Home Blog Page 3858

வெற்றிவாகை சூடப்போகும் அணி எது? இங்கிலாந்து, ஆஸி. இன்று பலப்பரீட்சை!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஒரு நாள் தொடரை வெல்லும் கடைசி ஆட்டம் இன்று (16) நடைபெறுகிறது.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன.

இவ்விரு அணிகள் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. இது தொடரை நிர்ணயிக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயிற்சியின் போது பந்து தலையில் தாக்கியதால் முன்னெச்சரிக்கையாக இரண்டு ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் இன்றைய ஆட்டத்தில் களம் திரும்புவார் என்று தெரிகிறது. இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

ஒரு லட்சம் கி.மீ வீதி நிர்மாணம் 2024இல் நிறைவு! வீதிகளின் இருபுறமும் 20 இலட்சம் மரக் கன்றுகள்!!

“ஒர் இலட்சம் கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் பணிகளை 2024இல் நிறைவு செய்து, அவற்றை முக்கிய வீதி கட்டமைப்புடன் இணைக்கும் பொறுப்பை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளேன்.” – என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“சௌகரியமாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தமது போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது அனைத்து குடிமக்களதும் உரிமையாகும்.

போக்குவரத்து முறைமையில் உள்ள பின்னடைவுகள் மற்றும் முறிவடைந்துள்ள இடைத்தொடர்புகள் காரணமாக வினைத்திறனானதும் உயர் தரத்துடனானதுமான வீதி முறைமை ஒன்றை மக்களுக்கு வழங்குவதற்கு எனது ‘சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஒர் இலட்சம் கிலோமீற்றர் கிராமிய மற்றும் உள் வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் சுற்றாடலைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே நான் இவ்வாறு குறிப்பிட்டேன்.

சிறிய பாலங்கள், மரப் பாலங்கள் மற்றும் கம்பிப் பாலங்களுக்குப் பதிலாக புதிய பாலங்கள் நிர்மாணிக்கப்பட வேண்டும்.

கடந்த சில மாதங்களில் 8,000 கிலோமீற்றர் வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 400 கிலோமீற்றர் நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

வீதி நிர்மாணப் பணியின்போது பயன்படுத்தப்படும் மண், கல், மணல் போன்றவற்றை தேவையான அளவு தயார்படுத்தும் பொறுப்பை அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் வழங்கியுள்ளேன்.

வளங்களை வழங்குகின்றபோது அனுமதி அளிக்க வேண்டிய சுற்றாடல், வன ஜீவராசிகள், வனப்பாதுகாப்பு மற்றும் தொல்லியல் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மாவட்ட மட்டத்தில் ஒன்றுகூடி முன் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதான நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் இரண்டு மில்லியன் பல்வேறு வகையான மரக் கன்றுகளை நடுவதற்கும் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

நிர்மாணப் பணிகளுக்குத் தடைகள் மற்றும் தாமதங்கள் எந்த வகையிலும் ஏற்படுவதற்கு இடம் வைக்கக்கூடாது என்பதனையும் நான் தெரிவித்தேன்.

வீதி நிர்மாணப் பணிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு அரசாங்கம் மற்றும் ஒப்பந்தக்கார்கள் ஆகிய இருதரப்பினருக்கும் உரியது ஆகும்.

உப ஒப்பந்தங்களை வழங்குவதற்கு ஒரு போதும் இடமளிக்காது இருக்க வேண்டியதன் அவசியத்தையும் நான் சுட்டிக்காட்டினேன்.

அனைத்து பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளின் மீது வாகனங்களை நிறுத்துவதை முற்றாக தடை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுக்குமாடி வீட்டுத் தொகுதிகள், சந்தைத் தொகுதிகள் உள்ளிட்ட கட்டிடங்களை நிர்மாணிக்கும்போது வாகனத் தரிப்பிடத்திற்கான இடவசதியை ஏற்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்பதையும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.” – என்றார்.

அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா, பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்க்ஷ, ஜனாதிபதி செயலாளர் பீ. பி. ஜயசுந்தர ஆகியோருடன் துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் நேற்றைய கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளை அதிகரிக்க நடவடிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தில் அபிவிருத்தி செய்ய வேண்டிய பாடசாலைகள் தொடர்பில் பிரதேசத்தின் அரசியல் அதிகார சபையினை அறிவுறுத்துமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாரச்சி சப்ரகமுவ மாகாண கல்வி பணிப்பாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொகுபோதாகமவின் அழைப்பின் பேரில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் 9 பிரிவுகளில் தேசிய பாடசாலைகள் எதுவும் இல்லை. பௌதீக மற்றும் மனிதவளம் உரிய முறையில் அபிவிருத்தி அடைந்துள்ள பாடசாலைகள் இல்லாமையால் அந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. கிராமப்பகுதிகளில் கஷ்டங்களுக்கு மத்தியில் மாணவர்கள் கல்விகற்கின்றனர். அவர்களின் தேவைகளுக்காக இந்த பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்குரிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்வது மிக முக்கியமாகும்.

