Home Blog Page 3856

’16 வயதுவரை ஊழியரை சேவையில் ஈடுபடுத்த முடியாது’ – அமைச்சரவை அனுமதி

ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தக்கூடிய வயதை 16 ஆக அதிகரிப்பதற்காக தொழில் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் வருமாறு,

” 16 வயது வரையில் கட்டாய பாடசாலை கல்வி என்ற ரீதியிலான சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைவான வகையில் தொழில் கட்டளைச் சட்டத்தில் ஊழியர்களை தொழிலில் ஈடுபடுத்தும் ஆக குறைந்த வயது 16 ஆக அதிகரிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தொழில் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக 2020 ஜுன் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக கீழ் கண்ட சட்டங்கள் மற்றும் கட்டளைகளில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக திருத்த சட்ட மூலம் திருத்த சட்ட வரைபு பிரிவினால் வகுக்கப்பட்டுள்ளது.

• 1954 ஆம் ஆண்டு இலக்கம் 19 இன் கீழான (129 ஆவது அதிகாரம்) வர்த்தக நிலையங்கள்(சாப்பு) மற்றும் பணியக ஊழியர்கள் தொடர்பான தொழில் மற்றும் வேதனத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டம்.

• 1956 ஆம் ஆண்டு இலக்கம் 47 இன் கீழான பெண்கள் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தும் சட்டம்

• (135 அதிகாரம்) ஆக குறைந்த வேதனம் (இந்திய தொழிலாளர்கள்) கட்டளை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டம்

• 1942 ஆம் ஆண்டு இலக்கம் 45 இன் கீழான தொழிற்சாலை கட்டளைச் சட்டம்

• 1958 இம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான ஊழியர் சேமலாப நிதி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய 1958.10.31 ஆம் திகதி அன்று இலக்கம் 11573 என்ற அரச அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உத்தரவு

இதற்கு இமைவாக இதன் திருத்த சட்ட மூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டு அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும், 1958 ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான ஊழியர் சேமலாப நிதி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய வெளியிடப்பட்ட உத்தரவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக தொழில் அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்ககப்பட்டுள்ளது.

தமிழ்க்கட்சிகளுக்கு விக்கிரபாகு விடுத்துள்ள அவசர அழைப்பு

” தமிழர்களுக்கு அதிகாரங்களைப்பகிரக்கூடாது என்ற நயவஞ்சக நோக்கிலேயே மாகாணசபைமுறைமையை ஒழிக்கும் முயற்சியில் இனவாதிகள் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளனர். இதன் பின்னணியில் ராஜபக்ச அரசாங்கமே இருக்கின்றது.” – என்று நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன   தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திஉள்ளாட்சிசபையொன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அதிகாரப்பகிர்வுக்கான ஓர் தளமாக மாகாணசபைகளே இருக்கின்றன. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரங்கள் பகிரப்படாதபோதிலும் மாகாணசபைகளுக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழர் பிரச்சினைக்காகவே மாகாணசபை முறைமைக்கூட உருவாக்கப்பட்டது.

தற்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பறிப்பதற்கு இனவாதிகள் களமிறங்கியுள்ளனர். இதன்பின்னணியில் அரசாங்கமே செயற்படுகின்றது.
தமிழ், முஸ்லிம் மக்கள் அடிமைகளாக வாழவேண்டும் என்பதே பேரினவாதிகளின் சிந்தனையாக இருக்கின்றது, இதற்கு இடமளிக்ககூடாது,

மாகாணசபை முறைமையை பாதுகாப்பதற்கு தமிழ் , முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒன்றுபடவேண்டும். தெற்கிலுள்ள முற்போக்கு சக்திகளை நாம் ஒன்றுதிரட்டுவோம். ஜனநாயக விரோத பாதையில் பயணிக்க எத்தனிக்கும் இந்த அரசாங்கத்துக்கு கடிவாளம் போடவேண்டும். ” – என்றார்.

குன்றும் குழியுமாக வீதி! மக்கள் அசௌகரியம்!!

பசறையிலிருந்து மடூல்சீமை வழியாக பிட்டமாருவை கிராமத்தை நோக்கி செல்லும் பாதை பல வருடங்களாக செப்பனிடப்படாத காரணத்தால் சேதமடைந்து குன்றும் குழியுமாக காணப்படுவதால் இப்பாதையுடான பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக இப்பகுதியில் வாழும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மடூல்சீமையில் இருந்து பிட்டமாருவை செல்லும் வழியில் டூமோ, ஊவாக்கலை, கல்லுல்லை, கொக்காக்கலை, ராகலை, எலமான் மற்றும் ரோபேரி போன்ற பெருந்தோட்டங்களும் காணப்படுகின்றன.

