Home Blog Page 3857

நோயாளர்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக JCI தரப்படுத்தலைப் பெறுகிறது நவலோக்க மருத்துவமனை

நவலோக்க மருத்துவமனையினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச தரத்திற்கு மீண்டும் பெருமை சேர்க்கும் வகையில் சர்வதேச JCI (HOSPITAL ACCREDITATION FROM JOINT COMMISSION INTERNATIONAL) தரப்படுத்தலைப் பெற்றுக் கொள்வதற்கு நவலோக்க மருத்துவனைக்கு முடிந்துள்ளது. தங்க முத்திரையினால் உறுதிப்படுத்தப்படும் இந்த தரப்படுத்தலின் ஊடாக சர்வதேச தரத்தில் ஆரோக்கிய சேவையை பெற்றுக் கொடுக்கும் வகையில் நவலோக்க மருத்துவனை காட்டும் அர்ப்பணிப்பு இதன் மூலம் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தரப்படுத்தலைப் பெற்றுக் கொள்ளும் செயல்முறையானது பாரிய ஆய்வுகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டதுடன் மருத்துவனையின் அன்றாட நடவடிக்கைகள் இடம்பெறும் விதங்களை ஆராயும் நடவடிக்கைகள் பல மாதங்களாக அவதானிக்கப்பட்டன. இதற்காக நிறுவனத்தின் நிபுணத்துவம் கொண்ட ஆய்வாளர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவித அளவுகோள்களின் அடிப்படையில் வைத்தியசாலையில் ஆய்வுகளை மேற்கொண்டதுடன் நோயாளர்களின் பாதுகாப்பு குறித்த சர்வதேச இலக்கு, நோயாளி மதிப்பீடு மற்றும் கவனிப்பு, உணர்வின்மை மற்றும் அறுவை சிகிச்சை, சிகிச்சை நிர்வகிப்பு, நோயாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தெளிவுபடுத்துதல், தரத்தை மேம்படுத்துதல், தொற்றுநோயிலிருந்து விலகியிருத்தல் மற்றும் கட்டுப்படுத்தல், சிறந்த தரம் மற்றும் தலைமைத்துவம், வசதி நிர்வகிப்பு, ஊழியர்களின் கல்வி நிலை மற்றும் ஏனைய தகைமைகள் மற்றும் தகவல் நிர்வகிப்பு ஆகியவற்றைக் கருத்திற் கொள்ள சில அளவுகோள்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நவலோக்க மருத்துவனை பெற்றுக் கொண்ட JCI சர்வதேச தரப்படுத்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த நவலோக்க மருத்துவமனைக் குழுமத்தின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாச, “நவலோக்க மருத்துவமனையினால் பெற்றுக் கொள்ளப்பட்ட இந்த விசேடமான சிறந்த ஆரோக்கிய சேவைகள் குறித்து நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகின்றோம். இந்த தரப்படுத்தலின் ஊடாக எம்மால் தொடர்ச்சியாக வழங்கப்படும் சர்வதேச மட்டத்திலான ஆரோக்கிய சேவைக்கு மேலும் வலுசேர்த்துள்ளதை மேம்படுத்திக் காட்டியுள்ளதாக நாம் நம்புகின்றோம்.” அத்துடன் மருத்துவமனையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட அனைத்து பிரிவுகளும் மிகவும் கவனமாக இதன்போது மதிப்பீடு செய்யப்படுவதனால் இந்த தரப்படுத்தலை பெற்றுக் கொள்வதன் மூலம் நோயாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களைப் பராமரித்தல் தொடர்பாக மருத்துவமனையின் அர்ப்பணிப்பு தொடர்ந்து உறுதிசெய்யப்படுகின்றது.” என அவர் தெரிவித்தார்.

