Home Blog Page 3859

‘பலாங்கொட்டையில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரிப்பு’

பலாங்கொடை தேர்தல் தொகுதியில் உள்ள 20 கிராம சேவகர் பிரிவுகளில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் நிலவுவதால் பிரதேச மக்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இம்புலமுர மற்றும் ஹந்தகிரிய பிரதேசங்களில் கடந்த வாரம் தொடர்ச்சியாக இரவு நேரத்தில் காட்டு யானைகள் கிராமங்களில் புகுந்து பல ஏக்கர் வயல் நிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட வாழை, மரக்கறி உற்பத்திகள் அனைத்தையும் அழித்து நாசமாக்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கடந்த வருடங்களில் இவ்வாறு காட்டு யானைகளின் தொல்லைகள் இடம்பெறவில்லை என தெரிவித்த கிராம வாசிகள், இந்த வருடம் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதுடன் யானைகளை விரட்டிவிட யானை வெடிகள் உரிய
முறையில் எமக்கு கிடைப்பதில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பலாங்கொடை மற்றும் இம்புள்பே பிரதேச செயலாளர் பிரிவு களில் இந்த காட்டு யானைகளின் தொல்லை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தியவின்னகோன்கஹ, மன்
கட-கலுபேடிகம ஆகிய பகுதிகளைஉள்ளடக்கி யானை வேலிகளைஅமைத்த பிரதேசங்களில் கூட காட்டு யானைகள் வருவதாக கிராம மக்கள் குறிப்பிட்டனர்.

இரத்தினபுரி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட இரத்தினபுரி மாவட்ட இணைப்பு கமிட்டி கூட்டத்தில் இந்த காட்டு யானைகளின் தொல்லைகளுக்கு துரி தமாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென
கேட்டுக்கொண்டார்.

இது சம்பந்தமாக வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகளுடன் அண்மையில் பலாங்கொடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் யானை வெடிகள் தட்டுப்பாடு நிலவுவதாக அப்போது வனப் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்ததாகவும் மேலும் முழு நாட்டிலும் 2000 அதிகாரிகள் மட்டுமே
பணியாற்றுவதாகவும் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் பலாங்கொடைபகுதியில் நிலவும் காட்டு யானைகளின் பிரச்சினையினை இயன்றளவு கவனம் செலுத்தி அதனைகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரநடவடிக்கை எடுப்பதாக வனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘இராஜாங்க அமைச்சர் ஜீவனை திங்கள்தோறும் சந்திக்கலாம்’

அரசாங்கத்தின் புதிய நடைமுறைக்கு அமைய, அமைச்சர்களின் பொதுமக்கள் சந்திப்பு தினம் புதன் கிழமையிலிருந்து திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனவே, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானை சந்திப்பதற்காக அமைச்சின் காரியாலயத்துக்கு வரும்  மக்கள் , இனி திங்கள்தோறும் அவரை சந்தித்து கலந்துரையாட முடியும் என அமைச்சின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

‘மாகாணசபை முறைமையை நீக்குவது குறித்து இன்னும் முடிவு இல்லை’

மாகாணசபை முறைமையை இல்லாதொழிப்பது தொடர்பில் அரசாங்கம் இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை – என்று ஶ்ரீலங்கா பொதுஜனவின் தலைவரும், அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எஸ்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது, மாகாணசபை முறைமை நீக்கப்படவேண்டும் என முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் குறித்து எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாணசை முறைமை தொடர்பில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தில் எந்தவொரு விடயமும் இல்லை. 20 ஐ நிறைவேற்றிய பின்னர் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி ஆரம்பமாகும். அப்போது மாகாணசபை முறைமை தொடர்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பிலும் ஆழமாக ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும்.

நாட்டில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மாகாணசபைத் தேர்தல் நடைபெறவில்லை. மாகாணசபைகள் இயங்காமலேயே எல்லாம் நடைபெறுகின்றன. எனவே, மாகாணசபை முறைமை தேவைதான என்ற கருத்தும் எழுந்துள்ளது. ஆனால் இது பற்றி அரசாங்கம் இன்னும் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை.
வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கான தீர்வாகவே மாகாணசபை முறைமை கொண்டுவர்பட்டது.

