Home Blog Page 3854

ஒக்டோபர் 2 இல் ‘சைலன்ஸ்’ படம் வெளியீடு

ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சைலன்ஸ்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அனுஷ்கா மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார்.

இதேவேளை அதே தினத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள “கஃபே ரணசிங்கம்” திரைப்படமும் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முற்போக்கு கூட்டணி எம்.பிக்களுக்கு ஆளுங்கட்சி அழைப்பு – ஒப்புக்கொண்டார் மனோ!

” தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பிக்களுக்கு ஆளுங்கட்சி பக்கத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அரசியலில் இவ்வாறு பேச்சுவார்த்தை நடைபெறுவது இயல்பு. ஆனாலும் என்னுடன் எவரும் கலந்துரையாடல் நடைபெறவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டணியில்தான் தமிழ் முற்போக்கு கூட்டணியும் அங்கம் வகிக்கின்றது. நாம் ’20’ ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்ப்பதற்கு முடிவெடுத்துள்ளோம்.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

‘குளோப் தமிழுக்கு’ அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு,

‘மாகாணசபைகளின் கோமா நிலைக்கு தமிழ்க்கட்சிகளே காரணம்’

மாகாணசபைகளின் கோமா நிலைக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகளே காரணம் என்று மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பயம் காரணமாகவே மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வழங்கி மாகாணசபைகளை கோமா நிலைக்கு கொண்டு சென்றதில் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த அத்தனை சிறுபான்மை கட்சிகளும் பெரும் பங்காற்றி இருந்தன. இதனால் இன்று 13 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற ஆபத்துக்கு தமிழ் முஸ்லிம் கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும்.

முன்னைய பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த கட்சிகள் நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி செயற்படாமல் தத்தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செய்யப்பட்டதன் விளைவாகவே மாகாணசபைகளுக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

ஐக்கிய தேசிய கட்சி தேர்தலை எதிர் நோக்குவதற்கு பயந்தே மாகாணசபை தேர்தல் திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவதற்கு எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அத்தனை சிறுபான்மை கட்சிகளும் ஆதரவை வழங்கின. அதனாலேயே தற்போது மாகாண சபைகள் கோமா நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதற்கு பிரதான காரணமாகும்.

தற்போதைய அரசாங்கத்திடம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் இருப்பதனால் கோமா நிலையில் இருக்கும் மாகாண சபைகளை கொலை செய்வதா? அல்லது உயிரூட்டி இயங்க வைப்பதா? என்ற தீர்மானத்தை மேற்கொள்ளும் வல்லமை இருக்கின்றது. ஒரு வேளை அரசாங்கம் மாகாணசபைகளை ரத்து செய்யும் தீர்மானத்தை எடுத்தாள் அதற்கு வழி சமைத்துக் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சியும் அவர்களோடு இணைந்து செயற்பட்ட அத்தனை சிறுபான்மை தமிழ் முஸ்லிம் கட்சிகளுமே காரணமாகும்.

கடந்த அரசாங்க காலத்தில் மாகாண சபை தேர்தல் திருத்த சட்ட மூலத்துக்கு ஆதரவு அளித்ததன் மூலம் நாட்டின் அதிகார பகிர்வுக்கு கிடைத்திருந்த சிறிய சந்தர்ப்பமும் தற்போது ஆபத்தை எதிர்நோக்கி கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்கத்தின் அனுசரணையோடு கிடைத்த 13ஆவது திருத்தச்சட்டத்தின் அனுகூலங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டாள் எதிர்காலத்தில் அதிகாரப் பகிர்வை பெற்றுத்தருமாறு எவரிடமும் கையேந்தி நிற்க முடியாது. இந்தியாவும் சர்வதேசமும் கொடுத்து வருகின்ற அழுத்தங்கள் சிறுபான்மை மக்களுக்கு ஆறுதலை கொடுத்தாலும் இதுவரை தீர்வை கொடுக்க வில்லை. இந்த நிலையில் இருக்கின்ற 13ம் இழந்து நிற்கின்ற நிலைமையை ஏற்படுமாக இருந்தால் நாட்டின் அதிகார பகிர்வுக்கான அடிப்படையே இல்லாமல் செய்யப்படும்.