நவலோக்க மருத்துவமனை இலங்கையிலுள்ள தனியார் பிரிவிலுள்ள முன்னணி சுகாதார சேவையை வழங்குவதுடன் பிரதானமாக நிபுணத்துவம் கொண்ட மருத்வமனை என்பதுடன் அதிக எண்ணிக்கையில் தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய இந்த நாட்டிலுள்ள ஒரேயொரு வைத்தியசாலை இதுவாகும். இங்கு பொதுவான மற்றும் சொகுசு அறைகள் என்ற வகையில் நோயாளர்களின் தெரிவுக்கு ஏற்ப தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளும் காணப்படுகின்றன. மேலும் 24 மணித்தியாலமும் மருந்தகம், இரசாயன கூடம், கதிரியக்கவியல் தொடர்பான சேவைகள், விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ள உடற்தகுதி மத்திய நிலையம், நீரிழிவு மற்றும் சிறுநீரக நோயாளர்களின் நன்மை கருதி ஒதுக்கப்பட்டுள்ள விசேட கவனிப்பு சேவைகள் மற்றும் சர்வதேச மட்டத்திலான சுகாதார சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் நவலோக்க மருத்துவனை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நவலோக்க மருத்துவனையின் ஆய்வுக்கூட வலைப்பின்னல் வேகமாக அதிகரித்துவரும் சுகாதார சேவைத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் சர்வதேச தரத்திலான மருத்துவமனையாக இருப்பதுடன் மிகவும் நவீன வைத்திய விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் உயர்ந்த மட்டத்திலான சிகிச்சையளிப்பு வசதிகளுடன் கூடிய சர்வதேச தரத்திலான சுகாதார சேவைகளை மேற்கொண்டு வரும் நவீன மருத்துவமனையாகும். கொழும்பு 7இல் அமைந்துள்ள நவலோக்க பிரதான மத்திய நிலையம் உட்பட மருத்வமனைக்கு 3க்கும் அதிகமான கிளைகள் உள்ளன.

நவலோக்க ஆய்வுக் கூட வலைப்பின்னல் தேசிய ரீதியில் 3000க்கும் அதிகமான வைத்தியர்களைக் கொண்ட தமது சேவைகளை வழங்கப்படுகின்றது. அத்துடன் நவலோக்க ஆய்வுக்கூட சேவையான வாரத்தில் 07 நாட்களும் 24 மணிநேரமும் உலகில் சிறந்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சர்வதேச தரத்திற்கு ஏற்ப குறைந்த விலையில் வாரத்திற்கு 1000ற்கும் அதிகமான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.

JCI தரப்படுத்தல் என வரையறுக்கப்படுவது JCIஇனால் உத்தரவாதமளிக்கப்பட்ட மருத்துவனை தொடர்பில் இருக்க வேண்டிய செயல்திறன் எதிர்பார்ப்புகள், கட்டமைப்புகள் மற்றும் நடவடிக்கைகள் போன்ற பிரிவுகளினால் உள்ளடக்கப்படுகின்றன. இந்த தரப்படுத்தலானது பிரதான இரு அங்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் அது நோயாளியை அடிப்படையாகக் கொண்ட உப சரிப்பு மற்றும் சுகாதார சேவை நிறுவனத்தின் நிர்வகிப்பாகும். உலகம் முழுவதிலுமுள்ள சுகாதார சேவை நிபுணர்கள் மற்றும் வழங்குனர் தரப்படுத்தல் தொடர்பில் நிபுணர்கள் மற்றும் நோயாளர்களுடன் பேச்சுக்களை நடத்தி இந்த தரப்படுத்தல் தயாரிக்கப்பட்டுள்ளது.

நவலோக்க வைத்தியசாலை தொடர்பாக 1985ஆம் ஆண்டு சுகாதாரத் துறைக்கு காலடிவைத்த நவலோக்க மருத்துவமனையானது செயற்கை சிகிச்சை முறை சேவைகளை வழங்குவதற்காக இலங்கையில் நிறுவிய முதலாவது தனியார் மருத்துவமனையாகும். தற்போது நவலோக்க குழுவின் தலைவராக கலாநிதி ஜயந்த தர்மதாஸவின் தூரநோக்கு தலைமைத்துவ வழிநடத்தலின் கீழ் செயற்படும் நவலோக்க மருத்துவமனை ஆசியாவில் வெற்றியடைந்த சிறந்த மருத்துவமனை என்பதுடன் அங்கு பயன்படுத்தப்படும் தரமான தொழில்நுட்பம் கொண்ட வைத்திய உபகரணங்களை அமைப்பதுடன், நிபுணத்துவமுடைய வைத்திய சேவைகளை வழங்குவதிலும் இலங்கையில் மட்டுமன்றி தெற்காசிய வலையத்தில் சுகாதார சேவைகளை வழங்குவதிலும் விசேடத்துவத்தைக் கொண்ட அடையாளத்தைப் பெற்றுள்ளது.

