Home Blog Page 3874

New Diamond எண்ணெய் கப்பல் – பிரதமர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

விபத்திற்குள்ளாகியுள்ள MT – New Diamond எண்ணெய் கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

24 மணி நேரமும் செயற்படக்கூடிய ஒரு கூட்டு நடவடிக்கையின் ஊடாக விபத்திற்குள்ளான கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலையீட்டுடனும் சம்பவ முகாமைத்துவ குழு, கடல்வள பாதுகாப்பு மற்றும் கடல் வள முகாமைத்துவ திணைக்களம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக அதிகார சபை,

சுற்றாடல் அதிகாரசபை, கடற்றொழில் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் ஒன்றிணைந்து விபத்திற்குள்ளான கப்பலின் தீயை கட்டுப்படுத்துவதற்கும், கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை குறைப்பதற்கான நடவடிக்கைகளிலும் மேற்பார்வை செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளன.

குவைத் மீனா அல் அஹமதியா துறைமுகத்திலிருந்து இந்தியாவின் ஒடிசா பிராந்தியத்தின்  பெரடிப் துறைமுகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பனாமா இராஜ்ஜியத்திற்கு சொந்தமான MT – New Diamond எண்ணெய் கப்பலில் இலங்கைக்கு 38 கடல் மைல் தொலைவிலுள்ள சங்கமன்கண்டியை அண்மித்த பகுதியில் வைத்து, 2020 செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி முற்பகல் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. குறித்த கப்பலில் 270,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பட்டாவத்த தமிழ் வித்தியாலயத்துக்கு புதிய கட்டிடம் – செந்தில் தொண்டமான் நடவடிக்கை

மடுல்சீமை, பட்டாவத்த தமிழ் வித்தியாலயத்துக்காக 100 லட்சம் ரூபா செலவில் புதியதொரு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் விடுத்த வேண்டுகோளுக்கமையவே இக்கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான நிதி ஏற்பாடுகளை பிரதம அமைச்சரின் இணைப்பு செயலாளரும், ஊவா மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமான் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த பாடசாலைக்கு இன்று கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்ட செந்தில் தொண்டமான், கட்டிடத்தை பார்வையிட்டதுடன், மேலதிகமாக தேவைப்படும் வள வசதிகள் பற்றியும் கேட்டறிந்தார்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடனும் கலந்துரையாடினார்.

சர்வாதிகார பயணத்தின் ஆரம்பமே ’20’ ! சஜித் அணி குற்றச்சாட்டு!

சர்வாதிகார ஆட்சியை நோக்கி பயணிப்பதற்கான ஆரம்பமே அரசியலமைப்பின் ’20’ ஆவது திருத்தச்சட்டமூலமாகும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது.

அத்துடன், அரசியலமைப்பு பேரவை இல்லாமல் செய்யப்பட்டதன் ஊடாக உயரிய சுயாதீன நிறுவனங்களுக்கு தமது விசுவாசிகளை நியமிக்ககூடிய வாய்ப்பு ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது. இது பயங்கர நிலைமையாகும் என்று எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக் ஷ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ’20’ ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக அரசியலமைப்பு பேரவை இல்லாமல் செய்யப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

வடமேல் மாகாண தேர்தலின்போது பொலிஸ் மற்றும் சில அரச சேவையாளர்கள் அரசாங்கத்துக்கு சார்பாக செயற்பட்டதால் அத்தேர்தல் முடிவடைந்தகையோடு நாட்டிலுள்ள உயர் நிறுவனங்களான நீதிமன்றம், பொலிஸ், அரசசேவை ஆகியன சுயாதீனமாக்கப்படவேண்டும் என்ற கருத்து உருவானது. இதனை அடிப்படையாகக்கொண்டே 2001ஆம் ஆண்டு 17ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

சந்திரிக்கா அம்மையாரால் கொண்டுவரப்பட்ட 17 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த அனைத்துக்கட்சிகளும் ஆதரவு வழங்கின. உயர் நிறுவனங்கள் சுயாதீனமாக்கப்படவேண்டும் என்பதே சட்டமூலத்தின் பிரதான நோக்கமாக இருந்தது. இதன்படி அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டது.

குறிப்பாக உயர் நிறுவனங்களின் பதவிகளுக்கு, நிறைவேற்று ஜனாதிபதியால் அனுப்படும் நபர்களின் பெயர்களைக்கூட நிராகரிக்கும் அதிகாரம் அப்பேரவைக்கு வழங்கப்பட்டிருந்தது.

