Home Blog Page 3870

தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் குழுக் கூட்டம், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது மன்றத்தினூடாக மேற்கொள்ளபட்ட கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகர்த்த மன்றத்தின் பணிப்பாளர் கனேஷ் ஈஸ்வரன், பிரதமரின் இனைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், அமைச்சின் அதிகாரிகள், மன்றத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

மரண தண்டனை கைதி எம்.பியா? பிரதான எதிர்க்கட்சி வெளிநடப்பு!

மரண தண்டனை கைதியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி, சபையிலிருந்து வெளிநடப்பு செய்தது.

பாராளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது பிரேமலால் ஜயசேகர சத்தியப்பிரமாணம் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்பு பட்டி அணிந்தே சஜித் அணி உறுப்பினர்கள் பாராளுமன்றம் வந்திருந்தனர்.

மரண தண்டனை கைதியொருவர் எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்ய முடியாது எனவும் வாதிட்டனர். இவ்விடயம் கருத்திற்கொள்ளப்படாததால் எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

துளசியுடன் கஞ்சாவை ஒப்பிட்ட நடிக்கைக்கு வந்த சோதனை!

தமிழ் பட நடிகை ஒருவர் துளசியுடன் கஞ்சாவை ஒப்பிட்டதால் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு எதிராக கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

திரையுலகில் போதை பொருட்கள் தாராளமாக புழங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகளை பயன்படுத்தியதாக பிரபல கன்னட நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்தி பட உலகையும் போதை பொருள் விவகாரம் உலுக்கி வருகிறது. இந்தி நடிகை ரியா சக்கரவர்த்திக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ரியாவின் சகோதரர் கைதாகி உள்ளார்.

இந்த நிலையில் சுமிதா என்ற பெயரில் படங்களில் நடித்து வரும் கன்னட நடிகை நிவேதிதா கஞ்சாவுக்கு ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் தமிழில் கிஷோருடன் போர்க்களம், நடிகர் அபிஷேக் இயக்கிய கதை, பெப்சி விஜயன் இயக்கிய மார்க்கண்டேயன், சித்திரம் பேசுதடி 2-ம் பாகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அவர் கூறும்போது, “துளசியைப்போல் கஞ்சா மருத்துவ குணம் கொண்டது. இதனை தடை செய்வதற்கு முன்பு பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். இதை தடை செய்ததற்கு பின்னால் பெரிய சதி இருக்கிறது.

40 நாடுகளில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்துகிறார்கள். எனவே இதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் சுமிதாவுக்கு எதிராக பலரும் கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்

பிரபல குணச்சித்திர நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி காலமானார்

தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் பிரபல குணச்சித்திர நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி இன்று (8) காலமானார்.

தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் பிரபல குணச்சித்திர நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி. இவர் தமிழில் உத்தமபுத்திரன், ஆறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஜெய பிரகாஷ் ரெட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஐ.பி.எல். அழைப்பை நிராகரித்த குமார் தர்மசேன

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நடுவராக செயற்படுவதற்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை நடுவர் குமார் தர்மசேன நிராகரித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இம்மாதம் இலங்கையில் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரில் நடுவராக பணியாற்றவுள்ளதாலேயே அவர் ஐ.பி.எல். அழைப்பை நிராகரித்துள்ளார் என கூறப்படுகின்றது.

இப்படியும் ஒரு பஸ் தரிப்பிடமா?

கண்டி, நுவரெலியா பிரதான பாதையில் கொத்மலை பிரதேசத்துக்குட்பட்ட குடாஒயா பகுதியில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடமே இது.

நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி செல்லும் பஸ்கள் நிறுத்துவதற்காக மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையினாலேயே பஸ் தரிபிடம் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி பஸ்தரிப்பிடம் தற்போது உடைந்து, கூரைகள் இன்றி கடுமையாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இதனை புனரமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும், இன்னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பஸ் தரிப்பிடத்தில் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டுமானால் மழைக்காலங்களில் குடையுடனே செல்ல வேண்டும்

இந்த பிரதேசத்தில் குடாஓயா வித்தியாலயம் காணப்படுகின்றது. இங்கு கல்வி கற்க வரும் நூற்றுக் கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் கிராம மக்களும் லபுக்கலை தோட்ட மக்களும் நாளாந்தம் இந்த பஸ் நிலையத்தை பாவித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் இந்த பஸ் நிலையத்தை உடனடியாக திருத்தி அமைத்து கொடுக்க வேண்டியது மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையின் கடமையாகும்.

