுரப் திவாரிக்கு பதிலாக இஷான் கிஷன் இடம் பெற்றார். பெங்களூரு அணியில் ஜோஷ் பிலிப், உமேஷ் யாதவ், ஸ்டெயின் நீக்கப்பட்டு குர்கீரத் சிங், உதனா, ஆடம் ஜம்பா சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ ஜெயித்த மும்பை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடி நல்ல தொடக்கம் ஏற்படுத்தினார்கள்.

ராகுல் சாஹர் வீசிய ஒரு ஓவரில் ஆரோன் பிஞ்ச் ‘ஹாட்ரிக்’ பவுண்டரிகள் விரட்டி கலக்கினார். ஸ்கோர் 81 ரன்னாக (9 ஓவர்) உயர்ந்த போது ஆரோன் பிஞ்ச் 52 ரன்னில் (35 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் பொல்லார்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் விராட்கோலி 3 ரன்னில் (11 பந்து) ராகுல் சாஹர் பந்து வீச்சில் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.

இதனை அடுத்து டிவில்லியர்ஸ் களம் இறங்கினார். நிலைத்து நின்று ஆடிய தேவ்தத் படிக்கல், பேட்டின்சன் வீசிய ஒரு ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். டிவில்லியர்சும் அதிரடியாக ஆடினார். அவர் பும்ரா வீசிய ஒரு ஓவரில் 2 சிக்சர்கள் விளாசினார். 2-வது அரைசதம் அடித்த தேவ்தத் படிக்கல் 40 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்த நிலையில் டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

கடைசி ஓவரில் பேட்டின்சன் பந்து வீச்சில் ஷிவம் துபே 3 சிக்சர்களை விளாசி வியக்க வைத்தார். 20 ஓவர்களில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 24 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 55 ரன்களும், ஷிவம் துபே 10 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் பெங்களூரு அணி 78 ரன்கள் திரட்டியதால் அந்த அணியின் ரன் விகிதம் எகிறியது.

பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமலும், குயின்டான் டி காக் 14 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னிலும் அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதைத்தொடர்ந்து பொல்லார்ட், இஷான் கிஷனுடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அரைசதத்தை கடந்ததுடன் அணியையும் வெற்றிப் பாதையில் பயணிக்க வைத்தனர். அபாரமாக ஆடிய இஷான் கிஷன் சதத்தை நெருங்குகையில் (99 ரன், 58 பந்து, 2 பவுண்டரி, 9 சிக்சர்) கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து குருணல் பாண்ட்யா களம் இறங்கினார். கடைசி பந்தில் பொல்லார்ட் பவுண்டரி விளாசினார். 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்ததால் போட்டி டையில் (சமன்) முடிந்தது. பொல்லார்ட் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

போட்டி சமனில் முடிந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் ஆடிய மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 7 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 8 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

‘புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் 6 மாதங்களில்’

புதிய அரசியலமைப்புக்கான முதற்கட்டவரைவு நகல் ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு 20 ஆவது திருத்தச்சட்டமூலம் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இவை குறித்து அவர் மேலும் கூறியவை வருமாறு,
” உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானம் வெளிவந்த பின்னர் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும். அதன்பின்னர் குழுநிலை விவாதத்தின்போது திருத்தங்கள் செய்யப்படும்.
சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மைபலம் அரசு வசம் இருந்தாலும் 19 ஆவது திருத்தச்சட்டத்தால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பைகருதி, குறுகிய அரசியல் நோக்கங்களைக்கைவிட்டு அதற்கு எதிரணி உறுப்பினர்கள் சிலரும் ஆதரவு வழங்குவார்கள் என எதிர்ப்பார்க்கின்றோம்.
20ஆவது திருத்தச்சட்டமூலம் என்பது தற்காலிக ஏற்பாடு மாத்திரமே புதிய அரசியலமைப்பொன்று இயற்றப்படும் என்ற உறுதிமொழி நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கான ஆரம்பக்கட்ட வரைவு நகல் 6 மாதங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதற்காக 9 பேரடங்கிய நிபுணர்குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பணி தற்போது ஆரம்பமாகியுள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.
6 மாதங்களில் புதிய அரசியலமைப்பு இயற்றப்படாது. அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாகவே 6 மாதங்களில் அடிப்படைவரைவு நகல் முன்வைக்கப்படும்.”- என்றார்.

’20’ இற்கு ஆதரவாக வாக்களிக்க இ.தொ.கா., ஈ.பி.டி.பி. முடிவு!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஆகியன தீர்மானித்துள்ளன.

