வட்டவளையில் முறிந்து வீழ்ந்தது மரம் – போக்குவரத்து பாதிப்பு
‘கொரோனா’ – உலகளவில் பலி எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளது.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 3 ஆயிரத்து 400 ஐ கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 78 லட்சத்து 34 ஆயிரத்து 957 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 70 லட்சத்து 19 ஆயிரத்து 165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 446 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 1 கோடியே 99 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 3 ஆயிரத்து 496 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 194,381
பிரேசில் – 127,517
இந்தியா – 74,367
மெக்சிகோ – 68,484
இங்கிலாந்து – 41,594
இத்தாலி – 35,577
பிரான்ஸ் – 30,764
‘ஏழை மக்கள்மீது வரிச்சுமையை திணிக்காதீர்’ – ராதா கோரிக்கை
அரசாங்கம் வரி அறவிடும்போது வசதி உள்ளவர்களிடம் அதனை அறவிட வேண்டுமே வரிச்சுமையை ஏழை மக்களிடம் திணிக்கக்கூடாது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” வரி சுமை ஏழை மக்களிடமிருந்தும் அறவிடுவதால் அந்த மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் வரி அறவீட்டில் வசதி குறைந்த மக்கள் பாதிக்கப்படாதவகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத் துறை பாரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் அந்த துறையில் தொழில் செய்யும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொரோனா தொற்று பரவலே இதற்கு காரணமாகும்.
அதிகமானவர்கள் விவசாய துறையில் ஈடுபடுபவர்கள். அவர்களுக்கு தேவையான உரம் கிடைப்பதில்லை. அதனால் விவசாயத்தை முறையாக மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்கப்படவேண்டும். தற்போது இருக்கும் வாழ்க்கைச்செலவுக்கு ஏற்ற வருமானம் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதனால் விவசாயம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டத்தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் பாரியளவில் பாதிக்கப்படுவார்கள்.
இதேவேளை இறைச்சிக்காக பசுக்கள் அறுப்பதை நிறுத்த பிரதமர் எடுக்கும் நடவடிக்கை பாராட்டத்தக்கது.” என்றும் அவர் கூறினார்.
‘மேல்மாகாண உதவி ஆசிரியர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு’!
மேல்மாகாணத்தில் ஆசிரியர் தகுதிக்கான பயற்சிகளை முடித்துள்ள உதவி ஆசிரியர்களை ஆசிரியர் தரம் 3.1 இல் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மேல்மாகாண ஆளுநர், பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளார்.
மேல்மாகாணத்தில் ஆசிரியர் தகுதிக்கான பயிற்சி நெறிகளை முடித்து நீண்டகாலம் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படாது நிர்க்கதியாகியுள்ள 50 பேர்வரையான உதவி ஆசிரியர்கள் தமது நிலைமை குறித்து செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவந்ததை தொடர்ந்து உடனடியாக மேல்மாகாண ஆளுநருடன் இந்த விவகாரம் குறித்து நேரடி பேச்சுவார்த்தையொன்றை செந்தில் தொண்டமான், உரிய பிரதிநிதிகளுடன் நேற்றுமுன்தினம் ஆளுநர் அலுவலகத்தில் நடத்தியிருந்தார்.
இதன்போது, உதவி ஆசிர்களின் எதிர்கொண்டுள்ள இந்த நிலைமை, இவர்கள் உதவியாசிரியர்களாக உங்வாங்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு உள்ளிட்ட சட்ட ரீதியான சிக்கல்களை ஆளுநரிடம் எடுத்துரைத்தார்.
ஆசிரியர்களின் நிலைமைகளை உணர்ந்துக்கொண்ட ஆளுநர், ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான தகுதிகளை இவர்கள் பூர்த்திசெய்துள்ள போதிலும் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட பாடசாலைகளில் வெற்றிடங்கள் காணப்பட வேண்டும் என்பதுடன், அரசாங்கம் தீர்மானித்தால்தான் இவர்களை உள்வாங்க முடியும்.
என்றாலும், இவர்களின் நிலைமை கருத்திற்கொண்டு அடுத்தவரும் உள்வாங்கள்களில் இவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கையெடுப்பதாக மேல்மாகாண ஆளுநர், செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்தார்.