சில மாதங்களுக்கு முன்னர் இது தொடர்பில் மலையக குருவி சுட்டிக்காட்டியிருந்தது. ஆனால் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பெருந்தோட்ட மக்களை முகவரி அற்ற சமுகமாக மாற்ற மீண்டும் சூழ்ச்சி!

” மலையகத்தில் ‘புதிய கிராமங்கள்’ என்ற எண்ணக்கருவை இல்லாதொழித்து எமது பெருந்தோட்ட மக்களை தொடர்ந்தும் முகவரியற்ற சமுகமாக முடக்கிவைப்பதற்கான சூழ்ச்சி திட்டம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கண்டி மாவட்டத்தில் நடைபெற்ற ‘சாவி கையளிப்பு நிகழ்வு’ இதனை உறுதிப்படுத்தி நிற்கின்றது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் இன்று (08.09.2020) தெரிவித்தார்.

நல்லாட்சியின்போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் முயற்சியால் தொலுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட லெவலன்ட் தோட்டம் நியூ போரெஸ்ட் பிரிவில் தனி வீடுகள் அமைக்கப்பட்டு, புதியதொரு கிராமம் உருவாக்கப்பட்டது. மேற்படி கிராமம் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய பின்னர் மக்களிடம் கையளிக்கப்படவிருந்த நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியானதால் இறுதிக்கட்ட பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் உறுப்பினர்கள், குறுகிய அரசியல் நோக்கில் உட்கட்டமைப்பு வசதிகளைக்கூட ஏற்படுத்திக்கொடுக்காமல் மேற்படி வீட்டுத்திட்டத்தை முறையற்ற விதத்தில் திறந்து வைத்துள்ளனர் என்று வேலுகுமார் எம்.பி. விசனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” லயன் என்ற இருட்டறைக்குள் முடங்கி முகவரி அற்றவர்களாக காணப்பட்ட எமது பெருந்தோட்ட சமுகத்தினருக்கு தனி வீடுகளை அமைத்து, புதிய கிராமங்களை உருவாக்கி லயன் யுகத்திலிருந்து அவர்களை மீட்டெடுத்து வந்தோம். ‘தோட்டம்’ என்பதற்கு பதிலாக ‘கிராமம்’ என்ற தூரநோக்கு சிந்தனையுடன் வீட்டுத்திட்டங்கள் திறக்கப்பட்டு பெயர்களும் சூட்டப்பட்டு கிராமத்துக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. வீடுகளுக்கு முகவரியும் வழங்கப்பட்டது. நிர்வாகப் பணிகளும் பிரதேச செயலகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது.

இதன் அடிப்படையிலேயே லெவலன்ட் தோட்டம் நியூ போரெஸ்ட் பிரிவிலும் வீட்டுத்திட்டம் எம்மால் முன்னெடுக்கப்பட்டது. உட்கட்டமைப்பு வதிசகள் மட்டுமே ஏற்படுத்திக்கொடுக்கப்படவிருந்தது. தேர்தல் அறிவிப்பால் அதனை செய்யமுடியாமல்போனது.

தற்போது ஆட்சிக்குவந்துள்ளவர்கள் பெயர் போட்டுக்கொள்வதற்காக அவசர அவசரமாக ‘சாவி கையளிப்பு விழா’ நடத்தியுள்ளனர். மனிதன் வாழ்வதற்கான அடிப்படைவதிகள்கூட ஏற்படுத்திக்கொடுக்க தவறியுள்ளனர். அதுமட்டுமல்ல புதிய கிராமம் என்ற எண்ணக்கருவும் திசைக்கப்பட்டு வீடுகளுக்கு சாவி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு நிர்வாகக் கட்டமைப்பும் அங்கும் இல்லை. இது பெரும் அநீதியாகும்.

தோட்டம் என்ற நிலையில் இருந்தும் கிராமம் என்ற கட்டத்துக்குசென்று சமுகமாற்றத்தை நோக்கி பயணிப்பதற்கு நாம் அடித்தளமிட்டிருந்த நிலையில் அதனை தலைகீழாக மாற்றியுள்ளனர். இது கண்டிக்கத்தக்க செயலாகும். எம்மால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை திறந்து அதிலும் பெயரை போட்டுக்கொள்ளுங்கள். அதில் எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் செய்வதை உருப்படியாகவும், மக்கள் நலன் கருதியும் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” -என்றார்.

