Home Blog Page 3853

‘மேற்கு தொடர்ச்சிமலை’ கங்காணி காலமானார்!

‘மேற்குத் தொடர்ச்சிமலை’ திரைப்படத்தில் கங்காணியாக நடித்த மக்கள் கலைஞன், ஒய்வுபெற்ற ஆசிரியர், வரலாற்று அறிஞர், தீவிர வாசிப்பாளர் என பன்முகம் கொண்ட அந்தோணி வாத்தியார் காலமானார்.

மேற்குத் தொடர்ச்சிமலை படத்தின் இயக்குநர் லெனின் பாரதி இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

மேற்குத் தொடர்ச்சி மலையான மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையுடன் ஒத்துப்போவதுடன், காணி உரிமையும் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இயல்பு வாழ்க்கைக்கு இசைவாக மிகவும் தத்ரூபமாக குறித்த படம் இயக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் இயக்கப்பட்டிருந்தாலும் மலையக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ராகலையில் தீ விபத்து – மூன்று கடைகள் எரிந்து நாசம்!

ராகலை நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதிகளில் இன்று (19) அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சில்லறை கடை, கோழி கடை மற்றும் தொடர்பாடல் நிலையம் ஆகியன தீக்கிரையாகியுள்ளன.

தீ விபத்தால் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை. எனினும்,பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

பிரதேச  மக்கள், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், ராகலை பொலிஸார் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

ஏற்பட்ட தீ காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

காதலனுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த நயந்தாரா

இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நடிகை நயன்தாரா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

‘நானும் ரவுடி தான்’ படத்திலிருந்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் உள்ளிட்டவற்றை புகைப்படங்களாக பதிவிட்டு வருவார்.

இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்றெல்லாம் அடிக்கடி கிசுகிசுக்கப்படும். சமீபத்தில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஓணம் பண்டிகையைக் குடும்பத்துடன் கொண்டாட கேரளா பறந்த இவர்கள், அங்கிருந்து கோவா சென்றனர். அங்கு நயன்தாராவின் தாயார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு அதற்கான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் கோவாவில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அப்போது அவருக்கு கேக், அலங்காரம் செய்யப்பட்ட அறை, இசை, பாடல் என சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார் நயன்தாரா. தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக வைத்துள்ளார்.

எரோல் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் – சுவர்களில் வெடிப்பு!

மலையகத்தில் நிலவும்  சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரோல் தோட்டப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேற்படி தோட்டத்தில் ஒரு வீடு மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் மண்சரிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் பெய்து வரும் மழை காரணமாக சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளன. சில வீடுகளில் சுவர்கள் இடிந்துள்ளதுடன் கூரைகளும் உடைந்து சேதமாகியுள்ளன.

மலைநாட்டில் இன்று காலைவேளையில் கன மழை பெய்யாத போதிலும், அடுத்துவரும் நாட்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதால் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

க.கிசாந்தன்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி 27 இல் ஆரம்பம்! முன்னணி வீராங்கனை ஒசாகா விலகல்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதிவரை பாரீஸ் நகரில் நடைபெறவுள்ளது.

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற இப்போட்டியில் இருந்து உலக தரவரிசையில் 3ஆவது இடம் வகிப்பவரும், கடந்த வாரம் முடிந்த அமெரிக்க ஓபனில் பட்டத்தை வென்றவருமான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா காயம் காரணமாக விலகியுள்ளார்.

இது குறித்து நவோமி ஒசாகா தனது டுவிட்டர் பதிவில்,

‘எதிர்பாராதவிதமாக இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபனில் என்னால் விளையாட முடியவில்லை. காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு இன்னும் குணம் அடையவில்லை. எனவே களிமண் தரையில் நடைபெறும் இந்த போட்டிக்கு தயாராக எனக்கு போதிய காலஅவகாசம் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) கொரோனா அச்சத்தால் பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். தொடர் இன்று ஆரம்பம்! சென்னை, மும்பை மோதல்!!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஆரம்பமாகின்றது. முதல் ஆட்டத்தில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன.

13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10 ஆம் திகதிவரை நடக்கிறது.

துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்க உள்ள இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

அபிதாபியில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சுடன் மல்லுக்கட்டுகிறது.

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ஓராண்டுக்கு பிறகு களம் திரும்புவது ரசிகர்களின் ஆவலை தூண்டி உள்ளது. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் விலகல் சென்னை அணிக்கு சற்று பின்னடைவு என்ற போதிலும் அதிகமான அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது சாதகமான அம்சமாகும்.

