Home Blog Page 3861

ஐ.தே.க. பிரதித் தலைவராக ருவான்? பொருளாளர் பதவிகளுக்கும் இன்று உறுப்பினர் தேர்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தன இன்று (14) நியமிக்கப்படக்கூடும் என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மத்தியசெயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.

இதன்போது பிரதித் தலைவர், பொருளாளர் மற்றும் தவிசாளர் பதவிகளுக்கு வாக்கெடுப்பின்றி உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர் என அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவராக செயற்பட்ட சஜித் பிரேமதாச, பொருளாளர் பதவியை வகித்த ஹர்ஷ டி சில்வா, தவிசாளர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியாக செயற்படுகின்றனர். இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே புதியவர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

கட்சியின் தொழிற்சங்க பிரிவுகள், மகளிர் அணி, இளைஞர் அணி மற்றும் ஊடகப்பிரிவு ஆகியவற்றை பலப்படுத்துவதற்கான பொறுப்பு பிரதித் தலைவரிடம் கையளிக்கப்படவுள்ளது என்றும், அதற்கான கால எல்லை டிசம்பர் மாதம்வரை வழங்கப்படும் எனவும் சிறிகொத்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

இப்பணிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்யும் பட்சத்தில் 2021 ஜனவரியில் ஐ.தே.கவின் புதிய தலைவராக ருவான் விஜேவர்தன தெரிவுசெய்யப்படுவார் எனவும் அறியமுடிகின்றது.

தேசியப்பட்டியல் உறுப்பினருக்கான தேர்வும் இடம்பெறும்.

வடிவேலுவின் வாழ்விலும் ‘சகுனி’!

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்ளுக்கு நன்றி கூறி நகைச்சுவை நடிகர் வடிவேலு காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

” செப்டம்பர் 12 என்னுடைய பிறந்தநாள். நான் வந்து தினமும் மக்களை சிரிக்க வைக்கணும் தினமும் நான் பிறந்து கொண்டு தான் இருக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் நகைச்சுவை செல்வமாக நான் பிறந்துகொண்டிருக்கிறேன். முதலில் நான் எனது அம்மாவுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். என் குல சாமியை கும்பிட்டுக்கிறேன்.

இவ்வளவுக்கும் காரணம் மக்கள் சக்திதான். மக்கள் சக்தி இல்லாமல் இந்த வடிவேலு கிடையாது. இன்னும் சொல்லப் போனால் எங்க அம்மா என்னை பெற்றெடுக்கவில்லை என்றால் நானே கிடையாதுனு வச்சுக்குங்களேன். எங்க அம்மாவுக்குப் பிறகு மக்கள் தான். அந்த மக்களால் தான் நான் மக்களை சிரிக்க வச்சுகிட்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இன்னொரு கேள்விகூட நீங்கள் கேட்கலாம். என்ன கேட்கலாம், ஏன் இவரு இன்னும் நடிக்காம இருக்காரு? ஏன் ஏன் நடிக்கமாட்டிங்கறீங்கனு கேட்கலாம். ஒன்னுமே இல்ல. சீக்கிரம் ஒரு மிகப்பெரிய அருமையான ஒரு எண்ட்ரியோட நான் வருவேன். வாழ்க்கைன்னா எங்க இருந்தாலும் ஒரு சகுனி இருக்கத்தான் செய்யும். அது எல்லார் வாழ்க்கையிலும் உண்டு.

அது என் வாழ்க்கையில் இல்லாமல் இருக்குமா? அங்கங்க அங்கங்க ரெண்டுரெண்டு இருக்கத்தான் செய்யும் என்று நகைச்சுவையுடன் கூறினார்.

8 ஆண்டுகளாக வெற்றிநடை போடும் ‘போடைஸ் சிங்கப் பெண்கள்’!

தேசிய விளையாட்டு விழாவில் தொடர்ந்து எட்டு வருடங்களாக ‘போடைஸ் உதைப்பந்தாட்ட மகளிர் அணி’ நுவரெலியா மாவட்ட சாம்பியனாக தெரிவாகியுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சால் வருடாந்தம் நடாத்தப்படும் தேசிய விளையாட்டு விழாவில் கடந்த எட்டு வருடங்களாக பிரதேச மற்றும் மாவட்ட ரீதியில் சாம்பியனாக திகழ்கின்றது போடைஸ் அணி. கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற போட்டியிலும் வெற்றிவாகை கூடியது.