ஆனாலும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு கூட்டமைப்பு துணைநின்றது. தேர்தலை நடத்துமாறு கூட்டமைப்பினர் உரிய அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.” – என்றார்.

நோர்வூட்டில் விபத்து – 11 பேருக்கு காயம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம பகுதியில் இன்று (15) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும், பொகவந்தலாவையிலிருந்து ஹட்டன் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக பஸ்ஸும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இரு பஸ்களிலும் பயணித்தவர்களில் 11 பேர், காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 3 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு, 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

‘மஸ்கெலியா பஸ் தரிப்பிடத்தில் ஆபத்து’ – பயணிகள் விடுத்துள்ள அவசர கோரிக்கை

மஸ்கெலியாவில் பேருந்து தரிப்பிடத்திலுள்ள பொது மலசமலக்கூட கூரை பகுதியில் குளவிகள் கூடு கட்டியுள்ளதால்,  மக்கள் அச்சத்துக்கு மத்தியிலேயே மலசமலகூடத்தை பயன்படுத்திவருகின்றனர்.

மஸ்கெலியாவில் இருந்து சேவையில் ஈடுபடும் இ.போ.ச.மற்றும் தனியார் பஸ்கள் இங்குதான் தரித்துநிறுத்தப்படுகின்றன. எனவே, சாரதிகள், நடத்துனர்கள், பொதுமக்கள் என பலரும் குறித்த மலசலகூடத்தையே அவசர தேவையின் நிமித்தம் பயன்படுத்துகின்றனர்.

கடும்காற்றுவீசும்போது கூரைகள் ஆடுவதால் எந்நேரத்தில் வேண்டுமானாலும் குளவிக்கூடு கலைந்து, பயணிகளை கொட்டலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, குளவிகூடை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என கோரப்பட்டுள்ளது.

மஸ்கெலியா நிருபர் -பெருமாள்

2021 ஜனவரி 27 இல் ‘சின்னம்மா’ விடுதலை!

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், பெங்களுரு சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என தகவல் அறியும் சட்டத்தின்கீழ் சிறைத்துறையிடம் தகவல் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள சிறைத்துறை நிர்வாகம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆகிறார் என தெரிவித்துள்ளது.

மேலும், சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை. ரூ.10 கோடி (இந்திய ரூபா) அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும். அபராத தொகையை கட்டத் தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் என தெரிவித்துள்ளது.

இதன்மூலம் சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மாகாண தேர்தலுக்கான ஆட்டத்தை ஆரம்பித்தது சஜித் அணி!

மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளது என அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவவை வருமாறு,

” மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என அரச தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தமுறைமையின்கீழ் அது நடைபெறும் என தெரியவில்லை. ஆனாலும் தேர்தலொன்று நடத்தப்படுமானால் அதனை எதிர்கொள்வதற்கு எமது கட்சி தயாராகவே இருக்கின்றது.

மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவிரும்பும் புதிய அரசியல்வாதிகள், புத்திஜீவகள் ஆகியோரிடமிருந்து இவ்வாரம் முதல் விண்ணப்பங்களை கோரவுள்ளோம்.

அத்துடன் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு , சபைக்கு வரமுடியாமல்போன தொகுதி அமைப்பாளர்களையும் தேர்தலில் களமிறங்குமாறு தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார். எனவே, பலமான அணியொன்று களமிறக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தியை கீழ்மட்டத்தில் இருந்து கட்டியெழுப்பும் பணி 18 ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும். கூட்டணியை உருவாக்குவது பற்றியும் விரிவாக ஆராய்ந்து வருகின்றோம்.” – என்றார்.

ஆண் பாம்பின் துணையில்லாமல் 62 வயதில் முட்டையிட்ட மலைப்பாம்பு!

கடந்த 20 ஆண்டுகளாக ஆண் மலைப்பாம்பின் பக்கமே செல்லாத பெண் மலைப்பாம்பு ஒன்று 7 முட்டைகள் இட்டுல்ல சம்பவம் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் மிருகக்காட்சி சாலையில் 62 வயதான மலைப்பாம்பு ஒன்று பாதுக்கப்பட்டுவருகிறது. இந்த மலைப்பாம்பு கடந்த ஜூலை 23ஆம் திகதி 7 முட்டைகளை இட்டுள்ளது. பொதுவாக இந்தவகை மலைப்பாம்புகள் 60 வயதுக்கு முன்னரே முட்டை இடுவதை நிறுத்திவிடுமாம்.