கொக்காக்கலைக்கும் பிட்டமாருவைக்கும் இடையே சுமார் 10கிலோமீற்றர் வரையான பகுதி பல வருடங்களாக செப்பனிடப்படாமல் உள்ளது. இப்பாதையினூடாக பதுளை டிப்போவிற்கு சொந்தமான இ.போ.சபை பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் சேவையில் ஈடுபடுகின்றன.

பாதை சேதமடைந்துள்ளதால் பஸ் வண்டியின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகள் ஒன்றிணைந்து தினமும் செப்பனிட்டு பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாதை சீர்கேடு காரணமாக அடிக்கடி பஸ் வண்டிகள் பழுதடைந்து சேவையை நிறுத்தி கொள்கின்றன.

மட்டுப்படுத்தப்பட்ட பஸ் சேவையே இடம் பெறுவதால் இப்பகுதியில் இருந்து பட்டாவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு செல்லும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். கால்நடையாகவும் மாணவர்கள் நீண்ட தூரத்தில் இருந்து பாடசாலைக்கு வருகின்றனர்.

ராகலை பகுதியில் இருந்து எலமான், ரோபேரி பாடசாலைகளுக்கு செல்லும் ஆரம்ப பிரிவு மாணவர்களும் கால்நடையாகவே செல்கின்றனர். இப்பகுதியில் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் காணப்படும் சிறிய உலக முடிவை (Mini Worlds end) காண வரும் சுற்றுலா பயணிகளும் கொக்காக்கலை பகுதிக்கு பிறகு பாதை சேதமடைந்துள்ளதால் கால்நடையாக சிரமத்துடன் உலக முடிவை பார்வையிட்டு செல்கின்றனர். குறித்த சேதமடைந்த பாதை காணப்படும் பகுதியில் சுமார் 750 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களின் கல்வி ,  சுகாதார மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சேமடைந்துள்ள பாதையை உடன் செப்பனிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தேங்காய் விலை உச்சம் – நிர்ணய விலை விதிப்பு!

நாட்டில் தேங்காயின் விலை அதிகரித்துச் செல்லும் நிலையில் தேங்காய் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சில தினங்களில் தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என நேற்று முன்தினம் தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. அது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்துள்ளன. இந்த நிலையைக் கருத்திற் கொண்டே தேங்காய்க்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு தீர்மானித்ததாக அவர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் தேங்காயின் விலை 75 முதல் 80 ரூபாய் வரை காணப்படுகின்றது அந்த விலை மேலும் உயரலாம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக டெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் அரசாங்கம் தமது கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் அந்த சங்கம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘விஜய்யின் வேட்டைக்காரன் படத்தை இயக்கிய பாபு சிவன் காலமானார்’

விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தை இயக்கிய இயக்குனர் பாபு சிவன் (வயது – 54) காலமானார்.

விஜய் நடிப்பில் வெளியான படம் வேட்டைக்காரன். இப்படத்தை பாபு சிவன் இயக்கி இருந்தார். மேலும் விஜய் நடித்த குருவி திரைப்படத்திற்கும் பாபு சிவன் வசனம் எழுதி இருந்தார்.

திடீர் உடல் நலக்குறைவால் பாதிப்புக்குள்ளான பாபு சிவன், சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக, அவர் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. அவரது மரணம் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திரை உலகை சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

‘இங்கிலாந்தின் வெற்றியைப்பறிந்த ஆஸி.அணியின் இரண்டு சதங்கள்’

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 3 விக்கட்டுக்களால் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.

மென்செஸ்டரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 302 ஓட்டங்களைக் குவித்தது.

ஜோனி பேர்ஸ்டோ சதமடித்து இங்கிலாந்து ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க வைத்தார். பில்லிங், ஹோக்ஸ் ஆகியோர் அரைத்தசமடித்தனர்.

பின்னர் 303 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய ஆஸ்திரேலிய அணி, 73 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து திண்டாடியது.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த அலக்ஸ் கிரே மற்றும், கிளேன் மெக்ஸ்வெல் ஆகியோர் சதங்களை விளாசி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர்.

49.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து ஆஸி.அணி வெற்றியிலக்கை கடந்தது.

ஆட்ட மற்றும் தொடர் ஆட்டநாயகனாக கிளேன் மெக்ஸ்வெல் தெரிவானார்.

‘மலையக தமிழர்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை வழங்கிய மோடியின் பிறந்தநாள் இன்று’

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது 70ஆவது பிறந்த நாளை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடிவருகின்றார்.

