Home Blog Page 3846

’13’ ஐ கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும்! மோடி வலியுறுத்து!!

சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது அவசியமானதென இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார்.

காணொளி தொழில்நுட்பத்தினூடாக இருநாட்டு பிரதமர்களுக்கும் இடையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பாரத பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அரச தலைவர் ஒருவருடன் இடம்பெற்ற முதலாவது காணொளி கலந்துரையாடல் இதுவாகும்.வலய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது கட்டாயமானதென, இந்திய வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமுத்திர பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளில் இந்தியாவிற்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இருநாட்டு பிரதமர்களுக்கும் இடையில் இதன்போது இணக்கம் காணப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாட்டு தேவைகளுக்கும் அமைய தற்போது அமுல்படுத்தப்படும் உட்கட்டமைப்பு செயற்றிட்டங்களை மேலும் துரிதப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இருநாட்டு தலைவர்களும் இணக்கம் தெரிவித்ததாக இந்திய வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி – சக்தி தொலைக்காட்சி செய்தி

’20’ ஐ தோற்கடிக்க போராடுவோம் – சஜித் சூளுரை

ஜனநாயகத்துக்கும், நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள  20 ஆவது திருத்த சட்டமூலத்தை தோல்வியடையச் செய்வதே  பிரதான நோக்கம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று (26) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

”  அரசாங்கத்தின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் ஆபத்தாக அமைந்துவிடும். எனவே, 20 ஐ தோற்கடிப்பதே எமது இலக்கு. அதற்காக அனைத்து சக்திகளும் எமக்கு ஆதரவு வழங்கவேண்டும்.

20 ஆவது திருத்த சட்டமூலத்தில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம். பொதுவெளியில் கருத்தரங்கு மூலம் தெளிவுபடுத்திவருகின்றோம். அந்தவகையில் மேற்படி சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.” -என்றார்.

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 28 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 28  பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,186 ஆக அதிகரித்துள்ளது.

146  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 345 ஆக அதிகரித்துள்ளது.

எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

தமிழக அரசு சார்பில் பொலிஸ் மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் இன்று நண்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்தில் வைக்கப்பட்டு, அவரது குடும்பத்தினர் சார்பில் அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த அவரது ரசிகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், பாடகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் நேரில் வந்து எஸ்.பி.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் எஸ்.பி.பி.யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார்.

அதன்படி குடும்பத்தினரின் இறுதிச்சடங்குகள் நிறைவு பெற்ற பிறகு, காவல்துறை சார்பில் அரசு மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கிடையில் எஸ்.பி.பி.யின் பண்ணை தோட்டத்தில் அவரது உடலை புதைப்பதற்கான முன்னேற்பாடுகள் நேற்று தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கிடையில் நடிகர் விஜய் நேரில் வந்து எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

எஸ்.பி.பி.யை இறுதியாக ஒருமுறை காண்பதற்காக வந்திருந்த அவரது ரசிகர்கள், அவரது உடலை, காவல்துறை அணிவகுப்புடன் சுமந்து சென்ற போது, எஸ்.பி.பி.யின் புகழை போற்றும் விதமாக முழக்கங்கள் எழுப்பியபடி சென்றனர். இதன் பின்னர் காவல்துறை சார்பில், 24 பொலிஸார் 3 முறை குண்டுகளை முழங்க அரசு மரியாதையுடன், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நானுஓயாவில் ஆட்டோ விபத்து – மூவர் காயம்!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா- நானுஓயா பிரதான வீதியில் ஆட்டோவொன்றுதடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
 
அவர்கள் சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
கினிகத்தேனயிலிந்து ராகலைசூரியகாந்தி தோட்டத்திற்கு செல்லும் வழியில் இன்று ( 26 )சனிக்கிழமை காலை 9 மணியளவில் நானுஓயா வெண்டிகோணர் காத்தாடி முடக்கில் முச்சக்கர வண்டி வீதியில் தடம் புரண்டுள்ளது.
 
முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட மேலும் ஆண் ஒருவரும் பெண் ஒருவருமாக இரண்டு பேர் விஜயம் செய்துள்ளனர்.  

‘கொரோனா’வால் 20 லட்சம் பேர் பலியாகலாம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால் கொரோனா வைரசுக்கு 20 லட்சம் பேர் பலியாக கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.

உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி இருக்கிறது.இதுவரை 9 லட்சத்து 93 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 5,818 பேர் இறந்துள்ளனர்.

இந்தநிலையில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால் கொரோனா வைரசுக்கு 20 லட்சம் பேர் பலியாக கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் அவசர கால மருத்துவ நிபுணர் மைக் ரியான் கூறியதாவது:-

உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும். இதுவரை உலக அளவில் கொரோனா தொற்றால் 10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 3.2 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். குளிர்காலம் தொடங்குவதால் வடதுருவ நாடுகள்பலவற்றில் கொரோனாவின் 2-வது அலை தொடங்கி உள்ளது.

ஐரோப்பியா முழுவதும் பல பகுதிகளில் மீண்டும் தொற்று பரவ தொடங்கி உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். கொரோனா தொற்றுக்கான சிகிச்சை மேம்பட்டு உள்ளதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

ஆனால் நல்ல சிகிச்சையோ அல்லது தடுப்பு மருந்துகளோ இருந்தாலும் 20 லட்சம் பேர் வரை உயிரிழப்பதை தடுக்க இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

75 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து – மூவர் காயம்!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடா மஸ்கெலியா பகுதியில் நேற்றிரவு (25) ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்தே ஆட்டோ இவ்வாறு விபத்துக்குள்ளானது.