2013 ஆம் ஆண்டு மாகாண மட்ட போட்டியில் மத்திய மாகாண சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்ட போட்டியில் பங்குப்பற்றியிருந்தனர் ,

கடந்த நான்கு வருடங்கள் ( 2016, 2017 ,2018 , 2019 ) மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தை தக்க வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது .

மலையக இளைஞர்கள் தேசிய மற்றும் சர்வதேச ரீதீயில் சாதனை படைக்க இவ்வாறான போட்டிகளின் மூலமே வாய்ப்பு இருக்கின்றது.

எனவே எமது இளைஞர் யுவதிகள் சாதனைகள் படைக்க அவர்களுக்கு தேவையான வளங்கள் பகிரப்பட வேண்டும் . இவர்களுக்கு தேவையான வளங்களும் பயிற்சிகளும் வழங்கும் பட்சத்தில் தேசிய மற்றும் சர்வதேச சாதனை என்பது மிக தூரத்தில் இல்லை என்பதே நிதர்சனம்.

போடைஸ் மகளிர் அணியின் வெற்றிகளுக்கு வாழ்த்துகள்.

தோட்ட தொழிலாளர் பிரச்சினை – ஹட்டனில் நாளை உயர்மட்ட பேச்சு!

ஹட்டன், செம்புவத்த தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தையொன்று ஹட்டன் உதவி தொழில் ஆணையாளர் காரியாலயத்தில் நாளை 14 முற்பகல் 10 மணியளவில் இடம்பெற உள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளர் சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஹட்டன் ஸ்டெதர்டன் தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 11 ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் தொடர்பாக தோட்டத் தொழிலாளர்கள் தொழிலாளர் தேசிய சங்கம் ,மலையக தொழிலாளர் முன்னணி ஆகிய தொழிற்சங்கங்களின கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

இதனைத் தொடர்ந்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பாக மாநில இயக்குனர் மருத வீரன் ,உதவி பிரதிநிதி மகாலிங்கம் , மலையக தொழிலாளர் முன்னணியின் தொழிலுறவு அதிகாரி மாரிமுத்து ஆகியோர் தோட்டத்துக்கு விஜயம் செய்து தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்கள்.

இவ்விடயம் தொடர்பாக ஹட்டன் உதவி தொழில் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து தோட்ட நிர்வாகத்தினர் ,தொழிற்சங்க பிரதிநிதிகள் ,தொழிலாளர் தலைவர்கள் ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டெதர்டன் தோட்டத் தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு :

தொழிலாளர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத வகையில் தோட்டம் முறையாக பராமரிக்க வேண்டும்.

கொழுந்து பறிப்பதற்கு ஏனைய தோட்டங்களிலிருந்து தொழிலாளர்களை வரவழைக்க கூடாது.

கொழுந்து பறிப்பதற்கு இயந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது.

தற்காலிகத் தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழில் வழங்க வேண்டும்.

கொழுந்து மலைகளை வெளி ஆட்களுக்கு வழங்கக் கூடாது.

தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக தோட்ட நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் மாதம்தோறும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

கூட்டு ஒப்பந்த சரத்துக்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தோட்டத் தொழிலாளர் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு உரிய வகையில் செயல்படாவிட்டால் தோட்ட முகாமையாளர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.

பத்தன சந்தியில் விபத்து! பாடசாலை மாணவர்கள் உட்பட எழுவர் காயம்!!

நுவரெலியா -அட்டன் வீதியில் பத்தன சந்தியிலுள்ள பஸ்தரிப்பிடத்தில் ஆட்டோவொன்று இன்று (13.09.2020) பிற்பகல் 3.30 மணியளவில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில்  பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட ஏழுபேர் காயமடைந்துள்ளனர்.

ஆட்டோவில் பயணித்த மூவரும், பேருந்துக்காக பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த நால்வருமே காயமடைந்த நிலையில் சிகிச்கைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரபத்தனயிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஆட்டோவொன்றே வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பஸ் தரிப்பிடத்தில் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனது.

அவ்வேளையில் பஸ் தரிப்பிடத்தில் பாடசாலை மாணவர்கள் மூவரும், பெண்ணொருவரும் பஸ்சுக்காக காத்திருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தால் பஸ்தரிப்பிடத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது, திம்புள்ள – பத்தன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

க.கிசாந்தன்

அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில் முற்போக்கு கூட்டணி பரீசிலினை!

அரசியலமைப்பின்  20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்திடம் முன் மொழிவுதிட்டமொன்றை முன்வைப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி உத்தேசித்துள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதற்காக அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள ’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஆராய்ந்துவரும் தமிழ் முற்போக்கு கூட்டணி, அது தொடர்பில் மலையக புத்திஜீவிகள் மற்றும் சட்டநிபுணர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கிவருகின்றது.