ஆளுநரிருடன் சந்திப்பை ஏற்படுத்தி தாம் எதிர்கொண்டுள்ள இந்த சிக்கலான நிலைமைக்கு தீர்வுகாண நடவடிக்கையெடுத்த செந்தில் தொண்டமானுக்கு உதவி ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஊவாமாகாணத்திலும் இதே சிக்கல் நிலைமைதான் காணப்பட்டது. என்றாலும், அங்கு செந்தில் தொண்டமான் தமது பலத்தை பயன்படுத்தி 90 சதவீதமானவர்களுக்கு நியமனங்களை அவர் அமைச்சுப் பதவி வகித்த காலத்தில் பெற்றுக்கொடுத்தார்.
மத்திய மாகாணத்திலும் இந்த சிக்கல் நிலைமை காணப்படும் சூழலில் கடந்தவாரம் மத்திய மாகாண ஆளுநருடன் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், செந்தில் தொண்டமான், கணபதி கனகராஜ் மற்றும் மதியுகராஜா ஆகியோர் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
‘மலையக உதவி ஆசிரியர்கள் பிரச்சினையை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்த வேலுகுமார்’
பெருந்தோட்டத்துறையை தோட்டத்தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி, வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
அத்துடன், மலையக உதவி ஆசிரியர்களின் கோரிக்கை சம்பந்தமாகவும் வேலுகுமார் எம்.பி. , பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (09.09.2020) புதன்கிழமை நடைபெற்ற உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான 09 ஒழுங்குவிதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் என்பன மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வேலுகுமார் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக பெருந்தோட்டத்துறையே திகழ்ந்தது. இன்றும்கூட பிரதான உற்பத்தி பங்களிப்பை பெருந்தோட்டத்துறை வழங்கிவருகின்றது. ஏற்றுமதி ஊடாக அந்நிய செலாவணியும் பெறப்படுகின்றது.
ஆனாலும் அன்று முதல் இன்றுவரை இந்த நாட்டை ஆண்டுள்ள அரசாங்கங்கள் பெருந்தோட்டத்துறைமீது உரிய கவனம் செலுத்தவில்லை. பொருளாதாரத்தை தாங்கி நின்றாலும், இக்கரை மாட்டுக்க அக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பதுபோல வெவ்வேறு துறைகள்மீதே கவனம் செலுத்தப்பட்டது. இதன்காரணமாகவே பெருந்தோட்டத்துறை வீழ்ச்சியை நோக்கி நகர்ந்தது. அது நாட்டு பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, எமது நாட்டு வசமுள்ள – வளமான பெருந்தோட்டத்துறையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்த அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அதேவேளை, 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனம் கடந்தவாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கின்றோம். ஆனாலும் மலையக தோட்டப்பகுதி பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு இன்னும் உரிய நியமனம் வழங்கப்படவில்லை.
அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்த நிபந்தனைகளை நிறைவேற்றி, பயிற்சிகளை பூர்த்திசெய்து ஆசிரியர் சேவையில் இணைவதற்கான தகைமையை பெற்றிருந்தாலும் அவர்களுக்கான உரிய நியமனம், உரிய கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் மலையக ஆசிரியர் உதவியாளர்கள் வீதியில் இறங்கிபோராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வை வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன், பெருந்தோட்டத்துறை சம்பந்தமான ஜனாதிபதி செலயணியின் கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி செலயணியின் பிரதான பஸில் ராஜபக்சவும் பங்கேற்றார். நட்டத்தில் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, அதற்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளன . ஆகவே, பெருந்தோட்டதுறைமீது தற்போதாவது கவனம் செலுத்தியதற்காக அரசாங்கத்துக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனினும், இச்சந்திப்புக்கு மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதி எவரும் அழைக்கப்படாமை வேதனையளிக்கின்றது.
நட்டத்தில் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்களை, சிறுதோட்ட உரிமையாளர்களுக்கு வழங்குவது சம்பந்தமாக இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது விடயத்தில் பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும். 150 வருடங்களுக்கு மேலாக எமது மக்கள் அத்தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். எனவே, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி, அவர்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ” – என்றார்.
