Home Blog Page 3860

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 9 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில்  மேலும் 09 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,005  ஆக அதிகரித்துள்ளது.

217  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹட்டனில் பேராபத்து – அவசரமாக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

ரயில் மோதுண்டு உயிர் தேசங்கள் ஏற்படும் அபாயமிருப்பதால் அதிலிருந்து தங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு அட்டன் பகுதி பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹட்டன் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் பாதுகாப்பு கடவைகள் இருக்கின்ற போதிலும் அவற்றை செயற்படுத்துவதற்கு ஊழியர்கள் இன்மையாலும், உரிய நேரத்தில் எச்சரிக்கை சமிக்ஞைகள் விடுக்கப்படாததாலுமே இவ்வாறானெதொரு அபாயநிலை ஏற்பட்டுள்ளது என்று நாளாந்தம் ரயில் வீதியை கடந்து பயணிப்பவர்கள் கருத்து வெளியிட்டனர்.

ரயில் பாதையில் ஏற்படும் விபத்துகளை தடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் இப்பகுதியில் இருபுறத்திலும் பாதுகாப்பு கடவைகள் அமைக்கப்பட்டு, ரயில்வரும் வேளைகளில் அவற்றை உரியவகையில் செயற்படுத்துவதற்கும், எச்சரிக்கை சமிக்ஞைகளை விடுப்பதற்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான கொடுப்பனவு அட்டன் பொலிஸாரால் வழங்கப்பட்டு வந்தது.

நேர அட்டவணையின் பிரகாரம் மூவர் சேவையில் ஈடுபட்டு வந்தனர், குறைந்தபட்சம் இருவராவது சுழற்சி முறையில் பாதுகாப்பு கடவை பகுதியில் கடமை புரிந்தனர். எனினும், கடந்த இரு வாரங்களாக ஒருவர் மாத்திரமே பணி புரிந்து வருகிறார் எனவும், காலை 6 மணிக்கு வந்து விட்டு பிற்பகல் 2 மணிக்கு அவரும் சென்று விடுவதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

பாடசாலைவிட்டதும் மாணவர்களும், ஆசிரியர்களும், சாரதிகளும் அச்சத்துக்கு மத்தியிலேயே வீதியை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பிற்பகல் 2.35 இல் இருந்து மறுநாள் அதிகாலை 5.10 வரை அவ்வீதியை ஊடறுத்து 8 இற்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. எனினும், கடவையை மூடி பாதுகாப்பு வழங்குவதற்கு ஊழியர்கள் இன்மையால் இரவே நேரங்களில் விபத்துகள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

“ பகல் வேளையாக இருந்தால் கூட வீதியில் ஆள் நடமாட்டம் இருக்கும், சத்தம்போட்டாவது எச்சரிக்கை விடுத்துவிடலாம், இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்குதான் சிக்கல்” எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் ஹட்டன் பொலிஸ் தலையகத்தை தொடர்புகொண்டு வினவியபோது, ஒரு ஊழியர் மட்டும் இருப்பதாலேயே சிக்கல் நிலை உருவாகியுள்ளது. அது குறித்து அட்டன் ரயில் நிலைய அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரத்து 500 ரூபா சம்பளம் வழங்கப்படுவதால் எவரும் நீண்டகாலம் இருப்பதில்லை. இருப்பினும் கூடியவிரைவில் ஒருவரை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். “ – என்று அறிவிக்கப்பட்டது.

க.கிசாந்தன்

6 மணிக்கு கூடுகிறது ’20’ குறித்த குழு – நாளை பிரதமரிடம் அறிக்கை கையளிப்பு!

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளை கொண்ட குழுவின் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதன்போது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்திலுள்ள குறைப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டு, ’20’ எவ்வாறு அமைய வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

பரிந்துரை அறிக்கை பிரதமரிடம் நாளை (15) கையளிக்கப்படும் என மேற்படி குழுவின் தலைவர் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

குழு உறுப்பினர்கள் விரம்

1.  அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்
2.  அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பில
3.  அமைச்சர் மொஹமட் அலி சப்ரி
4.  அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
5.  அமைச்சர் விமல் வீரவன்ச
6.  இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
7.  இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்
8.  பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா
9.  பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ.தொலவத்த

மத்திய மாகாணத்தில் 56 மசாஜ் நிலையங்கள்! ஊவாவில் 32!!