தற்போது நாட்டில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் சம்பந்தமாக பரவலாக பேசப்படுகின்றது. தற்போதைய அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் இந்த 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கு போதுமானதாகும். இந்த நிலையில் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கு மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தின் மூலம் ஏற்பட்ட கலங்க த்திலிருந்து மீள்வதற்கு 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரிப்பதும் அதே நேரத்தில் மாகாணசபைகளுக்கு தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமூலத்தை இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்துடன் சேர்த்து ஒரே நேரத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.” – என்றார்.

‘Ceylon Tea’ நாமத்துக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம்! ஜனாதிபதி பிறப்பித்துள்ள கட்டளை!!

நீண்டகாலமாக உலகம் பூராகவும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள Ceylon Tea தரத் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

சீனி, குளுக்கோஸ் வகைகள் மற்றும் சோடியம் பைகாபனேட், பெரசல்பேட் போன்ற பொருட்களைக் கலந்து தேயிலை உற்பத்தி செய்தல் தொடர்பாக அண்மைக் காலங்களில் ஊடகங்களின் மூலம் அறியக் கிடைக்கின்றது. அவ்வாறான தேயிலை உலக சந்தையில் நிராகரிக்கப்படுவதன் மூலம் தேயிலைக் கைத்தொழில் பாரிய வீழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

நாட்டின் புகழுக்கும் உலக சந்தையில் Ceylon Tea க்கும் உள்ள கேள்விக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு எதிர்காலங்களில் எவ்வகையிலும் இடமளிக்க முடியாதென்றும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

சந்தையில் மிளகுக்கு ஏற்பட்ட பாதிப்பு தேயிலை கைத்தொழிலுக்கும் ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி  உறுதியாக குறிப்பிட்டார்.

உயர் தரத்திலான தேயிலை உற்பத்தி தொடர்பாக சிறு மற்றும் மத்திய தர தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களுடனும் ஏற்றுமதியாளர்களுடனும் இன்று (18) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி  இவ்வாறு குறிப்பிட்டார்.

உலக சந்தையில் தேயிலைக்கான கேள்வி 65 வீதத்திலிருந்து 45 வீதமாக குறைவடைவதற்கு தரம் குறைவான தேயிலை உற்பத்தி காரணமாக அமைந்துள்ளது. இந்நாட்டில் 705 தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. 45 தொழிற்சாலைகளின் முறையற்ற செயற்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதோடு, விசாரணைகளின் பின்னர் 18 தொழிற்சாலைகளின் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டதாக தேயிலை சபையின் தலைவர் ஜயம்பதி மொல்லிகொட தெரிவித்தார்.

கழிவுத் தேயிலை மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய இரசாயனப் பொருட்களை பயன்படுத்தி தேயிலை உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனங்களை சுற்றி வளைப்பதற்கு புலனாய்வு துறையினரின் தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் விசேட படையணி மற்றும் பொலிஸாரினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நாட்டுக்கு கிடைக்கும் வருமானத்திற்கோ தேயிலை கைத்தொழிலுக்கோ தரம் குறைவான தேயிலை உற்பத்தி தடையாக அமைவதற்கு இடமளிக்கக்கூடாது. உயர் தரத்திலான தேயிலையை உலக சந்தைக்கு வழங்குவதற்கு தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த தரத்திலான தேயிலை உற்பத்திக்கு இடமளிக்கப்பட மாட்டாது. அதனையும் தாண்டி அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் தொழிற்சாலைகளை மூடுமாறு ஜனாதிபதி  அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

புலனாய்வுத் துறையினரின் உதவியுடன் தொடர்ச்சியான விசாரணைகளை நடத்தி இவ்வாறான நிறுவனங்களை சுற்றி வளைக்குமாறு ஜனாதிபதி  பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.

இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், பதில் பொலிஸ்மா அதிபர், புலனாய்வுத்துறை பிரதானிகள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தேயிலை கைத்தொழிற்சாலை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

மலையகத்தில் அடை மழை – சில இடங்களில் மண்சரிவு!

