Home Blog Page 3875

‘காலத்தை கடந்துவதைவிட தீர்வை வழங்குவதே எனது அரசியல் ஸ்டைல்’ – ஜீவன்

” பிரச்சினைகளைப் பேசி காலத்தை ஓட்டுவதைவிடவும், தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக்கொண்டதே எனது அரசியல் பயணம். அவ்வாறு தற்போது செயற்பட்டும் வருகின்றேன்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் புனிதஜோன் பொஸ்கோ கல்லூரியில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் இரண்டு மாடிக் கட்டடம் இன்று (04) திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கைமூலம் எனது அமைச்சுக்கு ஆயிரத்து 56 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த நான்கரை வருடங்களில் கடன் அடிப்படையிலேயே மலையகத்தில் வேலைகள் நடந்துள்ளன. அவற்றை மீள செலுத்த வேண்டியுள்ளது.

முதலில் அடிக்கல் நாட்டவேண்டும், கட்டிடத்தை நாமே திறந்து வைக்க வேண்டும் என்ற குறுகிய அரசியல் நோக்கில் திட்டங்களை உரிய வகையில் செய்யவில்லை. எங்களுக்கு அடிக்கல் நாட்டுவது பிரச்சினை அல்ல. செய்யும் திட்டம் முறையாகவும், பயனாளர்களுக்கு நன்மை பயக்ககூடியதாகவும் இருக்கவேண்டும்.

பிரச்சினைகளை பேசி, பேசி காலத்தை ஓட்டமுடியாது. நீங்கள் பாடசாலை பிரச்சினையை அறிவித்தீர்கள். இன்று தீர்வை வழங்கினோம். மைதானம் தேவையென கூறினீர்கள். இட ஒதுக்கீடு தொடர்பில் கம்பனியுடன் பேசி அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு மைதானப்பணியும் ஆரம்பமாகும். இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமலை சந்தித்தும் கலந்துரையாடவுள்ளேன்.

அதேவேளை, கல்வி என்பது புத்தக படிப்பு மட்டும் அல்ல, அதனையும்தாண்டி பல விடயங்கள் உள்ளன. விளையாட்டு உட்பட பல் துறைகளில் மாணவர்களால் சாதிக்க முடியும் அதேபோல் அமைதி, அமைதி எனக்கூறி மாணவர்களை முடக்காமல், அவர்களுக்கு கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகளை ஆசிரியர்கள் வழங்கவேண்டும். அப்போதுதான் திறந்த தலைவர்களை உருவாக்கமுடியும். ” – என்றார்.

க.கிசாந்தன்

‘நாம் கல்வியில் அரசியல் செய்யவில்லை – மாணவர்களின் வளர்ச்சியே முக்கியம்’

கல்வி வளர்ச்சி மூலமே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என கருதி அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அன்று முதல் இன்று வரை முக்கியத்துவம் வழங்கிவருகின்றது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் புனிதஜோன் பொஸ்கோ கல்லூரியில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் இரண்டு மாடிக் கட்டடம் இன்று (04) திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

இப்பாடசாலைக்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனாலும் அது மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக கையளிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டு 2 நாட்களுக்கு முன்னர் பெற்றோர் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது தொடர்பில் எமக்கு தெரியவந்ததையடுத்து, எமது பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், மத்திய மாகாணத்தின் ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கட்டிடத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலயக்கல்விப் பணிப்பாளர், அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் இன்று கட்டிடத்தை திறந்துவைப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

இதனை நாம் அரசியலுக்காக திறந்து வைக்கவில்லை. மாணவர்களின் கல்வி வளர்ச்சியே எமது இலக்கும். அதற்கான வழியை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஐயா சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் முதல் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் வரை காங்கிரஸின் தலைமையின் கீழ் மலையக கல்வி வளர்ச்சிக்காக பல திட்டங்களை, சேவைகளை முன்னெடுத்துள்ளோம்.

கல்வி வளர்ச்சிமூலமே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என கருதி அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அன்று முதல் இன்றுவரை முக்கியத்துவம் வழங்கிவருகின்றது. எமது தலைவர்களும் நிதிகளை ஒதுக்கினர். ஜீவன் தொண்டமானும் தற்போது கூடுதல் கவனம் செலுத்திவருகின்றார். இது தொடர்பில் அவர் உரிய தரப்புகளுடன் ஆலோசனை நடத்திவருகின்றார்.” – என்றார்.