நாடு முழுவதிலும் 719 மசாஜ் நிலையங்கள் இயங்குகின்றமை கண்டறியப்பட்டுள்ளதோடு, அதில், 108 மசாஜ் நிலையங்கள் நுகேகொடையிலும் திருகோணமலை, நிக்கவரெட்டிய, மொனராகலை மற்றும் பதுளை ஆகிய நகரங்களில் தலா இவ்விரண்டு மசாஜ் நிலையங்களும் உள்ளனவென, புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கில், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய நகரங்களில் எந்தவொரு மசாஜ் நிலையமும் இல்லை. அதேபோல, கிழக்கு மாகாணத்தில் 13 மசாஜ் நிலையங்கள் மட்டுமே உள்ளன. அதில், மட்டக்களப்பில் 6 நிலையங்களும் அம்பாறையில் 5 நிலையங்களும் திருகோணமலையில் இரண்டு நிலையங்களும் உள்ளன. கந்தளாயில் எந்தவொரு நிலையமும் இல்லையென, அந்த புள்ளிவிவரத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் பதிவு செய்யப்பட்டுள்ள மசாஜ் நிலையங்கள் தொடர்பான தகவல்களை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ், பொலிஸ் திணைக்களத்திடம் தமிழ் மிரர் கோரியிருந்தது. 2019ஆம் ஆண்டின் இறுதிவரையிலான காலப்பகுதியில் கிடைத்த தரவுகளிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறியும் உரிமைச் சட்டத்துக்கு முரணாக, கோரப்பட்ட மொழியில் தகவல்களை வழங்காது, சிங்கள மொழியில் வழங்கப்பட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில், தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் மசாஜ் நிலையங்களின் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் 719 மசாஜ் நிலையங்கள் காணப்படுகின்றன. வடக்கு மாகாணத்தில் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ள எந்தவொரு மசாஜ் நிலையங்களும் இல்லை.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் நாட்டிலுள்ள மொத்த மசாஜ் நிலையங்களின் எண்ணிக்கையில் 2 சதவீதத்துக்கும் குறைவான மசாஜ் நிலையங்களே காணப்படுகின்றன.

இதன்படி, கிழக்கு மாகாணத்தில் 13, ஊவா மாகாணத்தில் 32, சப்ரகமுவ மாகாணத்தில் 36, வடமேல் மாகாணத்தில் 49, மத்திய மாகாணத்தில் 56, வடமத்திய மாகாணத்தில் 60, தென் மாகாணத்தில் 119, மேல் மாகாணத்தில் 354 மசாஜ் நிலையங்களும் காணப்படுகின்றன. நாட்டிலுள்ள மொத்த மசாஜ் நிலையங்களில் சுமார் 50 சதவீதமான மசாஜ் நிலையங்கள் மேல் மாகாணத்திலேயே காணப்படுகின்றன, அந்தத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நன்றி – தமிழ்மிரஸ்

பா.நிரோஷ்

2019 இல் சிறுதோட்டங்களில் தேயிலை உற்பத்தியில் அதிகரிப்பு!பெருந்தோட்டங்களில் வீழ்ச்சி!!

பெருந்தோட்டத்துறையைவிட சிறுதோட்டங்களில் தேயிலை உற்பத்தி 2019ஆம் ஆண்டு கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக 2019ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டிறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் தேயிலை உற்பத்தியில் அவதானிக்கப்பட்ட கீழ் நோக்கிய போக்கானது 2019 ஆம் ஆண்டிலும் தொடர்ந்துள்ளது. உள்நாட்டில் தேயிலை உற்பத்திக்கு ஏற்பட்ட பாதகமான காரணிகளின் அடிப்படையிலேயே தேயிலை உற்பத்தி கீழ் நோக்கி நகர்ந்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் இலங்கையில் 300.1 மில்லியன் தேயிலை கி.கிராம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அது அதன் முந்தை ஆண்டுடன் ஒப்பிடுகையில், 1.3 சதவீதம் குறைவாகும். கூலி பேச்சுவார்த்தையின் போது (கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை) எழுந்த தொழிலாளர் பிரச்சினைகள் மற்றும் ஆண்டின் முதல் அரைப்பகுதியில் நிலவிய வறட்சியும் கடேசி காலாண்டில் நிலவிய பலத்த மழையுமே தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் உயர் நில தேயிலை உற்பத்தியானது 63.1 மில்லியன் கி.கிராமாக உள்ளது. இது அதன் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.0 சதவீதம் வீழ்ச்சியாகும். அதேபோன்று மத்திய நில தேயிலை உற்பத்தியானது 47.2 கி.கிராம் மில்லியனாகும். இதுவும் 0.1 சதவீதத்தால் வீழ்ச்சிக்கண்டுள்ளது. தாழ்நில தேயிலை உற்பத்தி 2019இல் 189.9 மில்லியன் கி.கிராம் வீழ்ச்சிக்கண்டுள்ளது.