இதுதொடர்பில் பதில் அளித்த சப்ரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளர் சேபால குறுப்புஆரச்சி தெரிவித்ததாவது,

கல்வி அமைச்சின் மூலம் ஒன்லைன் முறைக்கு தொடர்புப்படுத்தி அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பாடசாலைகளின் தகவல்களை சேகரித்தோம். அதற்கமைய பல பாடசாலைகளில் பெயர்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. வலய மட்டத்தில் காவத்தை மத்திய வித்தியாலயம், அயகம ஸ்ரீ ராகுல வித்தியாலயம், எலபாத மகா வித்தியாலயம், குருவிட மத்தியவித்தியாலயம், வெலிகேபொல சித்தார்த்த மகா வித்தியாலயம் உட்பட மேலும் பல பாடசாலைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்ட பாடசாலைகள் தொடர்பாக அரசியல் அதிகார சபையில் அறிவிக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாரச்சி உட்பட நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் மாவட்ட அபிவிருத்தி கமிட்டியின் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் அகில சாலிய எல்லாவள சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோர் வலியுறுத்தினர்.

இலங்கை – பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர் – நாமல் வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை– பங்களாதேஷ் கிரிக்கெட் தொடரை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்காக இலங்கைக்கு வருகை தரவிருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, சுகாதார பரிந்துரைகளுக்கு ஏற்ப 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்று இலங்கை கிரிக்கெட் சபை பங்களாதேசுக்கு அறிவித்துள்ளது.

இருப்பினும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

“பங்களாதேஷ் கிரிக்கெட் சபை 7 நாட்கள் தனிமைப்படுத்தலையே விரும்புகிறது. கடந்த நான்கு மாதகாலமாக எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாதுள்ளதால் பயிற்சிக்காலத்தை மேலும் குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கும் இடையில் இது தொடர்பில் நீண்ட காலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ள போதிலும் இன்னமும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பிலும் ஊடகங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் நாமல் ராஜபக்ச, மேலும் கூறியதாவது, இந்த கிரிக்கெட் தொடர் தொடர்பில் கடைப்பிடிக்கப்படும் சுகாதார வழிகாட்டல்கள் குறித்த தகவல்கள் பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் நடைமுறைக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்ட சூழல் காணப்படுகிறது.

தற்போது டுபாயில் ஐ.பி.எல். போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. அதேபோன்று இங்கிலாந்திலும் போட்டிகள் நடைபெறுகின்றன. கிரிக்கெட் வீரர்கள் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சில தினங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விளையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 ஒழிப்பு தேசிய செயலணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை – பங்களாதேஷ் தொடரை நடத்த முடியுமான கேட்டறியுமாறு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு கோரிக்கையொன்றை விடுத்துள்ளேன். இருதரப்பினரும் இணைந்து ஒரு முடிவை எடுப்பார்கள் என்றார்.

மாகாணசபைகளுக்கு எதிராக ‘குட்டி சபை’யில் தீர்மானம் நிறைவேற்றம்!

“மாகாணசபை தேர்தல் முறைமை இல்லாதொழிக்கப்படவேண்டும்” என வலியுறுத்தும் பிரேரணையொன்று வலல்லாவிட பிரதேச சபையில் நேற்று (15) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்துக்குட்பட்ட வலல்லாவிட பிரதேச சபையின் மாநாந்த அமர்வு அதன் தவிசாளர் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது.

இதன்போது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் நாலக தரங்க சமரசிங்க என்பவராலேயே ‘மாகாணசபை தேர்தல் முறைமையை ஒழிக்ககோரும்’ பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

25 உறுப்பினர்களைக்கொண்ட மேற்படி பிரதேச சபையின் நேற்றைய அமர்வில் 23 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

வாக்கெடுப்பின்போது ஒரு உறுப்பினர் சபையில் இருந்து வெளியேறினார் எனவும், ஒருவர் வாக்களிக்கவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய 21 உறுப்பினர்களும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து அதனை நிறைவேற்றியுள்ளனர்.

2018 இல் நடைபெற்ற உள்ளாட்சிசபைத் தேர்தலில் 14 உறுப்பினர்களுடன் ஆட்சி அதிகாரத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியது.

ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் அறுவர், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் மூவர், ஜே.வி.பியின் உறுப்பினர் ஒருவர், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் சபையில் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஏனைய சபைகளிலும் இவ்வாறான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சரத் வீரசேகரவுக்கு சார்பான உறுப்பினர்கள் உத்தேசித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ப்ளோரன்ட் சி பெரைரா கொரோனாவால் மரணம்

கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ப்ளோரன்ட் சி பெரைரா (florent pereira) காலமானார்.