க.கிசாந்தன்

ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரிக்கான கட்டிடம் திறந்துவைப்பு

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட, ஹட்டன் புனிதஜோன் பொஸ்கோ கல்லூரிக்காக, ஒரு கோடியே 14 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடம் இன்று (04)இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது

புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியில் கடந்த மூன்று தசாப்த காலமாக போதியளவு கட்டிட வசதிகள் இன்மையால், மாணவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டனர். இந்நிலையில் கடந்த 2019 ஏப்ரல் மாதம், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் மேற்படி பாடசாலைக்கு இரண்டு மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணி ஆரம்பமானது.

பணிகள் நிறைவடைந்தும் திறக்கப்படாமல் இருந்தது. இதனயைடுத்து கடந்த 2 ஆம் திகதி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது பிள்ளைகள் கல்வி பயிலும் வகுப்பறை ஆபத்தாக காணப்படுகின்றது எனவும், இதனால் புதிய கட்டிடத்தை திறக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டினர், அதுமட்டுமல்ல அதுவரை பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவதில்லை எனவும் முடிவெடுத்தனர்.

இது தொடர்பில் ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர், ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டுவந்தனர். இந்நிலையிலேயே கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

’13’ இன் தலைவிதி நிபுணர் குழுவின் கைகளில்!

புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவே, 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் முன்மொழிவை முன்வைக்கும்.அதன்பின்னரே அரசியல் ரீதியிலான தீர்மானம் எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதயகம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்றது.

இதன்போது அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” வடக்கு,கிழக்கில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வாகவே மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மாகாணசபைகள் இயங்கவில்லை. ஆனாலும் அவற்றுக்கு தேர்தலை நடத்துமாறு வடக்கு, கிழக்கில் இருந்து எவரும் குரல் எழுப்பவில்லை.

மாகாணசபை முறை நீக்கப்படுமா, இல்லையா என்பது தொடர்பில் என்னால்கூறமுடியாது. அது தொடர்பான பரிந்துரையை நிபுணர்குழுவே முன்வைக்கும். அதன்பின்னரே அமைச்சரவையில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும்.

13 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதா, இல்லையா என்பது தொடர்பில் அமைச்சரவையில் எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. புதிய அரசியலமைப்பு இன்னமும் உருவாக்கப்படவும் இல்லை.

அவ்வாறு இயற்றப்பட்ட பின்னரே சட்டரீதியாக, இராஜதந்திர ரீதியாக எழும் சிக்கல்கள் பற்றி அறியக்கூடியதாக இருக்கும்.
நாட்டிலுள்ள முதன்மையான நிபுணர்கள்தான் அரசியலமைப்பை இயற்றும் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, 13 தொடர்பிலும் விரிவாக ஆராய்ந்து பரிந்தரைகளை முன்வைக்கப்பார்கள். அதன்படி அரசியல் தீர்மானம் எடுக்கப்படும்.” – என்றார்.

‘மலையக தொழிலாளர் முன்னணிக்கான சந்தாவை நிறுத்துங்கள்’ – அனுசா கோரிக்கை

மலையக தொழிலாளர் முன்ணணிக்கு செலுத்தும் மாதாந்த சந்தாவை நிறுத்துமாறு மலையக மக்கள் முன்ணணியின் பிரதிசெயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“தொழிலாளர்கள் தங்களின் வியர்வையால் செலுத்தும் சந்தாவினால் சம்பந்தமில்லாத ஒரு சிலர் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருவதை தொடர்ந்தும் அனுமதிக்காதீர்கள்.

நாம் வழங்கும் சந்தாவின் ஒவ்வொரு ரூபாய் ஊடாக தொழிலாளர்களுக்கு ஏதாவது பயன் இருக்க வேண்டும். எமது வாழ்க்கை மாற்றத்துக்கு இந்த சந்தா பணம் பயன்பெற வேண்டும் எமது பிள்ளைகளின் கல்விக்கு ஓரளவாவது பயன் இருக்க வேண்டும் வயோதிபர்கள் நோயாளிகள் ஏதாவது பயன் பெற வேண்டும்.

ஆனால் இன்று நடப்பதென்ன மேல் மட்டத்தில் இருக்கும் ஒரு சிலர் தங்களுக்கு தேவையான விதத்தில் சந்தா பணத்தை செலவு செய்கிறார்கள் தேவையற்ற கூட்டங்களை நடத்தி லட்சக்கணக்கான பணத்தை வீணாக்குகிறார்கள்.

மலையகத்தின் ஏனைய தொழிற்சங்கங்கள் தங்களின் சந்தா விபரங்களை தொழில் திணைக்கள தலைமையகத்துக்கு தெரிவிப்பது போன்று மலையக தொழிலாளர் முன்ணணி தனது கணக்குகளை அறிவிக்கவில்லை என்று தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக வெளிப்படையாக அறியமுடிகிறது.