என்றாலும் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்டத்துறையைவிட சிறுதோட்டங்களில் தேயிலை உற்பத்தி கணிசமாக 2019இல் அதிகரித்துள்ளது. தேயிலை செடிகள் மீள் நடுகை, நிரப்பல் நடுகை மற்றும் சிறந்த வேளாண்மை நடைமுறைகள் மூலமாக சாத்தியமாகியுள்ளது. தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் கொழும்பு ஏலத்தில் வர்த்தகம் செய்யப்பட்ட தேயிலையின் அளவும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள தேயிலையின் அளவும் 2019ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் 2018ஆம் ஆண்டு தேயிலை கி.கிராமின் பெறுமதி 5.1 டொலர்களாக இருந்துள்ள அதேவேளை, 2019இல் 4.6 டொலர்களாக இருந்துள்ளது. இது 9.1 சதவீத வீழ்ச்சியாகும். கொழும்பு ஏலச் சந்தையில் 2018 இல் தேயிலை கி.கிராம் 581.58 ஆக காணப்பட்டுள்ளதுடன், 2019இல் 547.67 சதவீதமாக காணப்பட்டள்ளது.

தேயிலை ஏற்றுமதி வருவாயை அதிகரிப்பதற்கு இத்துறையில் பெறுமதிக் கூட்டலை மேம்படுத்தல், பண்டகசாலை, பொதியிடல் வசதிகளை மேம்படுத்தல் மற்றும் நுகர்வோர் வரையிலான பெறுமதி சங்கிலியை அதிகரிக்க வேண்டுமென மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் – எஸ்.நிஷாந்தன்

எயார்டெல் லங்காவின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷீஸ் சந்திரா நியமனம்

எயார்டெல் லங்கா நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் அஷீஸ் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் எயார்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. தனது புதிய பங்களிப்பின் ஊடாக, இலங்கை சந்தையில் எயார்டெலின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த அஷீஸ் தனது பதவியை பயன்படுத்தி பிரமாண்டமான தொழில்நுட்ப வலைப்பின்னல் மற்றும் நவீன டிஜிட்டல் தளத்தை மேம்படுத்த முடியுமென நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய நியமிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த பாரதி எயார்டெல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான (இந்தியா மற்றும் தெற்காசியா) கோபால் விட்டால், ‘எதிர்கால மேம்பாட்டிற்காக பலமான தளத்தை உருவாக்கியுள்ள எயார்டெல் லங்கா நிறுவனத்திற்கு, அஷீஸை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். உலக தரத்தில் சேவைகளுக்குள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவது என்ற எயார்டெல்லின் எண்ணக்கருவிற்கு அஷீஸிடம் உள்ள அனுபவம் அதிக பெறுமதியை சேர்க்குமென நான் நம்புகின்றேன். அதன்படி, எதிர்வரும் மாதங்களில் எயார்டெலினால் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான புத்தாக்கங்கள் பலவற்றை அனுபவிக்க முடியுமாகும். அஷீஸ் மற்றும் அவரது குழுவினருக்கு சிறந்த எதிர்காலம் அமையவேண்டுமென பிரார்த்திக்கிறேன்.’ என அவர் தெரிவித்துள்ளார்.