இலங்கையில் முதன் முறையாக அறிமுகப்படுத்திய நவீன CT, MRI ஸ்கேனர், மெமோகிரஃபி கட்டமைப்பு, இருதய கெத்தீடரி பகுப்பாய்வு நிலையம் போன்ற வசதிகளைக் கொண்டு நவலோக்க மருத்துவமனை காணப்படுகின்றது. அத்துடன் தனியார் மருத்துவமனையொன்றில் முதலாவதாக நிறுவப்பட்ட ரத்தக்குழாய் பைபாஸ் பிரிவு, கல்லீரல் பரிசோதனை தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதிநவீன ஃபய்புரோஸ்கேன் செயற்பாடுகள் தெற்காசியாவிலேயே முதலாவது 640 Slice CT ஸ்கேனர் போன்ற அனைத்து தரமான தொழில்நுட்ப வைத்திய உபகரணங்களையும் மிகவும் துல்லியமாக மற்றும் சிறந்த விதத்தில் நோயை அடையாளம் காண வழியமைத்துள்ளது.

நவலோக்க இதய மத்திய நிலையம் இலங்கையின் முதலாவது விசேடமான இதய நோய் பிரிவு என்பதோடு அதனை அமைத்த தினத்திலிருந்து தற்போது வரை 13500 இதய சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக செரிமான சுகாதாரம், மார்பு தொடர்பான கிளினிக், தூக்கம் தொடர்பான சிக்கள்களுக்கு ஆலோசனன, ருமொட்டோலொஜி, வலி தொடர்பான தீர்வுகள், கதிர்வீச்சு சிகிச்சைகள், கண் வைத்தியம், பிசியோதெரபி சிகிச்சை முறை மட்டுமன்றி தோல் மற்றும் அழகுக் கலை பிரச்சினைகள் தொடர்பாக விசேட பிரிவுகளும் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் 24 மணிநேரமும் இயக்கும் வெளிநோயாளர் பிரிவு, நவீன ETU வசதிகள், நடமாடும் ICU உள்ளிட்ட விமான மற்றும் நிலத்தில் வைத்திய சேவைகளை வழங்குவது மட்டுமன்றி தொழில்முறை வீட்டு பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்காக வீட்டு தாதி பிரிவொன்றும் மருத்துவமனையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சில சேவைகளாகும். இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக மருத்துவமனைக்குள் 12 சிகிச்சை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

கிரிஸ்புரோ விதை நெல் உற்பத்திக்கு ஒத்துழைப்பு வழங்கி உள்நாட்டு அரிசி உற்பத்தியை பலப்படுத்துகிறது

இலங்கையின் உணவு பாதுகாப்பு தொடர்பாக மிகவும் கவனம் செலுத்தும் இந்த நாட்டின் பிரபலமான கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ விதை நெல் செய்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் உள்நாட்டு அரிசி உற்பத்தி அலகை மேம்படுத்துவதற்காக தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. சுமார் 1000 ஏக்கர் பரப்பளவுள்ள கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் நடத்திச் செல்லும் கிரிஸ்புரோ விதை நெல் உற்பத்தி பண்ணை மூலம் இந்த தேசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக தற்போது நவீன ஆய்வுக் கூடங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை கிரிஸ்புரோ கந்தளாய் சூரியபுர பண்ணையில் அமைத்துள்ளது.

தற்போது இந்த பண்ணையில் BG352, BG358, BG366, BW367, BG300 ஆகிய நெல் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முழுமையான சுற்றாடலுக்கு ஏற்ற மாதிரிகளுக்கு அமைய செயற்படும் கிரிஸ்புரோ சூரியபுர விதை நெல் உற்பத்தி பண்ணைக்குள் மண் மற்றும் தண்ணீர் பாதுகாப்புக்காக துரித கவனம் எடுக்கும் வகையிலான உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த பண்ணைக்காக பாரிய முதலீட்டையும் கிரிஸ்புரோ நிறுவனம் மேற்கொண்டுள்ளது. கிரிஸ்புரோ தற்போது அரிசி மற்றும் சோளம் செய்கை குறித்தும் பெரிய அளவில் கவனம் செலுத்தியுள்ளதுடன் மகியங்கனை, மொனராகலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள பண்ணைகளில் 10,000க்கும் அதிகமானவர்களுக்கு நேரடி நன்மைகளை பெற்றுக் கொடுத்துள்ளது.