’20’ ஐ நிறைவேற்றியே தீருவோம்! பீரிஸ் சூளுரை!!

அரசியலமைப்பின்  ’20’ ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்க்கட்சிகள் சவாலுக்குட்படுத்தினாலும் அதனை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என்று அமைச்சர் பேராசிரியர் ஜீ.எஸ். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில்   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் வேண்டும் என சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவதில் எமக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது.எனவே, சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என்பது உறுதியானதொன்று.

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் உரிமை அனைவருக்கும் இருக்கின்றது. அந்த அடிப்படையில் எதிரணிகள் தாக்கல் செய்யலாம். அவ்வாறு தாக்கல் செய்வதும் நல்லதுதான், ஏனெனில் குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என்பது உறுதியாகும்.

அதேவேளை, தனிநபர்களை இலக்கு வைத்து ’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்படவில்லை. ஆனால், ராஜபக்ச குடும்பத்தினரை இலக்குவைத்தே ’19’ ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அவ்வாறு செயற்பட்டவர்களே ’20’ ஐவும் அவ்வாறு பார்க்கின்றனர்.

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனக்கூறப்படுவதெல்லாம் கட்டுக்கதையாகும்.” – என்றார்.

சாமிமலையில் கஞ்சாவுடன் ஐந்து இளைஞர்கள் கைது!

மஸ்கெலியா, சாமிமலை நகரில் நேற்றிரவு ஐந்து இளைஞர்கள் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி யசரத்ன பண்டாரவின் வழிகாட்டலுக்கமையவே இக்கைது இடம்பெற்றுள்ளது.

கைதானவர்கள் 21 முதல் 30 வயதுக்கிடைக்கப்பட்ட இளைஞர்கள் என்றும், இவர்களில் ஒருவர் சாமிமலை பகுதியைச் சேர்ந்தவர்,ஏனையவர்கள் ஹட்டனை சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடமிருந்து கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

கட்சியை சஜித்திடம் கையளியுங்கள் – ரணிலிடம் மீண்டும் கோரிக்கை

பலமானதொரு அரசியல் கூட்டணியை அமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்படி கோரிக்கையை கட்சியின் சார்பில் முன்வைத்தார் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐக்கிய தேசியக் கட்சியின் 74ஆவது ஆண்டு நிறைவுவிழா 6 ஆம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே பங்கேற்றிருந்தனர். இந்நாட்டை ஆண்ட பிரதான கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தற்போதைய தலைவர் மக்களின் கோரிக்கைக்கமைய மாற்றத்தை ஏற்படுத்த தவறியதாலேயே கட்சிக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை களமிறக்க வேண்டாம், ஐ.தே.க. வேட்பாளர் ஒருவரை முன்னிலைப்படுத்துமாறு நான் கோரிக்கை விடுத்திருந்தேன்.அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எனது வேண்டுகோள் அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் கட்சிக்கு இன்று இந்நிலைமை ஏற்பட்டிருக்காது என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.

ஐக்கிய தேசியக்கட்சியை மீளக்கட்டியழுப்ப வேண்டும். எனவே, அக்கட்சியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்குமாறு தலைமைத்துவத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். ஒன்றாக பயணிப்பதற்கான காலம் உதயமாகியுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து பலமான கூட்டணியை அமைக்கவேண்டும். அந்த கூட்டணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் சஜித் தலைமைத்துவம் வழங்குவார்.” – என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

காவத்தை சம்பவம்: பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்!

0
கஹாவத்தை, நீலாகாமம் இலக்கம் 01 தோட்டப்பிரிவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ராஜாராம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "கஹாவத்தை...

புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் மாணவர்களுக்கான QR அடையாள அட்டை அறிமுகம்!

0
கண்டி மாவட்டம், கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில், மாணவர்களுக்கான QR முறைமையிலான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (23) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நவீன முறையின்...

ஹார்முஸ் நீரிணையில் கட்டணம் வசூலித்தது ஈரான்: அமெரிக்கா சீற்றம்!

0
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் ஈரான் புதிய சுங்கக் கட்டணத்தை விதித்துள்ளதாகவும், அதிலிருந்து பெறப்பட்ட முதல் வருவாய் அந்நாட்டின் மத்திய வங்கியில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் துணை...