Home Blog Page 3871

கடைசி போட்டியிலாவது வெற்றிக்கனியை ருசிக்குமா ஆஸ்திரேலியா?

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவதும் கடைசியுமான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று நடைபெறவுள்ளது.

இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறது.

ஸ்டேடியத்தில் ரசிகர்களை அனுமதிக்காமல் கொரோனா தடுப்பு உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு போட்டிகளும் நடத்தப்படுகிறது. அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளைத் தொடர்ந்து   ஆஸ்திரேலிய அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அங்கு பயணித்துள்ளது.

இதன்படி இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சவுதம்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து இறுதி பந்தில் வெற்றிக்கனியை ருசித்தது. இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து வெற்றிநடை போட்டது.

தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ள நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்று படுதோல்வியை தடுப்பதற்கு ஆஸ்திரேலியா போராடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஜனவரி முதலாம் திகதி ஐ.தே.கவின் புதிய தலைவர் அறிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் 2021 ஜனவரி முதலாம் திகதி நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.

ஐ.தே.கவின் மத்தியசெயற்குழுக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இதன்போது இது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவிக்கு சிலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் வாக்கெடுப்பின்மூலமே புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

நாளை கூடுகிறது பாராளுமன்றம்! 11 ஆம் திகதி ஆறுமுகன் தொண்டமானுக்கு அனுதாபம்!!

பாராளுமன்றம் நாளை (8) பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

சபாநாயகர் அறிவிப்பு, மனுதாக்கல் உட்பட பிரதான சபை நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் விவாதம் ஆரம்பமாகும்.

இதன்படி மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் 2020 வருட நடுப்பகுதியில் அரசாங்கத்தின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கை என்பன பற்றி சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவுள்ளது.

செப்டெம்பர் 09 ஆம் திகதி உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான 09 ஒழுங்குவிதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

செப்டெம்பர் 10ஆம் திகதி துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான 06 கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 03 ஒழுங்குவிதிகள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 06 தீர்மானங்கள் என்பன விவாதிக்கப்படவுள்ளன.

செப்டெம்பர் 09ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 7.30 மணி வரையும், செப்டெம்பர் 10ஆம் திகதி முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 7.30 மணிவரையும் அமர்வுகள் நடைபெறும்.

செப்டெம்பர் 11ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை விவாதம் நடைபெறவுள்ளது.

அன்றையதினம் முற்பகல் 10.30 மணி முதல் 6.30 மணிவரை அமர்வுகள் இடம்பெறவிருப்பதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இவ்விவாதத்தில் உரையாற்றவுள்ளனர்.

‘வலி சுமந்த வழி….’ எப்போதுதான் புது வழி பிறக்கும்?

நுவரெலியா, கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட வெதமுல்ல கிராம சேவகர் பிரிவு 474 எல் வெதமுல்ல தோட்டம் கெமினிதன் பிரிவிற்கு செல்லும் பிரதான பாதையே இது.

இந்த பாதையில் நாளாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். இந்த தோட்ட பிரதேசத்தில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட காணியில் விவசாய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆரம்ப பாடசாலை ஒன்றும் காணப்படுகின்றது. 166 குடும்பங்களை சேரந்த 750 மேற்பட்ட பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் விவசாய செய்கைக்கு வெளி இடங்களில் இருந்து வந்து தற்காலிகமாக நூற்றுக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

மாணவரகள் ஆரம்ப மற்றும் உயர்நிலை கல்வி கற்பதற்கு இந்த தோட்டத்தில் இருந்து இறம்பொடை தமிழ் மகா வித்தியாலயம் உட்பட ஏனைய பாடசாலைகளுக்கு நாளாந்தம் மாணவர்கள் நடந்தும் லொரி மற்றும் தனியார் வாகனங்ளிலும் நடந்துமே செல்கின்றனர்.