30 வருடங்களாக யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் கந்தளாய் சூரியபுர கிராமத்தில் கிரிஸ்புரோவின் முதலீட்டின் மூலம் பொருளாதார மற்றும் சமூக ரீதியான பாரிய முன்னேற்றத்தை வென்றெடுக்க முடிந்துள்ளது. இலங்கை அரிசியில் தன்னிறைவு பெற்றது,

ஆனால் விதை நெல்லை பெற்றுக் கொள்வதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளதன் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் நெற் செய்கையில் இருந்து விலகி பிற உபபயிர் செய்கைகளை மேற்கொள்வதற்கு கவனம் செலுத்தும் போக்கை காண முடிகிறது. இந்த நிலைமையை புரிந்து கொண்ட கிரிஸ்புரோ விதை நெல் உற்பத்தியில் இணைந்து விவசாயிகளுக்கு நிவாரண விலையில் விதைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கிரிஸ்புரோவின் சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் அமோரேஸ் செலர் “கிரிஸ்புரோ கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் பெரிய அளவில் முதலீடு செய்யும் காலகட்டத்தில் இங்கு வாழும் பெரும்பாலானோருக்கு நிரந்தர வருமானத்தை ஈட்டக் கூடிய சந்தர்ப்பம் இல்லாததுடன் மழை நீரினால் விவசாயத்தை மேற்கொண்டதனால் வருடத்திற்கு ஒரு போகத்திற்கு மாத்திரம் செய்கை மட்டுப்படுத்தப்பட்டது.

எனினும் கிரிஸ்புரோவின் வருகையுடன் இந்த பகுதியுள்ளவர்களுக்கு வாழ்க்கை கிடைத்ததுடன் விதை உற்பத்திக்காக கவனம் திரும்பியதுடன் உள்நாட்டு அரிசி உற்பத்தியை மேம்படுத்துவதற்காக கிரிஸ்புரோ பெற்றுக் கொடுக்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிட்டியது. நாட்டின் உணவு பாதுகாப்பின் முக்கியத்துவம் முன்னெப்போதையும் விட கொரோனா தொற்றுநோய் காலத்தின் போது தெரிந்தது.

இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் பற்றாக்குறையுடன் உள்நாட்டு உணவு வகைகள் மீது அதிகமாக கவனம் செலுத்தவேண்டி ஏற்பட்டது. எதிர்பாராத வகையில் ஏற்பட்ட இந்த நெருக்கடி காரணமாக உள்நாட்டு உணவின் பாதுகாப்பு குறித்து பாரிய கவனம் செலுத்துவதற்கு முடிந்தது. விதை நெல் உற்பத்தியின் மூலம் உள்நாட்டு அரிசி உற்பத்தி குறித்து அதிகமான பங்களிப்பை செலுத்தி நாம் உணவு பாதுகாப்பு தொடர்பில் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் சிறந்த தருணமாக இதனை குறிப்பிட முடியும்.” என அவர் தெரிவித்தார்.

1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி ‘vertically-integrated’ தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் தாரக மந்திரமான பண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.

 

Health Life Clinic நவீன வசதிகளுடன் கொழும்பு 7இல் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது

கொழும்பின் முதன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான ஹெல்தி லைஃப் கிளினிக், சுகாதாரத்துறையில் சிறந்து விளங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை மேலும் பலப்படுத்தும் வகையில் இல. 139, தர்மபால மாவத்தை, கொழும்பு 07இல் உள்ள நவீன நோக்கம் கருதி புதிதாக கட்டப்பட்ட வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 2005இல் நிறுவப்பட்ட ஹெல்தி லைஃப் கிளினிக் தனிப்பயனாக்கப்பட்ட நீரிழிவு கட்டுப்பாட்டு சிகிச்சையளிப்பு, சரும அழகு சாதன ஆலோசனைகள், குழந்தை மருத்துவம், பிசியோதெரபி, மனநலம், முதியோர் மருத்துவம், ஆப்டோமெட்ரிக் பராமரிப்பு, பாதக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிதல் மற்றும் செயல்திறன் மிக்க சுகாதார மேம்பாட்டு தீர்வுகள் போன்றவற்றிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட வளாகத்திற்கு இடம்மாறிச் சென்றுள்ளதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது விரிவான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சுகாதார சேவையை வழங்குவதற்கான எமது பொறுப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் கொழும்பு 07இல் ஒரு விசாலமான இட வசதி கொண்ட எமது விரிவாக்கமானது நோயாளர்களுக்கு வசதியான, பாதுகாப்பான சூழலில் மிக உயர்ந்த தரமான சுகாதார சேவையை வழங்குவதற்கான எமது முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியென நாங்கள் நம்புகிறோம்” என ஹெல்தி லைஃப் கிளினிக்கின் தலைவர் டொக்டர் காயத்ரி பெரியசாமி தெரிவித்தார்.

