Home Blog Page 3876

‘முற்போக்கு கூட்டணிக்கு சிக்கல்’ – இறுதி அஸ்திரத்தை கையிலெடுக்கிறார் திலகர்!

தமிழ் முற்போக்குக் கூட்டணியை, ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில், சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இதன் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம் ஆகியோர், புதிய கூட்டணி ஒன்றை அல்லது தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு புதிய பெயர் ஒன்றைத் தெரிவு செய்யவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று தெரியவருகிறது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியை, ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான கோரிக்கை ஒன்றை, கூட்டணியினர் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்வைத்திருந்தனர்.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, அக்கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளின் பொதுச் செயலாளர்களையும் நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து, கடந்த மாதம் கடிதமொன்றை அனுப்பியிருந்தது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச செயலாளர் மனோ கணேசனுக்கும் மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் ஏ.லோறன்ஸ், தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் எம்.திலகராஜுக்குமே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழிலாளர் தேசிய முன்னணியில் உட்கட்சிபூசல்கள் இருப்பதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் எம்.பி திலகராஜ், தேர்தல் ஆணைக்குழுவுக்குக் கடிதம் மூலம் ஏற்கெனவே அறிவித்துள்ளதுடன், கூட்டணியை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில் தனக்கு உடன்பாடில்லை என அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருப்பதாகவும் அறிய முடிகிறது.

எனவே, தொழிலாளர் தேசிய முன்னணியைத் தவிர்த்து தமிழ் முற்போக்குக் கூட்டணியைப் பதிவு செய்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே, தமிழ் முற்போக்குக் கூட்டணியில் பெயர் மாற்றம் செய்து

புதிய கூட்டணி ஒன்றைப் பதிவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தெரியவருகிறது.

நன்றி – தமிழ்மிரர்

‘அதிபரை இடமாற்றம் செய்யும்வரை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பமாட்டோம்’

ஹட்டன் வெளிஒயா மலைமகள் வித்தியாலய அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்படும்வரை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பபோவதில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மலைமகள் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவரொருவரை கடுமையாக தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிபரின் முறைகேடான நிர்வாகத்துக்கு எதிராகவும் அண்மையில் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதி கோரி பெற்றோர் போராடுகையில் அவ்விடத்துக்கு பொலிஸார் வந்தனர். இதனையடுத்து எழுத்துமூலம் முறைப்பாட்டை பதிவுசெய்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துசென்றனர். எனினும், இன்றுவரை குறித்த அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே பெற்றோர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளனர். இன்று இரண்டு மாணவர்கள் மட்டுமே பாடசாலைக்கு சென்றுள்ளனர். அதிபரைதவிர ஏனைய ஆசிரியர்கள் சமூகமளித்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் வலையகல்வி பணிமனையின் பணிப்பாளர் எஸ். சிறிதரனை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும்  அது பயனளிவில்லை.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

‘கொவிட் – 19’ இலங்கையில் மேலும் 6 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில்  மேலும் 6 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,886 ஆக அதிகரித்துள்ளது.

201 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்’

கேகாலை மாவட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும், இளைஞர் ,யுவதிகளின் சுய தொழில் மற்றும் அபிவிருத்தி தொடர்பாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கொட்டகலை சி.எல்.எவ். வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சப்ரகமுவ மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன், கேகாலை மாவட்ட தோட்ட தலைவர்கள், தலைவிகள் , பிரதேச மக்கள் உட்பட பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தளபதிக்காக காத்திருக்கும் வெற்றிமாறன்!

எல்லா மொழிகளிலும் ஒரு சில இயக்குனர்கள் வருடத்திற்கு ஒன்று ஏதாவது ஒரு படம் இயக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

ஆனால் அப்படி யோசிக்காமல் இரண்டு, மூன்று வருடங்கள் கழித்து படம் இயக்கினாலும் தரமான கதையாக இருக்க வேண்டும் என்று அதற்காக உழைப்பவர் இயக்குனர் வெற்றிமாறன்.

இவரின் அடுத்தடுத்த படங்கள் குறித்து அண்மையில் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.இதற்கு நடுவில் விஜய்-வெற்றிமாறன் கூட்டணி என்ற பேச்சு கிளம்பியது.

இதுகுறித்து வெற்றிமாறன் ஒரு பேட்டியில், விஜய் சாரின் அழைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். அவருக்கான கதையையும் தயார் செய்ய ஆரம்பித்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

தோற்றத்தை மாற்றிய சந்தானம்!

சந்தானம் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் திடீரென்று கதாநாயகனாக மாறினார். அவரை ஹீரோவாக வைத்து எடுத்த படங்கள் நல்ல வசூல் பார்த்துள்ளன.

இதையடுத்து கதாநாயகனாக நடிக்க படங்கள் குவிகின்றன. அதற்கேற்ப கடும் உடற்யற்சிகள் செய்து தோற்றத்தையும் மாற்றி இருக்கிறார். நடிகர் ஆர்யாவுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நீண்ட தூரம் அடிக்கடி சைக்கிள் சவாரி செய்தும் தேகத்தை மெருகேற்றுகிறார்.

தற்போது பிஸ்கோத், டிக்கிலோனா ஆகிய படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் பிஸ்கோத் படம் முடிந்து தியேட்டர்கள் திறக்க தாமதம் ஆவதால் ஓ.டி.டி தளத்தில் வெளியிட ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்தானம் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

அதில் நீண்ட தாடியுடன் கூலிங் கிளாஸ் அணிந்து மொத்தமாக ஆளே மாறிப்போய் இருக்கிறார். இது ஜான்சன் இயக்கத்தில் நடிக்க உள்ள அவரது அடுத்த படத்துக் கான ‘கெட்டப்’ என்று கூறப் படுகிறது. இந்த புகைப்படம் வைரலாகி இணைய தளத்தை கலக்கி வருகிறது.

இந்திய பிரதமரின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர்.

டுவிட்டரில், பிரதமர் மோடி உலகளவில் சிறந்த தலைவர்களில் ஒருவர். டுவிட்டரில் பிரதமர் மோடி தனது கணக்கை 2009 ஆம் ஆண்டில் உருவாக்கினார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் narendramodi_in என்ற தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர்.

பிட்காயின் மூலம் பணம் செலுத்துபவர்கள் மோடியின் கணக்கை முடக்கியதை டுவிட்டர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரத்தினபுரி கோவில் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த ஜீவன்!

” இரத்தினபுரி, சென் ஜோக்கிம் ஆலயத்திற்கு சொந்தமான கட்டிடம் தொடர்பில் உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடாத்தி, அதற்கான தீர்வினை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று பெற்றுக்கொடுத்துள்ளார்.”

இ.தொ.காவின் உப செயலாளர் ரூபன் பெருமாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இரத்தினபுரி, புனித ஜோக்கிம் ஸ்ரீ முத்துமாரி அம்மான் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடத்தினை அகற்றுவதற்கு சில சூழ்ச்சிகள் நடைபெறுவதாக ஆலய பரிபாலன சபை மற்றும் இளைஞர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

அவர் இவ்விடயம் குறித்து தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு அறிவித்தததையடுத்து, ஜீவன் தொண்டமான் , ஆலய நிர்வாக சபையை அழைத்து கலந்துரையாடி, இவ்விடயம் குறித்து பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் உரையாடி வேண்டுகோள் விடுத்தார்.

அதனை தொடர்ந்து, ஆலய பரிபாலன சபையினர் சகிதம் நேரில் சென்று பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் கேட்டுக்கொண்டதற்கமைய குறித்த கட்டிடத்தை புனித ஜோக்கிம் ஸ்ரீ முத்துமாரி அம்மான் ஆலயத்தின் நடவடிக்கைகளுக்கு பெற்றுக் கொடுக்குமாறும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட தேவைகளை வேறு இடத்தில் அமைக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது எனவும் ரூபன் பெருமாள் குறிப்பிட்டார்.

’13’ ஐ நீக்குவது தொடர்பில் எந்தவொரு முடிவும் இல்லை’!

”  அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. அது பற்றி அமைச்சரவையிலும் கலந்துரையாடப்படவில்லை. புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவே இது தொடர்பில் தீர்மானம் எடுக்கும்.”

இவ்வாறு அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (3) முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கால்பந்து நட்சத்திரம் நெய்மருக்கு கொரோனா தொற்று

பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும் தப்பவில்லை. அந்த வகையில், கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசிலின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் நெய்மர், தற்போது பி.எஸ்.ஜி. எனப்படும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் எனும் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த தகவல் பி.எஸ்.ஜி. கிளப் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பி.எஸ்.ஜி. கிளப் அணி வீரர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

அமெரிக்க கடற்படை செயலர் திடீர் விலகல்!

0
அமெரிக்க கடற்படைச் செயலாளர் John Phelan தனது பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தில் உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வரும் சூழலில், இவரது வெளியேற்றம் முக்கியமானதாகக்...

மரக்கறி விலைப்பட்டியல் (23.04.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மும்பை, சென்னை அணிகள் இன்று மோதல்!

0
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். தொடை பகுதியில் ஏற்பட்ட...