Home Blog Page 3855

கிரிக்கெட்டா, நாடா? நாமலிடம் மனோ எழுப்பும் கேள்வி

“நாட்டில் கொரோனா நோயாளரில் பெரும்பாலோர் வெளிநாடு சென்று வந்தோர். இந்நிலையில், இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நமது சுகாதார துறையின் 14 நாள் தனிமைபடுத்தல் பரிந்துரையை ஏற்க மறுக்கிறார்கள். ஆகவே விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச, கிரிகட்டா, கொரோனாவா என தீர்மானிக்க வேண்டும்” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

பதுளையில் பாடசாலைக்குள் 10 அடி நீளமான மலைப்பாம்பு!

பதுளை, லுனுகலை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனதாபுர மகா வித்தியாலயத்திற்குள் நுழைந்த மிகப்பெரிய மலைப்பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாம்பினை வனவிலங்கு திணைக்களத்திடம் ஒப்படைக்க லுனுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பாம்பு 10 அடி நீளமும் 25 கிலோ கிராம் நிறையும் கொண்டிருக்கிறது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதேசத்திலுள்ள நாய்கள், பூனைகள், கோழிகள் உட்பட விலங்குகளை உணவிற்கு எடுத்துவந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

உளுந்து இறக்குமதிமீதான தடை மீள்பரிசீலனை! பிரதமர் அதிரடி உத்தரவு!

உளுந்து இறக்குமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளுக்கு உளுந்து முக்கியத்துவம் பெறுவதனால், உளுந்து மீதான இறக்குமதி தடையை தளர்த்துமாறு யாழ்ப்பாணம் வர்த்தக சங்கம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் எழுத்துமூல கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

இந்த கோரிக்கையை ஆராய்ந்த பிரதமர், ஜனாதிபதி செயலாளருக்கு இன்று காலை இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

உளுந்து இறக்குமதி தடைப்பட்டுள்ளமையினால், தமிழர்களின் பிரதான உணவு வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதை யாழ் வர்த்தக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதையடுத்து, உளுந்து மீதான தடையை மறுபரிசீலனை செய்வதற்கு கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலாளருக்கு பிரதமர் இன்று காலை ஆலோசனை வழங்கியுள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்டமூலம் 22 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பாராளுமன்றம் 22 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது முதலாம் வாசிப்புக்கென நிதி அமைச்சரால் மேற்படி சட்டமூலம் முன்வைக்கப்படும்.

அதன்பின்னர் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்துவதற்கு ஏழு நாட்கள் வழங்கப்படும். ஏதேனும் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவுபெறுவதற்கு மூன்று வாரங்கள் எடுக்கும்.

அதேவேளை, 20 ஆவது திருத்தச்சட்டமூலம் குழுநிலை விவாதத்தின்போதே திருத்தப்படவுள்ளது.

ஐ.நா.வின் போர்க்குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம்!

“இலங்கைப்படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை. போருக்கு பின்னர் நல்லிணக்கம் தொடர்பில் நியமிக்கப்பட்ட அனைத்து குழுக்களின் ஊடாகவும் இது உறுதியானது. எனவே. ஐ.நா. மனித உரிமை பேரவையின் குற்றச்சாட்டையும் அடியோடு நிராகரிக்கின்றோம்.” – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (17) முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்ட சிரேஷ்டஇராணுவ அதிகாரிகளுக்கு அரசாங்கத்தில் உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் விடுக்கப்பட்ட அறிவிப்பு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உரிய பதிலை கூட்டத்தொடரில் வழங்கியுள்ளார். இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும், அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இல்லை, போலியான முறையிலேயே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது உறுதியாகியுள்ளது. அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளே சுமத்தப்பட்டுள்ளன என்பது உறுதியாகியுள்ளது என மிகவும் தெளிவாக அவர் எடுத்துரைத்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடும் அதுவாகவே இருக்கின்றது.

போருக்கு பின்னர் நல்லிணக்கம் தொடர்பில் குழுக்கள் அமைக்கப்பட்டன, இக்குழுக்கள் ஊடாககூட மேற்படி படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. ” – என்றும் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,

” போர் முடிவடைந்ததிலிருந்தே இப்படியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை இதுவாகும்.பின்னணியில் அரசசார்பற்ற அமைப்புகளும் உள்ளன. அவர்கள் எப்படிதான் செயற்பட்டாலும்,எவ்வாறான குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும் அவற்றை ஏற்பதற்கு அரசாங்கம் தயாரில்லை.