அஷீஸூக்கு இந்திய தொலைத்தொடர்பு துறையில் இரண்டு தசாப்த காலத்திற்கும் அதிகமான அனுபவம் உள்ளது. அவர் இந்தியாவிலுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பலவற்றில் தலைமைத்துவ பதவிகளை வகித்துள்ளார். எயார்டெல் லங்காவில் இணைவதற்கு முன்னர் அவர் வொடாஃபோன் ஐடியா நிறுவனத்தில் (Vadafone Idea Limited) (உத்திர பிரதேசம் மற்றும் உத்தர்கண்ட்) வர்த்தக பிரதானியாகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.

இந்தியாவின் மெல்வியா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில்முறை பொறியியல் பட்டம் பெற்ற அஷீஸ் சந்திரா, முகாமைத்துவம் தொடர்பாக பொடார் முகாமைத்துவ நிலையத்தில் MBA பட்டமும் பெற்றுள்ளார். மேலும் லொசேனிலுள்ள IMD Business School, அகமதாபாத்திலுள்ள IIM மற்றும் ஹைதராபாத்திலுள்ள Indian School of Business ஆகிய கல்வி நிறுவனங்களிலும் தலைமைத்துவ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bharti Airtel Lankaவை பற்றி
2009 ஜனவரி 12ஆம் திகதி இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் (எயார்டெல் லங்கா) நிறுவனம் தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும். தமது வணிக செயற்பாடுகளை ஆரம்பித்த 2009ஆம் ஆண்டிலிருந்து 3 வருட குறுகிய காலப்பகுதிக்குள் எயார்டெல் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்த சேவையை வழங்கியதோடு இன்று நாடு முழுவதிலும் தமது சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு www.airtel.lk என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்.

விவசாய உபகரணங்களுக்காக விசேட லீசிங் கொடுப்பனவை வழங்க பிரவுன்ஸ் நிறுவனத்துடன் இணையும் HNB

இலங்கையின் முன்னணி தனியார் பிரிவு வங்கியான HNB, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவன துறையினரின் பயன்பாட்டிற்காக எடுக்கப்படும் விவசாய இயந்திர உபகரணங்களுக்காக வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான நன்மைகளுடன் கூடிய அவர்களால் செலுத்தக் கூடிய விலைக்கு விசேட லீசிங் பெகேஜ் ஒன்றை வழங்குவதற்காக Brown & Company PLC உடன் கைகோர்த்துள்ளது.

இந்த கூட்டணியின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு TAFE & Massey Ferguson டிரக்டர், Yanmar World & Sumo Branded combine ஹாவெஸ்டர் மற்றும் Crop dusters இயந்திரங்களுக்காக விசேட கழிவு மற்றும் சலுகைகளையும் வழங்குகிறது. HNBஇன் தனியார் நிதி சேவைகள் பிரதானி, காஞ்சன கருணாகம மற்றும் பிரன்வுன்ஸ் அக்ரிகல்சர்ஸின் பொது முகாமையாளர் சஞ்ஜேய் நிஸ்ஸங்க ஆகியோர் இந்த கூட்டணியை பலப்படுத்துவதற்காக Browns TAFEஇன் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டனர்.

‘நாம் இந்த நாட்டின் ஆசீர்வாதமாக பரந்து காணப்படும் இயற்கையை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் இலங்கையிலுள்ள விவசாயிகளுக்கு தரமான வாகனங்கள், விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் இருக்க வேண்டியது அவசியம். பிரவுன்ஸ் நிறுவனத்தினால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இந்த கூட்டணியின் மூலம் எமது நம்பிக்கையை வென்ற வாடிக்கையாளர்கள் அவர்களது வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தங்களால் செலுத்தக் மலிவு விலை, வட்டி விகிதம் மற்றும் சேவைகளை பெற்றுக் கொடுக்க முடியுமென நாம் எதிர்பார்த்துள்ளோம்.’ என HNBஇன் தனிப்பட்ட நிதி சேவைகள் பிரதானி, காஞ்சன கருணாகம தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டணியின் மூலம் Massey Ferguson & TAFE இலச்சினையுடைய விவசாய இயந்திர உபகரணங்களுக்காக விசேட கழிவு HNB லீசிங் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுகிறது. அத்துடன், வாடிக்கையாளர்களுக்கு மோட்டார் வாகன உற்பத்தி, வாகன சரிபார்க்கும் வசதிகள், உதிரிப்பாகங்கள், டயர் மற்றும் பெற்றறிகளுக்காக விசேட கழிவுகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய HNB Prestige Prime அட்டை வழங்கப்படுவதுடன் இந்த கடன் அட்டைக்கு முதல் வருடத்தில், வருடாந்திர கட்டணம் அறவிடப்பட மாட்டாது.