அழகான சூழலில் நன்கு வெளிச்சமான உட்புறங்களுடன், சரும அழகு சாதன ஆலோசனைக் கூட வசதி, பலவிதமான நோயறிதல் முறைகள் மற்றும் சிகிச்சையளிப்பு கூட இடவசதிகள் மற்றும் நவீன கருவிகளும் இங்கு பொருத்தப்பட்டுள்ளன. ‘6 by 6 Optics’ மற்றும் ‘Evolve Centre’ என்ற பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான நவீன பேச்சு மற்றும் மொழி சிகிச்சை மற்றும் கற்றல் பிரிவும் இதில் அடங்கும்.

“ஹெல்தி லைஃப் கிளினிக்கில் நோயாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் ஆகிய இருபாலாருக்கும் ஆரோக்கியமான மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் வாழ்க்கை முறையை அனுபவிக்கக் கூடிய வகையில் ஒரு நபரை மையமாகக் கொண்ட சிகிச்சை அணுகுமுறையை நாங்கள் எப்போதும் ஊக்குவிக்கிறோம். நீரிழிவு போன்ற தொற்றாத நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக அனுபவம் வாய்ந்த மற்றும் தகுதிவாய்ந்த ஆலோசகர்கள் மற்றும் பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்கள் இங்கு சிகிச்சை பெற வரும் நோயாளர்களுக்கு அவர்களின் அனைத்து மருத்துவ தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு வசதியான அமைப்பை உருவாக்க கடுமையாக முயற்சி செய்கின்றனர். எமது நீண்டகால நோயாளிகளில் பலர் மன நிறைவான சேவையைப் பெற்று முழு திருப்தியைக் கண்டு அவர்கள் முழு நிறைவடைவதற்கு முக்கிய காரணியாக இது அமைந்துள்ளது.” என அவர் மேலும் தெரிவித்தார்.

ஹெல்தி லைஃப் கிளினிக்கில் நீரிழிவு சிகிச்சைகளுக்காக வரும் நோயாளிகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் அணுகுமுறைகள் பல ஆண்டுகளாக இந்த கிளினிக்கை விரும்பும் நோயாளிகளை சிறந்த விதத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளது. கிளினிக்கின் பராமரிப்பு பெக்கேஜ்கள் நிபுணத்துவம் கொண்ட நீரிழிவு ஆலோசகர்களால் கவனமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. ஒரே விதமாக பல்வேறு அணுகுமுறையைகளைப் பயன்படுத்தி நோயாளிகளின் முழுமையான ஆரோக்கியத்தை உறுதி செய்கின்றதோடு, அங்கு நோயாளிகளுக்கு தங்களைக் கவனித்துக் கொள்வதற்கு தேவையான அறிவைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவை ஒரு முக்கிய அம்சமாகும்.

ஹெல்தி லைஃப் கிளினிக்கின் பெக்கேஜ்களில் மிகவும் பிரபல்யமான Smard D நீரிழிவு நோயாளர்களுக்கான வருடாந்தர பராமரிப்பு பெக்கேஜில் முழு பரிசோதனை தீர்வு, காலாண்டுக்கு ஒருமுறை இரத்த பரிசோதனைகள், மருத்துவ சிகிச்சைகள், கிளினிக்கிலிருந்து வழக்கமான நினைபூட்டுதல்கள் மற்றும் வீட்டில் இருந்தே இரத்தத்தின் குளுக்கோஸ் அளவைக் கண்காணிக்க இலவச குளுக்கோ மீட்டர் ஆகியவை இதில் அடங்கும்.