ஆளுங்கட்சியின் பங்காளிகள்  என்றவகையில் இவ்விரு கட்சிகளும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன என்று ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, சுதந்திரக்கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் பிள்ளையானின் கட்சி ஆகியனவும் ’20’ இற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, எதிரணி உறுப்பினர்கள் சிலரும் 20 இற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர். எனவே, 20 ஐ நிறைவேற்றுவதற்கான மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு அதிகமான பலம் அரசு வசம் இருக்கின்றது எனவும் அந்த உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

மாகாணசபை முறைமையை நீக்குவது குறித்து அரசுக்குள் எவ்வித பேச்சும் இல்லை

மாகாணசபை முறைமையை நீக்குவது தொடர்பில் தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்துக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெவில்லை என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

” மாகாணசபை முறைமை நீக்கப்படவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்துகின்றார். அதேபோல் இந்த முறைமையை நீக்குவதற்கு சூழ்ச்சி நடப்பதாக ஆளுங்கட்சிக்குள்ளேயே கருத்து வெளியிடப்படுகின்றது. அவ்வாறான ஏற்பாடு உள்ளதா, பேச்சு நடைபெறுகின்றதா” என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

” 19 மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பிலேயே தற்போது கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.மாகாணசபை குறித்து பேச்சுநடத்தப்படவில்லை. அரசாங்கத்துக்குள் இருப்பவர்கள் பலகோணங்களில் கருத்துகளை வெளியிடக்கூடும். அது அவர்களுக்கான ஜனநாயக உரிமை.  எனவே, மாறுபட்ட கருத்துகள் வருவது பிரச்சினை அல்ல.” – என்றும் அவர் கூறினார்.

அத்துடன், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலம் கிடைக்கும் என நான் நம்புகின்றேன். ’20’ என்பது தனி நபரை இலக்கு வைத்துக்கொண்டுவரப்பட்டது அல்ல. என்றும் குறிப்பிட்டார்.

மஸ்கெலியாவில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிப்பு – அச்சத்தில் மக்கள்

மஸ்கெலியா, சாமிமலை – கிலனுஜி  மற்றும் டீசைட் தோட்ட பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் குறித்த பகுதியில் உள்ள வளர்ப்பு நாய்கள் திடீரென காணாமல் போவதாகவும் சில வளர்ப்பு நாய்களின் உடம்பில் காயங்கள் காணப்படுவதாகவும் இதனால் குறித்த பகுதியில் இரவு நேரங்களில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்பகுதியில் உள்ள சில தேயிலை மலைகள் துப்புறவு செய்யப்படாமல் காடாகி வருகின்றபபடியால் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இது குறித்து  வன ஜீவராசிகள் திணைக்களம் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாமிமலை நிருபர் ஞானராஜ்

‘கதிர்காமம் வருபவர்கள் யானைக்கு உணவு வழங்கவேண்டாம்’

புத்தலை – கதிர்காமம் பிரதான பாதை வழியாக வாகனங்களில் கதிர்காமம் வருபவர்கள், அப் பாதை அருகில் காத்து நிற்கும் யானைகளுக்கு பழங்கள் மற்றும் உணவு வகைகள் வழங்குவது உடன் நிறுத்தப்படல் வேண்டும். தவறின் குறிப்பிட்ட நபர்களுக்கெதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதுடன், அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் தடுத்து வைக்கப்படுமென்று, ஊவா மாகாண வன திணைக்களப் பணிப்பாளர் உபுல் இந்திரஜித் தெரிவித்தார்.

ஊவா மாகாண வன திணைக்களப் பணிப்பாளர் உபுல் இந்திரஜித் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே, மேற்கண்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவ் அறிக்கையில்,

“புத்தலை – கதிர்காமம் வழியாக வாகனங்களில் பயணிப்போர் பல வருடங்களாகவே யானைகளுக்கு பழங்கள் மற்றும் உணவு வகைகளை வழங்கி வருவது வழமையாகும். இப் பழங்களையும், உணவு வகைகளையும் பெற்றுக்கொள்வதற்கு, காட்டு யானைகளில் சில வீதி அருகில் காத்து நிற்கும். வாகனங்களில் பயணிக்கும் உல்லாச பிரயாணிகள் மற்றும் யாத்திரிகள் யானைகளுக்கு தத்தமது கரங்களினால் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்குவர். யானைகள் அவற்றைப் பெற்றுக்கொண்டு சாப்பிடும். இவ்வகையில் ஒரு சில காட்டு யானைகள் உணவுகள் மற்றும் பழங்களைப் பெற்றுக் கொள்வதற்கு பழக்கப்பட்டுமுள்ளன.

