Home Blog Page 3869

அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினை – கல்வி அமைச்சின் செயலருக்கு அவசர கடிதம்!

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு வழங்குமாறுகோரி கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவசர கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தால் அனுப்பட்டுள்ள கடிதம் வருமாறு,

” நீண்ட காலமாக சேவை செய்யும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் கீழே குறிப்பிடப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக உடனடியாக கலந்துரையாடித் தீர்வினைப் பெற்றுத் தருவதற்காக கல்வி அமைச்சின் அதற்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் எமது சங்கத்திற்கு உடனடியாகக் கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்றுத் தாருங்கள் என மிகவும் தேவைப்பாட்டோடு கேட்டுக்கொள்கிறோம்.

1. 23 வருடங்களாகப் பேசு பொருளாக உள்ள அதிபர் மற்றும் ஆசிரியர்களின் முதன்மையான சம்பளப் பிரச்சினை தொடர்பாக சம்பள ஆணைக்குழுவின் தீர்மானத்தினை செயல்படுத்த விடாமல் தடுத்தல்.

2. ஆசிரியர்களின் வகுப்பறைக் கற்றல் கற்பித்தற் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையும் படிவங்கள் நிரப்பும் செயற்பாடுகள், கட்டாய செயற்றிட்டங்கள் உட்பட மேலதிக வேலைகளை வழங்குதல்.

3. சேவை புரிகின்ற பழைய மற்றும் புதிய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே உள்ளகரீதியாகவும் பதவி உயர்வு வழங்கும் போதும் எழுகின்ற பிரச்சினைகள்.

4. இலங்கை ஆசிரியர் சேவையில் மொடியுல்கள் செயற்படுத்தும் போது எழுகின்ற பிரச்சினைகள்.

5. ஆசிரியர்களின் கடமைகள், செயற்பாடுகள் தொடர்பான படிவம் மற்றும் சம்பள திட்டப்படிவம் வழங்குதல் தொடர்பான பிரச்சினைகள்.

6. தேசியப் பாடசாலை,மாகாண பாடசாலை தொடர்பான தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதனை நிறைவு செய்து மீண்டும் இடமாற்றம் பெறும் போது எழுகின்ற பிரச்சினைகள்.

7. வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் தொடர்பான பிரச்சினைகள்.

8.ஓய்வு பெறுவதற்குள்ள ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்.

9. ஆசிரியர்களின் பிள்ளைகளை பாடசாலைக்குச் சேர்ப்பதில் உள்ள பிரச்சினைகள்.

10. சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழினப் பிள்ளைகளுக்கு தங்கள் மொழியில் கா.பொ.த.உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை மேம்படுத்திக்கொள்ள பாடசாலைகள் இல்லாமை மற்றும் அந்த வழங்கள் உள்ள பாடசாலைக்குச் செல்ல வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கபடாமை.

11. பாடசாலையின் முதன்மையான மற்றும் பரிபாலனச் செயற்பாடுகளை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திடம் வழங்குதல்,பாடசாலையை நடாத்திச் செல்ல பெற்றோர்களிடம் பணம் அறவிடுதல்.

12. ஏனையவை

போன்ற விடயங்கள் கலந்துரையாட எதிர்பார்க்கப்படுகிறது.

’20’ இற்கு போர்க்கொடி! சஜித் அணியின் ’19 பிளஸ்’ திட்டம்!!

” ஜனநாயகத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முன்வைக்கப்படவுள்ள மரணப்பொறியான ’20’ ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கான ‘ஜனநாயகப் போராட்டம்’ உள்நாட்டு சக்திகளின் பங்களிப்புடன் நாட்டுக்குள்ளேயே முன்னெடுக்கப்படும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.

’20’ ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக ராஜித சேனாரத்ன தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மக்களுக்கான ஆட்சியை முன்னெடுக்கவேண்டிய யுகத்தில் தனிநபரின்கீழ் அதிகாரங்களைக் குவிப்பதற்கான ஜனநாயக விரோத நடவடிக்கையாகவே 20ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்துக்கு முடிவுகட்டி ஏதேச்சாதிகாரத்தை நோக்கி பயணிப்பதே அதன் நோக்கம்.எனவே, நாட்டிலுள்ள அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றுதிரட்டி ’20’ ஐ தோற்கடிப்பதற்கான ஜனநாயக போராட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே இருக்கின்றது. மக்கள் சக்தி ஊடாகவே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்பது மட்டும்அல்ல எமது நோக்கம், அதற்கு சமாந்தரமாக ’19 பிளஸ்’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும். நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான திட்டமே 19 பிளஸ் என்பது. 19 இல் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்திசெய்து அதனை இதன்மூலம் பலப்படுத்தமுடியும். 19 மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு போதுமாளனவு அதிகாரங்கள் கிடைக்கவில்லை. 19 பிளஸ் ஊடாக அவற்றை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் முன்வைக்கப்படும். தேசிய பாதுகாப்புக்கும் இதில் முன்னுரிமை வழங்கப்படும்.