அந்தவகையில் ’20’ எவ்வாறு அமையவேண்டும், அதில் எவ்வாறான மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் போன்ற விடயங்களையே கூட்டணி, முன்மொழிவாக முன்வைக்கவுள்ளது.

அதேவேளை, மலையக மக்கள் தொடர்பில் சில விசேட கோரிக்கையையும் அரசாங்கத்திடம் முற்போக்கு கூட்டணி முன்வைக்கவுள்ளது. இவற்றுக்கு அரசாங்கம் வழங்கும் பதில்களை அடிப்படையாகக்கொண்டே ’20’ தொடர்பில் கூட்டணியின் அரசியல் உயர்பீடம்கூடி இறுதி முடிவை எடுக்கும் என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

முற்போக்கு கூட்டணியின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்கும்பட்சத்தில் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் விதத்தில் ’20’ஐ ஆதரிக்ககூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

‘மலையக மக்கள் முன்னணியை பலப்படுத்துவேன்’ – புதிய செயலாளர் சபதம்

மலையக அரசியல் வரலாற்றில் ஒரு பேராசிரியர் கட்சியின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை மலையக கல்வி கற்ற சமூகத்திற்கு கிடைத்த ஒரு கௌரவமாகவே கருதுகின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான சங்கரன் விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்ட பின்பு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்

மலையக அரசியல் வரலாற்றில் பல கட்சிகளிலும் சமூகத்தில் பல்வேறு தரப்பினர் கட்சியின் உயர் பதவிகளில் பதவிவகித்துள்ளனர்.ஆனால் ஒரு கட்சியின் செயலாளராக ஒரு பேராசிரியர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.இது மலையக அரசியல் வரலாற்றில் ஒரு வரலாறாக அமைந்துள்ளது.

கடந்த காலங்களில் மலையக அரசியல் கல்வி கற்றவர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக பேசப்பட்ட பொழுதும் அது நடைமுறைக்கு வரவில்லை.ஆனால் மலையக மக்கள் முன்னணியின், தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் பாராளுமன்ற தேர்தலின் பின்பு கட்சி மறுசீரமைக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

அதே நேரம் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமாக இருந்த ஏ.லோரன்ஸ் தனது உடல் நிலை காரணமாக அந்த பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாத ஒரு நிலை இருப்பதாகவும் தொடர்ந்தும் கூறி வந்த நிலையில் நான் கட்சியின் செயலாளர் நாயகமாக ஏகமனதாக கட்சியின் கவுன்சில் உறுப்பினர்கள் கட்சியின் உயர் பீடம் ஆகியவற்றால் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.என்னை தெரிவு செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

என்னை பொறுத்த அளவில் நான் மலையக மக்கள் முன்னணியில் 1994 ஆம் ஆண்டு முதல் ஒரு உறுப்பினராக இணைந்து இன்று வரை கட்சியின் பல பதவிகளை வகித்து இன்று செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.நான் கட்சியின் வளர்ச்சிக்காகவும் அதன் முன்னேற்றத்திற்காகவும் என்னை அர்ப்பணித்து சேவை செய்திருக்கின்றேன்.

கட்சி பல இக்கட்டான நிலைமைகளை சந்தித்த பொழுதும் நான் கட்சியை விட்டு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வெறிறேவில்லை.எங்களுடைய கட்சியை ஒரு காலகட்டத்தில் ஒரு பயங்கரவாத அமைப்பாகவே பார்த்த காலம் உண்டு.ஆனால் நாங்கள் என்றுமே ஜனநாயக பாதையை விட்டு விலகவில்லை. நானும் எந்த ஒரு நிலையிலும் கட்சியைவிட்டு வெளியேறவில்லை. ஒரு கொள்கையுடன் இந்த கட்சியிலேயே எனது அரசியல் பயணத்தை தொடர்ந்தேன்.

இன்று நான் கட்சியின் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருக்கின்றேன் என்றால் அதற்கு காரணம் கட்சியும் அதன் தலைமைத்துவமும் என்மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கை என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த கட்சியை எதிர்காலத்தில் மலையகத்தில் மட்டுமல்லாது இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு செய்வதற்கு என்னை அர்ப்பணித்து தொடர்ந்தும் சேவை செய்வேன் எனவும் செயலாளர் நாயகம் சங்கரன் விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

மஸ்கெலியாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் மண்ணுக்குள் புதையுண்டு மரணம்

மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் பாதுகாப்பற்ற முறையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மணிமேடு சரிந்து வீழ்ந்ததில் மண்ணுக்குள் புதையுண்டு நேற்றிரவு (12.09.2020) உயிரிழந்துள்ளார்.

பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் புளூம்பீல்ட் பிரிவைச்சேர்ந்த சுப்ரமணியம் அமிலசந்திரன் (வயது -29) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

தேயிலை மரங்களைப் பிடுங்கி, பாதுகாப்பற்ற முறையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில்ஈடுபட்டுக்கொண்டிருக்கையிலேயே மண்மேடு சரிந்ததால் அவர் மண்ணுக்குள் புதையுண்டு பலியானார் எனவும், தலையின்மேல் பகுதி மட்டுமே வெளியில் தெரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் தொழில் புரியும் குறித்த நபர் நேற்றிரவே வீட்டுக்கு வந்துள்ளார், அதன்பின்னர் மாணிக்கக்கல் அகழப்போவதாக மனைவியிடம் கூறிவிட்டு இரவு 9 மணிக்கு வீட்டைவிட்டுச்சென்றுள்ளார்.

பொழுதுவிடிந்தம் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடிச்சென்றபோதே அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவருக்கு இரண்டு வயதில் குழந்தையொன்றும் உள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மஸ்கெலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

க.கிசாந்தன், கே. சுந்தரலிங்கம்

‘பட்ஜட்’டுக்கு முன்னர் அமைச்சரவை மாற்றம்! எதிரணி எம்.பிக்களுக்கும் அதிஷ்டம்!!

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது என ‘திவயின’ வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இதன்போது அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது.

அரசியலமைப்பு திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அமைச்சரவை அமைச்சு பதவிகள் 30 க்குள் மட்டுப்படுத்தும் பிரிவு நீக்கப்படும். அதன் பின்னர் ஜனாதிபதியின் விருப்பத்திற்கமைய விரும்பிய எண்ணிக்கையிலான அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமித்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஹட்டனில் களப்பயணம் மேற்கொண்டு உடன் தீர்வுகளை வழங்கிய ஜீவன்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அட்டன் நகர் பகுதிக்கான கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார்.

அத்துடன், நகரப்பகுதியில் நிலவும் குறைப்பாடுகளையும் மக்கள், நகரசபை அதிகாரிகள் ஊடாக கேட்டறிந்துகொண்டார். அவற்றுக்கான தீர்வுகளை கூடியவிரைவில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

இராஜாங்க அமைச்சராக கடமையேற்ற பின்னர் கண்காணிப்பு மற்றும் களப்பயணங்களை மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வுகளை முன்வைத்து வரும் ஜீவன் தொண்டமான் இதன் ஓர் அங்கமாக அட்டன் நகருக்கு சென்றிருந்தார். இதன்போது மக்கள் மற்றும் வர்த்தகர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

குறிப்பாக ஞாயிறு சந்தைத்தொகுதி கட்டிடத்தொகுதிக்கு சென்றிருந்த இராஜாங்க அமைச்சர், இங்கு நிலவும் குறைப்பாடுகளையும் நிவர்த்தி செய்வதறகு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கினார்.

அதேபோல ஞாயிறு சந்தைத்தொகுதி மற்றும் அட்டன் பஸ் தரிப்பிடத்திலுள்ள பொதுமலசலக்கூடங்களை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு நகரசபை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

அதேவேளை, அட்டன் நகரில் குப்பை பிரச்சினையென்பது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது, முறையாக குப்பைகள் அகற்றப்படுவதில்லை எனவும் ஜீவன் தொண்டமானிடம் மக்கள் முறையிட்டனர், அதற்கான நடவடிக்கையும் நிச்சயம் மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் உறுதி வழங்கினார்.

க.கிசாந்தன்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

‘கடல் கடந்த இந்தியக் குடியுரிமை’ – இந்திய அரசுக்கு இதொகா நன்றி!

0
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் கடல் கடந்த இந்தியக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையை இலகுபடுத்தியுள்ள இந்திய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற...

வரலாறு படைத்த தமிழக தேர்தல்: 84,29 சதவீத வாக்கு பதிவு!

0
2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணிக்குப் பின் டோக்கன்...

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்கும் படகுகளை அழிக்க ட்ரம்ப் உத்தரவு!

0
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு அருகிலுள்ள முக்கிய கடல் பகுதியில் சிறிய ரக படகுகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தயக்கமின்றி...