Home Blog Page 3872

ஓல்டன் தோட்டத்தில் குளவிக்கொட்டு – மூன்று பெண்கள் பாதிப்பு!

தோட்டத் தொழிலாளர்கள் மூவர் இன்று முற்பகல் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் சிங்காரவத்தை பிரிவில் கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மூவரே இன்று முற்பகல் 10 மணியளவில் இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்து தோட்ட அம்புலன்ஸ் வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையின் பின்னர் இருவர் வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றார்.

10 மணிக்கு சம்பவம் நடைபெற்று 11 மணிக்கே அம்புலன்ஸ் வண்டி வந்ததாக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

மண்டியிட்டது ஆஸ்திரேலியா – தொடரை வென்றது இங்கிலாந்து

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

இதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஆரோன் பின்ஞ் 40 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டொயினிஸ் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், கிறிஸ் ஜோர்தான் 2 விக்கெட்டுகளையும், ஜொப்ரா ஆர்செர், மார்க் வுட் மற்றும் அடில் ராஷித் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 77 ஓட்டங்களையும், டாவிட் மாலன் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில், அஸ்டன் அகர் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டாக் மற்றும் அடம் செம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 54 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 77 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜோஸ் பட்லர் தெரிவுசெய்யப்பட்டார்.

முதலாவது போட்டியிலும் இங்கிலாந்து அணி இறுதி பந்தில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

சாமிமலையில் குளவிக்கொட்டு – நால்வர் பாதிப்பு!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை கிலனுஜி டீசைட் தோட்டத்தில் நான்கு ஆண் தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று காலை தமது அன்றாட தொழிலுக்கு சென்று கொண்டிருந்த வேலை மரம் ஒன்றிலிருந்த குளவிகள் கலைந்து சென்று இவர்களை கொட்டியுள்ளன.

பாதிக்கப்பட்ட நால்வரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மூவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் கூடுதலாக பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

சாமிமலை நிருபர் ஞானராஜ்

மரம் முறிந்து விழுந்ததால் மாணிக்கவத்தயில் மின்சாரம் துண்டிப்பு!

கடும் காற்றுடன்கூடிய அடைமழையால் அட்டன், டிக்கோயா மாணிக்கவத்த 2 ஆம் பிரிவில் நேற்றிரவு 11 மணியளவில் பாரிய மரமொன்று மின் இணைப்புகள்மீது முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 105 குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல பகுதிகளிலும் சீரற்றகாலநிலை நிலவிவருகின்றது. மலைநாட்டிலும் கடும் காற்றுடன் அடைமழை பெய்துவருகின்றது. இந்நிலையில் நேற்றிரவு அட்டன், டிக்கோயா பகுதிகளில் கடும் காற்று வீசியுள்ளது.

காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் மாணிக்கவத்த 2ஆம் பிரிவிலுள்ள மரமொன்று முறிந்து, மின் இணைப்பை வழங்கும் கம்பம்மீது விழுந்துள்ளது. இதனால் மின் கம்பிகள் எல்லாம் அறுந்து வீதியில் விழுந்துள்ளன. ஏனைய சில மின்சம்பங்களும் சரிந்துள்ளன.

இது தொடர்பில் கினிகத்தேன மின்சார சபைக்கு அறிவித்தும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்ல என ஊர் மக்கள் தெரிவிக்கன்றனர்.

மின்கம்பங்கள் உடைந்துவிழும் அபாயம் இருப்பதால் ‘கொங்றீட்’ தூண்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தோட்ட மக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். ஆனாலும் நெடு நாட்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் தற்போது கொங்றீட் மின் கம்பங்கள் கொண்டுவரப்பட்டிருந்தாலும் அவற்றை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

க.கிசாந்தன்

விடைபெறுகிறார் மஹிந்த ராஜபக்ச! பிரதமராகிறார் பஸில்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்னும் ஈராண்டுகளில் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளார் என தெரியவருகின்றது.