மலையகத்தில் கடந்த சில நாட்களாக அடை மழைபெய்துவருவதால் சில இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

அத்தோடு, கடந்த இரு தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்தும் காணப்படுகின்றது.

அந்தவகையில் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதண்டி தோட்டம் புரோடப் பிரிவில் தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக இப்பகுதியில் வாழும் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சுமார் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இவ்வீதியினேயே பயன்படுத்தி வருகின்றார்கள்.

எனவே தோட்ட நிர்வாகம் உடனடியாக ஏற்பட்டுள்ள மண்சரிவை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அடிக்கடி மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதனால் இப்பகுதியில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

க.கிசாந்தன்

‘கொரோனா’ – இலங்கையில் 3,060 பேர் தப்பினர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 17பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,060 ஆக அதிகரித்துள்ளது.

203 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 276 ஆக அதிகரித்துள்ளது.

‘கணினி மயப்படுத்தப்பட்டது பதுளை மாவட்ட தரவுகள்’

பதுளை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளின் ஒட்டுமொத்த முழுமையான புள்ளி விபரங்கள் புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் கணனி மயப்படுத்தப்படவுள்ளதாக மாவட்டத்தின் அரசஅதிபர் தமயந்தி பரணகமை தெரிவித்தார்.

இதனடிப்படையில், மாவட்டத்தின் பிரதேச செயலகங்கள் தோறும் இந் நடைமுறை பின்பற்றப்படவுள்ளன. பிரதேசசெயலகப் பிரிவுகளின் மக்கள் தொகை,அவர்கள் ஒவ்வொருவரின் வறுமானம், சொத்து விபரங்கள், தங்கி வாழ்பவர்கள், உழைப்பாளர்கள், மாணவர்கள், க.பொ.த. சாதாரணதரம், உயர்தரம் ,பட்டதாரிகள் ஆகிய விடயங்களின் முழுமையான புள்ளி விபரங்கள், சொந்தவீடு, வாடகைவீடு, உட்கட்டமைப்பு வசதிகள்,பொதுவசதிகள் ஆகியன குறித்தும் விபரங்கள் சேரிக்கப்படும்.

பகுதி கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் மேற்படி புள்ளி விபரங்களைத் திரட்ட ஆரம்பித்துள்ளனர். இத் திட்டத்திற்கமைய, பசறை பிரதேச செயலாளர் அனுராதா நாணயக்கார தற்போதைய நிலையிலேயே மிகவும் துரிதமாக செயற்பாடுகளை ஆரம்பித்து, செயற்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எம். செல்வராஜா, பதுளை

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கூட்டம்

புதிய அரசாங்கம் அமைந்த பின்னர் நுவரெலியா மாவட்டத்தின் முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நுவரெலியா மாவட்ட செயலக கேட்ப்போர்  கூடத்தில் நடைப்பெற்றது.
இதன்போது நுவரெலியா மாவட்டத்தின் கடந்த கால அபிவிருத்திகள் மற்றும் எதிர்காலத்தில் மாநகர சபை, நகர, பிரதேச சபைகள் மற்றும் அரச திணைகளங்களில் செயற்பாடுகள் தொடர்பாகவு விரிவாக கலந்துரையாடபட்டது.
இக்குழுகூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்கமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்,
நுவரெலியா மாவட்டத்தின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தில் போக்குவர்த்து வசதிகள் குறைப்பாடுகள் திகழ்வதாக அதிகாரிகள் முன்வைத்தனர் இதனை கருத்திற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தேசிய கட்டிட ஆராச்சி நிலையத்தின் போக்குவரத்துக்காக வாகன வசதிகளை வழங்குவதாக அமைச்சர் உறுதியளித்தார்.
இதன்போது  தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஹட்டன் நகரத்தின் அபிருவித்தி கழிவகற்றல் மற்றும் வீடமைப்பு, மலையகத்தின்  பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக்குழுகூட்டதில் ஒருங்கிணைப்பு  கூட்டத்தின் தலைலவர் எஸ்.பி திசாநாயக்க மற்றும் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்தும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநகர,நகர, பிரதேச சபைகளின் தலைவர்கள்,அரச திணைகளங்களின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
க.கிசாந்தன்

பதுளை மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு வீடுகள்!

