Home Blog Page 3845

ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் – டெவாட்டியா அதிரடி!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அசத்திய ராகுல் டெவாட்டியாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது.

முதலில் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் சதமடித்து அசத்தினார். கே எல் ராகுல் அரை சதமடித்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 223 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 224 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து, ஐ.பி.எல். வரலாற்றில் அதிகப்படியான ஸ்கோரை சேஸிங் செய்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.

ஸ்மித் (50), சஞ்சு சாம்சன் (85) ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றியை நோக்கி சென்றது.

கடைசி 3 ஓவர்களில் ராஜஸ்தான் அணிக்கு 51 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை காட்ரெல் வீசினார். இந்த ஓவரை ராகுல் டெவாட்டியா எதிர்கொண்டார்.

முதல் நான்கு பந்திலும் இமாலய சிக்சர் விளாசினார். இதனால் ஆறு பந்தில் ஆறு சிக்ஸ் அடிப்பாரா? என்ற ஆர்வம் எழுந்தது. ஆனால் ஐந்தாவது பந்து பேட்டில் படவில்லை. 6-வது பந்தை மீண்டும் ஒருமுறை எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்பினார். ஒரே ஓவரில் ஐந்து சிக்சர்கள் அடித்து அசத்தினார் டெவாட்டியா.

இறுதியில், ராஜஸ்தான் அணி 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்து சாதனை வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்த ராகுல் டெவாட்டியாவுக்கு முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

https://www.iplt20.com/video/209477/5-sixes-1-over-a-tewatia-special 

‘வெளிநாடு சென்றுள்ள இளைஞர்களுக்கு மலையகத்திலேயே வேலைவாய்ப்பு’

” வெளிநாடுகளில் தொழில்புரியும் மலையக இளைஞர், யுவதிகளுக்கு மலையகத்திலேயே தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் “ஜனநாயகத்திற்காக இளைஞர்கள் 2020” என்ற செயல்திட்டத்தின்கீழ் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜீவன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களின் அரசியல் செயற்திறன் மற்றும் அரசியல் செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டுச் செல்லும் நோக்கிலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது இலங்கை பராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இளம்  அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு விசேட குழுநிலை விவாத கலந்துரையாடல் இடம்பெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

” மலையகத்தில் இளைஞர்களின் விளையாட்டுதுறையை மேம்படுத்த வேண்டும். மிக திறமையான இளைஞர்கள் இருக்கின்றனர். அவர்களை இனம் கண்டு ஊக்கப்படுத்த வேண்டும். அத்தோடு மலையகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று தொழில் புரியும் அனைவருக்கும் மலையகத்திலேயே தொழில் வாய்ப்பை பெற்றுதரவேண்டும்.

மலையகத்தின் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவும் மலையத்தில் கல்வி துறையை முன்னோக்கி கொண்டுசெல்லவும் வேண்டும். அதற்காக மலையகத்திற்கான பல்கலைக்கழகம் விரைவில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளபடுகின்றது.” – என்றார்.

இந்நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், இளைஞர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

பஞ்சாப் அணியை பந்தாடி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான்!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 224 ஓட்டங்கள் இலக்கை சேசிங் செய்து ராஜஸ்தான் அணி வரலாறு படைத்தது.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு சார்ஜாவில் அரங்கேறிய 9-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின.

ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால், டேவிட் மில்லர் நீக்கப்பட்டு ஜோஸ் பட்லர், அங்கித் ராஜ்புத் சேர்க்கப்பட்டனர். பஞ்சாப் அணியில் மாற்றம் இல்லை. அதனால் இந்த முறையும் கிறிஸ் கெய்லுக்கு இடம் கிட்டவில்லை.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பஞ்சாப்பை பேட் செய்ய பணித்தார்.

இதைத் தொடர்ந்து கேப்டன் லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம், சிறிய மைதானம் என்பதால் இருவரும் சரவெடியாய் வெடித்தனர்.

ஜோப்ரா ஆர்ச்சரின் ஒரு ஓவரில் ராகுல் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்ட, திவேதியாவின் ஓவரில் அகர்வால் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி தொடர்ச்சியாக விளாசினார்.
ஸ்ரேயாஸ் கோபாலின் சுழலையும் அகர்வால் விட்டுவைக்கவில்லை.

இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது. இவர்களை கட்டுப்படுத்த வழிதெரியாமல் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் விழிபிதுங்கினர்.

அட்டகாசப்படுத்திய மயங்க் அகர்வால் பந்தை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டு தனது முதலாவது சதத்தை நிறைவு செய்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள் (16.3 ஓவர்) திரட்டிய நிலையில் பிரிந்தது. மயங்கர் அகர்வால் 106 ரன்களில் (50 பந்து, 10 பவுண்டரி, 7 சிக்சர்) கேட்ச் ஆனார். ராகுல் 69 ரன்களில் (54 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

கடைசி கட்டத்தில் மேக்ஸ்வெல்லும், நிகோலஸ் பூரனும் இணைந்து ஸ்கோரை 220 ரன்களை கடக்க வைத்தனர். 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. பூரன் 25 ரன்களுடனும் (8 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), மேக்ஸ்வெல் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர் 224 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் (4 ரன்) ஏமாற்றினார். இதன் பிறகு கேப்டன் ஸ்டீவன் சுமித்தும், சஞ்சு சாம்சனும் கூட்டணி அமைத்து ரன்மழை பொழிந்தனர். அணியின் ஸ்கோர் 100 ரன்களாக (9 ஓவர்) உயர்ந்த போது ஸ்டீவன் சுமித் (50 ரன், 27 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார்.

அடுத்து வந்த ராகுல் திவேதியா ஆரம்பத்தில் தடுமாறினார். மறுமுனையில் சாம்சன் பட்டையை கிளப்பினார். மேக்ஸ்வெலின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை தெறிக்க விட்டார். ஆனால் சாம்சன் (85 ரன், 42 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) முக்கியமான கட்டத்தில் கேட்ச் ஆனார். இதனால் பஞ்சாப்பின் கை ஓங்குவது போல் தெரிந்தது.

இந்த சூழலில் விசுவரூம் எடுத்த ராகுல் திவேதியா, காட்ரெலின் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை நொறுக்கினார். இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் நகர்ந்தது. திவேதியா 53 ரன்களில் (31 பந்து, 7 சிக்சர்) விக்கெட்டை இழந்தார். இதன் பின்னர் ஜோப்ரா ஆர்ச்சரின் (13 ரன்) இரு சிக்சர் வெற்றியை உறுதிப்படுத்தியது.

ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு இது தான். இதற்கு முன்பு இதே ராஜஸ்தான் அணி 2008-ம் ஆண்டு டெக்கான் அணிக்கு எதிராக 215 ரன்களை சேசிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது.

நடப்பு தொடரில் ராஜஸ்தான் அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.

நினைவேந்தல் உரிமை அவசியம் – வடிவேல் சுரேஷ் வலியுறுத்து!

” தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் உரிமை வழங்கப்படவேண்டும். அதனை எவரும் தடுக்கமுற்படக்கூடாது. நினைவேந்தலுக்குகூட தடை ஏற்படுத்தி புது குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கை என்பது ஜனநாயக சோஷலிஸக் குடியரசாகும். எனவே, ஒரு சமுகத்துக்காக, இனத்துக்காக யாராவது தியாகம்செய்திருந்தால், உயிர்நீத்திருந்தால் அவ்வாறானவர்களை நினைவுகூருவதற்கான நினைவேந்தலை நடத்துவதற்கான உரிமை இருக்கவேண்டும். அது கலாசார சம்பந்தப்பட்ட விடயமும்கூட. இதனை பயங்கரவாதம் எனக்கூறிவிடமுடியாது.

எனவே, நினைவேந்தலுக்கு விதிக்கப்படும் தடையை ஏற்றுக்கொள்ளமுடியாது. அவ்வாறு தடைவிதித்து புது குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்களோ எனவும் எண்ண தோன்றுகிறது. தீலிபன் உண்ணாவிரமிருந்து அறவழியில் போராட்டம் நடத்தி உயிர்நீத்தவர். எனவே அவரை நினைவுகூருவதற்கு அனுமதி இருக்கவேண்டும்.” – என்றார்.