அதேவேளை, ’20’ ஐ தோற்கடிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையில் நாம் இறங்கியுள்ள நிலையில் அது தொடர்பில் மாறுகட்ட கோணத்தில் விமர்சனங்களை முன்வைக்கலாம், திசை திருப்பும் நோக்கில் அறிவிப்புகளை விடுக்கலாம். எனவே, உள்நாட்டை மையப்படுத்தியே எமது நடவடிக்கைள் அமையும். கருத்தரங்குகள், விழிப்புணர்வுக் கூட்டங்கள் எல்லாம் நகர, கிராம மட்டங்களில் முன்னெடுக்கப்படும். அனைவரையும் எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.” – என்றார்.

கடைசி போட்டியில் இங்கிலாந்தை பந்தாடியது ஆஸி.அணி!

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டியில், ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ள நிலையில் கடைசிபோட்டியில் கிடைத்த வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு ஆறுதல் பரிசாக அமைந்துள்ளது.

சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்று   நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து 146 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் 5விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்து, 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

’20’ குறித்து கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? இன்று தீர்மானம் எடுக்கப்படும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு இன்று முற்பகல் கூட விருக்கின்றது. அப்போது நாடாளுமன்றக் குழுவின்தலைவர், பேச்சாளர், கொறடா போன்ற பதவிகளுக்குரியவர்கள் தெரிவுசெய்யப்படுகின்றமையுடன் இருபதாவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் தீர்மானிக்கப்படவுள்ளது.

ஜனநாயகத்திற்கு சாவுமணியடிக்கும் வகையிலான முன்மொழிவுகளைக் கொண்டுள்ள இருபதாவது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்விதமான இறுக்கமான நடவடிக்கைளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் நாடாளுமன்றக் குழுவிலேயே தீர்க்க மான முடிவுவொன்றை எடுக்கவுள்ளதாக அதன் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

1978ஆம் ஆண்டு அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள 19ஆவது திருத் தச்சட்டத்தில் காணப்படுகின்ற ஜனாதிபதிக் குரிய மட்டுப்பாடுகள் மற்றும் சுயாதீன ஆணைக்குழு, நாடாளுமன்றம் தொடர் பான விடயங்களில் மாற்றங்களைச் செய் வதற்கான 20ஆவது திருத்தச்சட்டமூலத் தினை அரசாங்கம் வர்த்தமானியில் அறி வித்தள்ளது.

இந்நிலையில் அச்சட்டமூலம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நிலைப்பாடு மற்றும் அதுதொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

20ஆம் திருத்தச்சட்டமூலமான வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டள்ளது. அதில் உள்ள விடயங்கள் தொடர்பில் நாம் ஆழ்ந்த கரிசனை கொண்டிருக் கின்றோம். குறிப்பாக ஜனநாயகத்திற்குசாவுமணி அடிக்கும் வகையிலான விடயங்கள் தொடர்பில் நாம் அதீத கவனம்செலுத்தியுள்ளோம்.

எனவே இந்த விடயத்தினை நாம்பக்குமாக கையாள வேண்டியுள்ளது. ஜன நாயகத்தினை பாதுகாக்கும் அதேநேரம், எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பிலும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

ஆகவே 20ஆவது திருத்தச்சட்டம்தொடர்பில் எமது தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக நாடாளுமன்றக்குழு கூடவுள்ளது. ” – என்றார்.

’20’ – ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு! திருத்தங்களை மேற்கொள்ள முடிவு!!

பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின்போது அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது என ‘டெய்லிமிரர்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

20வது அரசியல் அமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும் அரசாங்கத்தில் பலர் இந்த திருத்தத்தில் உள்ள சில சரத்துக்கள் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இரட்டை குடியுரிமை, கணக்காய்வு ஆணைக்குழு, அமைச்சரவையின் வரையறை போன்றவை இதில் அடங்குகின்றன.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் 20ஆவது திருத்தம் தொடர்பில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மாற்றுக்கருத்துக்களை இதுவரை பதிவுசெய்துள்ளனர்

20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்வது அவசியம்.