இதன் விபரங்கள் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. இது தொழிலாளர்களுக்கு செய்யப்படும் அடிப்படை மனித உரிமை மீறல் மட்டுமல்ல அப்பட்டமான துரோகக் கொள்ளையாகும். இதையெல்லாம் விட்டு விட்டு கட்சிப்பணத்தில் கூட்டம் போட்டு கும்மாளம் அடித்து கணக்கு கேட்ட என்னை கட்சியிலிருந்தி நீக்குவதற்க்கு கூட்டம் கூட்டுவதற்கு தலைமையின் வேலை ?

உண்மையிலேய சந்தா பணத்தில் ஊழல் செய்யவில்லை என்றால் துணிவோடு கணக்கு அறிக்கையை வெளிப்படையாக சமர்ப்பிக்க வேண்டும்.

காரியாலயத்தில் உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வு இல்லை கொடுக்கும் சம்பளத்தையும் உரிய திகதியில் வழங்குவதில்லை கழிக்கப்படும் EPF பணம் ஒழுங்காக திணைக்களங்களுக்கு அனுப்பப்படுவதில்லை. கட்சியை விட்டு விலகும் அல்லது ஓய்வு பெறும் அல்லது மரணிக்கும் உத்தியோகத்தர்களின் EPF கொடுப்பனவுகள் கூட தேவையற்ற விதத்தில் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றது. கேள்வி கேட்பவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் கட்சியில் அங்கத்துவம் சரிபாதியாக குறைந்துக் கொண்டே வருகிறது.

பல LT வழக்கு ACL வழக்குகள் தோல்வியில் முடிகின்றன. இது நிலை தொடர்ந்தால் ஒரு பக்கம் கட்சி என்று இருக்காது மறுபக்கம் நாம் இரத்தம் சிந்தி உழைத்து வழங்கும் சந்தா பணத்தினால் ஒரு சிலர் ஆயிரக்கணக்கில் சம்பாதித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள்.

இன்று லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு கணக்கு இல்லை உயர்பதவியில் இருப்பதாகக் கூறிக்கொள்பவர்கள் இந்த அநீதி தெரிந்தும் கூட. தலைமைக்கு பயந்து அமைதியாக உள்ளார்கள். கேள்வி கேட்பவர்களையும் கணக்கு கேட்பவர்களையும் எப்படி சமாளிப்பது என்று நிதிச் செயலாளர் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்.

ஆகவே மலையக மக்கள் முன்ணணியின் மீதும் மலையக தொழிலாளர் முன்ணணியின் மீதும் அதன் வளர்ச்சியின் மீதும் உண்மையான பற்று இருந்தால் தொழிலாளர்கள் இந்த தொழிற்சங்கத்துக்கு செலுத்தும் சந்தா பணத்தை உடனடியாக நிறுத்துக்கள். சந்தா பணத்தை நிறுத்துவதால் உங்களுக்கு சேவை செய்ய முடியாது என அவர்கள் கூறினால் நிச்சயமாக உங்களின் சட்டரீதியான தொழில் பிரச்சினைகளை நான் தீர்த்துவைப்பேன் .” – என்றார்.

போலி மாணிக்கக்கல்லைக்காட்டி 60 வயது பெண்ணை ஏமாற்றிய யுவதி!

சாயம் பூசப்பட்ட போலி இரத்தினக் கல்லைக் கட்டி 60 வயதுடையவயோதிப பெண்ணின் தங்கச்சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கலவான பிரதேசத்தில் இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

மாணிக்கக்கல்லின் பெறுமதி அதிகமாக இருக்கின்ற போதிலும் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதால் அவற்றைப் பெற்றுக்கொண்டு பணம் தருமாறு வயோதிபப் பெண்ணிடம் கேட்கப்பட்டுள்ளது.

இரத்தினக்கல் சம்பந்தமாக எந்தவிதமான அறிவும் இல்லாத வயோதிபப் பெண், இளம் பெண் மீது அனுதாபம் கொண்டு தன்னிடம் பணம் இல்லை, தேவையென்றால் தன் கழுத்தில் உள்ள ஒன்றரை  இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச்சங்கிலியை அடகு வைத்து பணத்தைபெற்று கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து போலி இரத்தினக் கற்களும் தங்க சங்கிலியும் கைமாறியுள்ளது.தங்கச் சங்கிலியைப் பெற்றுக் கொண்ட பெண்ணும் தலை மறைவாகினார். அதே சந்தர்ப்பத்தில் வயோதிபப் பெண் அந்த இரத்தினக் கற்களை பத்திரமாக எடுத்துச்சென்று ஒரு இரத்தினக்கல்லை ஒருவியாபாரியிடம் காட்டியுள்ளார்.