‘145 வருடங்களுக்கு மேலான நன்மதிப்புள்ள வரலாற்றைக் கொண்ட, பிரவுன்ஸ் நிறுவனம் சிறந்த தரத்திலுள்ள இயந்திர உபகரணங்கள் மட்டுமன்றி ஒப்பிட முடியாத விற்பனைக்கு பின்னரான சேவைகளை வழங்கி துறையில் நம்பிக்கையான சேவை வழங்குனர் என்ற இடத்தைப் பெற்றுள்ளது. 1952இல் பிரவுன்ஸ் அக்ரிகல்சர் பிரிவு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வாத விவாதங்களுடன் துறையின் வர்த்தக முன்னோடிகளான நாம் எப்பொழுதும் வாடிக்கையாளர்களுடன் உள்ள எமது உறவினை மிகவும் பெறுமதி வாய்ந்ததாக கருதுகின்றோம். நாம் HNB உடன் ஏற்படுத்திக் கொண்ட இந்த கூட்டணியின் ஊடாக மலிவான லீசிங் தீர்வு மற்றும் ஏனைய சலுகைகள் பலவற்றை பெற்றுக் கொடுத்து வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிறந்த சேவையை பெற்றுக் கொடுக்க சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக நாம் நம்புகின்றோம்.’ என பிரவுன்ஸ் அக்ரிகல்சர் நிறுவனத்தின் பொது முகாமையாளர் சஞ்ஜய நிஷ்ஷங்க தெரிவித்துள்ளார்.

மூலோபாய தீர்வுகளை வழங்குபவரான பிரவுன்ஸ் நிறுவனம் எப்பொழுதும் சந்தைத் தேவைகளை புரிந்து கொண்டு அதன்படி தமது உற்பத்தி குழுமத்தை விஸ்தரிக்கின்றது. அதன்படி தற்போது உச்ச அளவு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட நவீன விடயங்களுடன் கூடிய பிரிவான உற்பத்தி பரப்பினை தேர்ந்தெடுப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

பிரவுன்ஸ் பி.எல்.சி. நிறுவனம் அனைத்து டிரக்டர் மாதிரிகளுக்கும் இலவச பதிவு, மற்றும் வீட்டு வாசலுக்கே வந்து மேற்கொள்ளும் நான்கு சேவைகளை விளம்பர ஊக்குவிப்பு காலப்பகுதியின் போது வழங்கும். Massey Ferguson டிரக்டர்களுக்காக 12 மாதங்கள் அல்லது 1000 மணித்தியால உத்தரவாதமும் TAFE டிரக்டர்களுக்கு 24 மாதங்கள் அல்லது 2000 மணித்தியால உத்தரவாதமும் பெற்றுக் கொடுக்கின்றது.

(இடமிருந்து: பிரவுன்ஸ் அக்ரிகல்சரின் நடவடிக்கைகள் சேவை முகாமையாளர், என்டன் பெரேரா, பிரவுன்ஸ் அக்ரிகல்சரின் வர்த்தக மேம்பாட்டு முகாமையாளர், ச்சானக்க சந்திரசேகர, பிரவுன்ஸ் அக்ரிகல்சரின் பிரதி பொது முகாமையாளர் நியாஸ் அஹமட், பிரவுன்ஸ் அக்ரிகல்சரின் பொது முகாமையாளர் சன்ஜய நிஷ்ஷங்க, HNBஇன் தனியார் நிதி சேவைகள் பிரதானி, காஞ்சன கருணாகம, HNBஇன் லீசிங் தொடர்பான சிரேஷ்ட முகாமையாளர் நிலுக அமரசிங்க, HNBஇன் லீசிங் தொடர்பான துணை முகாமையாளர் ரொஷான் டி சில்வா மற்றும் HNBஇன் வர்த்தக மேம்பாட்டு நிறுவேற்று அதிகாரி (HNB Leasing), மஹேஷ் ரத்நாயக்க ஆகியோர் படத்தில் இருப்பதைக் காணலாம்.