எனினும், 18 ஆவது திருத்தச்சட்டம்மூலம் 17 இல்லாதொழிக்கப்பட்டு அனைத்து அதிகாரங்களும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின்கீழ் கொண்டுவரப்பட்டன. உயர் பதவிகளுக்கான நியமனங்களை ஜனாதிபதியே வழங்கினார்.

இந்நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் அல்லது இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தாடல் உருவானது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவோம் என உறுதியளித்தே நாம் தேர்தலை எதிர்கொண்டோம் .

2015 இல் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்ற பின்னர், நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பதற்கு இணங்கினார். 99 சதவீத அதிகார குறைப்புடன் 19ஆவது திருத்தச்சட்டமூலம் உயர்நீதிமன்றத்துக்கு சென்றது. சில விடயங்களை மாற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என நீதிமன்றம் சட்டவியாக்கியானம் வழங்கியது. எனவே, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத விதத்தில் ’19’ மாற்றியமைக்கப்பட்டு
நிறைவேற்றப்பட்டது.

அதன்மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டது. அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டது. சுயாதீன நிறுவனங்களுக்கு உறுப்பினர்களை ஜனாதிபதி தெரிவுசெய்தால் அதனை நிராகரிக்கும் அதிகாரம் பேரவைக்கு காணப்பட்டது. இதன்மூலம் நீதிமன்றம் உள்ளிட்ட நிறுவனங்கள் சுயாதீனமாக இயங்கின.

20 ஆவது திருத்தச்சட்டமூலம் ஊடாக நாடாளுமன்ற பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு உரிய அதிகாரங்கள் இல்லை. ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க மட்டுமே முடியும். அதனை ஜனாதிபதி ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். எனவே, முப்படை தளபதிகள், நீதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவர் உட்பட சுயாதீன நிறுவனங்களுக்கான நியமனங்களை ஜனாதிபதியே வழங்குவார்.

இதனால் உயர் பதவிகளை வகிப்பவர்களுக்குசுயாதீனமாக செயற்படமுடியாத நிலை ஏற்படும். எவ்வாறு அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானங்களை வழங்குவது என்ற அச்சநிலையும் உருவாகும். உயர் நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்படாவிட்டால் நாட்டை முன்நோக்கி அழைத்துச்செல்லமுடியாது.
ஆக சர்வாதிகாரத்தை நோக்கிய பயணத்தின் ஆரம்பமே 20 ஆவது திருத்தச்சட்டமூலமாகும்.

நாடாளுமன்றத்தை ஒரு வருடத்துக்கு பிறகு ஜனாதிபதியால் கலைக்கமுடியும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் எவ்வாறு நிலையானதொரு ஆட்சியை எதிர்ப்பார்க்கமுடியும்.” – என்றார்.

இலங்கை வருகிறார் ஐஸ்வர்யா ராய்!

பிரபல இயக்குநர் மணிரத்னத்தின்  ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 70 வீதமான காட்சிகள் இலங்கையில் படமாக்கப்படவுள்ளது.

குறித்த படத்தில் 30 வீதமான பணிகள் ஏற்கனவே நிறைவுபெற்றுள்ள நிலையில் எஞ்சிய 70 வீதம் ரன்மினிதன்ன சினிமா கிராமம் , தம்புள்ள உட்பட மேலும் சில இடங்களில் ஒளிப்பதிவு செய்யப்படவுள்ளது என தெரியவருகின்றது என்று சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நடிகர்கள் இலங்கை வரவுள்ளனர் எனவும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகும். 30 வீதமான காட்சிகள் தாய்லாந்தில் எடுக்கப்பட்டுள்ளது.

கெசல்கமுவ ஓயாவுக்கு அருகிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (04) மீட்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட உப மின் தயாரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஆறுமுகம் ரவிகுமார் (வயது -42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.  சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

மிரட்டல் பட நடிகையையும் தொற்றியது கொரோனா!

தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மிரட்டல் பட நடிகை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், தற்போது பிரபல நடிகை ஷர்மிளா மந்த்ரேவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இவர் தமிழில் வினய், சந்தானத்துடன் ‘மிரட்டல்’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அதேபோல் விமல் ஆஸ்னா ஜவேரி நடிப்பில் திரைக்கு வந்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.

தற்போது ஆர்.மாதேஷ் இயக்கத்தில் விமல், ஷ்ரேயா நடிக்கும் ‘சண்டக்காரி’, அட்டகத்தி தினேஷ், தீப்தி நடிக்கும் ‘நானும் சிங்கிள்தான்’ போன்ற தமிழ் படங்களையும் தயாரித்து வருகிறார்.

