Home Blog Page 3873

படுதோல்விக்கு மத்தியில் 75ஆவது ஆண்டில் காலடி வைக்கும் ஐ.தே.க.!

இலங்கையில் 4 நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் மற்றும் 7 பிரதமர்களை உருவாக்கிய பழமையான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி நாளை 6ஆம் திகதி 74ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடவுள்ளது. இதற்காக சிறிகொத்தவில் சர்வமத வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

1994 ஆம் ஆண்டு முதல் 26 வருடங்களாக ஐ.தே.கவின் தலைவராக செயற்படும் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின்கீழ்தான் 75ஆவது ஆண்டிலும் அக்கட்சி காலடிவைக்கின்றது. எனினும், இம்முறை தலைமைப்பதவியில் மாற்றம் ஏற்படுவது உறுதியென ஐ.தே.க. உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

1946 ஆம் ஆண்டு டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியானது 1947 முதல் 2020 வரை இலங்கையில் நடைபெற்றுள்ள 16 நாடாளுமன்றத் தேர்தல்களில் 8 இல் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. அத்துடன், 8 ஜனாதிபதி தேர்தல்களில் மூன்றில் வெற்றிவாகை சூடியுள்ளது.

எனினும், நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வரலாறுகாணாத பின்னடைவு ஏற்பட்டது.வாக்களிப்புமூலம் ஒரு உறுப்பினர்கூட தெரிவாகவில்லை. தேசியப்பட்டியல் ஊடாகவே ஓர் ஆசனம் கிடைக்கப்பெற்றது. அந்த ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பிலும் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனால் 73 ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய தேசியக்கட்சியில் பங்குபற்றல் இல்லாமல் நாடாளுமன்றம்கூடிய வரலாற்று சம்பவமும் கடந்த 20ஆம் திகதி பதிவானது.

’13’ஐ பாதுகாக்க பிரதமர் மோடியை சந்திக்க கூட்டமைப்பு முயற்சி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இலங்கைக்கான இந்திய தூதுவரை அண்மையில் சந்தித்து கலந்துரையாடிய வேளையிலும் இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கூட்டமைப்பு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை டில்லிக்கு அழைத்து பேச்சு நடத்துவதற்கு பிரதமர் மோடி, குறுகிய கால பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்தபோது விருப்பம் வெளியிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றாலும் பயணம் பிற்போடப்பட்டது.

எனினும், இந்தியாவின் தலையீட்டுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டம், புதிய அரசமைப்பின் ஊடாக மாற்றியமைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புதிய அரசமைப்பின் ஊடாக தமிழர்களுக்கான தீர்வை பெறுவதற்கு டில்லியின் தலையீட்டை கூட்டமைப்பு கோரவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு டில்லி இராஜதந்திர மட்டத்திலான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

கூட்டமைப்பின் கோரிக்கைக்கு டில்லி தரப்பில் இருந்தும் இன்னும் பச்சைக்கொடி காட்டப்படவில்லை. கொழும்புடனான உறவைக்கருத்திற்கொண்டு கூட்டமைப்புடனான நேரடி சந்திப்பை பிரதமர் மோடி தவிர்த்தால்கூட விசேட பிரதிநிதியொருவரை இலங்கைக்கு அனுப்பக்கூடும் எனவும் இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

‘கொரோனா’ – இலங்கையில் 2,918 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில்  மேலும் 11 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,918 ஆக அதிகரித்துள்ளது.

185 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரட்டை குடியுரிமைகொண்ட பஸில் அமைச்சராக வேண்டும் – ராதா ஆதரவு!

” புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்காக அரசாங்கம் ஒன்பது பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவில் மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒருவரையும் நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

ஹட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் 2019 ஆம் ஆண்டு தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு (05.09.2020) அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வை கிழக்கு மாகாணத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் கல்வி அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வு மன்றத்தின் செயலாளர் முன்சீர் தலைமையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் இலியாஸ் மேற்கொண்டிருந்தார். பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்

இந்த நாட்டில் வடகிழக்கு தமிழர்கள் மலையக தமிழர்கள் என இரண்டு விதமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். அவர்களுடைய பிரச்சினை வெவ்வேறானது. வடகிழக்கு மக்களுடைய பிரச்சினை வேறு மலையக தமிழர்களுடைய பிரச்சினை வேறு.

எனவே இவை இரண்டையும் தனித்தனியாக கையாள வேண்டும். மலையக மக்களுடைய பிரச்சினைகளை அடையாளப்படுத்த வேண்டுமாக இருந்தால் அவர்களுடைய பிரதிநிதித்துவம் கட்டாயமானதாகும்.இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு மலையக மக்களின் பிரதிநிதி ஒருவரையும் நியமிக்க வேண்டும்.

இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பசில் ராஜபக்ச அமைச்சராக வந்தாலும் அல்லது வேறு ஒரு இரட்டை பிரஜா உரிமை உள்ளவர் அமைச்சராக இருந்தாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. எங்களுடைய நோக்கம் இந்த நாட்டை அபிவிருத்தி செய்து அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய ஒரு நிலைமையை அரசாங்கம் உருவாக்குமானால் அதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கின்றோம்.

இன்று புதிதாக கொண்டுவரப்பட்டுகின்ற 20 ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் இரட்டை பிரஜா உரிமை தொடர்பாக பேசப்படுகின்றது.என்னை பொறுத்த அளவில் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக திறமையானவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.நாம் திறமையானவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த நாட்டை அபிவிருத்தி செய்யமுடியாது.

என்னை பொறுத்த அளவில் பசில் ராஜபக்ச திறமையான ஒரு நிர்வாகி அவர் ஒரு அமைச்சராக வருவாராக இருந்தால் அதற்கு எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை.காரணம் அவர் திறமையாக செயற்படக்கூடிய ஒரு நிர்வாகி கடந்த காலத்தில் அதனை அவர் நிரூபித்திருக்கின்றார்.

எனவே இந்த நாட்டை அபிவிருத்தி செய்யவேண்டுமாக இருந்தால் திறமையானவர்களை ஒன்றிணைத்து நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டும்.இன்று உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று காரணமாக எல்லா நாடுகளிலும் பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.” – என்றார்.

க.கிசாந்தன்

‘கொரோனா’ ஊடரங்கு – எண்ணத்தை மாற்றிய சமந்தா!

கொரோனாவால் எனது எண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.

நடிகை சமந்தா சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு பிடித்த கதாபாத்திரம் என்று எதுவும் இல்லை. ஆனால் இதற்கு முன்பு நடித்த கதை சாயலில் மீண்டும் நடிக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

அப்படி நடித்தால் ரசிகர்களுக்கு போரடித்து விடும். கொரோனாவில் எல்லோரும் கஷ்டத்தில் இருக்கிறோம். இந்த கஷ்டகாலம் விரைவில் முடிவுக்கு வந்து அனை வரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

கொரோனா ஊரடங்கில் குடும்பத்தோடு அதிக நேரம் ஒதுக்க முடிந்தது. கொரோனாவால் எனது எண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது. எப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இனிமேல் எனக்கு சந்தோஷத்தை கொடுக்கும் விஷயங்களுக்கு மட்டும் கஷ்டப்பட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

வாழ்க்கை மேன்மையாக இருக்க உணவு கட்டுப்பாடு, யோகா, தியானங்கள் பக்கம் திரும்ப வேண்டும். தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்த நம்மை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சமந்தா கூறினார்.

‘தோட்ட துரையை வெளியேற்று’ – வட்டகொடை மக்கள் போராட்டம்!

வட்டகொடை கீழ்பிரிவு தோட்டத்தில், தோட்ட முகாமையாளருக்கு எதிராக தோட்ட மக்கள் இன்று (5) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்டத் தொழிலாளியொருவரை ஏளனமாக விமர்சித்து – மிரட்டி அவரை தாக்க முற்பட்ட துரைக்கு எதிராகபே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என மக்கள் தெரிவித்தனர்.

குறித்த துரையை தோட்டத்தை விட்டு வெளியேற்றும்வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

நிருபர் – நீலமேகம் பிரசாந்த்

மஸ்கெலியாவில் உயிருடன் பிடிக்கப்பட்ட சிறுத்தைக்குட்டி!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்புகஸ்தனை தோட்ட மேற்பிரிவில் இன்று (05) சிறுத்தைக்குட்டியொன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 வயது மதிக்கதக்க குறித்த சிறுத்தை, தொழிலாளர் ஒருவரின் பண்ணையில் இருந்தவேளையிலேயே உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.

நல்லதண்ணி வனபாதுகாப்பு அதிகாரிகளிடம் சிறுத்தைக்குட்டி கையளிக்கப்பட்டது.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

‘அரசமைப்பு நிபுணர் குழுவில் மலையக பிரதிநிதியும் வேண்டும’ – மனோ

புதிய அரசியலமைப்பு வரைபு குழுவில் மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரையும் நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு,

” புதிய அரசியலமைப்பை வரைவதற்கான ஒரு குழுவை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நீங்கள் நியமித்துள்ளீர்கள். இதை நாங்கள் சாதகமாகவே பார்க்கிறோம். இதன் மூலம் இந்நாட்டில் நிலவி வரும் அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளுக்கான வழிகளை புதிய அரசியலமைப்பு ஏற்படுத்திட வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

இந்நிலையில் உங்களால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில், வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் மற்றும் முஸ்லிம் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றமை எமக்கு மகிழ்ச்சியை தருகின்றது. எனினும், இந்நாட்டில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய பிரதிநிதி இடம்பெறாமை எமக்கு கவலை தருகிறது. இது தற்செயலாக ஏற்பட்ட இடைவெளி என நாம் கருதுகின்றோம்.