இங்கு முறையான போக்குவரத்து சேவை இல்லை. தோட்ட பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்களின் நிலமையும் இதுவே. இந்த பிரதேசம் மிகவும் குளிர்ந்த ஒரு கஷ்ட பிரதேசமாகும். கடல் மட்டத்தில் இருந்து 5000 அடிக்கு மேல் இந்த தோட்டம் காணப்படுகின்றது. நடந்து செல்லும் போது செங்குத்தான மலையில் 1200 படிகள் ஏற வேண்டும்.

நுவரெலியா கண்டி பிரதான பாதையில் வெதமுல்ல சந்தியில் இருந்து வெதமுல்ல தோட்டம் கயிர்கட்டி தோட்டம் ஊடாக இந்த கெமினிதன் தோட்டத்திற்கு செல்ல 11 கிலோமீற்றர் தூரம் காணப்படுகின்றது. இந்த பாதையின் இடையிடையே குறிப்பிட்ட தூரம் மலையக அரசியல் பிரமுகர்களின் பங்களிப்பு ஊடாக செப்பனிடபட்டாலும் பெருமளலாவான பாதை இன்னமும் திருத்தப்படாமல் காணப்படுகின்றது.

இங்குள்ள மக்கள் தங்களின் அபிருத்திகளுக்காக முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் பாதை அவலம் ஒரு தடையாக இருக்கின்றது. தங்களது வீடுகளை கூட கட்டிக் கொள்ள முடியவி;ல்லை. அதற்கான மூலப்பொருட்களை கொண்டு செல்வதிலும் அதற்கான செலவும் அதிகமாக இருக்கின்றது.

இந்த பாதை அவலம் காரணமாக தோட்ட பொது மக்கள் பாடசாலை மாணவர்கள் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். விவசாயிகளின் விவசாய உற்பத்திகளுக்கு உற்பத்தி செலவும் உற்பத்திகளை வினியோகிக்க சந்தைப்படுத்தும் செலவும் அதிகரித்து வருகின்றது. இதனால் விவசாயிகளும் பாதிப்படைந்து வருகின்றனர். விவசாய செயற்பாடுகளுக்கு வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலையும் தோன்றி உள்ளது. அதற்கான செலவும் அதிகம்.

தோட்ட தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை அதிகரித்து கொள்வதற்காக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அதில் அவர்களுக்கு போதிய வருமானம் இல்லை. மக்கள் நாளாந்தம் தங்களின் வைத்திய சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் அவசர தேவைகளின் போதும் இந்த பாதையையே பாவித்து வருகின்றனர். இதனால் கர்பினி பெண்கள் வயோதிபர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இந் நிலையில் இந்த பாதையை சரி செய்து கொடுத்து இந்த மக்களின் சுபீட்சத்திற்கு வழி சமைத்து கொடுக்க வேண்டியது பொறுப்பானவர்களின் கடமையாகும்.

மக்கள் செய்தியாளர் – பா. திருஞானம்

தொழிலாளர் தேசியசங்கத்தின் புதிய தோட்டக் கமிட்டி விரைவில்!

தொழிலாளர் தேசியசங்கத்தின் தோட்டக் கமிட்டி, இம்மாதம் முதலாம் திகதியுடன் கலைக்கப்பட்டதாக, அச்சங்கத்தின் பிரதிநிதிச் செயலாளர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில்,

அண்மையில் நடைபெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் உத்தியோகத்தர் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டத் தீர்மானத்துக்கு அமைவாகவே, சங்கத்தின் தோட்டக் கமிட்டி முற்று முழுதாகக் கலைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விரைவில் புதிய கமிட்டி உருவாக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பேரளார் மாநாடு கூட்டப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிக்பாஸ் 4 – கமலின் டான்ஸ் மாஸ்ட்டராக சாண்டி

பிக்பாஸ் 3ஆவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட சாண்டி, பிக்பாஸ் 4-வது சீசன் குறித்து வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தமிழில் இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா விழிப்புணர்வுடன் கூடிய பிக்பாஸ் 4 புரமோ ஒன்று வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்த புரோமோவின் ஆரம்பத்தில் கமல் நடனம் ஆடியபடி வருவது அட்டகாசமாக இருந்தது.