 

‘உலகளவில் ஒரே நாளில் 3 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு கொரோனா’

உலகளவில் நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் நேற்று பதிவானதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி நேற்று மாத்திரம் புதிதாக 3 இலட்சத்து 7 ஆயிரத்து 930 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவத்துள்ளது.

அதேவேளை,உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 28 ஆயிரத்தை லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 28ஆயிரத்து 200 ஐ கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 91 லட்சத்து 84 ஆயிரத்து 740 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 72 லட்சத்து 25 ஆயிரத்து 662 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 479  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 2 கோடியே 10லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

இரத்தினபுரியில் 8 மாதங்களில் 4,447 போதை வழக்குகள்! 1,095 பேர் கைது!

இவ்வாண்டின் கடந்த எட்டு மாதங்களில் இரத்தினபுரி மாவட்டப் பொலிஸ் பிரிவுகளிலிருந்து 4447 போதை வஸ்த்துக்கள் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டுள்ளதுடன் இவற்றுடன் சம்பத்தப்பட்ட 1095 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இரத்தினபுரி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
 
இரத்தினபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பான தகவல்களை ஊடகவியலாளர்களுக்கு வழங்கும்போதே அதிகாரிகள் இத்தகவல்களை தெரிவித்தனர்.
 
கஞ்சா, கஞ்சா செடிகள், ஹெரோயின் , கசிப்பு கோடா ஆகிய போதைப் பொருட்கள் இக்கால பகுதியில் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

‘பெருந்தோட்ட தொழிலாளர்களை அரசு கைவிடாது’ – பவித்ரா

இரத்தினபுரி மாவட்டத்தில் அதி கூடுதலான விருப்பு வாக்குகளை வழங்கி என்னை மதித்த மக்களுக்கு எனது சேவை காலத்தில் அர்ப்பணித்து பணியாற்றுவேன். அத்துடன், மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது.

” நீங்கள் வழங்கியுள்ள அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி இந்நாட்டை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றும் வரை எதிர்க்கட்சிகளின் தலைவர்களான சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு மீண்டும் இந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை நினைத்துப் பார்க்கவும் இடமளிக்கமாட்டோம்.

தேர்தல் காலங்களில் பல்வேறு விநோதமான சில உரைகளை நாங்கள் செவிமடுத்தோம். ஒரு சில கொரோனா நோயாளிகளுக்காக நாட்டு மக்களுக்கு ஊரடங்குச் சட்டம் போட்டு கஷ்டப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என ஐக்கிய மக்கள் க ட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மேடைகளில் பிரசாரம் செய்தார்.

தேர்தல் மேடைகளில் கொரோனா நோயாளர்கள் இந்த மருந்தை தான் அருந்த வேண்டும் எனப் பிரசாரம் செய்தார்.இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்த மருந்தை அருந்த வேண்டாம் எனக்கூறி இன்னொரு மருந்து வகையை அருந்துமாறு கூறினார்.இந்த வகையான நகைப்புக்கிடமான விடயங்களில் பொது மேடைகளில் பேசுவோரால் எவ்வாறு நாட்டை ஆள முடியும்.

பாராளுமன்ற தேர்தல்களிலும் நீங்கள் இம்மாவட்டத்தில் என்னை முதன்மை விருப்பு வாக்குகளால் வெற்றி பெறச்செய்து கெளரவம் படுத்தினீர்கள்.எனவே உங்கள் சேவைக்காக நான் என்னை அர்ப்பணித்து சேவையாற்றுவேன்.

இரத்தினபுரி மாவட்டத்திலும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான அரசியல் தலைமைத்துவத்தை அரசாங்கம் வழங்கும்.” – என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

‘கடல் கடந்த இந்தியக் குடியுரிமை’ – இந்திய அரசுக்கு இதொகா நன்றி!

0
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் கடல் கடந்த இந்தியக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையை இலகுபடுத்தியுள்ள இந்திய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற...

வரலாறு படைத்த தமிழக தேர்தல்: 84,29 சதவீத வாக்கு பதிவு!

0
2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணிக்குப் பின் டோக்கன்...

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்கும் படகுகளை அழிக்க ட்ரம்ப் உத்தரவு!

0
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு அருகிலுள்ள முக்கிய கடல் பகுதியில் சிறிய ரக படகுகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தயக்கமின்றி...