ஜெனிவாவில் 30/1 தீர்மானத்துக்கு கடந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. இது தவறான நடவடிக்கையாகும்.மேற்படி தீர்மானத்தை எமது அரசாங்கம் விலக்கிக்கொண்டுள்ளது. ” – என்றார்.

ராதாவின் தலைமையின்கீழ் முன்னணிக்கு வரலாற்று தோல்வி – அனுசா சாடல்

” ஒட்டுமொத்த மலையக மக்களின் உரிமைகளுக்காக போராடிய மலையக மக்கள் முன்னணி, வரலாற்று தோல்வியை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது.” என்று அனுஷா சந்திரசேகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னணியின் தற்போதைய நிலை குறித்து தன்னுடன் கலந்துரையாடி ஆதரவாளர்களிடமே அனுசா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

” 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரான அமரர் சந்திரசேகரனின் காலப்பகுதியில் தனக்கு கிடைத்த ஒரு பாராளுமன்ற ஆசனத்தின் மூலம் இலங்கையின் ஆட்சியையே தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்தார். பிரதி அமைச்சு பதவியையும் பெற்று அதன்மூலம் எம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக தன்னாலான அனைத்து வழிகளிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.

அன்றைய காலகட்டத்தில் அமரர் சந்திரசேகரனது மக்கள் மீதான அதீத பற்றும், எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்வதற்கான தூர நோக்குடைய சிந்தனைகளும், கற்றறிந்தவர்கள் புத்திஜீவிகள் என அனைவரது கருத்துகளை செவிமடுத்து உள்வாங்கும் திறனும் இருந்ததாலேயே பிற்காலத்தில் அவரால் ஒரு கெபினட் அமைச்சராகி இறக்கும் வரையிலும் தன்னாலான அனைத்து வழிகளிலும் மக்களுக்கு சேவை செய்ய முடிந்தது. குறுகிய ஆயுள் கொண்டிருந்தாலும் அவரால் மிக நீண்டதொரு அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடிந்தது. இன்றும் அவரை போற்றும் மக்களே அவரது சேவைகளுக்கான சாட்சி.

ஆனால் இன்றைய மலையக மக்கள் முன்னணியின் நிலை என்ன! அதன் போக்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பார்ப்பவர்களுக்கு பார்த்த மாத்திரத்தில் புரிந்துவிடும்!

மலையக மக்கள் முன்னணியின் இப்போதிருக்கும் தலைமைக்கு மக்களை பற்றிய சிந்தனை துளியும் இல்லை, தேசிய அரசியல் நீரோட்டம் எவ்வாறு அமைந்திருக்கிறது எனதை புரிந்துகொள்ளும் அரசியல் ஞானமும் இல்லை, அருகில் புத்திஜீவிகளும் இல்லை(வைத்துக்கொள்வதுமில்லை), தப்பித்தவறி ஒன்று இரண்டு பேர் மக்கள் சம்பந்தமாக ஏதாவது கருத்துக்களை முன்வைத்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்வதாய் இல்லை!

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது என்று எம் முன்னோர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள்! அது மலையக மக்கள் முன்னணியின் தற்போதைய தலைமைக்கு அச்சொட்டாய் பொறுந்தியிருக்கிறது போலும், ஏனெனில் இராஜாங்க அமைச்சிலிருந்து அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகி இன்று வெறும் பாராளுமன்ற உறுப்பினர் அளவுக்கு வந்து நிற்பதை பார்க்கும்போது இவர்கள் எந்தளவுக்கு அரசியல் வரட்சி நிலையில் இருக்கிறார்கள் என்பது தெட்டத்தெளிவாக புரிகிறது!

வெறுமனே கூட்டணி என்ற மாயவலைக்குள் சிக்கி தனது தனித்துவத்தையும் இழந்து பதவியையும் இழந்த அவமானப்பட்டு நிற்கும் இந்த நிலையில் இவர்கள் இனியும் எவ்வாறு மக்களுக்கு சேவை செய்ய போகிறார்கள்?

மாதாமாதம் தொழிலாளர்களிடமிருந்து சந்தாவை வாங்கிக்கொள்கிறார்கள்! ஆனால் அவர்களது தொழில் பிரச்சினைகளை பார்ப்பதில்லை! தொழிற்சங்க காரியாலயங்கள் என சிலதை பெயருக்கு வைத்திருக்கிறார்கள், ஆனால் அவற்றை திறப்பதுமில்லை!

கடந்த தேர்தலின் போது த்ற்போதைய அரசாங்கத்தை எவ்வாறெல்லாம் விமர்சிக்க முடியுமோ அந்தளவுக்கு விமர்சித்தார்கள்! அரசாங்கத்துக்கு எதிராக தான் வாக்குகளை சேகரித்தார்கள், மக்களும் வாக்களித்தார்கள், ஆக இவர்கள் தன்மானமுள்ளவர்கள், உண்மையான கொள்கைவாதிகள் என்றால் வாக்களித்த மக்களை ஏமாற்றாமல், இவர்கள் பதவிக்காகவும் பணத்திற்காகவும் இப்போதைய அரசாங்கத்திடம் மண்டியிட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்!

இவர்கள் வேண்டாம், தனித்துவமிழந்த இவர்களுடன் இனியும் பயணிக்க முடியாது என்பதைதான் கடந்த தேர்தலில் எந்தவொரு தேசிய கட்சியையோ, தொழிற்சங்க பலமுமோ இன்றி எம்முடன் இணைந்த 17107 பேர் வலியுறுத்தியிருக்கிறார்கள். கடந்த அரசாங்கமாக இருந்த ஐக்கிய தேசியக்கட்சியையும் பின் தள்ளி மலையகத்தில் மூன்றாம் சக்தியாக நாம் உருவெடுக்க ஆதரவளித்திருக்கிறார்கள்.

எம் மக்கள் எதிர்ப்பார்த்த மாற்றம், இவர்களது அரசியல் தாகம் என்பதை நாம் புரிந்து எம் மக்களின் எதிர்காலத்தையும் நலனையும் கருத்திற்கொண்டு சேவையாற்ற வேண்டும். அதற்காக நாம் நீண்டகால திட்டங்களை வகுத்து அர்ப்பணிப்புடன் பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது என தெரிவித்தார்.

நீலமேகம் பிரசாந்த்

திகா அணி ’20’ இற்கு ஆதரவு! அரசுடனும் இரகசிய பேச்சு!!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோரின் கட்சிகள் ஆதரவளிக்கவுள்ளன என்று சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியிலுள்ள ஏதேனும்மொரு தரப்பு 20 இற்கு ஆதரவு வழங்க மறுக்கும்பட்சத்தில் மேற்படி தரப்புகளின் ஒத்துழைப்பை பெறும் நோக்கிலேயே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின்கீழ் போட்டியிட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 46  ஆயிரத்தை லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 46 ஆயிரத்து 300 ஐ கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே ஒரு லட்சத்து 180 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 72 லட்சத்து 41 ஆயிரத்து 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 210  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 2 கோடியே 18  லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

’13’ ஐ மீளாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை மீளாய்வுக்குட்படுத்தி தீர்மானமொன்றை எடுப்பதற்கு அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (17) முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமை நீக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்ட கருத்து தொடர்பிலும், அதற்கு அரசாங்கத்துக்குள்ளேயே எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்தும் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் கெஹலிய மேற்கண்டவாறு கூறினார்.

” ஓர் விடயம் தொடர்பில் பலகோணங்களில் கருத்தாடல் இடம்பெறுவதுதான் ஜனநாயக அம்சமாகும். ஆளுங்கட்சி உறுப்பினர்களாகிய நாம் குழுக்கூட்டங்களின்போது விவாதிப்போம், காரசாரமான முறையில் கருத்துகளை முன்வைப்போம். இது ஜனநாயகத்தின் சிறப்பம்சமாகும்.

அரசியலமைப்பின் ’13’ ஆவது திருத்தச்சட்டத்தின் முக்கியத்துவம், அதனை எதிர்காலத்தில் எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். அதேவேளை குறித்த சட்டத்தை நீக்குவதாக இருந்தால் அது பற்றியும் ஆழமாக ஆராயவேண்டும்.

13ஆவது திருத்தச்சட்டம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை சம்பந்தமாகவும் ஆராய்ந்தே தீர்மானத்துக்கு வரக்கூடியதாக இருக்கும்.” – என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார்.

இ.தொ.கா. கள்ள மௌனமா? மனோவின் வினாவுக்கு செந்தில் பதிலடி!

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் மலையக மக்களின் பிரதிநிதி ஒருவரை உள்வாங்குவதற்கான சிபாரிசுகளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது. சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளதுடன், விரைவில் இதற்குச் சாதகமான பதிலொன்றை அரசாங்கம் வழங்குமொன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன், புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு விவகாரத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கள்ள மௌனம் காப்பதாக கூறியுள்ளமை தொடர்பில் விளக்கமளித்து செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,

இ.தொ.கா. கள்ள மௌனம் காப்பதாக மனேகணேசன் கூறியுள்ள கருத்தானது தவறான புரிதலாகும். இ.தொ.காவின் உபத் தலைர் என்ற அடிப்படையில் அவருக்கும் அந்த செய்தியை வாசித்த மக்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இ.தொ.கா. இரண்டு எம்.பிகளை கொண்டுள்ளதுடன், மலையக மக்களின் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தி வருகிறது.

இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் ஆகியோர் பாராளுமன்றம் மற்றும் அரசாங்கத்தின் ஊடாக மலையக மக்களுக்குத் தேவையான அனைத்து பணிகள் குறித்தும் கவனம் செலுத்துவது மட்டுன்றி மலையக மக்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும் அவதானமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மறைவின் பின்னரும் இ.தொ.கா. கருத்து வேறுபாடுகளின்றி பிளவின்றி செயல்பட்டு வருகிறது. ஒரு தலைவர் இறந்த பின்னர் கட்சிகள் பிளவுபடுவதுதான் வழமையாகும். தலைவர் மறைந்த பின்னரும் இ.தொ.கா சக்திவாய்ந்த அமைப்பாக பிளவுபடாது உள்ளதுடன் கட்சியில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றோம்.

அரசியல் ரீதியாக சில முடிவுகள் வெளிப்படையான எடுக்கும் சூழ்நிலை அமையும் என்பதுடன் சில முடிவுகளை காலம் சென்றே அமுல்படுத்த முடியும். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை அனைத்து சந்தர்ப்பங்களிலும் காப்பாற்றிய பலமான அமையாக இருந்தது. இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரையும் வைத்திருந்தது. அரசாங்கத்தை காப்பாற்றிய அமைப்பாக இருந்தாலும் பல விடயங்களில் மலையக மக்களுக்குத் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் நிலைமைகள் இருந்ததை அவர்களும் அறிவர். நாமும் அறிவோம். அப்படியான சூழலில் இன்று மலையக மக்களின் ஆதரவின்றி தனி பெரும்பான்மையை பெற்றிருக்கும் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன், அவதானமாகவும் மலையக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய செயற்படும் ஓர் அமைப்பாகவும் இ.தொ.கா. பணியாற்றி வருகிறது.

ஐ.தே.க. அரசாங்கத்தால் 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பில் மலையக மக்களின் பிரதிநிதிகள் எவரும் இருக்கவில்லை. அதேபோன்று 1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டிருந்த அரசியமைப்பிலும் மலையக பிரதிநிதிகள் எவரும் இருக்கவில்லை என்பதை நினைவுப்படுத்த விருப்புகிறேன். மலையக பிரதிநிதி ஒருவரை சேர்க்கக் கூடாதென எவரும் கூறவில்லை. சேர்ப்பதற்கான முயற்சிகளையே எடுத்து வருகின்றோம். மலையக பிரதிநிதி ஒருவர் புதிய அரசியமைப்புக்கான நிபுணர் குழுவின் உள்ளே இருக்க வேண்டுமென ஏற்கனவே அரசாங்கத்திற்கு இ.தொ.கா. பரிந்துரைத்துள்ளது. அதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளமையின் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் விரைவில் அது கைகூடும் என நாம் நம்புகிறோம்.

அதுமாத்திரமின்றி இ.தொ.கா. ஒவ்வொரு முடிவுகளையும் எடுக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலையக மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்காது செயற்படும். அதில் அனைவரும் உறுதியாக உள்ளனர். இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒருமாதம்தான் ஆகியுள்ளது. எமக்கு கால அவகாசம் வேண்டும். புதிய அரசாங்கத்தின் புதிய செயல்திட்டங்களை ஆராய்ந்து அரசியல் ரீதியாகவும் தொழிற்சங்க ரீதியாகவும் ஒன்றிணைந்து செல்பட்டு கொண்டிருக்கும் போது மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியான இ.தொ.கா. அந்த மக்களின் பாதுகாப்புக்கும் உரிமைகளுக்கும் என்றும் முன்னுரிமை வழங்கி செயல்படும்.

அதனால் மகோகணேசன் இ.தொ.கா மீதான தமது தவறான புரிதலை மாற்றிக்கொள்ள வேண்டும். மலையக மக்களின் பிரதிநிதிகளாகவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்றும் செயற்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

2.5 மில்லியன் டொலர்கள் ஹேக்கர்களுக்கு பூஜை: சஜித் குற்றச்சாட்டு!

0
" நாட்டின் வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் வட்டித் தவணைகளைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு மத்திய வங்கியிடமே முன்னர் காணப்பட்டு வந்தது. பின்னர் மேற்கொண்ட புதிய ஒழுங்குமுறைகள் சட்ட விதிகளுக்கு ஏற்ப பொது கடன்...

காசாவில் 72 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி!

0
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 72,562 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 172,320 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஒக்டோர் 7 ஆம் திகதி...