ஆட்டோவில் ஓட்டுநர் உட்பட மூவர் பயணித்துள்ளனர். விபத்தையடுத்து பின் இருக்கையில் இருந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். ஏனைய இருவருக்கும் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

‘நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் 7 லட்சத்து 95 ஆயிரம் வழக்குகள்’

நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் 07 இலட்சத்து 95 ஆயிரம் வழக்குகள் உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேற்குறித்த அத்தனை வழக்குகளிலும்ஆஜராகும் சட்டத்தரணிகளின் விபரங்களை என்னால் சபையில் தெரிவிக்க முடியாது. அது எனது வேலையுமல்ல என பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் எதிர்க்கட்சி எம்.பி சமிந்த விஜேசிறி குருநாகல் சர்ச்சைக்குரிய டாக்டர் ஷாபி தொடர்பில் கேள்வி ஒன்றை எழுப்பினார்.அதற்கு பதிலளித்த அமைச்சர்,

நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் சபையில் என்னால் பதில் சொல்ல முடியாது அது எனது பொறுப்புமல்ல.

நாம் நீதி அமைச்சுக்கு மட்டுமே எமது பணிகளை மட்டுப்படுத்தி செயற்படுகின்றோம். உங்களுக்கு தேவையானால் அத்தகைய விபரங்களை விண்ணப்பித்து பணம் கொடுத்து பெற்றுக் கொள்ள முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்தும் மேற்படி தகவல்களை எங்கு பெறுவது போன்ற கேள்விகளை தொடர்ந்தும் எழுப்பிய சமிந்த விஜேசிறி எம்.பிக்கு பதிலளித்த அமைச்சர்,

கடந்த காலங்களில் போன்று தொலைபேசி மூலம் அழுத்தம் கொடுப்பதோ அல்லது நபர்களை தெரிவு செய்துகொண்டு நீதிமன்றத்தை அமைப்பது போன்ற நடவடிக்கைகளில் அன்றி நிதியமைச்சின் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே நீதியமைச்சர் ஆகிய நாம் மேற்கொள்ளும் பணி என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

‘தேசியப்பட்டியல் வாய்ப்பு வேண்டாம்’ – ரணில் திட்டவட்டம்

” தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லமாட்டேன்.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார் என தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு பொதுத்தேர்தலில் தேசியப்பட்டியல் ஆசனமொன்று கிடைக்கப்பெற்றது. அதற்காக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் நெருக்கடி நிலை நீடிக்கின்றது.

ஜோன் அமரதுங்க, அகிலவிராஜ் காரியவசம்,ரவி, வஜிர அபேவர்தன மற்றும் தயா கமகே ஆகியோர் தேசியபட்டியல் வாய்ப்பை கோரிநிற்கின்றனர். இவர்களில் ஒருவருக்கு வழங்கினால் கட்சிக்குள் மோதல் ஏற்படும் என்பதால், ரணிலை பாராளுமன்றம் செல்லுமாறு சிலர் கோரியுள்ளனர்.

இந்நிலையிலேயே ரணில் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார்.

‘மடுல்சீமையிலிருந்து கொழும்புக்கு மஞ்சள் தூள் கொண்டுவர முயன்றவர் மாயம்’

மடுல்சீமையிலிருந்து கொழும்புக்கு 8 கிலோ மஞ்சள் தூளை எடுத்துச் செல்ல முயன்ற நபர், பொலிஸ் பிடியிலிருந்து தப்பியோடியுள்ளார். அதையடுத்து காட்போட் பெட்டியொன்றில் பொதி செய்யப்பட்டிருந்த மஞ்சள் தூளை  மடுல்சீமைப் பொலிஸார் மீட்டளனர்.

இச்சம்பவம் 25-09-2020ல் இரவு மடுல்சீமையில் இடம்பெற்றுள்ளது.

மடுல்சீமையிலிருந்து இரவு கொழும்புக்கு செல்லும் பஸ்சில் மேற்படி மஞ்சள் தூள் பொதி ஏற்றப்பட்டது. அப்பொதியை ஏற்றியவரிடம் பொதிக்குள் என்ன உள்ளதென்று பஸ் நடாத்துனர் கேட்டுள்ளார். அப்போது அந்நபர் மஞ்சள் தூள் உள்ளது. கொழும்புக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்று கூறியுள்ளார்.

அதையடுத்து, பஸ் நடாத்துனர் மஞ்சள் தூள் பொதியை எடுத்துச் செல்ல முடியாதென்று கூறினார். அவ் வேளையில், அப் பஸ்சில் சிவில் உடையிலிருந்த பொலிசார், அந் நபரை விசாரணைக்குற்படுத்தி விளக்கம் கேட்டனர். அப்போது, அந் நபர் பொலிசார் பிடியிலிருந்து இரவு வேளையிலேயே தப்பிச் சென்றுள்ளார்.

பஸ்சிலிருந்த மஞ்சள் தூள் பொதியை மீட்ட பொலிசார் அதனை பரிசீலனை செய்தனர். அப்பொதிக்குள், இரு கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் குறிப்பிடப்பட்ட அட்டையொன்றிருந்தது. அத் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள பொலிசார் முனைந்த போதிலும், அவ் இலக்கங்கள் செயலற்றுள்ளன. தொடர்ந்தும் பொலிசார் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தப்பியோடிய நபர் குறித்தும் தேடுதல்களை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

மஞ்சள் தூள் பொதி தற்போது, மடுல்சீமைப் பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

எம். செல்வராஜா, பதுளை

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!

0
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். தையிட்டிக் கிராமத்தில்...

யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...

நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...