கிளினிக்கின் இரண்டாவது முக்கிய கவனமாக அமைவது குடும்ப மருத்துவமாகும், இதில் குடும்பங்கள் மற்றும் தனி நபர்கள் தங்கள் உடல் நலம் மற்றும் ஆரோக்கியமான நல்வாழ்வை விரைவாக பராமரிக்க உதவும் ஒரு விரிவான சுகாதார நிகழ்ச்சி நிரலை கொண்டு செயற்படுத்தப்படுகிறது. ஹெல்தி லைஃப் கிளினிக் அனைத்து தனிநபர்களின் வாழ்க்கையிலும் ஒரு குடும்ப வைத்தியரின் தேவை குறித்து தீவிர கவனம் செலுத்துமாறு உந்துவிப்பதுடன், இது அன்றாட ஆரோக்கியத்தில் குறைந்த பணச் செலவில் மேற்கொள்ளப்படுவதனால் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது, அதே நேரத்தில் இது சிகிச்சைகள், பரிந்துரைகள் பற்றிய ஆலோசனையின் முக்கிய நபராகவும் செயல்படுதுடன் நோயறியவும் மற்றும் அதனைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கிறது.

ஆலோசனைக்காக கிளினிக்கிற்கு செல்லும் ஒவ்வொரு நோயாளியும் ஒரு தனிப்பட்ட சுகாதார பதிவை வைத்திருத்தல் வேண்டும், இது நோயளியின் குடும்ப ஆரோக்கிய வரலாறு, வாழக்கை முறை, விருப்பத்தேர்வுகள், முன் ஆலோசனை விபரங்கள், மனநல சுகாதார நிலை ஆகியவற்றுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படும். இது கிளினிக்கின் செயல்முறைகளில் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது.

மேலும், ஹெல்தி லைஃப் கிளினிக் பெருநிறுவன துறையில் கடமையாற்றுபவர்களுக்கு அறிவை வழங்குதல் மற்றும் ஆலோசனை வழங்குவதன் மூலம் சுகாதாரத்துக்கான தடுப்பு அணுகுமுறையை பெற்றுக்கொள்வதில் பல்வேறு வகையான பெருநிறுவன பெக்கேஜ்களை வழங்குகிறது; முதியோர் பராமரிப்பு சேவைகள் மற்றும் தீர்வுகள், பிசியோதெரபி அமர்வுகள், எடை நிர்வகிப்பு தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் 0114700700 அல்லது 0773511511 என்ற இலக்கத்தில் அழைப்பினை ஏற்படுத்தி கிளினிக்குடன் தொடர்பினை ஏற்படுத்தலாம்.

2005ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஹெல்தி லைஃப் கிளின் என்பது கொழும்பின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சிறந்த சுற்றாடலில் அமைக்கப்பட்ட மதுத்துவ மனையாகும். நீரிழிவு பராமரிப்பு மற்றும் குடும்ப மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இந்த மருத்துவமனை, பெருநிறுவன ஆரோக்கியம், பிசியோதெரபி, ஆரோக்கியம், நோயறிதல் மற்றும் வயோதிப பராமரிப்பு ஆகியவற்றுக்கான விரிவான தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

படம் 1: (இடமிருந்து வலம்) ஹெல்தி லைஃப் கிளினிக்கின் தலைவர் டொக்டர் காயத்திரி பெரியசாமியுடன் ‘Evolve Center’இன் தலைமை பேச்சு சிகிச்சையாளர் திருமதி நாராயணி சதாசிவம்.

படம் 2: ஹெல்தி லைஃப் கிளினிக்கின் கொழும்பு 7ல் அமைந்துள்ள புதிய நவீன நோக்கம் கொண்ட புதிய கட்டடம்

படம் 3: கிளினிக் புதிய கட்டடத்தின் உள்ளகக் காட்சி

மலையக மக்கள் முன்னணியில் அதிரடி மாற்றங்கள்! செப்டம்பரில் கட்சி மாநாடு!!

தியாக தீபம் திலிபன் உட்பட தியாகிகளை நினைவு கூருவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே மலையக மக்கள் முன்னணியின் தலைப்பாடாகும் என்று முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் விஜயச்சந்திரன் இன்று (16) தமது கடமைகளைப்பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராதாகிருஷ்ணன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது.

கட்சி மறுசீரமைப்பு பணி

மலையக மக்கள் முன்னணி மறுசீரமைக்கப்படும் என தேர்தல் காலத்திலேயே நாம் அறிவித்திருந்தோம். அந்தவகையில் தற்போது மறுசீரமைப்பு பணி ஆரம்பமாகியுள்ளது. பொதுச்செயலாளர் அ.லோரன்ஸ் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து, புதிய பொதுச்செயலாளராக விஜயச்சந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். நிதிச்செயலாளர் பதவி கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அடுத்தக்கட்ட மாற்றங்கள் இடம்பெறும். எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பரில் கட்சி மாநாட்டை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளோம்.