இந்த யானைகளுடன் மக்களையும், வாகனங்களையும் தாக்கும் யானைகளும் இருக்கக்கூடும். இதனால் பெரும் ஆபத்துக்கள் ஏற்படவே செய்யும். மேலும், கடந்த காலங்களில் யானைகளுக்கு பயந்து அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகியிருப்பதுடன், உல்லாச பிரயாணிகள் மற்றும் யாத்திரிகளையும், மக்களையும் யானைகள் தாக்கியுமுள்ளன.

இத்தகைய அனர்த்தங்களை தடுக்கும் வகையில், உல்லாச பிரயாணிகளும், யாத்திரிகளும், மக்களும் மிகுந்த எச்சரிக்கைகளைப் பேண வேண்டும். பாதையருகில் நிற்கும் யானைகளுக்கு பழங்கள் மற்றும் உணவு வகைகள் ஆகியவற்றை வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். தவறின் அவர்களுக்கெதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதுடன், அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் தடுத்து வைக்கப்படும்” என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எம். செல்வராஜா, பதுளை

எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த வந்தாரா அஜித்?

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. மறைவிற்கு அஜித் அஞ்சலி செலுத்தினாரா என்ற கேள்விக்கு சரண் விளக்கம் அளித்துள்ளார்.

பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 25ம் தேதி காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள். இயக்குனர் பாரதிராஜா, அமீர், நடிகர்கள் விஜய், அர்ஜுன், மயில்சாமி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னணி நடிகராக இருக்கும் அஜித் அஞ்சலி செலுத்தினாரா என்று எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் சரணிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சரண், அப்பாவின் மீது அன்பு கொண்டவர் அஜித். என்னுடைய நண்பர். அவர், வந்தாரா? வரவில்லையா? என்பது பிரச்னை இல்லை. அவர், எனக்கு போன் செய்து பேசினாரா என்பதெல்லாம் பிரச்னை இல்லை. இந்த மாதிரி சூழலில் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை, இப்போது இதை பற்றி பேச வேண்டியதுமில்லை. தற்போது, எனக்கு என் அப்பா இல்லை’ என்று தெரிவித்தார்.

‘எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா விருது’ – ஆந்திர முதல்வர் கோரிக்கை

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்திய திரையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி பாடகராக இருந்தார்.

அவரது திரையுலக வாழ்கையில் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி உள்பட பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடலகளை பாடியுள்ளார். இந்திய அரசின் சிவிலியன் விருதான பத்மஸ்ரீ (2001) மற்றும் பத்மபூஷன் (2011) ஆகிய விருதுகள் உள்பட பல மத்திய மற்றும் மாநில அரசுகளின் விருதுகள், திரையுலகின் முக்கிய விருதுகள் பெற்றுள்ளார்.

திரையுலகில் 50 ஆண்டுகளாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆற்றிய பணிக்கு லதா மங்கேஷ்கர், சுப்புலட்சுமி பூபன் ஹசாரிகா, பீம்சென் ஜோஷி போன்றோர்களுக்கு வழங்கப்பட்டதை போல் இந்திய உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கவேண்டும் என கூறியிருந்தார்.

மாத்திரைகளை விழுங்கி மயங்கி விழுந்த குழந்தை – பதுளையில் சம்பவம்

நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்துக்காக பாவிக்கப்படும் மாத்திரைகளை, ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தையொன்று விழுங்கியதையடுத்து  அக் குழந்தை ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதுளையை அண்மித்த மீகாகியுல என்ற இடத்திலேயே, இன்று (28) மேற்படிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட குழந்தையின் தாயாரின் பாட்டி நீரழிவு மற்றும் இரத்த அழுத்தங்களுக்கு மாத்திரைகள் பலவற்றை பாவித்துவருபவராவார். இதனை கவனித்துவந்த குழந்தை, பாட்டி இல்லாத வேளையில், பாட்டி பாவித்த மாத்திரைகளை எடுத்து, சிலவற்றை விழுங்கியுள்ளது. சிறிதுநேரத்தில் அக் குழந்தை மயங்கிவிழுந்தது.

இதைக் கண்ட குழந்தையின் தாய், அருகேயுள்ள மீகாகியுல பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதும்,குழந்தையைப் பரிசோதனை செய்த வைத்தியர் ,உடனடியாக அக் குழந்தையை பதுளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் பணித்தார்.

தற்போது அக் குழந்தை பதுளை அரசினர் மருத்துவமனை தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சை பெற்றுவருகின்றார்.

எம்.செல்வராஜா, பதுளை

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!

0
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். தையிட்டிக் கிராமத்தில்...

யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...

நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...