எஸ்.பி.பிக்கு நினைவாலயம் – மகன் எஸ்.பி. சரண் உறுதி

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தாமரைப்பாக்கத்தில் அழகான நினைவில்லம் கட்டப்படும் என்று அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், ரசிகர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து எஸ்.பி.பி.யின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டின் அருகே பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நினைவிடத்தில் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்த பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வருகின்றனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாததால், அருகில் உள்ள வயல்வெளி வழியாக வந்து பார்த்து செல்கின்றனர். இங்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்று ரசிகர்களும், தங்களது பங்களிப்புடன் நினைவில்லம் கட்ட வேண்டும் என்று கிராம மக்களும், எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.சரணிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட அவர் தனது தந்தைக்கு அழகான நினைவில்லம் அமைக்கப்படும் என்றும், ஒரு வாரத்தில் அதற்கான தகவல் வெளியாகும் என்றும் உறுதி அளித்துள்ளார். வெளியூர்களில் இருந்து வரும் ரசிகர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து இரண்டு, மூன்று நாட்களில் காவல்துறையினருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என எஸ்.பி.சரண் கூறினார்.

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு? தீபிகாவிடம் 6 மணிநேரம் விசாரணை!

போதைப் பொருள் வழக்கில் தீபிகா படுகோனே, சாரா அலிகான் ஆகியோரின் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து, இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. போதைப்பொருள் கோணத்திலும் இந்த வழக்கின் விசாரணை நடைபெறுகிறது.

போதைப்பொருளை பயன்படுத்தியது மற்றும் தனது காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடிகை ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார்.

ரியாவின் தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் உள்பட பலர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், திரையுலகை சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையின் போது நடிகைகளான ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, இந்தி நடிகைகள் சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தீபிகா படுகோனிடம் சுமார் 6 மணி நேரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்கு பிறகு தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான், ரகுல் பிரீத் சிங், கரிஷ்மா பிரகாஷ், ஆடை வடிவமைப்பாளர் சிமோன் கம்பட்டா மற்றும் சுஷாந்தின் திறன் மேலாளர் ஜெயா ஷா ஆகியோரின் செல்போன்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அதில் உள்ள வாட்ஸ் அப் உரையாடல்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்க உள்ளனர். தற்போது விசாரணை வளையத்தில் உள்ள நடிகர்-நடிகைகள் யாரும் போதைப்பொருள் வழக்கில் சேர்க்கப்படவில்லை என்றும், விசாரணை மட்டுமே நடத்தப்படுவதாகவும் போதைப்பொருள் தடுப்பு அமைப்பு அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது .

‘கொரோனா’ உலகளவில் பலி எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 98 ஆயிரத்தை லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 98 ஆயிரத்து 700 ஐ கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 30 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 2 கோடியே 44 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

13 குறித்த மோடியின் கருத்துக்கு ராதா வரவேற்பு!