இந்தநிலையில் குறித்த உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஓராண்டுக்குள் புதிய அரசமைப்பு! நிபுணர் குழுவுக்கு ஆறு மாதகாலம் அவகாசம்!!

புதிய அரசியலமைப்பு ஓராண்டு காலப்பகுதிக்குள் இயற்றப்படும். நிபுணர்குழுவுக்கு தனது அறிக்கையை முன்வைப்பதற்கு ஆறு மாதகால அவகாசமே வழங்கப்படும்.” – என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான கால எல்லை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு,

” அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நிச்சயம் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். அதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

நிபுணர் குழுவின் பணி, வரைவு நகலை முன்வைப்பதற்கான கால எல்லை, அவர்களுக்கான அலுவலகம், பட்ஜட் உள்ளிட்ட விடயங்கள் பட்டியலிடப்பட்டு உரிய வகையிலேயே பொறுப்பு கையளிக்கப்படும்.

இதன்படி வரைவு நகலை முன்வைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதியுடன் நிபுணர் குழுவுக்கு ஆறு மாதங்களை வழங்குவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். புதிய அரசியலமைப்பை இயற்றி முடிக்கும் பணியை ஓராண்டுக்குள் பூர்த்தி செய்வதே எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது.

1970 ஆம் ஆண்டு ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு நாட்டில் பெரும்பான்மை பலம் கிடைத்தது. 1977 இல் அவர் தோல்வியடைந்தார். அதன்பின்னர் 1994 இலேயே வரக்கூடியதாக இருந்தது.

1977 இல் ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் கிடைத்தது. இனி எப்போதும் தனது கட்சி தோற்காது என நம்பினார். 82 இல் தேர்தலைக்கூட நடத்தவில்லை. 94 இல் ஐ.தே.க.தோல்வியடைந்த பின்னர் அக்கட்சியால் இன்றுவரை ஜனாதிபதியொருவரை தெரிவுசெய்ய முடியாமல் உள்ளது. கட்சிகூட இன்று படுதோல்வியடைந்துள்ளது.

2010 இல் எமது அரசாங்கத்துக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தது. எனினும், 2015 இல் தோல்வி ஏற்பட்டது. எனவே, வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். அதுவே ஜனநாயக அம்சமும்கூட. எப்படியான பெரும்பான்மை கிடைத்தாலும் அதனை உரிய வகையில் முகாமை செய்து, மக்களுக்கு தேவையானவற்றை செய்யாவிட்டால் அன்று எற்பட்ட நிலையே மீண்டும் ஏற்படும்.

உயர் பதவிகள் குழுவுக்கு 18 பேர் நியமனம்!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்கான உயர் பதவிகள் பற்றிய குழுவுக்கு 18 பேர் நியமிக்கப்பட்டிருப்பதாக   சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) அறிவித்தார்.

இக்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் பெயர் வருமாறு,

1.சமல் ராஜபக்ச.

2.தினேஷ் குணவர்தன.

3.ஜோன்ஸ்டன் பெர்னான்டோ

4.டக்ளஸ் தேவானந்தா.

5.பந்துல குணவர்தன.

6.கெஹலிய ரம்புக்வெல.

7.உதய கம்மன்பில.

8.ரமேஷ் பத்திரன.

9.சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே.

10.விதுர விக்கிரமநாயக்க.

11.ஜோன் செனவிரட்ன.

12.அநுர பிரியதர்ஷன யாப்பா.

13.விஜித ஹேரத்.

14.ரிஷாட் பதியுதீன்.

15.தலதா அத்துகோரல.

16.சரத் பொன்சேகா

17.நிமல் சிறிபாலடி சில்வா

இலங்கையின் ராஜதந்திரப்பதவிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கான பரிந்துரைகள் செய்யப்படும்போது குறித்தவர்கள் நியமனங்களுக்கு பொருத்தமானவர்களா? என்பதை ஆராய்ந்து உறுதிப்படுத்தலை மேற்கொள்ளவே இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

‘வரலாற்று சோதனையைக் கடந்துவிட்டோம்’ – சீனா அறிவிப்பு

கொரோனாவுக்கு எதிரான வரலாற்று சோதனையை சீனா கடந்து விட்டது என அந்நாட்டு அதிபர் ஜின்பிங் பெருமிதமுடன் இன்று கூறியுள்ளார்.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசின் பாதிப்பு ஏற்பட்டது பற்றி உலக நாடுகளுக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மளமளவென உலக நாடுகளுக்கு இந்த வைரசின் பாதிப்பு பரவ தொடங்கியது.