பெங்களூருவை சேர்ந்த இவர் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். ஷர்மிளா மந்த்ரே தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

 அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கொரோனா பாசிடிவ் வந்துள்ளது. அனைவருக்கும் லேசான அறிகுறிகள் இருப்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். நான் டாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

ரசிகர்களை மிரட்டவுள்ள ‘மாஸ்டர்’!

’மாஸ்டர்’ படத்தில் விஜய்-விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள், மிரட்டலாக அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் நடித்து விரைவில் திரைக்கு வரயிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து இருக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய்-விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள், மிரட்டலாக அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது. படத்தை பார்த்த விஜய், டைரக்டர் லோகேஷ் கனகராஜை கட்டிப்பிடித்து வாழ்த்தி இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்,’ ‘கைதி’ படங்களை பார்த்தபின், அவர் மீது விஜய்க்கு ஒரு மரியாதை ஏற்பட்டதாகவும், அப்போதே அவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்த தாகவும் பேசப்படுகிறது. ‘மாஸ்டர்’ படத்தை பார்த்த பின், லோகேஷ் கனகராஜ் மீதான மரியாதை விஜய்க்கு மேலும் உயர்ந்து இருக்கிறதாம். “நாம் இருவரும் மேலும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியலாம்” என்று லோகேஷ் கனகராஜிடம் கூறியிருக்கிறார்.

‘மாஸ்டர்’ படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக இருந்தது. ஊரடங்கு காரணமாக படத்தின் வெளியீட்டு திகதி ஒத்திவைக்கப்பட்டது. ‘படத்தை எப்போது பார்ப்போம்?’ என்ற ஆவல், ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ படம் இணையதளங்களில் வெளிவரயிருக்கும் நிலையில், விஜய் படமான ‘மாஸ்டர்’ தியேட்டர்களில் வெளியாகுமா அல்லது இணையதளங்களில் வெளிவருமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ‘நம்பர் வன்’ வீரர் நோவக் ஜோகோவிச் 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார். பிளிஸ்கோவா அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரும், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 44-ம் நிலை வீரரான கைல் எட்மன்டை (இங்கிலாந்து) எதிர்கொண்டார்.

முதல் செட்டை டைபிரேக்கரில் கோட்டை விட்ட ஜோகோவிச் அதன் பின்னர் தனது ஆட்ட வேகத்தை அதிகரித்ததுடன் அடுத்த 3 செட்களையும் சொந்தமாக்கி தனது ஆதிக்கத்தை நிரூபித்தார்.

3 மணி 13 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-7 (5-7), 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் கைல் எட்மன்டை துரத்தியடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் தோல்வியையே சந்திக்காத ஜோகோவிச் தொடர்ச்சியாக பெற்ற 25-வது வெற்றி இதுவாகும். அடுத்த சுற்றில் ஜோகோவிச், 29-ம் நிலை வீரரான ஜெர்மனியின் ஜான் லினர்ட் ஸ்ரப்பை சந்திக்கிறார்.

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 18 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில்  மேலும் 18 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,907ஆக அதிகரித்துள்ளது.

192 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா – இன்று பலப்பரீட்சை!

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று நடைபெறவுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறது.

ஸ்டேடியத்தில் ரசிகர்களை அனுமதிக்காமல் கொரோனா தடுப்பு உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு போட்டிகளும் நடத்தப்படுகிறது. அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளைத் தொடர்ந்து இப்போது ஆஸ்திரேலிய அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அங்கு பயணித்துள்ளது.

இதன்படி இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சவுதம்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஒத்திவைக்கப்படாமல் இருந்திருந்தால், அதற்கு தயாராவதற்கு இந்த தொடர் உதவியிருக்கும். என்றாலும் இரு பலம் வாய்ந்த அணிகள் கோதாவில் குதிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 16 இருபது ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9 இல் ஆஸ்திரேலியாவும், 6இல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

என்.பி.பி. அரசாங்கத்திடம் இனவாதம் இல்லை! இது மக்கள் ஆட்சி!!

0
தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செயல்படமாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது. தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கை மக்களுக்கான...

திறைசேரியில் 2.5 மில்லியன் டொலர் திருட்டு-CID விசாரணை!

0
திறைசேரியில் 2.5 மில்லியன் டொலர் திருட்டு-CID விசாரணை! வெளிநாட்டுக் கடன் சேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பந்தப்பட்ட மோசடி குறித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. திறைசேரி அளித்த முறைப்பாட்டைத்...