இந்நிலையில், இந்த வீடியோவில் கமலுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தது, கடந்த சீசனில் போட்டியாளராக இருந்தவரும், முன்னணி நடன இயக்குனருமான சாண்டி என தெரிவந்துள்ளது. கமல்ஹாசனுக்கு நடன அசைவுகளை சொல்லிக்கொடுக்கும் புகைப்படத்தை சாண்டி தனது இன்ஸ்டாமிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து முழுமையாக மீண்டார் எஸ்.பி.!

பாடகர் எஸ்.பி.பி.க்கு தற்போது கொரோனா தொற்று இல்லை என்று அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இவரது உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ மூலமாகவும், மருத்துவமனை அறிக்கை மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் எஸ்.பி.பி.சரண் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. தற்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை. தொடர்ந்து மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள்.

ஐபேடில், கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை பார்த்து வருகிறார். தான் பேச நினைப்பதை எழுதி காண்பிக்கிறார். நுரையீரல் தொற்று குணமடைந்துவருகிறது, பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உங்களுடைய ஆசிர்வாதத்தால் விரைவில் குணமடைந்து விடுவார் என்று எஸ்.பி.பி மகன் சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

‘இது குளவிகளின் முகாம் அல்ல, மஸ்கெலியா வைத்தியசாலை!

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் 3 ஆவது மாடி கட்டிட தொகுதியில் குளவி கூடுகள் காணப்படுவதால் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெறும் நோயாளிகள் அச்சத்துக்கு மத்தியிலேயே சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

அத்துடன் வைத்தியசாலையில் பணிபுரியும் அதிகாரிகளும், ஊழியர்களும் அச்சத்துடனேயே காணப்படுகின்றனர். குளவிகள் வந்துவிடும் என்ற பயத்தில் யன்னல்களைக்கூட அவர்கள் திறப்பதில்லை எனக் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் மலையக குருவி ஏற்கனவே செய்திகளை வெளியிட்டிருந்தது. அப்போது ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் குளவிக்கூடுகளை அகற்றுவதற்கு இன்னும் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குளவி கூடுகள் கலைந்து நோயாளிகளை கொத்தவதற்கு முன்னர் அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

கூட்டமைப்பின் பதவிகளில் மாற்றம்! புதன் இறுதி முடிவு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நாளை மறுதினம் புதன்கிழமை கூட விருக்கின்றது. அப்போது நாடாளுமன்றக் குழுவின்தலைவர், பேச்சாளர், கொறடா போன்ற பதவிகளுக்குரியவர்கள் தெரிவுசெய்யப்படுகின்றமையுடன்இருபதாவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் தீர்மானிக்கப்படவிருப்பதாக அறிய வந்தது.

ஜனநாயகத்திற்கு சாவுமணியடிக்கும் வகையிலான முன்மொழிவுகளைக் கொண்டுள்ள இருபதாவது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்விதமான இறுக்கமான நடவடிக்கைளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் நாடாளுமன்றக் குழுவிலேயே தீர்க்க மான முடிவுவொன்றை எடுக்கவுள்ளதாக அதன் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

1978ஆம் ஆண்டு அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள 19ஆவது திருத் தச்சட்டத்தில் காணப்படுகின்ற ஜனாதிபதிக் குரிய மட்டுப்பாடுகள் மற்றும் சுயாதீன ஆணைக்குழு, நாடாளுமன்றம் தொடர் பான விடயங்களில் மாற்றங்களைச் செய் வதற்கான 20ஆவது திருத்தச்சட்டமூலத் தினை அரசாங்கம் வர்த்தமானியில் அறி வித்தள்ளது.

இந்நிலையில் அச்சட்டமூலம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நிலைப்பாடு மற்றும் அதுதொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

20ஆம் திருத்தச்சட்டமூலமான வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டள்ளது. அதில் உள்ள விடயங்கள் தொடர்பில் நாம் ஆழ்ந்த கரிசனை கொண்டிருக் கின்றோம். குறிப்பாக ஜனநாயகத்திற்குசாவுமணி அடிக்கும் வகையிலான விடயங்கள் தொடர்பில் நாம் அதீத கவனம்செலுத்தியுள்ளோம்.