4 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியில் கடைசி நேரத்தில் ‘யார்க்கர் மன்னன்’ மலிங்கா விலகியது கொஞ்சம் சறுக்கல் தான். ஆனாலும் சாதுர்யமாக பந்து வீசக்கூடிய பும்ரா, டிரென்ட் பவுல்ட், பேட்டின்சன் உள்ளிட்டோர் பந்து வீச்சில் அணியை தூக்கி நிறுத்தி விடுவார்கள்.

மும்பை அணியின் அசுர பலமே, அவர்களின் பேட்டிங் தான். கேப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் கடந்த சீசனில் அமர்க்களப்படுத்தினர். இந்த ஆண்டும் அவர்கள் தான் தொடக்க வீரர்களாக அடியெடுத்து வைக்கிறார்கள்.

ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், சூர்யகுமார் யாதவ் அதிரடியில் மிரட்டுவார்கள். இப்படி எல்லா வகையிலும் மும்பை அணி வலுமிக்கதாக திகழ்வதால் சென்னை அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

ஐ.பி.எல்.-ல் சென்னை, மும்பை அணிகள் இதுவரை 28 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் மும்பையும், 11-ல் சென்னையும் வெற்றி பெற்றிருக்கின்றன. கடந்த ஆண்டு மும்பையுடன் மோதிய 4 ஆட்டங்களிலும் சென்னை அணி தோல்வியையே தழுவியது. இறுதி ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை இழந்ததும் அடங்கும்.

இலங்கை நேரப்படி போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

பத்தன நகரில் மண்சரிவு! இரண்டு வீடுகளுக்கு சேதம்!

கொட்டகலை, பத்தன நகரில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு வீடுகளும், தொழிற்சங்க அலுவலகமொன்றும் சேதமடைந்துள்ளன என்று திம்புள்ள – பத்தன பொலிஸார் தெரிவித்தனர்.

மலைநாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழைபெய்துவருவதால் மண்சரிவு அனர்த்தங்களும் ஏற்பட்டுவருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு (18.09.2020) பத்தன நகரிலும் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டது.

வீடுகள் மற்றும் தொழிற்சங்க அலுவலகத்துக்கு பின்புறத்திலேயே மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், இரு வீடகளில் இருந்த எட்டு பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது அயலவர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.  

அதேவேளை, இன்று காலை முதல் மலைநாட்டில் இடையிடையே மழைபெய்துவருகின்றது. தொடர் அழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

க.கிசாந்தன்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு! வான்கதவுகள் திறப்பு!!

மலையகத்தில் பெய்துவரும் அடை காரணமாக மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் நேற்றிரவு (18) முதல் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

எனவே, அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதோடு, டெவோன் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

க.கிசாந்தன்

ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு

ஶ்ரீலங்கா  பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது.
இக்கூட்டமானது எதிர்வரும்  22 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறும் என முன்னதாகஅறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையிலேயே ஆளுங்கட்சி நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தை  21 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடத்தும் முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளார் எனவும், ’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பிலேயே இதன்போது முழுமையாக கவனம் செலுத்தப்படவுள்ளது எனவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கடந்தமுறை நடைபெற்ற ஆளுங்கட்சிகுழுக்கூட்டத்தில் ’20’ தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டனர். இதனையடுத்து 20 ஐ மீளாய்வு செய்வதற்கு பிரதமர் குழுவொன்றை அமைத்தார். ’20’ திருத்தப்பட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ’20’ தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில்லை எனவும், நாடாளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின்போது அதில் மாற்றங்களை ஏற்படுத்தவதெனவும் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன் 20 இற்கான பொறுப்பை தான் ஏற்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறானதொரு பின்புலத்தில் ஜனாதிபதி ஆளுங்கட்சி எம்.பிக்களை அழைத்துள்ளமை தொடர்பில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றது.

மலையகத்தில் ‘ஸ்டோர்சாமி’ வழிபாடு!

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழில்துறை தெய்வ நம்பிக்கை நிறைந்தது.

இவர்கள் தொழில் செய்யும் இடங்கள் ஆரம்பத்தில் காடுகளாக இருந்தது.வேலைத்தலங்ஙள் அநேகமாக பள்ளம் மேடுகளாக ஆபத்துக்களை விளைவிப்பதாக இருந்தது. காடுகளை அண்டிய இடங்களில் வனவிலங்குகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் பல்வேறு இடர்பாடுகளை கொண்டதாக காணப்பட்டது

அதேபோல பெருந்தோட்ட பயிர்களான கோப்பி மற்றும் தேயிலை போன்றவற்றை பதனிடும் தொழிற்சாலைகளும் பாரிய இயந்திரங்களை கொண்டதாகவும் பாதுகாப்பற்றதாவும் இருந்தது.