இதன்படி ஐந்தாண்டுகளும் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கமாட்டார் எனவும், அவர் பதவி விலகிய பின்னர் பஸில் ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் ஊடாக, இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றம் வருவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. எனினும் 20 நிறைவேறிய கையோடு பஸில் பாராளுமன்றம் வரமாட்டார் எனவும், மஹிந்தவின் ஓய்வின் பின்னரே அவர் வருவார் எனவும் தெரியவருகின்றது.

ராஜபக்ச சகோதரர் ஒருவருக்கே பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதால் அது பெரும்பாலும் பஸிலுக்கே வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கைக்கான வரையறை நீக்கப்பட்டாலும், புதிதாக எவருக்கும் நியமனங்களை வழங்காதிருக்க ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தீர்மானித்துள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.

‘கம்பளையில் பாலத்தைக்காணோம்’ – நடந்தது என்ன? மக்கள் திண்டாட்டம்!

கம்பளை , கம்பளவெல பகுதியிலுள்ள பாலம் உடைந்து சில வருடங்கள் கடந்துள்ளபோதிலும் புதிய பாலம் இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

கண்டி மாவட்டம், உடபளாத்த பிரதேசத்துக்குட்பட்ட கம்பளை நகர சபையையும், கங்கஹிகலகோரல பிரதேச சபைக்கு உட்பட்ட கம்பளவெல பிரதேசத்தையும் இணைக்கும் பிரதான பாலமே இவ்வாறு உடைந்துள்ளதால் – இரு பகுதிகளுக்கான தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

புதிய பாலத்தை அமைத்துதருமாறு மக்கள் போராட்டங்களை நடத்தியிருந்தாலும் இன்னும் தீர்வு கிட்டவில்லை.

பாலம் உடைந்துள்ளதால் கம்பளவௌ, சாலியாவத்த, தும்முல்ல ஆகிய கிராமங்களில் வாழும் மக்கள் நெடுதூரம் நடந்துசென்றே நகரப்பகுதிக்கு வரவேண்டியுள்ளது. கடந்த ஆட்சியில்தான் எதுவும் நடக்கவில்லை. புதிய ஆட்சியிலாவது வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோருகின்றனர்.

மக்கள் செய்தியாளர் – பா. திருஞானம்

40 இற்கும் மேற்பட்ட கஞ்சா பக்கட்டுகளுடன் கம்பளையில் இருவர் கைது!

கம்பளையில் மிகவும் சூட்சுமமான முறையில் நீண்ட நாட்களாக கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த இருவர் கம்பளை பொலிஸாரால் நேற்று (7) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இருவரும் போத்தலாப்பிட்டிய பகுதியில் வைத்து மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 40 இற்கும் மேற்பட்ட கேரள கஞ்சா பக்கெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

கஞ்சா பக்கட்டொன்று ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாகவும், இதன் பின்னணியில் தொடர்புடைய ஏனையோரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கம்பளை நிருபர் – திருமாள்

அனைத்து பாடசாலைகளிலும் நாளை முதல் கல்வி நடவடிக்கை வழமைக்கு

கொரோனா வைரஸ் சூழ்நிலையால் மூடப்பட்ட நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் நாளை 8ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைககள் வழமைக்குத் திரும்புவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

கொரோனாவைரஸ் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக பல கட்டங்களாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. அதற்கிணங்க ஆரம்ப வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை 8ம் திகதி முதல் ஆரம்பமாவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2ம் திகதி முதல் ஆறு தொடக்கம் 13 தரம் வரையிலான மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கிணங்க,நாளைய தினம் 7ம் திகதி பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆளணியினர் பாடசாலைகளுக்கு வருகை தரவுள்ளனர். அதனையடுத்து நாளை மறுதினம் குறித்தபடி அனைத்து கல்விநடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மாணவர்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டுவதாக முறைப்பாடுகள் கிடைத்துவருகின்ற நிலையில் சுகாதார நடைமுறைகள் தொடர்ச்சியாக பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோபத்தால்வந்தவினை – முதல்நிலை டென்னிஸ் வீரர் தகுதிநீக்கம்!

உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகாவிச் அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டித்தொடரில் இருந்து நம்பர் ஒன் வீரரும், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டாவை எதிர்த்து விளையாடிய ஜோகோவிச், 5-6 என்ற கணக்கில் தனது முதல் செட்டை இழந்தார். இதனால், கடும் ஆத்திரம் அடைந்த ஜோகோவிச் பந்தை ஆவேசமாக டென்னிஸ் கோர்ட்டுக்கு வெளியே அடித்தார்.

அவர் அடித்த பந்து போட்டி நடத்தும் பெண் அதிகாரி ஒருவரின் கழுத்தில் பலமாக தாக்கியது. இதனால், வலியால் துடித்த பெண் அதிகாரி சில நிமிடங்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பினார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஜோகோவிச் உடனடியாக அந்தப்பெண் அலுவலரிடம் சென்று தனது செயலுக்கு விளக்கமும் அளித்தார்.

எனினும், ஜோகோவிச் செயல் குறித்து ஆட்டத்தின் ரெப்ரியிடம் 10 நிமிடங்கள் பெண் அதிகாரி பேசினார். இதையடுத்து, அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கரீனோ பாஸ்டா வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர், ரபேல் நடால் ஆகியோர் பங்கேற்காத காரணத்தால் ஜோகோவிச் எளிதில் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்ட நிலையில், போட்டித்தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜோகோவிச் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அரசமைப்பு எவ்வாறு அமையும்? நீக்கப்படாத 12 சரத்துகள்! வெளியானது தகவல்!!

நாட்டில் தற்போது  நடைமுறையிலுள்ள அரசமைப்பில் 12 சரத்துகளைதவிர ஏனைய அனைத்து விடயங்களும் புதிய அரசியலமைப்பின் ஊடாக மாற்றியமைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.

புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்குழு உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள வாரஇதழொன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

இதன்படி பௌத்த மதம், தேசிய கீதம், தேசியக்கொடி மற்றும் நாட்டின் ஒருமைப்பாடு ஆகியவற்றில் தாக்கம் செலுத்தக்கூடிய 12 சரத்துகளில் எவ்வித மாற்றமும் வராது எனவும், ஏனைய சரத்துகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கோ அல்லது நீக்குவதற்கோ நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் போதும் என்பதால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டிய தேவை ஏற்படாது எனவும் அந்த நிபுணர் குறிப்பிட்டார் என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை 21 ஆவது திருத்தச்சட்டமாக கருதமால் புதிய அரசியலமைப்பாகவே அடையாளப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் நிபுணர்குழு கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடவுள்ளது.

புதிய அரசியலமைப்பை டிசம்பர் மாதத்துக்குள் இயற்றமுடியும் எனவும், அதனை 2021 ஜனவரியில் அரசாங்கத்திடம் கையளிக்ககூடியதாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் நிபுணர் கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன், பல்துறையினரிடமும் புதிய அரசியலமைப்பு குறித்து கருத்துகள், ஆலோசனைகள் உள்வாங்கப்படவுள்ளன.

நன்றி – மௌபிம வாரஇதழ்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

30 பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்ற விஷ பாம்புடன் போராடி உயிர்நீத்த தெரு நாய்

0
பள்​ளிக் குழந்​தைகளை காப்​பாற்ற விஷ பாம்​புடன் போராடி உயிர்​நீத்த தெரு நாய்க்கு கிராம மக்​கள் அஞ்​சலி செலுத்தி அடக்​கம் செய்​தனர். தெரு நாய்​கள் தொல்லை அதி​கரித்து வரு​வ​தாக ஊடகங்​களில் அடிக்​கடி செய்தி வரு​கின்​றன. தெரு...

சீரற்ற காலநிலை: நுவரெலியாவில் 93 குடும்பங்கள் பாதிப்பு!

0
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் 4 மாவட்டங்களில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில்...

இஸ்ரேல் தாக்குதலில் ஊடகவியலாளர் பலி: லெபனான் கண்டனம்!

0
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர் அமல் கலீல் கொல்லப்பட்டதை லெபனான் அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. மேற்படி தாக்குதலில் மற்றொரு ஊடகவியலாளர் காயமடைந்துள்ளார். இஸ்ரேல் வேண்டுமென்றே ஊடகவியலாளர்களையும், சுகாதார சேவையாளர்களையும் குறிவைத்ததாக லெபனான்...