எனவே தங்களால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில், சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்ய தகுதி வாய்ந்த ஒரு பிரதிநிதியை நியமிக்கும்படி வேண்டுகிறேன். நீங்கள் கேட்டுக்கொள்வீர்களாயின், தகுதி வாய்ந்த பிரதிநிதிகளின் பெயர்களை தங்கள் பரிசீலனைக்காக சிபாரிசு செய்யவும் நான் தயாராக இருகின்றேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

அதேவேளை, இது தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு , தமிழ் முற்போக்கு கூட்டணியின் எழுத்து மூல கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூட்டணியின் தலைவர், கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இன்னும் நிரந்தர நியமனம் இல்லை – மலையக உதவி ஆசிரியர்கள் கவலை!

களுத்துறை மாவட்ட பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களாக 2015 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற 60 ஆசிரியர் உதவியாளர்களுக்கு இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் திகதி பயிற்சியை நிறைவு செய்து கொண்ட போதிலும் இன்னும் தாம் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படாமல் ஆசிரிய உதவியாளர்களாக பாடசாலைகளில் சேவையாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய மாவட்டங்களில் ஆசிரிய உதவியாளர்கள் சேவைக்கு உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான நிலுவை தொகையும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் 2015 ஆம் ஆண்டு நியமனம் பெற்று 2018 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை நிறைவு செய்த தமக்கு இன்னும் நியமனங்கள் வழங்கப்படவில்லையென ஆசிரிய உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி மாதாந்தம் வழங்கும் 10000 ரூபாய் கொடுப்பனவை கூட கல்வி வலயங்கள் முறையாக வழங்குவது இல்லையென ஆசிரியர் உதவியாளர்கள் குற்றம்சுமத்துகின்றனர். குறிப்பிட்ட மாத கொடுப்பனவை அடுத்த மாத கடைசியில் தான் வழங்குகின்றது.

ஏனைய ஆசிரியர்கள் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் தங்களது சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் நேரம் ஆசிரியர் உதவியாளர்கள் தங்களது தகமைகளை பூர்த்தி செய்தும் எந்தவித பயனும் இல்லாமல் இருக்கின்றார்கள்.

60 பேருக்கான நியமனங்களை பெற்றுத்தருவத்தில் ஏன் இந்த தாமதம் என அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இது தொடர்பாக மேல்மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகளிடம் கூறினால் தேர்தல் முடிந்ததும் உங்களுக்கான நியமனம் வழங்கப்படும் என அசட்டுத்தனமாக பதில் கூறி அனுப்பி வைக்கின்றனர்.

தேர்தல் முடிவடைந்து ஒரு மாத காலம் ஆக போகின்ற இந்த நிலையில் தங்களது நியமனம் தொடர்பாக எந்தவித ஏற்பாடுகளும் செய்வதாக தெரியவில்லை.

எனவே ஆசிரியர் நியமனத்தை பெற்றுத்தருமாறு உரிய அதிகாரிகளிடம் மேல்மாகாண களுத்துறை மாவட்ட ஆசிரிய உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உச்சகட்ட பரபரப்பு – இறுதி பந்தில் வெற்றிக்கனியை ருசித்த இங்கிலாந்து!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ரி – 20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்றிரவு நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணி, முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

ஸ்டேடியத்தில் ரசிகர்களை அனுமதிக்காமல் கொரோனா தடுப்பு உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி போட்டி நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைக் குவித்தது. டேவிட் ஹோர்னர் 50 ஓட்டங்களைப்பெற்றார்.

161 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இப்போட்டியில் இறுதிவரை பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்கவில்லை.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் ஊடகவியலாளர் பலி: லெபனான் கண்டனம்!

0
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர் அமல் கலீல் கொல்லப்பட்டதை லெபனான் அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. மேற்படி தாக்குதலில் மற்றொரு ஊடகவியலாளர் காயமடைந்துள்ளார். இஸ்ரேல் வேண்டுமென்றே ஊடகவியலாளர்களையும், சுகாதார சேவையாளர்களையும் குறிவைத்ததாக லெபனான்...

வீதியில் நீர்பெருக்கெடுத்து ஓடுவதால் மாணவர்கள் அவதி!

0
மஸ்கெலியா நிருபர் - செ.தி.பெருமாள் பொகவந்தலாவ நகரில் இருந்து சென்மேரிஸ் கல்லூரிக்குச் செல்லும் பிரதான வீதி, மழைக் காலங்களில் நீரோடையாக மாறுவதால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். முறையாகப்...