‘இன்று இல்லை நாளை’ – கூட்டமைப்பின் கூட்டமும் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர், பேச்சாளர், கொரடா தேர்வுகளிளுக்கு இன்றைய தினம்கூடிய நாடாளுமன்றக் குழுக் கூட்டம் முடிவு கள் எடுக்கப்படாமல் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று நண்பகல் 11 மணியளவில் கூடிய நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள த.சித்தார்த்தன் சமுகமளிக்கவில்லை. நாளைய தினமும் சித்தார்த்தன் கொழும்பிற்கு வருகை தர மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இவற்றின் காரணமாக அடுத்த நாடாளுமன்ற அமர்வு தினமான எதிர்வரும் 22ஆம் திகதி வரை இந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கல நாதன் கோரியுள்ள நிலையில் இவ்விடயம் அதீத கவனிப்புக்குள்ளாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது
‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 11 பேர் குணமடைவு!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 11 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,946 ஆக அதிகரித்துள்ளது.
182 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகி
‘நுவரெலியா மாவட்டத்தில் விளையாட்டுத்துறை மேம்பாடு’ – ஜீவன் தலைமையில் பேச்சு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் திசேர ஜெயசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் பொருட்டு முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டம் தொடர்பிலும், இளைஞர்களை விளையாட்டு துறையில் ஈடுபடுத்தி அவர்களை தேசிய மட்டத்தில் ஒன்றிணைப்பதற்கான ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இச்சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் நுவரெலியா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ,தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பணிப்பாளர் கனேஷன் ஈஸ்வரன் உட்பட மேலும் சில அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
‘ புதுயுகத்திலும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக முடியாது’
புதிய மாற்றத்தின் பின்னாலே வரும் புதுயுகத்திலும் தொழிலாளர்கள் புதிய தோட்ட “எஜமானர்களுக்கு” “கொத்தடிமைகளாக” இருக்க கூடாது. முடியாது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு,
“பெருந்தோட்டங்கள் நஷ்டமடைவது காலம்காலமாக நடைபெறுகிறது.
இவற்றை எதிர்கொள்ளவே நஷ்டமடையும் பெருந்தோட்டங்கள், சிறு தோட்ட உடைமைகளாக பிரித்து வழங்க வேண்டும் என நாம் எப்போதும் கூறி வந்துள்ளோம்.
அந்த முயற்சிகளையும் நாம் ஆரம்பித்து இருந்தோம்.
இந்நிலையில் நஷ்டமடையும் தோட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அக்கறை காட்டுவது நல்லது.
அவற்றை சிறு தோட்டங்களாக பயிர் செய்கைக்காகவும், இரத்தினக்கல் அகழ்வுக்காகவும், காணிகள் பிரித்து வழங்கப்பட ஜனாதிபதி முடிவு செய்துள்ளமை நல்லதே.
ஆனால் காணிகள் பிரித்து, வழங்கப்படும் போது, தோட்ட தொழில் துறையில் பெரும் தொழில் நேர்த்தி அனுபவம் கொண்ட தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும்.
இந்த புதிய மாற்றத்தின் பின்னாலே வரும் புதுயுகத்திலும் தொழிலாளர்கள் புதிய தோட்ட “எஜமானர்களுக்கு” “கொத்தடிமைகளாக” இருக்க கூடாது. முடியாது.
இதை கவனத்தில் கொள்வது, அரசின் உள்ளே இருப்பவர்களின் கடப்பாடு. ஞாபகப்படுத்துகிறேன்.” – என்றுள்ளது.
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 89,706 பேருக்கு கொரோனா தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 89 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் வேகம் குறைந்தபாடில்லை. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2 ஆம் இடம் உள்ளது.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை.
இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 89 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 1,115 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 43 லட்சத்து 70 ஆயிரத்து 129 ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 33 லட்சத்து 98 ஆயிரத்து 845-பேர் குணம் அடைந்துள்ளனர்.
தொற்று பாதிப்புடன் 8 லட்சத்து 97 ஆயிரத்து 394 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 73 ஆயிரத்து 890-பேர் உயிரிழந்துள்ளனர்.





