Home Blog Page 3844

அரசியலுக்கு விடைகொடுக்க சுஜீவ சேனசிங்க முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க அரசியலுக்கு விடைகொடுக்க உத்தேசித்துள்ளார்.

16 ஆண்டுகளுக்கு மேலாக செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுவரும் சுஜீவ, கடைசியாக ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளராக பதவி வகித்தார்.

கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அவர் தோல்வியை சந்தித்தார். இந்நிலையிலேயே அவர் அரசியல் இருந்து ஒதுங்குவதற்கு உத்தேசித்துள்ளார்.

’20’ இற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 39 மனுக்கள்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹுலும் உயர்நீதிமன்றத்தின் இன்று (28) மனு தாக்கல் செய்துள்ளார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் கடந்த 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதனை சவாலுக்குட்படுத்தி தொடர்ச்சியாக மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுவருகின்றன.

இன்றைய தினம் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன்படி ’20’ இற்கு எதிராக கடந்த 23 ஆம் திகதி முதல் இன்றுவரை உயர்நீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.

20 இற்கு எதிரான மனுக்கள்மீதான பரீசிலனை நாளை (28) முதல் இடம்பெறவுள்ளது.

‘இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்’ – அதிமுக தீர்மானம்

” கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், இலங்கைத் தமிழர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.” – என்று அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது.

கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டும் ஆட்சியமைக்க பாடுபட வேண்டும்.

* கொரோனா பரவலை குறைத்திருப்பதை ஏற்று மத்திய அரசு, தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும்.

* எந்த மொழிக்கும் அதிமுக எதிரானதல்ல; ஆனால் மொழி திணிப்பை உறுதியாக எதிர்க்கிறோம். இருமொழிக்கொள்கையே அதிமுகவின் கொள்கை.

* ஏழை மாணவர்களுக்கு எதிராகவும் கல்வி வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வை கைவிட வேண்டும்.

* ஜிஎஸ்டி மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான மானியங்களின் நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

* கலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களுக்கு இடமளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

* கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், இலங்கைத் தமிழர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மோடியுடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன? அமைச்சர்கள் விளக்கம்

இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்வதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதிலிளித்திருந்தார் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இலங்கை மக்கள் வழங்கியுள்ள ஆணைப்படி விருத்தி செய்யப்பட்ட நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதன் மூலம் அரசியலமைப்பு விதிகளை அமுல்படுத்துவதன் வாயிலாக, தமிழர்கள் உட்பட அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புக்களை தெளிவாக புரிந்துகொள்வதற்கு இலங்கை செயற்படும் என்ற நம்பிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்தியிருப்பதாகவும்  அமைச்சர் தெரிவித்தார்.

13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான இணக்கப்பாட்டிற்கு அமைய, இலங்கைக்கு 15 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கூற்று பொய்யானதாகும் என்றும் அவர் கூறினார்.

கடந்த 26 ஆம் திகதி இணையவழி ஊடாக இடம்பெற்ற இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையிலான கலந்துரையாடலில் இந்த விடயம் விலியுறுத்தப்பட்டது.

ஆனால் 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்காக இந்தியாவின் நிதி உதவி பேரம்பேசப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று விசேட செய்தியாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிதி இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால், ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற வீடியோ கலந்துரையாடல் பற்றிய போலி தகவல்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்படும் நிவாரணங்கள், கடன்கள் பற்றியோ, அரசியல் அமைப்பு ரீதியான விடயங்கள் தொடர்பாகவோ இதன் போது கலந்துரையாடப்படவில்லை. மீனவர்கள் தொடர்பான நெருக்கடிகள் பற்றி இதன் போது ஆராயப்பட்டது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் தடை ஏற்படாத வகையில், எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது பற்றி இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்தியாவின் நிதி உதவி தேவையாயின் 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய பிரதமர் எந்த சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்த அமைச்சர் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழான மாகாண சபை தொடர்பில் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக கேள்விகளை முன்வைத்தனர்.

ஊடகவியலாளர்: இந்த மகாண சபை இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா: இந்த திருத்தம் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது இப்பொழுதும் நடைமுறையில் உண்டு. இராஜாங்க அமைச்சரின் கூற்று அரசாங்கத்தின் நிலைப்பாடாகாது. இதனை நீக்குவதாக பிரதமரோ ஜனாதிபதியோ ஒரு போதும் தெரிவிக்கவில்லை. இந்திய சமாதான உடன்படிக்கை கைச்சாத்தான பின்னர் அமுல்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தத்தின் கீழான மாகாண சபை முறையை எமது அமைப்பு வரவேற்றது. அதனை இப்பொழுதும் நாம் வரவேற்கின்றோம். சில தமிழ் அமைப்புக்கள் தான் இதனை விமர்சித்தன.

அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல : இலங்கை பிரதமருக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் 45 நிமிடங்களுக்கு வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு மணித்தியாலம் வரை நீடித்தது. இது நாடுகளுக்கு இடையில் பொதுவான விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. எந்த முரண்பட்ட விடயங்களும் இதில் இடம்பெறவில்லை, சுமுகமான நல்லுறவுடன் பேச்சுவார்த்தைகள நடைபெற்றன.

உடரதல்ல தொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

நானுஓயா உடரதல்ல தோட்ட தொழிலார்களால் கடந்த 25 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் இன்று (28) நிறைவுக்குவந்தது. மலையக தொழிலாளர் முன்னணியின் இயக்குனர் எம்.கணகராஜ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

உடரதல்ல தோட்டத்திற்கு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் ராதாகிருஷ்ணன் அண்மையில் நேரடியாக விஜயம் செய்து தொழிலார்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன், இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தாம் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

இதற்கமைய இன்று பேச்சுவார்த்தை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள உதவி தொழில் ஆணையாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் தோட்ட கம்பனி சார்பாக கௌனி வெளி பெருந்தோட்ட கம்பனியின் பிராந்திய பொது முகாமையாளர் அநுர சேனாநாயக்க, தோட்ட அதிகாரி கிருசாந்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக வேங்குருசாமி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பாக நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் நிரோசன், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் சிவஞானம், சிரேஸ்ட தொழில் இயக்குனர் எம்.சந்திரன் மற்றும் தோட்ட கமிட்டி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள் முன்வைத்த 17 கோரிக்கைகளும் விரிவாக ஆராயப்பட்டதுடன் இதற்கான தீர்வுகளை தோட்ட கம்பனி தீர்த்து வைப்பதாக இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை நிறைவிற்கு கொண்டு வருவதாக தொழிற்சங்கங்களின் தோட்ட தலைவர்கள் தெரிவித்தனர்.

ஏதிர்காலத்தில் தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் புதிய மாற்றங்கள் தொடர்பில் தொழிற்சங்க தலைவர்களுடன் கலந்துரையாடி அவற்றை முன்னெடுப்பதற்கும் தோட்ட நிர்வாகத்தினர் இனக்கம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டு தொழிலுக்கு திரும்புகின்றனர்.இந்த போராட்டமானது கடந்த 25 நாட்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

’20’ இற்கு எதிரணி உறுப்பினர்கள் சிலர் ஆதரவு – பீரிஸ் தகவல்

20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சியிலுள்ள உறுப்பினர்கள் சிலர் ஆதரவு வழங்கவுள்ளனர் என்று அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தால் நாட்டுக்கு பாதிப்புகளே ஏற்பட்டன. எனவே, அச்சட்டம் இல்லாதுசெய்யப்படும் என நாட்டு மக்களுக்கு உறுதி வழங்கப்பட்டது. அதனை நிறைவேற்றுவதற்காகவே 20ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனை நிறைவேற்றிக்கொள்வதற்கு குறுகிய அரசியல் நோக்கங்களைக்கைவிட்டு எதிரணி உறுப்பினர்கள் சிலர் ஆதரவு வழங்குவார்கள் என எதிர்ப்பார்க்கின்றோம். அதற்கான சமிக்ஞைகள் காட்டப்பட்டுள்ளன.” – என்றும் பீரிஸ் குறிப்பிட்டார்.

’20’ குறித்து முற்போக்கு கூட்டணி இன்னும் முடிவு இல்லை!

” அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட மூலத்தில் பல குறைப்பாடுகள் உள்ளன. சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே ’20’ தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானம் வெளிவந்த பின்னர் எமது முடிவை அறிவிப்போம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான கலாநிதி இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு, கிழக்கு ஹர்த்தால், 13 ஆவது திருத்தச்சட்டம் மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் ஆகியன தொடர்பில் அவர் கூறியதாவது,

” வடக்கு, கிழக்கில் ஜனநாயக ரீதியில் நடைபெறும் பூரண ஹர்த்தாலுக்கு நாமும் ஆதரவு தெரிவிக்கின்றோம். ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாம் எதிர்ப்பை வெளியிடமாட்டோம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கிடையிலான காணொளி மூல கலந்துரையாடல் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பாரத பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டமாக முன்வைக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். எனவே, இதனை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மோடியின் அறிவிப்பை நாமும் வரவேற்கின்றோம்.