எனவே இந்த விடயத்தினை நாம்பக்குமாக கையாள வேண்டியுள்ளது. ஜன நாயகத்தினை பாதுகாக்கும் அதேநேரம், எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பிலும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

ஆகவே 20ஆவது திருத்தச்சட்டம்தொடர்பில் எமது தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக நாடாளுமன்றக்குழு கூடவுள்ளது. எதிர்வரும் எட்டாம் திகதி (நாளை)நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் எமது உறுப்பினர்கள் அனை
வரும் சமுகம் தரவுள்ளனர்.அதன்போது நாம் இந்தக் கருமம் தொடர்பில் கவனம் செலுத்தி முடிவுகளை எடுக்கவுள்ளோம்.

பெரும்பாலும் செவ்வாய் அல்லது புதன் எமது நாடாளுமன்றக்குழு கூடுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளன. இதேவேளை இந்த விடயம்சம்பந்தமாக நாம் ஏனைய அரசியல்கட்சிகளுடனும், தலைவர்களுடனும்கலந்துரையாடவுள்ளோம். இந்த விடயத்தில் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பில் ஆராயாவுள்ளோம். – என்றார்.

‘மலையக கல்விக்காக ஒன்றிணைவோம்’ – அரசியல் பிரமுகர்களுக்கு ராதா அழைப்பு!

” வடக்கு, கிழக்கில் கல்வி அபிவிருத்தி என வரும்போது ஆளுங்கட்சி, எதிரணி என பாராது அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுகின்றனர். அதேபோன்றதொரு அரசியல் கலாச்சாரம் மலையகத்திலும் உருவாக வேண்டும்.”  என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த காலப் பகுதியில் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு என்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன்.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் கல்வி அபிவிருத்தி என்று வருகின்றபோது அப்பகுதிகளிலுள்ள அரசியல்வாதிகள் ஆளும் கட்சி , எதிர்கட்சி என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றார்கள்.அதன் காரமணாக அங்கு கல்வி நிலை படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகின்றது.இதனை நாம் முன் உதாரணமாக கொள்ள வேண்டும்.

மலையகத்திலும் இதனை அதாவது இப்படியான ஒரு கலாசாரத்தை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே நாம் கல்வியில் முன்னேற்றமடைய முடியும்.

ஒரு சமூகத்தினுடைய வளர்ச்சி என்பது அவர்களுடைய பொருளாதாரத்திலோ அல்லது சொத்து மதிப்பிலோ மதிப்பிடப்படுவதில்லை.முழுமையாக கல்வியை மையப்படுத்தியதாகவே அது அமைந்துள்ளது.எனவே நாங்கள் எங்களுடைய சமூகத்தை சிந்தித்து செயற்பட வேண்டுமாக இருந்தால் கல்வியை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.” – என்றார்.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் மாணவர்களுக்கான QR அடையாள அட்டை அறிமுகம்!

0
கண்டி மாவட்டம், கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில், மாணவர்களுக்கான QR முறைமையிலான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (23) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நவீன முறையின்...

ஹார்முஸ் நீரிணையில் கட்டணம் வசூலித்தது ஈரான்: அமெரிக்கா சீற்றம்!

0
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் ஈரான் புதிய சுங்கக் கட்டணத்தை விதித்துள்ளதாகவும், அதிலிருந்து பெறப்பட்ட முதல் வருவாய் அந்நாட்டின் மத்திய வங்கியில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் துணை...

30 பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்ற விஷ பாம்புடன் போராடி உயிர்நீத்த தெரு நாய்

0
பள்​ளிக் குழந்​தைகளை காப்​பாற்ற விஷ பாம்​புடன் போராடி உயிர்​நீத்த தெரு நாய்க்கு கிராம மக்​கள் அஞ்​சலி செலுத்தி அடக்​கம் செய்​தனர். தெரு நாய்​கள் தொல்லை அதி​கரித்து வரு​வ​தாக ஊடகங்​களில் அடிக்​கடி செய்தி வரு​கின்​றன. தெரு...