இரத்தினக்கல்லைப் பரீட்சித்துப் பார்த்தபோது அவை சாயம் பூசப்பட்ட போலியானவை எனத் தெரியவந்ததையடுத்து இதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து சி.சி.டி.வி. தொழில் நுட்ப கமராக்களை பயன்படுத்தி சந்தேக நபரைக் கைது செய்யமுயற்சிகள் மேற்கொண்டு வருவ தாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.

ஆறுமுகன் தொண்டமானுக்கு அனுதாபம் – 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதம்!

பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 08ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நடத்துவதற்கு நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் ஆளும் கட்சியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய 08ஆம் திகதி மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் 2020 வருட நடுப்பகுதியில் அரசாங்கத்தின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கை என்பன பற்றி சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவுள்ளது. அன்றையதினம் பிற்பகல் 01.00 மணி முதல் மாலை 6.30 மணிவரை சபை அமர்வுகள் நடைபெறும்.

செப்டெம்பர் 09 ஆம் திகதி உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான 09 ஒழுங்குவிதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. செப்டெம்பர் 10ஆம் திகதி துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான 06 கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 03 ஒழுங்குவிதிகள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 06 தீர்மானங்கள் என்பன விவாதிக்கப்படவுள்ளன.

செப்டெம்பர் 09ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 7.30 மணி வரையும், செப்டெம்பர் 10ஆம் திகதி முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 7.30 மணிவரையும் அமர்வுகள் நடைபெறும்.

செப்டெம்பர் 11ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை விவாதம் நடைபெறவுள்ளது.

அன்றையதினம் முற்பகல் 10.30 மணி முதல் 6.30 மணிவரை அமர்வுகள் இடம்பெறவிருப்பதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இவ்விவாதத்தில் உரையாற்றவுள்ளனர்.

அரசாங்கத்துக்கு அபாய சங்கு ஊதியது தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம்!

புதிய அரசியலமைப்பை இயற்றும்போது 13 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்கவேண்டும் என்று கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் கூட்டணியான ‘தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம்’ வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஒன்றியத்தின் இணைப்பாளரான கலாநிதி குணதாச அமரசேகர, மேலும் கூறியவை வருமாறு,

” புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கே நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு ஆணை வழங்கினர். எனவே, கூடியவிரைவில் அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். புதிய அரசியலமைப்பு எப்போது அமுலுக்கு வரும் என்பது தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டுவருகின்றன. இதனை ஏற்கமுடியாது. இதற்கான கால எல்லையை அரசாங்கம் மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.

அதேபோல் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும் விடயங்கள் பற்றியும் தெளிவுபடுத்தவேண்டும். குறிப்பாக இலங்கைக்கு பலவந்தமாக திணிக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படவேண்டும். இது தொடர்பான தனது நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவிக்கவேண்டும். புதிய அரசியலமைப்பு இயற்றப்படும்வரை நாட்டில் எந்தவொரு தேர்தலும் நடத்தப்படக்கூடாது. 13 நீக்கப்படும் என்ற உறுதிமொழியையும் அரசாங்கம் வழங்கவேண்டும். ” – என்றார்.

20 ஆவது திருத்தச்சட்டமூலத்திலுள்ள முக்கிய அம்சங்கள்!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற்று ஓராண்டு முடிவடைந்த பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நான்கரை வருடங்கள் முடிவடைந்த பின்னரே ஜனாதிபதியால் பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியும் என்ற நிலை காணப்பட்டது. 19 வருவதற்கு முன்னர் ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது.தற்போது அது ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது.

✍️அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் இருக்கவேண்டும் என்ற வரையறை நீக்கப்பட்டுள்ளது.
இதன்படி தமக்கு தேவையான விதத்தில் அமைச்சர்களை நியமிப்பதற்கான வாய்ப்பு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு கிட்டும்.

அதுமட்டுமல்ல பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவி நீக்குவதற்கும்,எந்தவொரு அமைச்சையும் தனக்குகீழ் கொண்டுவருவதற்கான அதிகாரமும் ஜனாதிபதியின் கைகளுக்குள் சென்றடையும். 19 அமுலுக்கு வருவதற்கு முன்னரும் இதே நிலைமை காணப்பட்டது.

✍️இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடமுடியாது, பாராளுமன்றம் வரவும் முடியாது என்ற நடைமுறையும் 20 ஊடாக நீக்கப்படவுள்ளது.

