ஜனாதிபதி ஒருவர் இரண்டுமுறை பதவி வகித்தல், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஐந்தாண்டுகளுக்கு மட்டுப்படுத்தல் உள்ளிட்ட காரணிகளை தவிர 19 இல் உள்ள ஏனைய அனைத்துக் காரணிகளையும் நீக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
’20’ இற்கு அமைச்சரவை ஒப்புதல்! அடுத்து என்ன?
118 மொபைல் செயலிகளை தடை செய்த இந்தியா!
100இற்கும் அதிகமான சீன செயலிகள் உட்பட 118 மொபைல் செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது. இதில் PUBG என்ற மொபைல் விளையாட்டு செயலியும் அடங்கும்.
இந்திய சீன எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இராணுவ மோதல் இந்திய – சீன உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இதனை மையப்படுத்தி 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசாங்கம், அண்மையில் தடை விதித்திருந்தது. தொடர்ந்தும் லடாக் எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், 118 செயலிகளுக்கு இந்தியா அதிரடி தடை விதித்துள்ளது.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பங்கம் விளைக்கும் என்ற அடிப்படையில் குறித்த செயலிகளைத் தடைசெய்வதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியா தடைசெய்துள்ள செயலிகளின் முழுமையான விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க. தலைமைக்கு கடும் போட்டி – நாளை மறுதினம் கூடுகிறது செயற்குழு!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவி கருஜயசூரியவுக்கு வழங்கப்பட்டால் போட்டியிலிருந்து விலகுவதற்கு ரவி கருணாநாயக்க, தயாகமகே, அர்ஜுன ரணதுங்க மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோர் தீர்மானித்துள்ளனர் என அறியமுடிகின்றது.
பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்தார்.
இதனையடுத்து ஐ.தே.கவின் தலைவர் பதவிக்காக அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் தமது பெயர்களை முன்வைத்
அதன்பின்னர் அர்ஜுன ரணதுங்க மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோரும் தலைமைப்பதவிக்கு போட்டியிடவிருப்பதாக அறிவித்தனர்.
எனினும் தனது உறவினரான ருவான் விஜேவர்தனவுக்கு தலைமைப்பதவியை வழங்கும் வகையிலான காய்நகர்த்தல்களை ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டார். இதற்கு கட்சிக்குள் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையிலேயே கருஜயசூரிய தலைமைப்பதவியை ஏற்க தயார் என்ற அறிவிப்பை விடுத்தார். ஆனால் கருவை ஓரங்கட்டும் விதத்திலான அறிவிப்புகளை ரணில் விக்கிரமசிங்க விடுத்தார். எனினும், ரவி, நவீன், தயா கமகே, அர்ஜுன போன்றவர்கள் கருவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இதனால் ஐ.தே.கவுக்குள் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் அக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை (04) மறுதினம் சிறிகொத்தவில் கூடவுள்ளது.
‘தமிழை’ நீக்க தமிழ் முற்போக்கு கூட்டணி ஆலோசனை
மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியில், “தமிழை” இல்லாமற் செய்து, புதிய பெயரைச் சூட்டுவதற்கு, ஆராயப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று ‘தமிழ்மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி ஆகியன இணைந்தே, தமிழ் முற்போக்குக் கூட்டணி
உருவாக்கப்பட்டது.
அக்கூட்டணி கடந்த பொதுத்தேர்தலில் கொழும்பு, நுவரெலியா, பதுளை, கண்டி, கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்டு, ஆறு ஆசனங்களைத் தனதாக்கிக்கொண்டது.
இந்நிலையில், அக்கூட்டணியை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான முயற்சிகளை, கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் முன்னெடுத்துள்ளார்.
இந்நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியில், ஓர் இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் “தமிழ்” இருப்பதனால், கூட்டணியின்
பெயரிலிருந்து தமிழை அகற்றிவிட்டு, புதிய பெயரை வைப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓர் இனத்தை அல்லது ஒரு மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெயர்களைக்
கொண்டிருக்கும் கட்சிகளைப் பதிவு செய்வதில் சிக்கல்கள் ஏற்படும்.
அதனை கருத்திற்கொண்டே, “தமிழை” இல்லாமல் செய்து, புதிய கட்சியொன்றைப் பதிவதற்கு, கூட்டணி ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது. .