பதுளை மாவட்டத்தில் மண்சரிவுபோன்ற இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டிருக்கும் 250 குடும்பத்தினருக்கும்  வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளைமாவட்ட இணைப்பாளர் சன்ஜீவ சமரக்கோன்,மேற்படித் தகவல்களை வழங்கினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மண்சரிவு மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுதற்காலிகமான கூடாரங்களிலும், உறவினர் வீடுகளிலும் வசித்துவரும் 250 குடும்பங்களுக்கு நிருமாணிக்கப்படும் வீடுகள் கையளிக்கப்படவுள்ளன. இடர் முகாமைத்துவ நிலையம்  இவ் வீடுகளை அமைக்கவுள்ளது.

எம். செல்வராஜா

‘கொரோனா’ தாக்கம் – மேலும் 15 கோடி குழந்தைகள் வறுமையால் பாதிப்பு!

உலகளவில் மேலும் 15 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளிய கொரோனா என்று யுனிசெப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்பும், ‘குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு பிந்தைய குழந்தைகள் நிலை குறித்து 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு நடத்தின.

இதில், கொரோனா தொற்று தொடங்கியது முதல் உலக அளவில் கல்வி, வீடு, ஊட்டச்சத்து, சுகாதாரம் அல்லது தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மேலும் 15 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

இதன் மூலம் மேற்படி வசதிகள் இல்லாமல் வறுமையில் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 120 கோடியாக உயர்ந்திருப்பதாக யுனிசெப் நிறுவனம் கவலை தெரிவித்து உள்ளது. இதில் 45 சதவீத குழந்தைகள் மேற்படி அத்தியாவசிய தேவைகளில் ஒன்றுகூட கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் யுனிசெப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

கொரோனாவும், அது பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கும், கோடிக்கணக்கான குழந்தைகளை வறுமையின் ஆழத்துக்கு கொண்டு சென்றிருப்பதாக யுனிசெப் நிர்வாக இயக்குனர் ஹென்ரியட்டா வருத்தத்துடன் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று உலக கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ள குழந்தைகளை பாதுகாப்போம் தொண்டு நிறுவன தலைமை செயல் அதிகாரி இங்கர் ஆஷிங், கல்வி கிடைக்காததால் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை திருமணம் அதிகரிக்கும் எனவும், இதனால் வறுமை சுழற்சியில் அவர்கள் சிக்கி விடுவார்கள் எனவும் அச்சம் தெரிவித்தார்.

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

பிரதேச செயலகத்தை நோர்வூட்டுக்கு மாற்றுக: பொகவந்தலாவயில் நாளை கை எழுத்து இயக்கம் !

0
நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்து அமைக்கக் கோரும் கை எழுத்து இயக்கம் நாளை (25) பொகவந்தலாவ பகுதியில் இடம்பெறவுள்ளது. மலையக அரசியல் அரங்கம் முன்னெடுக்கும் இந்தத் தொடர் கை எழுத்துக்குத் தமது...

சீரற்ற காலநிலை: நுவரெலியா உட்பட 4 மாவட்டங்களில் 147 குடும்பங்கள் பாதிப்பு!

0
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் நுவரெலியா உட்பட நான்கு மாவட்டங்களில் 147 குடும்பங்களைச் சேர்ந்த 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (24) பகல் வெளியிட்டுள்ள நாளாந்த நிலைவர...

2.5 மில்லியன் டொலர்கள் ஹேக்கர்களுக்கு பூஜை: சஜித் குற்றச்சாட்டு!

0
" நாட்டின் வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் வட்டித் தவணைகளைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு மத்திய வங்கியிடமே முன்னர் காணப்பட்டு வந்தது. பின்னர் மேற்கொண்ட புதிய ஒழுங்குமுறைகள் சட்ட விதிகளுக்கு ஏற்ப பொது கடன்...