ஐக்கிய தேசியக்கட்சி இணைவு

ஐக்கிய தேசியக்கட்சி இன்று தனது செல்வாக்கை இழந்துவிட்டது. அதற்கு அக்கட்சி தலைவரின் விட்டுக்கொடுப்பின்மையே பிரதான காரணமாகும். தற்போதுகூட தலைவர் பதவியை வைத்துக்கொண்டு பிரதித் தலைவர் பதவியை ருவானுக்கு வழங்கியுள்ளார். இதனால் எதிர்காலத்தில் மேலும் நெருக்கடிகள் அக்கட்சிக்கு ஏற்படலாம்.

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக்கட்சியும் இணைந்தாலும், இணையாவிட்டாலும் எமக்கு பிரச்சினை இல்லை. நாம் எமது மக்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியாகவே செயற்படுகின்றோம்.

திலீபன் நினைவேந்தல்

தனது இனத்துக்காகவும், சமுகத்துக்காகவுமே திலீபனை உண்ணாவிரதமிருந்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இருந்தும் அவரை கொச்சைப்படுத்தும் விதத்தில் பாதுகாப்பு செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார். திலீபனை நாம் வீரனாகவே கருதுகின்றோம். அவருக்கான நினைவுதினத்தைக்கூட அரசு தடைசெய்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.

அதேவேளை, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆளுங்கட்சி சார்பில் பொறுப்புக்கூறுவதற்கு எவரும் இல்லை. அது இன்னும் திருத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. எனவே, பாராளுமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அது குறித்து மேலதிக தகவல்களை வழங்கலாம். எது எப்படியிருந்தாலும் மக்களுக்கு பாதிப்பாக அமையும் எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதனை நாம் எதிர்ப்போம்.” – என்றார்.

க.கிசாந்தன்

இலங்கையில் ‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 3,021 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 05 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,021  ஆக அதிகரித்துள்ளது.

237 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிடி சுகா தெரிவு!

ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானின் நீண்ட நாள் பிரதமராக இருந்த ஷின்சோ அபே உடல் நலம் பாதிப்பு காரணமாக பதவி விலகினார்.

இதையடுத்து ஆளும் மிதவாத கட்சியின் தலைவர் பதவிக்கு சுகாவுடன் அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகரு இஷிபா மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் புமியோ கிஷிடா மூவரும் போட்டியிட்டனர்.

அந்நாட்டு பாராளுமன்றம், மேல் சபை மற்றும் கீழ் சபை உறுப்பினர்கள் 534 பேர் புதிய ஆளும் கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க வாக்களித்தனர். இதில் 377 ஓட்டுகளை பெற்று யோஷிஹிடே சுகா பெரும் வெற்றி பெற்றார். சிகரு இஷிபா 68 வாக்குகளும், முன்னாள் வெளியுறவு அமைச்சர் 89 வாக்குகளையும் பெற்றனர்.

நடிகர் நாகபாபுவுக்கும் கொரோனா தொற்று

நடிகர் நாகபாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்றுக்கு நடிகர், நடிகைகளும் சிக்கி வருகிறார்கள். ஏற்கனவே நடிகர்கள் அமிதாப்பச்சன், விஷால், அபிஷேக் பச்சன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், சுமலதா. இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமாகி மீண்டனர்.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் நாகபாபுவுக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர் தமிழில் லிங்குசாமி இயக்கிய வேட்டை, மற்றும் விழித்திரு, இந்திரஜித் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் என்பதும் விஜய்சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நிஹாரிகாவின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நாகபாபு கலந்து கொண்டார்.

அதன்பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் ஆலோசனையோடு வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

மூட்டை முடிச்சோடு சிறிகொத்தவிலிருந்து வெளியேறினார் நவீன்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்ட நவீன் திஸாநாயக்க, சிறிகொத்தவில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து நேற்று (15) வெளியேறிவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனக்கு நெருக்கமான சிலருடன் வருகைதந்து அலுவலகத்தில் இருந்த முக்கிய ‘பைல்களை’ எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார் எனவும் கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தன தெரிவுசெய்யப்பட்டுள்ள சூழ்நிலையிலேயே , அதிருப்தியில் நவீன் கட்சி தலைமையகத்திலிருந்து வெளியேறியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

தனது மாமாவான கருஜயசூரியவுக்கு ஐ.தே.கவின் தலைமைப்பதவி கிடைக்காததையிட்டும் நவீன் தனக்கு நெருக்கமானவர்களிடம் கவலையை வெளியிட்டுள்ளார்.