HNB Financeஇன் புத்தளம் கிளை தமக்கே சொந்தமான புதிய கட்டடத்திற்கு செல்கிறது
20 வருட காலமாக இலங்கை வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமுடைய நிதி சேவைகளை வழங்கிய HNB Finance நிறுவனத்தின் புத்தளம் கிளை, புத்தளம் நகர மத்தியில் இலக்கம் 44/A சேர்விஸ் வீதி புத்தளம் என்ற விலாசத்தில் அமைக்கப்பட்டுள்ள மிகவும் இடவசதிகளைக் கொண்ட நிறுவனத்திற்கு சொந்தமான புதிய மூன்று மாடி கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் சுற்றாடலுக்கு ஏற்ற விதமாக நிலையான முறையொன்றை பயன்படுத்தியமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் HNB Finance நிறுவனம் இந்த புதிய கட்டடத்தை நிர்மாணிக்கும் போது அதுகுறித்து தமது கவனத்தை செலுத்தியுள்ளமை விசேட அம்சமாகும். விசேடமாக மின்சாரத்தை சேமிக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை திறம்பட பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய HNB Finance புத்தளம் கிளையின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்தத பிரபாத் தலைமையில் திறந்து வைக்கப்பட்டதுடன் இந்த நிகழ்விற்கு HNB Financeஇன் பிரதான நடவடிக்கைகள் அதிகாரி பிரியலால் அரங்கல, பிரதி பொதுமுகாமையாளர் – கிளைகள் வலைப்பின்னல், எனஸ்லி பெர்னாந்து ஆகிய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தங்கக் கடன் துறையானது வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கிடையில் பிரபலமடைந்திருந்தாலும் முறைப்படி மற்றும் நம்பிக்கையாகவும் இந்த சேவையை வழங்குவதற்காக முன்வந்துள்ள நிதி நிறுவனங்களுக்கு மத்தியில் HNB Finance நிறுவனம் வேகமாக முன்னோக்கிச் சென்றுள்ளமைக்கு காரணம் வாடிக்கையாளர்களுக்காக காட்டும் அக்கறை மற்றும் கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்பால் உள்ள சிறந்த சேவை போன்ற விடயங்களாகும். விசேடமாக HNB Finance மூலம் வழங்கப்படும் அனைத்து நிதி சேவைகள் போன்றே HNB Finance தங்கக் கடன் சேவையும் மிகவும் துரிதமாக வாடிக்கையாளர்களின் பாராட்டுக்கள் மற்றும் ஈர்ப்பினையும் வென்றெடுப்பதற்கு முடிந்தமை விசேட அம்சமாகும்.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட HNB Financeஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், ‘நிறுவனத்தின் ஆரம்பத்திலிருந்தே விசேட செயல்திறனை சமூகத்திற்கு வழங்கிய HNB Finance புத்தளம் கிளையின் சேவையை மிகவும் உகந்த விதத்தில் மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்காக எமது நிறுவனத்திற்குரிய இந்த சூழல் உகந்ததாக அமையுமென் நான் நம்புகின்றேன்.
விசேடமாக நிறுவனத்தின் 20ஆவது ஆண்டு நிறைவிற்கு சமமாக எமக்குச் சொந்தமான கட்டடத்திற்கு புத்தளம் கிளையை கொண்டுசெல்ல முடிந்தமை எமக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றியாகவே நான் பார்க்கின்றேன். இங்கே இருபது வருடகாலத்திற்குள் HNB Finance நிறுவனம் பெற்றுக் கொண்ட விசேட வெற்றிகள் மற்றும் பெற்றுள்ள முன்னேற்றம் தொடர்பில் எமது நிறுவன பணிப்பாளர் சபைக்கும் எப்பொழுதும் எம்முடன் இணைந்துள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் எனது ஊழியர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவிப்பதற்காகவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றேன். விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட புத்தளம் நகரம் மற்றும் அதனை அண்டி வாழும் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக எமது புத்தளம் கிளை மூலம் மிகப் பெரிய ஒத்துழைப்பை பெற்றுக் கொடுக்க முடியுமென நான் எதிர்பார்க்கின்றேன்.
அத்துடன் நீண்டகாலமாக வாடிக்கையாளர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட இணைப்பின் அடிப்படையில் மிகவும் இடவசதி கொண்ட புதிய அலுவலக சூழல் ஒன்றுக்கு செல்வதற்கும் HNB Finance தங்கக் கடன் சேவைகள் மற்றும் ஏனைய நிதி சேவைகள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிட்டும்.’ என தெரிவித்தார்.
2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வர்த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்பு, தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME) கடன்களையும் வழங்குகிறது.