இந்த ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பை பெரும் பொருட்டு தோட்டத்துக்குள்ளேயும் தோட்ட எல்லையிலும்,மரத்தடியிலும்,நீர்நிலைகளிலும்,மலையடிவாரத்திலும் மட்டுமன்றி பாரிய தொழிற்சாலைகளுக்கு அருகிலும் வழிபாட்டு தலங்களை அமைத்துக் கொண்டனர்.

தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ள இடங்களில் அல்லது அதற்கு அருகில் அநேகமாக ரோதமுனி ஆலயங்கள் இருப்பதை காணலாம்.

தேயிலை தொழிற்சாலை என்பது தொழிலாளர்கள் கிள்ளும் கொழுந்தை பதனிட்டு தூளாக அரைக்கும் பாரிய இயந்திரங்களை கொண்டது.பெரிய ரோதைகளால் ஆனது.மிக கவனமாக அந்த இயந்திரங்களை இயக்க வேண்டும் தவறினால் பாரிய விபத்துக்கள் ஏற்படும்.அவ்வாறு விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் பல உள்ளன.அவ்வாறான விபத்துக்களில் இருந்து பாதுகாப்பை பெரும் பொருட்டு அந்த ரோதைகளோடு சம்பந்தப்பட்ட பெயர்கொண்ட ரோதமுனி ஆலயஙளை நம் முன்னோர்கள் அமைத்து வழிபட்டனர்.தேயிலை தொழிற்சாலையை நம்மவர்கள் ஸ்டோர் என்றும் பெரும்பாலும் அழைப்பதுண்டு.அவ்வகையில் ஸ்டோரிலே வழிபடப்படும் இந்த சாமியை”ஸ்டோர் சாமி”என்று அழகாக அழைத்தனர் .

ஸ்டோரில் சாமி கும்பிடுவதென்பது இங்கு பணிப்புரிபவர்களுக்கு அத்தனை சந்தோசம்.தினமும் உழைப்பதும் உண்பதும் என்ற வாழ்க்கைக்கு அப்பால் இந்த பூசையில் முழு மனதோடு ஆர்வம் காட்டுவார்கள்.

வருடத்திற்கு ஒரு முறை இந்த விசேட பூசை நடக்கும். தொழிலாளர்களோடு நிர்வாகத்தினரும் கைகோர்த்து தொழிற்சாலையையும் இயந்திரங்களையும் சுத்தம் செய்து அதனோடு ஆலயத்தையும்
அழங்கரித்து பூசையை மெருகூட்டுவார்கள்.பூசையை நமது பாரம்பரிய முறையிலேயே செய்வார்கள்.பூசை முடிவில் தொழிற்சாலை வளகாத்தில் இருந்து அமர்ந்து ஒன்றாக உணவருந்துவது வேறு எந்த நட்சத்திர விடுதிகளிலும் கிடைக்காத சுகம்.

எழுத்து (அ.ரெ.அருட்செல்வம்)

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

பிரதேச செயலகத்தை நோர்வூட்டுக்கு மாற்றுக: பொகவந்தலாவயில் நாளை கை எழுத்து இயக்கம் !

0
நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்து அமைக்கக் கோரும் கை எழுத்து இயக்கம் நாளை (25) பொகவந்தலாவ பகுதியில் இடம்பெறவுள்ளது. மலையக அரசியல் அரங்கம் முன்னெடுக்கும் இந்தத் தொடர் கை எழுத்துக்குத் தமது...

சீரற்ற காலநிலை: நுவரெலியா உட்பட 4 மாவட்டங்களில் 147 குடும்பங்கள் பாதிப்பு!

0
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் நுவரெலியா உட்பட நான்கு மாவட்டங்களில் 147 குடும்பங்களைச் சேர்ந்த 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (24) பகல் வெளியிட்டுள்ள நாளாந்த நிலைவர...

2.5 மில்லியன் டொலர்கள் ஹேக்கர்களுக்கு பூஜை: சஜித் குற்றச்சாட்டு!

0
" நாட்டின் வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் வட்டித் தவணைகளைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு மத்திய வங்கியிடமே முன்னர் காணப்பட்டு வந்தது. பின்னர் மேற்கொண்ட புதிய ஒழுங்குமுறைகள் சட்ட விதிகளுக்கு ஏற்ப பொது கடன்...