‘அம்பகமுவ பிரதேச நண்பன் அணி மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு’

” நுவரெலியா மாவட்ட கரப்பந்தாட்டப்போட்டியில் வெற்றிபெற்று மாகா ணமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது அம்பகமுவ பிரதேச சபையை சேர்ந்த ஸ்கோபியன் கழகத்தின் நண்பன் அணி.

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேசசபை மட்டத்தில் நடைபெற்ற கரப்பந்தாட்டப்போட்டிகளில் முதலாம் இடத்தைப்பிடித்த அணிகளுக்கிடையிலான போட்டி கடந்த 13 ஆம் திகதி நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இறுதி போட்டிக்கு அம்பகமுவ பிரதேச சபையை சேர்ந்த ஸ்கோபியன் கழகத்தின் நண்பன் அணியும் ,வலப்பனை பிரதேச சபையை சேர்ந்த அணியும் தெரிவாகின.

இறுதிப்போட்டியில் 3/2 என்ற கணக்கில் அம்கமுவ பிரதேச சபை நண்பன் அணி வெற்றி பெற்று மாகண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

கடந்த 3 வருடங்களின் பின்னர் அம்பகமுவ பிரதேசசபை வொலிபோல் அணி மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹட்டனில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞனை காப்பாற்றிய பொலிஸார்

ஹட்டனில் இன்று (16) தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பொதுமக்களும், ஹட்டன் பொலிஸாரும் இணைந்து காப்பாற்றியுள்ளனர்.

ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டபகுதியிலுள்ள நீர் வீழ்ச்சியில் பாய்ந்தே குறித்த இளைஞன் தற்கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார்.

இவர் வட்டவளை, ரொத்தஸ்ட் பகுதியை சேர்ந்த 23 வயதுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொதுமக்களும், பொலிஸாரும் இணைந்தே இவரை காப்பாற்றியுள்ளனர். இளைஞன் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதி பெறப்படவுள்ளது.

அத்துடன், குறித்த இளைஞனுக்கு பொலிஸார் ஆலோசனையும் வழங்கியுள்ளனர்.

பொகவந்தலாவ நிருபர்-எஸ்.சதீஸ்

குறிப்பு – (எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை என்பது தீர்வல்ல, அது கோழைத்தனமான முயற்சி – முடிவாகும். போராடி வெல்வதே வாழ்க்கையாகும். அதேபோல் குறித்த இளைஞன் தொடர்பான படங்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இனி வாழ நினைக்கும் அவருக்கு அது உளரீதியான தாக்கத்தையும்,அவதானத்தையும் ஏற்படுத்தக்கூடும். அவரின் முகம் தெரியாத விதத்தில் தூரத்தில் இருந்து எடுத்த படமொன்றையே நாம் செய்திக்காக பயன்படுத்தியுள்ளோம். ஏனைய படங்கள் கைவசம் இருந்தும் ஓர் இளைஞனின் எதிர்காலத்துக்காக அவற்றை நாம் பயன்படுத்தவில்லை.)

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

பொகவந்தலாவை வைத்தியசாலையில் நடப்பது என்ன?

0
பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலை என்பது மிக முக்கியமான வைத்தியசாலையாகும். பொகவந்தலாவ, பொகவான, கொட்டியாகல, லொய்னோர்ன், கெர்கஸ்வோல்ட், வெஞ்சர் ஆகிய கிராம சேவகர் பிரிவிலிருக்கும் 50,000 க்கும் மக்கள் இதன்மூலம் சுகாதார சேவையை பெறுகின்றனர். அண்மைக்காலமாக இந்த...

2026 இல் இதுவரை 828,845 சுற்றுலாப் பயணிகள் வருகை!

0
இலங்கைக்கு கடந்த 19 நாட்களுக்குள் மாத்திரம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 211 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஏப்ரல் 1 முதல் 19 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்...

லுணுகலை பகுதியில் ஆட்டோ விபத்து: ஓட்டுநர் பலி!

0
லுணுகலை பகுதியில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 67 வயதுடைய, கங்கசறி புற ரெந்தபொல ஹொப்டன் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். லுணுகலை பொலிஸ்...