13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் அழுத்தம் கொடுத்திருப்பதை சிறுபான்மை கட்சி என்ற வகையில் அதனை வரவேற்கின்றேன்.இந்தியாவின் இந்த நிலைப்பாடு சிறுபான்மை மக்களுக்கு இலங்கையில் இருக்கின்ற உரிமைகளை பாதுகாத்து கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமருக்கும் இந்திய பிரதமருக்கும் இடையிலான காணொளி கலந்துரையாடல் தொடர்பாக  கருத்து தெரிவித்த பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த இராதாகிருஸ்ணன்
இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இணைந்து கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின் மூலமாகவே இந்த 13ஆவது திருத்த சட்டம் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் உருவாக்கப்பட்டது. விசேடமாக இலங்கையில் இருக்கின்ற சிறுபான்மை மக்களுடைய உரிமைகளையும் அவர்களுடை அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டே இந்த 13வது திருத்த சட்டம் உருவாக்கப்பட்டது.
இதன் மூலம் சிறுபான்மை மக்களுடைய பல்வேறு விடயங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது.குறிப்பாக எங்களுடைய கல்வி சுகாதாரம் உட்கட்டமைப்பு வசதிகள் என்பன கடந்த 30 வருடங்களுக்குள் குறிப்பிடக்கூடிய அளவில் அபிவிருத்தி அடைந்துள்ளது.
நான் மூன்று முறை மத்திய மாகாண கல்வி அமைச்சராக இருந்தவன் என்ற வகையில் மாகாண சபை ஊடாக கல்விக்கு பாரிய அபிவிருத்தியை செய்யக்கூடிய ஒரு நிலைமை காணப்பட்டது.அதே நேரத்தில் இன்று மலையக கல்வி அபிவிருத்தி அடைந்து வருகின்றதென்றால் அன்று மாகாண சபைகள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்திகள் காரணமாகவே இன்றைய நிலையை நாங்கள் அடைந்திருக்கின்றோம்.
அதே போல வடகிழக்கிலும் இவ்வாறான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு சிறந்த உதாரணம் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சிறையில் இருந்த வாரே பிள்ளையான் வெற்றி பெற்றுள்ளார்.அதற்கு காரணம் அவர் மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் அவர் அங்கு மேற்கொண்ட அபிவிருத்திகளே. எனவே 13வது திருத்த சட்டத்தை இன்னும் வலுப்படுத்தி சிறுபான்மை மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சிறுபான்மை மக்களுடைய பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்கு சிறந்த உதாரணமாக மலேசியா சிங்கப்பூர் இந்த இரண்டு நாடுகளை குறிப்பிட முடியும்.அண்மையில் உலக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் முதலாவது இணைய வழி கலந்துரையாடல் உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சிங்கப்பூர் மலேசியா நாட்டின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த நாடுகளில் சிறுபான்மை மக்களுக்கு அந்த அரசாங்கம் எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றது என்பதை சுட்டடிக்காட்டினார்கள்.இதன் மூலம் அந்த நாட்டின் அபிவிருத்தியிலும் சிறுபான்மை மக்கள் பாரிய பங்களிப்பை செய்து வருவதையும் அவர்கள் இதன்போது தெரிவித்தார்கள்.
இலங்கையின் சார்பாக நானும் கலந்து கொண்டு இலங்கை சிறுபான்மை மக்கள் சார்பாக வெளிநாடுகளில் வாழுகின்ற மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதையும் விசேடமாக இந்தியா இந்த 13வது திருத்த சட்டம் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
எனவே எதிர்காலத்தில் உலக தமிழ் பாராளுமன்ற அமைப்பின் ஊடாக அனைவரும் இணைந்து பல அபிவிருத்திகளை செய்வதற்கும் நான் எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

கருவின் ஆட்டம் ஆரம்பம்! விரைவில் புதிய கட்சி உதயம்!!

முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் சிலரும் கருவின் கட்சியில் இணையவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியை தனக்கு வழங்குமாறு கருஜயசூரிய கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், அதனை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துவிட்டார். இந்நிலையிலேயே முக்கிய அரசியல் புள்ளிகள், நிபுணர்கள் உள்ளடங்களாக புதிய கட்சியை கருஜயசூரிய ஆரம்பிக்கவுள்ளார் என தெரியவருகின்றது.

’20’ படுபயங்கரம் – அபாய சங்கு ஊதினார் சந்திரிக்கா!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் படுபயங்கரமானதாகும். ’20’ நிறைவேறியதும் ஜனநாயகத்துக்கும் முடிவு கட்டப்பட்டுவிடும் – என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஶ்ரீதாபகத் தலைவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 61 ஆவது நினைவுதின நிகழ்வு நேற்று (26) அத்தனகலவிலுள்ள அன்னாரின் சமாதியில் நடைபெற்றது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, உப தலைவர் நிமல்சிறிபாலடி சில்வா,முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

நினைவுதின நிகழ்வு முடிவடைந்த பின்னர் ’20’தொடர்பில் சந்திரிக்கா அம்மையாரிடம் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

” 20ஆவது திருத்தச்சட்டமூலம் படுபயங்கரமானதாகும். ஜனநாயகம் முடிந்துவிடும். அது குறித்து விரைவில் அறிவிப்பொன்றை  விடுக்கவுள்ளேன்.” – என்றார்.

அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பது குடும்ப சொத்து கிடையாது, அது மக்களுக்கான கட்சியாகும். எனவே, அதனை ஆக்கிரமித்து வைக்கும் எண்ணம் எமக்கு இருக்கவில்லை. அதனால்தான் புதிய தலைவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனாலும் கட்சியை இன்று சின்னபின்னமாக்கிவிட்டனர் எனவும் குறிப்பிட்டார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!

0
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். தையிட்டிக் கிராமத்தில்...

யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...

நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...