✍️ உயர் பதவிகளுக்கான நியமனங்களை வழங்கும் அரசியலமைப்பு பேரவை நீக்கப்பட்டு, பாராளுமன்ற பேரவை என்ற விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவையில் 7 பாராளுமன்ற உறுப்பினர்களும், மூன்று சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும், பாராளுமன்ற பேரவையில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு கதவடைப்பு செய்யப்பட்டுள்ளது. உயர்நியமனங்களை வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது.

பாராளுமன்ற பேரவையில் 5 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கலாம்.

1.பிரதம அமைச்சர்
2.சபாநாயகர்
3.எதிர்க்கட்சித் தலைவர்
4.பிரதமரின் பிரதிநிதி
5.எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி

✍️ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லை 35 இலிருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

✍️ஜனாதிபதியின் பதவிகாலம் 5 ஆண்டு, இரண்டு தடவைகள் மாத்திரமே அந்த பதவியை வகிக்கலாம் என்ற 19 இன் ஏற்பாடு 20ஆவது திருத்தச்சட்டமூலத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

✍️இரண்டு சுயாதீன ஆணைக்குழுக்கள் நீக்கப்பட்டுள்ளன.( கணக்காய்வு சேவை ஆணைக்குழு, தேசிய பெறுமை ஆணைக்குழு)
தேர்தல் ஆணைக்குழு உட்பட 19 இன் பிரகாரம் உருவாக்கப்பட்ட ஏனையவை அதேபோன்று தொடரும்.

தேர்தல் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை தெரிவுசெய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. தலைவரையும் அவரே நியமிக்கலாம்.

முப்படை தளபதிகள், சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரை ஜனாதிபதியே நியமிப்பார்.

20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில், வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டுள்ளது.

சமூககருத்தாடலுக்கான இரு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும். ஏதேனும் சர்ச்சைகள் இருப்பின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். அதன்பின்னரே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

பாராளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின்போதுகூட தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம். எனவே, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள ’20’ இறுதிப்படுத்தப்பட்டது அல்ல.

திருத்தங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
தேசிய கீதம், தேசியக்கொடி, ஒற்றையாட்சி, பௌத்த மதத்துக்கான முன்னுரிமை உட்பட அரசியலமைப்பிலுள்ள 12 விடயங்கள் சார்ந்தவற்றுடன் தொடர்புடையவற்றை மாற்றுவதாக இருந்தாலே சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும்.

எனவே, பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் 20ஐ நிறைவேற்றலாம். சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டிய தேவை எழவில்லை என சட்டமா அதிபரும் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறிய பின்னர் அதில் சபாநாயகர் கையொப்பம் இடும் தினத்தில் இருந்து சட்டம் நடைமுறைக்கு வரும்.

ஆர்.சனத்

www.documents.gov 

’20’ அரசியலமைப்புக்கு முரண் என்றால் உயர்நீதிமன்றில் மனு!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் ஜனநாயகத்துக்கு விரோதமாக இருக்கும்பட்சத்தில் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் தலைவர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமைப்பதற்கான 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை நேற்று (03) அனுமதி வழங்கியது. இது தொடர்பில் வினவியபோதே பாக்கியஜோதி சரவணமுத்து மேற்கண்டவாறு கூறினார்.

” அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பில் ஆராயவேண்டும்.அரசியலமைப்பைமீறும் விதத்தில் 20 அமைந்தால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும். சுயாதீன ஆணைக்குழுக்கள் எல்லாம் இருக்கவேண்டும் என்பதே எமது கருத்து.” – என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

திறைசேரியில் 2.5 மில்லியன் டொலர் திருட்டு-CID விசாரணை!

0
திறைசேரியில் 2.5 மில்லியன் டொலர் திருட்டு-CID விசாரணை! வெளிநாட்டுக் கடன் சேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பந்தப்பட்ட மோசடி குறித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. திறைசேரி அளித்த முறைப்பாட்டைத்...

மலையக தமிழர்களின் நில உரிமைக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்!

0
“இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளியின் தற்காலிக குடிசை வீடு தாக்கி அழிக்கப்பட்டமை திட்டமிடப்பட்ட காட்டுமிராண்டி தனமாகும். இது நிர்வாகத்தின் அநாகரீக அடக்குமுறை மட்டுமல்ல, தொழிலாளர் சமூகம் தொடர்ந்தும் அடிமை தனத்துக்குள் வைத்திருப்பதன்...

மாகாணமட்ட போட்டிக்கு தெரிவு!

0
18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் கிரேட்வெஸ்டன் த.வி அணி வலய மட்டத்தில் முதலிடம் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. அத்தோடு தொடர்ச்சியாக நான்காவது முறை மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளமை பெருமை மிகு விடயமாகும். போட்டியில்...