தமிழ் திரைப்பட நடிகரும், மூத்த ஊடகவியலாளருமான நடிகர்  பிளோரண்ட் பெரேரா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார். பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த இவர், நடிகர் விஜய்யின் ‘புதிய கீதை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தனுஷின் தொடரி, வேலையில்லா பட்டதாரி 2, தரமணி, தர்மதுரை, முப்பரிமாணம், கயல் உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த சினிமா படப்பிடிப்புகள், தமிழக அரசின் அனுமதியின் பேரில் அண்மையில் மீண்டும் தொடங்கப்பட்டது.

இதனையடுத்து புதிய திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருந்த நடிகர் பிளோரண்ட் பெரேரா, கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை திடீரென்று மோசமானதையடுத்து, நேற்று சிகிச்சை பலனின்றி பிளோரண்ட் பெரேரா உயிரிழந்தார்.

இவரது மரணத்திற்கு நடிகர் ஷாந்தனு பாக்யராஜ், இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்ட திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் 3,266 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 11 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,016 ஆக அதிகரித்துள்ளது.

237 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 266 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 6 ஆயிரத்து 142 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

‘போதைப்பொருள் மாபியாக்களின் சொத்துகள் பறிமுல்’ – பிரதமர் அதிரடி

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளின் மூலம் ஈட்டிய பணம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள்  பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நேற்று கலந்துரையாடினர்.

சட்டவிரோதமாக ஈட்டிய பணம், வாகனம், காணி, வீடு, கட்டிடங்கள் போன்றவற்றை குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர், வழக்கு விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டு சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும் வரை, அவற்றை அனுபவிப்பதனையும்,

அதன் மூலம் பணம் ஈட்டுவதனையும், அப்பணம் மற்றும் சொத்துக்களை மேலும் சட்டவிரோத நோக்கங்களுக்காக பயன்படுத்துவதையும் தடுக்கும் வகையில் முன்னெடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

கைது செய்யப்படும் நபர்களினால் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக, ஆரம்பத்திலேயே சொத்துக்களை அரசாங்கத்தினால் கையகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

பண மோசடி தடுப்பு சட்டம் மற்றும் 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதி பரிவர்த்தனை அறிக்கை சட்டத்தின் விதிகள் தொடர்பாக குறித்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், குறித்த சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளல் மற்றும் தற்போதுள்ள விதிகளுக்கு அமைய எவ்வாறு செயற்படுத்துவது என்பன தொடர்பாக அதிகாரிகளினால் கருத்து தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய ஏற்கனவே உள்ள விதிகளுக்கு அமைய உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கும், தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் பரிசீலிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, நீதியமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே.மாயாதுன்ன, பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன, மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சனோகா மொஹொட்டி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

‘மலையக வீட்டுத்திட்டம்’ – ஜீவன் தலைமையில் விசேட கலந்துரையாடல்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகளுக்குமிடையிலான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், பெருந்தோட்ட மனிதள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள், சகல பெருந்தோட்ட யாக்கங்களின் நிறைவேற்று அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

இதன்போது கடந்த காலங்களில் நிதியத்தினால் மேற்கொள்ளபட்ட செயற்பாடுகள் மற்றும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கபடவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் மலையக வீடமைப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் அமைச்சினால் முன்னெடுக்கபடவுள்ள வீட்டுத்திடத்தில் வீட்டின் கூரைக்கு பதிலாக கொங்ரிட் சிலப் முறையிலான கூரை கொண்டு அமைப்பது தொடர்பாக இதன்போது இராஜாங்க அமைச்சர் விளக்கமளித்தார்.

’20’ இல் திருத்தங்கள் – அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று 2020.09.15 அலரி மாளிகையில் வைத்து  பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குறித்த குழுவின் தலைவராக அமைச்சரவை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

20ஆவது திருத்தம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்ட புதிதாக உள்ளடக்கப்பட வேண்டிய மற்றும் திருத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் குறித்த குழுவின் உறுப்பினர்கள் பிரதமருக்கு தெளிவுபடுத்தினர்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்வதற்கு பிரதமரினால் இக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

லுணுகலை பகுதியில் ஆட்டோ விபத்து: ஓட்டுநர் பலி!

0
லுணுகலை பகுதியில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 67 வயதுடைய, கங்கசறி புற ரெந்தபொல ஹொப்டன் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். லுணுகலை பொலிஸ்...

முழு அமைச்சரவையும் பதவி விலக வேண்டும்!

0
"தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்ட விவகாரத்தில் ஓர் அமைச்சரை மட்டும் பலிகொடுத்துவிட்டு அரசு தப்பித்துக்கொள்ள முடியாது. கூட்டுப் பொறுப்பேற்று ஒட்டுமொத்த அமைச்சரவையும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர்...

மரக்கறி விலைப்பட்டியல் (24.04.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (24.04.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...