இந்நிலையில் அவருக்கு இலங்கை ஜனாதிபதி, பிரதமர் உட்பட உலக நாட்டு தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துகூறி வருகின்றனர்.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின்கீழ் இலங்கையில்வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு மேலதிகமாக 10 ஆயிரம் வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன் பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவிகள் வழங்கப்பட்டன.

அதேபோல் மலையகத்துக்கு பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு பிரதமர்களில் மோடி முதன்மையானர்.

கிளங்கன் வைத்தியசாலை திறப்பு விழாவுக்கு வருகைதந்தபோது நோர்வூட் மைதானத்தில் மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். இதன்போதே 10 ஆயிரம் வீடுகள் குறித்த அறிவிப்பை விடுத்தார்.

‘தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு’

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 3 இல் இருந்து ஐந்தாக அதிகரிக்குமாறு, ’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை முன்வைத்துள்ளது.

’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளையும், அவதானிப்புகளையும் முன்வைப்பதற்காக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் ஆளுங்கட்சி எம்.பிக்கள் குழுவை பிரதமர் நியமித்திருந்தார்.

அக்குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் (15) பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இவ்வறிக்கையிலேயே மேற்படி பரிந்துரை இடம்பெற்றுள்ளது.

அத்துடன், தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும், அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை 19 இன் பிரகாரம் தக்கவைத்துக்கொள்ளுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒருவர் இரட்டை குடியுரிமை கொண்டிருக்ககூடாது எனவும், நாடாளுமன்றத் தெர்தலில் போட்டியிடுபவருக்கு அது பொருந்தக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

அவசர சட்டமூலம் முன்வைப்பதற்கான வாய்ப்பை நீக்குமாறும், சட்டமூலமொன்றை முன்வைத்தால் அதனை சவாலுக்குட்படுத்துவதற்கு மக்களுக்கு 14 நாட்கள் அவகாசம்வழங்கப்படவேண்டும் என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

’20’ சர்வாதிகாரத்துக்கு வழிகோலாது!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலமானது சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலாது – என்று இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின்போது 20 இல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் எதிரணி உறுப்பினர்கள் தவறான கண்ணோட்டத்துடன் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றனர். மேற்படி சட்டமூலத்தின் ஊடாக தனிநபர் ஒருவரிடம் அதிகாரங்கள் குவிக்கப்படவில்லை, மாறாக நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்வதற்காக நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்துவதற்கான அதிகாரங்களே வழங்கப்பட்டுள்ளன. இது ஏதேச்சாதிகாரத்துக்கு வழிகோலாது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் 30 அமைச்சர்களை நியமிக்கலாம் என்றபோதிலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் 16 பேரே நியமிக்கப்பட்டனர், தற்போதும் 25 பேர்தான் உள்ளனர். கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது, போதைப்பொருள் ஒழிக்கப்பட்டுவருகின்றது. எனவே, ஒழுக்கவிழுமியங்களுடன் செயற்படும் ஜனாதிபதி ஏசேச்சாதிகாரத்தை விரும்பமாட்டார்.

புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.அதற்கான பணி ஆரம்பமாகியுள்ளது. நிபுணர்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ” – என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

’20’ இற்கான முழு பொறுப்பையும் ஏற்றார் ஜனாதிபதி கோட்டா!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கான முழு பொறுப்பையும் தான் ஏற்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் அமைச்சரவைக்கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தை உருவாக்கியது யார், அதற்கான பொறுப்பை யார் ஏற்பது என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிவந்மை குறிப்பிடத்தக்கது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

தோல்வியில் இருந்து மீளுமா குஜராத் அணி?

0
ஐபிஎல் தொடரில் இன்று நடை​பெறும் ஆட்​டத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்சிபி) - குஜராத் டைட்டன்ஸ் அணி​கள் மோதுகின்​றன. இரவு 7.30 மணிக்கு பெங்​களூரு​வில் உள்ள எம்​சின்​ன​சாமி மைதானத்​தில் போட்டி ஆரம்பமாகும். நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி...

“உலக அமைதிக்கான நடை பயணம்” 3 ஆம் நாள் நிகழ்வு இன்று

0
உலக அமைதியை வலியுறுத்தி "அமைதிக்கான நடைபயணம்" எனும் மகுடத்தின் கீழ் அமெரிக்காவில் 110 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்ட வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், தற்போது இலங்கையில் தமது பயணத்தைத் தொடர்ந்து...

“ஐ.நா. அமைதி படை” – பாதுகாப்பு செயலர், ஐ.நா. உதவி செயலருடன் சந்திப்பு!

0
நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்திற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தைத் தொடர்ந்து, இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா...