Home Blog Page 3867

ஏற்றுமதியை மேம்படுத்த டிஜிட்டல் யுகத்துக்குள் நுழைந்தது கிரிஸ்புரோ

இலங்கையின் முன்னணி மற்றும் பாரிய கோழி இறைச்சி தயாரிப்பாளர்களான கிரிஸ்புரோ நிறுவனம் தமது இணையத்தளத்தை மறுவடிவமைப்பு செய்து டிஜிட்டல் தொழில் நுட்பதிறனூடாக தமது ஏற்றுமதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

மறுவடிவமைப்பு செய்து புதுப்பிக்கப்பட்ட புதிய கிரிஸ்புரோ இணையத்தளம் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப திறன்களுக்காகவும் பாவனையாளர்களின் வசதிகளுக்காகவும் பலவசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

தமது புதிய இணையத்தளத்தில் கிரிஸ்புரோவுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் அனைத்து பிரிவினரதும் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு தேவையான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் ஏற்றுமதி துறையில் அதிகமாக ஈடுபட்டுள்ள கிரிஸ்புரோ நிறுவனம் இந்த இணையத்தளத்தில் அதற்கான வசதிகளை வழங்கியுள்ளது.

கிரிஸ்புரோவின் இலச்சினை வாழ்வாதாரமாக மாறியுள்ள இலங்கை கோழிப் பண்ணை தொழிலை சீராக நடத்திச்செல்வதற்கான தேவை மற்றும் ஏற்றுமதி சந்தையில் பிரவேசமும் இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புதிய இணையத்தளத்தின்மூலம் தெளிவாக தெரிகின்றது.

‘கிரிஸ்புரோ தயாரிப்பின் விசேடத்தன்மை மற்றும் நிறுவனத்தின் நிலையான வர்த்தக முறைமைகள் குறித்து தெளிவான புரிந்துணர்வு எமது வாடிக்கையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் ஏனைய பிரிவினருக்கும் இந்த இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்கப்படுவதுடன் இந்த புதிய இணையத்தளத்தில் கிரிஸ்புரோ பயணத்தின் ஒரு திரும்பு முனையாக அமையும் என்பதே எனது கருத்தாகும்.

மறுவடிவமைக்கப்பட்ட இணையத்தளமானது கிரிஸ்புரோ இலச்சினையின் உட்பார்வை மற்றும் அதன் நடவடிக்கைகளை சரியாக பிரதிபலித்துக்காட்டக்கூடிய தொடர்பாடல் செயல்பாட்டு முறையாக இருப்பதுடன் ஏற்றுமதி சந்தர்ப்பத்தை பலப்படுத்தி தேசிய வருமானம் நாட்டிற்குள் பெருக்கெடுத்து வருவதை அதிகரிப்பதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவது எமது நீண்டகால நோக்கமாக உள்ளது என கிரிஸ்புரோவின் சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் அமோரேஸ்செலர் தெரிவித்துள்ளார்.

கிரிஸ்புரோ நிறுவனம் மத்திய கிழக்கு வலை குடாபிராந்தியத்தில்தமது 30தொன் உற்பத்திப் பொருட்களை முதலாவதாக ஏற்றுமதிசெய்த இலங்கையின் முதலாவது நிறுவனமாகவும் கிரிஸ்புரோ திகழ்கின்றது. அத்துடன் மேலும் கோழி இறைச்சிகளை தொடர்ந்து மாலைதீவுக்கு ஏற்றுமதிசெய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இலங்கையில் கோழிப் பண்ணை தொழில் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு விசேடபங்களிப்பை வழங்குவதுடன் கால் நடைவளத்துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 ஆகும்.

அண்மையில் கோழிப் பண்ணை தொழில் விவசாயதுறைக்காக குறிப்பிடத்தக்கபங்களிப்பை வழங்கியுள்ளது. அத்துடன் இலங்கையில் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு கோழி வளர்ப்பு தொழில் தற்போது உகந்த ஒத்துழைப்பை வழங்குகின்றது.

முட்டை மற்றும் கோழி இறைச்சி தற்போது மத்திய கிழக்கு மற்றும் மாலை தீவு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதுடன் எதிர்காலத்தில் இலங்கை நாட்டின் கோழிவளர்ப்பு தயாரிப்புக்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கு எமது நாட்டிலுள்ள கோழிப்பண்ணை உற்பத்தி நிறுவனங்கள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளன.

மிகவும் திட்டமிடப்பட்ட விதத்தில் செயற்படும் இந்தநாட்டிலுள்ள கோழிப்பண்ணை வர்த்தகம் நவீன தொழில் நுட்பத்தால் பலமடைந்துள்ளதுடன் அரசின் வரி வருமானத்திற்கு உகந்த ஒத்துழைப்புக்களையும் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

1972 ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக்குஞ் சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கிநிற்க வேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒருநிறுவனமாகும்.

இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினிமயப்படுத்தி (vertically intergrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

தமது கடின உழைப்பின்விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமானஷ பண்ணையிலிருந்து மேசைகரண்டிவரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் பிரதானகாரணமாக அமைகின்றனர்.

30 மெற்றிக் தொன் கோழி இறைச்சியை வளை குடாவுக்கு ஏற்றுமதி செய்தது Crysbro

இலங்கையின் முன்னணி மற்றும் பாரிய கோழி இறைச்சி தயாரிப்பாளர்களான கிரிஸ்புரோ நிறுவனம் வளைகுடா பிராந்தியத்திற்காக முதலாவது ஏற்றுமதியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

வளைகுடா ஒத்துழைப்பு பிராந்தியத்தினால் கிடைத்த கேள்விகளுக்கமைய அமைய குளிரூட்டப்பட்ட 30 மெற்றிக் தொன் கோழி இறைச்சி தொகையை ஓமானில் உள்ள அல்ஹமாதி டிரேங்கிற்கு அண்மையில் ஏற்றுமதிசெய்துள்ளது.

கிரிஸ்புரோவினால் வளைகுடா பிராந்தியத்திற்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி தொடர்பாக கருத்து தெரிவித்த கிரிஸ்புரோவின் சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் அமோரேஸ்செலர்,

‘கொவிட் 19 தொற்று நோயின் பின்னர் நாடு சீரடைந்து வருகின்ற நிலையில் எமக்கு மிக விரைவாக அதற்கு ஏற்றாற் போல் மாற்றமடைய வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் நாம்எதிர்கொண்ட சவால்கள் காரணமாக இந்த நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டதுடன் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்காக ஒட்டு மொத்த தேசிய உற்பத்திக்கு சமமாக எமது ஏற்றுமதியின் அளவு அதிகரிக்க வேண்டியுள்ளது.

இவ்வாறான நிலையில் சிறந்த விதத்தில் மற்றும் போஷாக்கு நிறைந்த எமது கிரிஸ்புரோ தயாரிப்புக்களை வளைகுடா ஒத்துழைப்பு பிராந்தியத்திற்கு ஏற்றுமதி செய்வதற்குகிடைத்தமையானது நிறுவனம் என்ற ரீதியிலும் நாடுஎன்ற ரீதியிலும் நாம் பெற்ற மிகப்பெரிய வெற்றியாக கருதமுடியும்.’ என தெரிவித்தார்.

தமது ஏற்றுமதி விதிமுறைகளுக்கு கவனம் செலுத்தி இதற்கு முன்னர் மாலை தீவிற்கு தமது சிறந்த உற்பத்திகளை ஏற்றுமதி செய்த கிரிஸ்புரோ, வளைகுடா ஒத்துழைப்பு பிராந்தியத்திற்கு தமது ஏற்றுமதிகளை விஸ்தரிப்பதற்காக நடவடிக்கை எடுத்தமையினால் 2.8 மில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதிசந்தைக்காக இலங்கையின் சிறந்த கோழி இறைச்சி உற்பத்திக்கு வழியை திறந்துவைத்துள்ளது.

முழுமையாக நிறுவனம் என்ற ரீதியில் கிரிஸ்புரோ இந்த நாட்டில் கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்கள் வாழ்க்கையை பலப்படுத்துவது குறித்து தமது சமூக பொறுப்புணர்வு வேலைத்திட்டங்கள் அனைத்தையும் நிர்மாணித்துள்ளது.

தமது நிறுவன ரீதியான சமூக பொறுப்புணர்வு வேலைத்திட்டத்திற்குள்திரிசவிய, பிரஜாஅருண, கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக நேரடிபங்களிப்பை பெற்றுக்கொடுப்பதுடன் மத்திய மாகாணம், வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவற்றில் சோளம் மற்றும் சிறிய கோழிப் பண்ணை உரிமையாளர்கள் பெரும்பாலானோருக்கு இந்ததிட்டத்தின் ஊடாக சந்தை மற்றும் புதிய தொழில்நுட்பம்மட்டுமன்றி வர்த்தக அறிவினையும் பெற்றுக்கொடுக்க கிரிஸ்புரோ நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்வதே சமட்டத்தில் வெற்றியைப் பெற்றுக்கொள்ளமுடிந்த போதிலும்ஒருவராலும் கவனிக்கப்படாத அல்லது ஒத்துழைப்பு வழங்கப்படாத விளையாட்டு வீரவீராங்கனைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே Crysbro Next Champ திட்டத்தின் முக்கியநோக்கமாக அமைவதுடன் நாடு முழுவதிலும் பரந்துவாழும் திறமையான இளம் விளையாட்டு வீரவீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையான வழிநடத்தல்கள், பயிற்சிகள், உணவு முறைகள் போன்ற விடயங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கி அதன்மூலம் அவர்கள் தேசிய மட்டத்தில் உயர்த்துவதே இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.

‘சிசுதிரிய’ ஊடாக பாடசாலை மாணவமானவிகளுக்கு தேவையான புத்தகங்கள் வழங்குதல் மற்றும் தொழில் கல்வியை பெற்ற மாணவர்கள் பலருக்கும் நன்மைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

அத்துடன் பிரஜா அருணமூலம் 34 வீடுகள் அமைத்து க் கொடுக்கப்பட்டுள்ளதுடன் 80 வீடுகள் திருத்தப்பட்டுள்ளன. கிரிஸ்புரோ ஹரிதசத்கார வேலைத்திட்டத்தின்மூலம் 5000 மரக்கன்றுகள் நாட்டுவதன் ஊடாக கிரிஸ்புரோ சுற்றாடலை பாதுகாக்கவிரும்பும் நிறுவனமென முழு உலகிற்கும் அடையாளப்படுத்தியுள்ளது.

1972 ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக்குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கிநிற்க வேண்டுமென்றவிருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீனமுறையில் கோழி இறைச்சியை உற்பத்திசெய்து செங்குத்தா கஉயர்ந்திருக்கும் ஒருநிறுவனமாகும்.

இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாககணினிமயப்படுத்தி (vertically intergrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவனஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசைகரண்டிவரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.

பெருந்துயர்! தலவாக்கலை இளைஞன் கொழும்பில் பலி!!

கொழும்பு வௌ்ளவத்தை பகுதியில் மூன்று மாடி கட்டிட நிர்மாண தளத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நேற்று 09.09.2020 புதன்கிழமை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
 
தலவாக்கலை, கிறேட் வெஸ்டன் மலைத் தோட்டத்தை சேர்ந்த தனபால் ஜீவா அபிலேஷ் குமார் வயது (17) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
குறித்த இளைஞன் தொழில் நிமித்தம் கொழும்பு வெள்ளவத்தை பகுதிக்குச் சென்ற நிலையில் அங்கு மூன்று மாடி கட்டிட நிர்மாண தளத்தில் வேலை செய்துக்கொண்டிருக்கும்போது நேற்று ( 9.9.2020 )புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
 
சடலம் தற்போது கொழும்பு களுபோவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. 

தலவாக்கலை பி.கேதீஸ்

60 வருட நடைமுறையில் மாற்றம்! இனி பொதுமக்கள் தினமாக திங்கட்கிழமை!!

அடுத்த வாரம் முதல் பொது மக்கள் தினமாக திங்கட்கிழமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சரவை ஊடக பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மனங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேவே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

60 வருட காலமாக பொது மக்கள் தினமாக புதன் கிழமை இடம்பெற்றிருப்பதாக தெரிவித்த அமைச்சர் அன்றைய தினத்தில் பாராளுமன்ற அமர்வு இடம்பெறுவதினால் அமைச்சர்கள் பாராளுமன்றத்திற்கு சமுகமளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:

 திங்கட்கிழமையை அரச நிறுவனங்களில் ‘பொதுமக்கள் தினம்’ ஆகப் பிரகடனப்படுத்தல்

அரச நிறுவனங்களில் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக மக்களுக்கு இலகுவான வகையில் புதன்கிழமையை தற்போது ‘பொதுமக்கள் தினம்’ ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் திங்கட்கிழமை ‘பொதுமக்கள் தினமாக’ பிரகடனப்படுத்தினால் மக்களுக்கு மிகவும் இலகுவாக அமையுமென யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்றிலிருந்து திங்கட் கிழமை ‘பொதுமக்கள் தினமாக’ பிரகடனப்படுத்தவும், அனைத்து அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் குறித்த தினத்தில் அலுவலகத்தில் கட்டாயமாக இருத்தல் அவசியமெனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மாவில தோட்ட மக்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வு!

கம்பளை, உலப்பன மாவில தோட்ட தொழிலாளர்களின் காணிப்பிரச்சனைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தீர்வு பெற்றுக்கொடுத்துள்ளார்.

கம்பளை, உலப்பன மாவில தோட்ட தொழிலாளர்கள் காலம் காலமாக இதே தோட்டத்தில் தொழில் செய்து வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு வீடமைப்பதற்கு கூட ஒரு காணியை தோட்ட நிர்வாகம் வழங்கவில்லை.

இதே சமயத்தில் இதே தோட்டத்தில் சேவை புரியும் சேவையாளர்களுக்கு நிர்வாகம் தோட்ட காணியை திட்டமிட்டு பிரித்து கொடுக்க எடுத்த முயற்சியினால் நிர்வாகத்துக்கு இடையில் முறுகல் நிலை தோற்றுவித்தது .

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. மக்கள் அவரை நேற்று நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

இதனையடுத்து பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்தினரனவுக்கு இது பற்றி அறிவிக்கப்பட்டது. சேவையாளர்களுக்கு காணி பகிரும் திட்டம் இடைநிறுத்தப்பட்டது.

இ.தொ.காவின் உப தலைவர் துரை மதியுகராஜா, உப செயலாளர் பாரத் அருள்சாமி ஆகியோரும் சந்திப்பில் பங்கேற்றனர்.

இறப்பர் உற்பத்தி வரலாறுகாணாத வீழ்ச்சி!

அண்மைய ஆண்டுகளில் குறைவடைந்துவரும் போக்கினையுடைய இறப்பர் உற்பத்தியானது 2019 இல் 74.8 மில்லியன் கி.கிறாம்களாக 9.5 சதவீதத்தால் மேலும் குறைவடைந்தது, இது வரலாற்றில் மிகக் குறைவான வருடாந்த வெளியீடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இக்குறைவானது சிறு உடமையாளர் மற்றும் தோட்டத் தொழில் துறைகள் இரண்டிலும் பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன் இது பிரதானமாக ஆண்டின் பிற்பகுதியின் மழைக்கால காலநிலை நிலைமைகளினால் பாலெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் குறைந்த ஊதிய விலைகள் காரணமாக பாலெடுக்கும் செயற்பாடுகளைக் கைவிடுதல் என்பவற்றால் உந்தப்பட்டதாகும்.

மொத்த இறப்பர் உற்பத்தியில் ஏறத்தாழ 50 சதவீதத்திற்கு வகைகூறும் தட்டை இறப்பரின் உற்பத்தியின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியால் இக்குறைவானது பிரதிபலிக்கப்பட்டது. அதன்படி, தட்டை இறப்பர் உற்பத்தி 2018இன் 41.3 மில்லியன் கி.கிறாம்களிலிருந்து 37.4 மில்லியன் கி.கிறாம்களாக 9.5 சதவீதத்தால் குறைவடைந்தது.

கிறேப் இறப்பர் உற்பத்தியும் 14.4 மில்லியன் கி.கிறாம்களாக 0.5 சதவீதத்தால் சிறிதளவான குறைவொன்றைப் பதிவுசெய்தது.

மொத்த இறப்பர் உற்பத்தியில் ஏறத்தாழ 30 சதவீதத்தை வகைகூறும் ஏனைய இறப்பர் வகைகளின் உற்பத்தியானதுமுன்னைய ஆண்டின் 26.8 மில்லியன் கி.கிறாம் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 22.9 மில்லியன் கி.கிறாம்களாக 14.3 சதவீதத்தால் குறைவடைந்தது.

2019 காலப்பகுதியில் இறப்பர் துறையின் குறைவான வெளியீடானது ஏற்றுமதியின் அளவைக் குறைத்துள்ளது. அதற்கிணங்க, இலங்கையின் இயற்கை இறப்பர் ஏற்றுமதி முன்னைய ஆண்டுடன் ஓப்பிடுகையில் 2019இ ல் 13.0 மில்லியன் கி.கிறாம்களாக 7.0 சதவீதத்தால் குறைவடைந்தது.

கடந்த சில ஆண்டுகளாகக் குறைவடைந்த கைத்தொழில் துறையில் இறப்பரின் உள்நாட்டு நுகர்வானது, இறப்பர் தொடர்பான உள்நாட்டு உற்பத்தித் துறையின் கட்டுப்படுத்தப்பட்ட செயலாற்றம் காரணமாக 113 மில்லியன் கி.கிறாம்களாக 16.8 சதவீதத்தால் மேலும் குறைவடைந்தது.

அதேவேளையில், 2019 இல் இறப்பரின் உற்பத்திச் செலவானது கி.கிறாமொன்றிற்கு ரூ.210.00 ஆக 2.4 சதவீதத்தால் அதிகரித்தது. இருப்பினும், கொழும்பு இறப்பர் ஏலத்தில் நாடாவாக்கப்பட்டு புகையூட்டப்பட்ட தட்டை இறப்பர் இல.1 மற்றும் லேட்டக்ஸ் கிறேப்பின் சராசரி விலைகள் முறையே கி.கிறாமொன்றிற்கு ரூ.288.51 மற்றும் கி.கிறாமொன்றிற்கு ரூ.302.32 ஆகக் காணப்பட்டன.

இதன் விளைவாக குறைவான இலாப எல்லை ஏற்பட்டு, பாலெடுக்கும் செயற்பாடுகள் மற்றும் உற்பத்தியாளர்களினால் இறப்பர் பயிர்ச்செய்கையில் மேலதிகமாக முதலிடுதல் என்பவற்றை மந்தப்படுத்துகின்றன.

உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகளின் மெதுவடைவு மற்றும் ஒப்பீட்டளவில் குறைவான பெற்றோலிய விலைகள் என்பவற்றின் கீழ் இயற்றை இறப்பருக்கான பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கேள்வி குறைவாகக் காணப்பட்டது.

இவ்வாண்டுப்பகுதியில் இயற்கை இறப்பர் இறக்குமதி 50.0 மில்லியன் கி.கிறாம்களில் 24.0 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், ஒப்பீட்டளவில் குறைவான உலகளாவிய எண்ணெய் விலைகள் காரணமாக செயற்கை இறப்பர் இறக்குமதி 64.0 மில்லியன் கி.கிறாம்களாக 2.1 சதவீதத்தால் அதிகரித்தது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 20 ரூபாய் மட்டுமே அதிகரிப்பு!

2019 ஆம் ஆண்டு குறைந்தப்பட்ச நாள்சம்பளமாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய் சம்பளக் கோரிக்கையை முன்வைத்திருந்த போதிலும், அந்த ஆண்டு வெறும் 20 ரூபாய் சம்பளமே அதிகரிக்கப்பட்டிருப்பதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள, 2019ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2019ஆம் ஆண்டு பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் குறைந்தப்பட்ச நாளாந்தக் கூலியாக 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பைக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டதுடன், அதனைத் தொடர்ந்து அடிப்படைச் நாற்சம்பளமானது 500 ரூபாயிலிருந்து 700 ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு செலுத்தப்பட்டு வந்த உற்பத்தித்திறன் கொடுப்பனவு, வருகைக் கொடுப்பனவு நிறுத்தப்பட்டமையால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மொத்தச் சம்பளமாக 20 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கப்பட்டதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பா.நிரோஷ்

நன்றி – தமிழ்மிரர்

2019 இல் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி!

2019 ஆம் ஆண்டு தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைவதற்கு, கூலித் தொடர்பான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின் ஏற்பட்டத் தொழிலாளர் பிரச்சினைகளும் காரணமென 2019 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும், கொழும்பு ஏலத்தில் வர்த்தகம் செய்யப்பட்ட தேயிலையின் அளவும், ஏற்றுமதிச் செய்யப்பட்டத் தேயிலையின் அளவும் அதிகரித்திருந்ததெனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2017ஆம் ஆண்டைப் போல 2019ஆம் ஆண்டும் தேயிலை உற்பத்தியில் கீழ் நோக்கியப் போக்குக் காணப்பட்டுள்ளது. 2019 இல் 300.1 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்திச் செய்யப்பட்டுள்ளதோடு, இது 1.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘கூலிப்’ பேச்சுவார்த்தைகளின் போது எழுந்த தொழிலாளர் பிரச்சினை, 2019ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஏற்பட்டிருந்த வரட்சி, நான்காம் காலாண்டில் ஏற்பட்ட பலத்த மழைவீழ்ச்சி ஆகியன தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைவதற்குக் காரணமென குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் துறையைவிட, சிறுதோட்ட உரிமையாளர்களின் தேயிலை உற்பத்தி கணிசமான அளவு அதிகரித்திருப்பதாகவும் இதற்கு தேயிலை மீள்நடுகை, நிரப்பல் நடுகை, சிறந்த வேளாண்மை நடைமுறைகளும் இதற்குக் காரணமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் தேயிலையின் சராசரி ஏற்றுமதி விலை, 2018ஆம், 5.1 டொலர்களாகவும் 2019ஆம் ஆண்டு 4.6 டொலர்களாகவும் காணப்படுகிறது.

2018ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, ஒரு கிலோகிராம் தேயிலையின் சராசரி விலை 2019ஆம் ஆண்டு 9.1 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

தேயிலை ஏற்றுமதியால் நாட்டுக்குக் கிடைக்கும் வருவாயை அதிகரிக்க, இத்துறையின் பெறுமதி கூட்டலை மேம்படுத்துதல், களஞ்சியசாலை, பொதியிடல் வசதிகளையும் மேம்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் வரையிலான பெறுமதிச் சங்கிலி முழுவதும் தரத்தை உறுதிப்படுத்துதலும் அவசியமெனவும், உற்பத்தியாளர்களின் சொந்த நாமத்தை உருவாக்குவதனூடாக, வெளிநாட்டுக் கொள்வனவாளர்களுடன் நேரடி இணைப்புகளைக் கட்டியெழுப்புவதூடாக தேயிலை உற்பத்தியாளர்களுக்கான சிறந்த விலைகளையும் நிலையான சந்தையையும் உறுதிசெய்ய முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் அறிக்கையின் ஆரம்பத்தில் 2019ஆம் ஆண்டுக்கான தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சிக்கு கூலிப் பேச்சுவார்த்தைகளின் போது, அதாவது கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின் போது எழுந்த தொழிலாளர் பிரச்சினைகள் காரணமென குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தேயிலை ஏற்றுமதியால் நாட்டுக்குக் கிடைக்கும் வருவாயை அதிகரிப்பதற்கு மத்திய வங்கியால் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளில், தொழிலாளர்கள் தொடர்பில் எதனையும் குறிப்பிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்டத் துறை வீழ்ச்சிக்கு கூட்டு ஒப்பந்தமே பிரதானக் காரணமென பரவலாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும்போதே மத்திய வங்கியின் அறிக்கையிலேயே, கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பா.நிரோஷ்

நன்றி தமிழ்மிரர்

’13’ இற்கு போர்க்கொடி தூக்கிய வீரசேகரவுக்கு இந்திய தூதரகம் அவசர அழைப்பு!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமூலம் மற்றும் மாகாணசபை முறைமை ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு, கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.

மாகாணசபை முறைமை நீக்கப்படவேண்டும் என இராஜாங்க அமைச்சரால் முன்வைக்கப்பட்ட கருத்து தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என சிங்கள தேசிய நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சந்திப்பு இவ்வாரம் நடைபெறும் எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாணசபை முறைமை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இற்றைவரை அப்பொறிமுறை ஊடாக மக்களுக்கு ஆற்றப்பட்டுள்ள சேவைகள் தொடர்பில் விரிவானதொரு அறிக்கையை தனக்கு சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் சரத்வீரசேகர பணிப்புரை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இந்திய தூதரகத்திடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலையீட்டுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டமூலத்தின் பிரகாரமே மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது.

‘ஈராண்டுகளில் ஓய்வுபெறும் திட்டம் இல்லை’ – பிரதமர் மஹிந்த அறிவிப்பு!

” இன்னும் இரண்டு ஆண்டுகளில் அரசியலில் இருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஓய்வுபெறவுள்ளார்.” என வெளியான தகவல்களை பிரதமர் நிராகரித்துள்ளார்.

ஐந்தாண்டுகளுக்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். எனவே, அக்காலப்பகுதிக்கு முன்னர் ஓய்வுபெறும் திட்டம் எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஈராண்டுகளில் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார் எனவும், அவரின் இடத்துக்கு மற்றுமொரு ராஜபக்ச நியமிக்கப்படுவார் எனவும் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

‘கடல் கடந்த இந்தியக் குடியுரிமை’ – இந்திய அரசுக்கு இதொகா நன்றி!

0
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் கடல் கடந்த இந்தியக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையை இலகுபடுத்தியுள்ள இந்திய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற...

வரலாறு படைத்த தமிழக தேர்தல்: 84,29 சதவீத வாக்கு பதிவு!

0
2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணிக்குப் பின் டோக்கன்...

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்கும் படகுகளை அழிக்க ட்ரம்ப் உத்தரவு!

0
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு அருகிலுள்ள முக்கிய கடல் பகுதியில் சிறிய ரக படகுகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தயக்கமின்றி...