ஆனால் இந்த பாம்பு 62 வயதில் 7 முட்டைகள் இட்டுள்ளது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இதில் மேலும் ஆச்சரியமான விஷயம் என்வென்றால் இந்த 62 வயதான மலைப்பாம்பு குறைந்தபட்சம் 20 வருடங்கள் ஒரு ஆண் மலைப்பாம்பு அதன் அருகில் இல்லாத நிலையிலும் ஏழு முட்டைகளை இட்டுள்ளது.

ஆண் பாம்பின் துணை இல்லாமல் இந்த பாம்பு எப்படி முட்டை இட்டது என குழப்பமாக இருக்கும் நிலையில் இதுகுறித்து மிருகக்காட்சிசாலையின் மேலாளர் மார்க் வன்னர் கூறும் போது, சிலவகை பாம்புகள் ஒருமுறை ஆண் பாம்புடன் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் போது வருங்காலத்திற்காக விந்தணுக்களை சேமித்து வைக்கும் திறன் பெற்றது என கூறியுள்ளார்.

அப்படி இருந்தாலும் இந்த மலைப்பாம்புக்கு அந்தவகை திறன்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது. எனவே இந்த பாம்பு குறித்து ஆராய்ச்சி செய்ய அந்த 7 முட்டைகளில் இரண்டு முட்டைகளை ஆராய்ச்சியாளர்கள் சோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர். மேலும் இரண்டு முட்டைகளில் பாம்புகள் வளரவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

மீதம் உள்ள மூன்று முட்டைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் இருக்கும் பாம்புகளில் இந்த பாம்புதான் மிகவும் வயதான பாம்பு என மிருகக்காட்சி சாலையின் மேலாளர் மார்க் வன்னர் கூறியுள்ளார்.

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ – தரவரிசையிலும் முன்னேறினார் ஒசாகா!

உலக டென்னிஸ் தரவரிசையில் நவோமி ஒசாகா 3ஆவது இடத்துக்கு முன்னேற்றியுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி முடிவை தொடர்ந்து புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் (செர்பியா) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) நம்பர் ஒன் இடத்திலும், சிமோனா ஹாலெப் (ருமேனியா) 2-வது இடத்திலும் தொடருகின்றனர். அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 13 இடங்கள் ஏற்றம் கண்டு 14-வது இடத்தை பெற்றுள்ளார்.

அரைஇறுதியில் தோல்வி கண்ட செரீனா வில்லியம்ஸ் ஒரு இடம் பின்தங்கி 9-வது இடம் பெற்றுள்ளார். அரைஇறுதியில் தோற்ற அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி 16 இடங்கள் உயர்ந்து 25-வது இடத்தை பிடித்து இருக்கிறார்.

சஜித்தின் இடத்துக்கு ருவான்! ரணில் தலைமையில் அதிரடி முடிவு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.தே.கவின் மத்தியசெயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் சிறிகொத்தவில் கூடியது.

இதன்போது பிரதித் தலைவர் பதவிக்கு ருவான் விஜேவர்தன, ரவிகருணாநாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதனையடுத்து இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ருவானுக்கு ஆதரவாக 28 பேரும், ரவிக்கு ஆதரவாக 10 பேரும் வாக்களித்துள்ளனர். இதன்படி பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவராக செயற்பட்ட சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி எனும் புதிய அரசியல் கட்சியின் தலைவராக செயற்படுகின்றார். இந்த இடத்துக்கே ருவான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை 2021 ஜனவரிவரையில் தலைவர் பதவியில் ரணில் விக்கிரமசிங்க நீடிப்பார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

சி.எஸ்.கே. அபார வெற்றி!

0
ஐபிஎல் 2026 தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்ற...

இஸ்ரேல், லெபனானுக்கிடையிலான போர் நிறுத்தம் மேலும் நீட்டிப்பு!

0
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் இரு நாட்டு அதிகாரிகளுடனும் அவர் நடத்திய...

இன்றும் அடை மழை!

0
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில்...