13 விடயத்தில் மோடி அறிவுறுத்தல் வழங்கலாம், ஆனால் அழுத்தம் கொடுக்கமுடியாது என இராஜாங்க அமைச்சர் சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் 13 பற்றி பேசப்பட்டுள்ளது. எனவே, சில அமைச்சர்கள் இல்லை என கூறுவதை ஏற்கமுடியாது.

அதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாம் இன்னும் எமது முழுமையான அறிவித்தலை வழங்கவில்லை. எதுஎப்படியிருந்தாலும் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் நாட்டுக்கு பொருத்தமானதா என்பதை ஆராயவேண்டும். 19 ஊடாக நாட்டில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டது.அதனை நாம் ஆதரித்திருந்தோம். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் இருந்த மோதலால் சிக்கல்கள் உருவானதே தவிர 19 ஆவது திருத்தச்சட்டத்தை குறைகூற முடியாது.

கணக்காய்வு ஆணைக்குழு ஒழிப்பு, பாராளுமன்றத்தை ஓராண்டுக்கு பின் கலைத்தல் உட்பட 20 இல் ஏற்றுக்கொள்ளமுடியாத சில விடயங்கள் உள்ளன. ’20’ இற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியும் தாக்கல் செய்துள்ளதால் நாம் தனியாக மனுதாக்கல் செய்யவில்லை.

எனவே, உயர்நீதிமன்றத்தின் சட்டவிளக்கம் வெளிவந்த பின்னர், 20 இல் எவ்வாறான திருத்தங்கள் இடம்பெறவுள்ளன என்பது உட்பட சில விடயங்களை கருத்திற்கொண்டு எமது முடிவு அறிவிக்கப்படும்.” – என்றார்.

க.கிசாந்தன்

தொடர்கிறது குளவிக்கொட்டு – லக்‌ஷபான தோட்டத்தில் எழுவர் பாதிப்பு!

மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்‌ஷபான தோட்டத்தில் இன்று (28) ஏழு தோட்ட தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

நால்வர் தங்கியிருந்து சிகிச்சைபெறுகின்றனர் எனவும், ஏனையோர் சிகிச்சைகளின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

‘1000 ரூபாவை வழங்காவிட்டால் கம்பனிகள்மீது அரசு கை வைக்கும்’ தொழில் அமைச்சர் எச்சரிக்கை

தொடர்ந்து இழப்புகளைச் சந்திப்பதாகக் கூறி தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபாய் ஊதியத்தை வழங்கத் தவறினால் தோட்டக் கம்பனிகள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்படும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எச்சரித்துள்ளார்.

பெருந்தோட்டத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்கள், தோட்டநிறுவனங்களை கட்டுப்படுத்தும் முதலாளிகளின் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்தால் அந்த தோட்டங்களை அரசாங்கம் கையகப்படுத்தும் என கூறினார்.

பெருந்தோட்ட நிறுவனங்களுக்காக அரசாங்கத்தால் பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும், தோட்ட வீடுகள், வீதிகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

எனவே, தோட்ட நிறுவனங்கள் ஏராளமான பணத்தை மிச்சப்படுத்தும் அதேவேளை பல தோட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு குடிநீர், சுகாதாரம், வீட்டுவசதி போன்ற அடிப்படை வசதிகளை வழங்கத் தவறிவிட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால்! மலையக கட்சிகளும் ஆதரவு!!

வடக்கு, கிழக்கில் இன்று (27) முன்னெடுக்கப்படும் கடையடைப்பு போராட்டத்துக்கு மலையகத்திலுள்ள மூன்று பிரதான கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன.

மனோக கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி, திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

அக்கூட்டணியின் பிரதித் தலைவர் பதவியை வகிக்கும் இராதாகிருஷ்ணனே, தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு முற்போக்கு கூட்டணியின் ஆதரவை  நேற்று (27) தமிழ் பத்திரிகையொன்றிடம் உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

” நினைவேந்தல் நடத்தும் உரிமை அனைவருக்கும் இருக்கின்றது. அக்கோரிக்கை உட்பட மேலும் சில விடயங்களை முன்னிலைப்படுத்தி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்துக்கு நாமும் முழு ஆதரவு வழங்குகின்றோம்.

மலையகத்தில் கடைகளை அடைத்து, போராட்டம் நடத்தமுடியாத சூழ்நிலை உள்ளபோதிலும் அவர்களின் நிலைப்பாட்டுடன், கோரிக்கைகளுடன் நாம் ஒத்துப்போகின்றோம். களத்துக்கு சென்று ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் அறவழியிலான நடவடிக்கைகளை வரவேற்கின்றோம். எமது ஆதரவு என்றும் இருக்கும். ” – என்றார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!

0
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். தையிட்டிக் கிராமத்தில்...

யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...

நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...