இதனால், அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையான பாதிப்புக்கு ஆட்பட்டன. இந்த நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வரை இயல்பு நிலைக்கு திரும்புவதில் முன்னேற்றம் இல்லாத சூழல் உள்ளது. ஊரடங்கால் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின. இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் சீன மக்களை காக்கும் பணியில் ஈடுபட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் 4 மருத்துவர்களுக்கு தங்க பதக்கங்களை சீன அதிபர் ஜின்பிங் வழங்கினார். இதன்பின்னர் விழாவில் பேசிய அவர், கொரோனா வைரசுக்கு எதிரான மக்களின் போரில் நாம் விரைவில் தொடக்க வெற்றியை பெற்று விட்டோம். பொருளாதார மீட்சி மற்றும் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் உலகில் முன்னிலையில் இருக்கிறோம். கொரோனா வைரசுக்கு எதிரான வரலாற்று சோதனையை சீனா கடந்து விட்டது என பெருமிதம் பொங்க பேசினார்.

கொரோனா வைரசின் பாதிப்பு பரவலாக உலக நாடுகளின் மீது தாக்கம் ஏற்படுத்தியபோது, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் சீனா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கின. இந்த வைரசின் தொடக்கம் மற்றும் கடுமையான பாதிப்பு ஆகியவற்றை சீனா மறைத்து விட்டது என்றும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.

சட்டவிரோத சிகரெட் பக்கட்டுகளுடன் டயமகவில் இருவர் கைது!

சட்டவிரோத சிகரெட் பக்கட்டுகள் 150 உடன் டயகம பொலிஸாரால் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் பயணித்த ஆட்டோவையும் பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.

கம்பளையிலிருந்து டயகம பகுதிக்கு மேற்படி சிகரெட் பக்கெட்டுகளை எடுத்து செல்லப்படுவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரமே டயகம பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நாளை (8) நுவரெலியா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

’20’ ஐ எதிர்க்கும் முற்போக்கு கூட்டணி! ஆளுங்கட்சி பக்கம் தாவாது!!

அரமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக, தமிழ்முற்போக்குக் கூட்டணி வாக்களிக்குமென, அக்கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கிவிட்டு, புதிய அரசாங்கம் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவர உள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும், இம்மாதம் 2ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்ததோடு, 20 ஆவது திருத்தம் ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமெனவும், ஆளுங்கட்சியினர் அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் 6 உறுப்பினர்களும் வாக்களித்துவிட்டு, அரசாங்கத்தோடு இணைவார்களென ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும் 20ஆவது திருத்தத்துக்கு எதிராகவே தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பார்களென அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் மாகாணசபைத் தேர்தல்நிறைவடையும் வரையில் அரசாங்கத்தை ஆதரிக்கும் எந்தவொரு நகர்வுகளிலும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஈடுபடாதெனவும் அறிய முடிகிறது.

அரசாங்கம் கொண்டுவரும் புதிய அரசமைப்புக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கும் பட்சத்தில், புதிய அரசமைப்பை நிறைவேற்றிக்கொள்வதற்கு தமிழ் முற்போக்குக்
கூட்டணியின் உதவியைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இது  தொடர்பானப் பேச்சுவார்த்தைகளும் திரைமறைவில் இடம்பெற்றுள்ளதாகவும் புதிய அரசமைப்புக்கு ஆதரவாக வாக்களிக்கும் பட்சத்தில் கூட்டணிக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர்களும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுமான பழனி திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன் ஆகியோரை தொடர்புகொள்ள முயற்சித்தப்போதிலும் முயற்சி பலனளிக்கவில்லை.

நன்றி – தமிழ்மிரர் நாளிதழ்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்கும் படகுகளை அழிக்க ட்ரம்ப் உத்தரவு!

0
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு அருகிலுள்ள முக்கிய கடல் பகுதியில் சிறிய ரக படகுகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தயக்கமின்றி...

ஈரான் அணிக்கு பதிலாக இத்தாலியை இணைக்குமாறு யோசனை!

0
2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை இணைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் சிறப்பு தூதுவரான பாலோ ஜாம்போலி Paolo Zampolli கோரிக்கை முன்வைத்துள்ளார். இவர் ட்ரம்பின் மிக முக்கிய சகாக்களில்...

காவத்தை சம்பவம்: பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்!

0
கஹாவத்தை, நீலாகாமம் இலக்கம் 01 தோட்டப்பிரிவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ராஜாராம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "கஹாவத்தை...