160 வருடங்களாக சுத்தமான குடிநீர் இல்லை! மக்கள் தவிப்பு!!
160 வருடங்கள் பழமையான தோட்டமொன்றில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். சுமார் 16 தசாப்தங்கள் கடந்தும் இம்மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை வேதனைக்குரிய விடயமாகும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில், மஸ்கெலியா பிரதேசசபைக்குட்பட்ட பகுதியிலேயே குடா மஸ்கெலியா கிராமம் அமைந்துள்ளது. 1,880 ஆம் ஆண்டு முதல் அங்கு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மேற்கில் மவுசாகலை நீர்த்தேக்கமும், கிழக்கில் காசல்ரீ நீர்த்தேக்கம் என நீர்வளத்துக்கு மத்தியில் அமைந்துள்ள குடா மஸ்கெலியா கிராமத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என மூவின மக்களும் வாழ்கின்றனர். 160 குடும்பங்களில் பெரும்பான்மையாக சிங்கள மக்களே வாழ்கின்றனர்.
எனினும், சுத்தமான குடிநீரை பெருவதில் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். கிராமத்துக்கு நீர் வழங்கும் நீர்த்தாங்கி மாசுபட்ட நிலையில் காணப்படுகின்றது எனவும், அதனை பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படாமையால் அசுத்தமான நீரையே பருகவேண்டியுள்ளது எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்ல விலங்குகளும் இப்பகுதிக்கு வருவதால் கிருமி தொற்று ஏற்பட்டுவிடும் என அஞ்சும் மக்கள், நீர்சுத்திகரிப்பு திட்டமொன்றை தமக்கு ஏற்படுத்திக்கொடுக்குமாறு கோருகின்றனர். அரசியல்வாதிகளால் நீர்த்தாங்கியொன்று அமைக்கப்பட்டிருந்தாலும் அது புனரமைப்பின்றி காணப்படுகின்றது. எனவே, நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பின் ஊடாக தமது கிராமத்துக்கு சுத்தமான நீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இலங்கையில் ‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 2,883 பேர் தப்பினர்!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 4 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,883 ஆக அதிகரித்துள்ளது.
197 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகி
சஜித் தலைமையில் மலர்கிறது புதிய அரசியல் கூட்டணி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதியதொரு அரசியல் கூட்டணி உதயமாகவுள்ளது என தெரியவருகின்றது.
அக்கூட்டணிக்கு ‘ஐக்கிய மக்கள் கூட்டணி’ என பெயரிடப்படவுள்ளது எனவும், அடுத்த இருவாரங்களில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியன தற்போது சஜித் அணியுடன் கூட்டணி வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அக்கட்சியும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளது.
13 ஐ முழுமையாக நீக்குவதற்கு டிலான் கடும் எதிர்ப்பு!
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் சில நல்ல விடயங்கள் உள்ளன. புதிய அரசியலமைப்பிலும் அவை பாதுகாக்கப்படவேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்காக 20ஆவது திருத்தச்சட்ட மூலம் கொண்டு வரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழி நிறைவேறப்போகின்றது. 19 இல் சில நல்ல விடயங்கள் உள்ளன. அவை பாதுகாக்கப்படவேண்டும். அதேபோல் 13ஆவது திருத்தச்சட்டத்திலும் நல்ல விடயங்கள் உள்ளன.
எனவே, புதிய அரசியலமைப்பை இயற்றும்போது மேற்படி சரத்துகளில் உள்ள நல்ல விடயங்களை உள்வாங்கவேண்டும். அவ்வாறு உள்வாங்கி புதிய அரசியலமைப்பை உருவாக்கினால்தான் அது சிறப்பாக இருக்கும்.
விருப்பு வாக்கு இல்லாமல் புதிய முறையில் தேர்தல் நடத்தப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டதாலேயே 19 இற்கு ஆதரவாக அன்று வாக்களித்தோம். இறுதியில் மைத்திரியும், ரணிலும் எம்மை ஏமாற்றினார்கள். உறுதிமொழியை மீறினார்கள்.
ஜனாதிபதியின் பதவிகாலம் 5 ஆண்டுகள், இரு தடவைகள் மாத்திரமே பதவி வகிக்கலாம்,சுயாதீன ஆணைக்குழுக்கள், தகவல் அறியும் உரிமை என்பன சிறப்பான விடயங்கள். அவை தொடர்ந்தும் அப்படியே இருக்கவேண்டும்.” – என்றார்.
40 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் விபத்து – ஐந்து விரிவுரையாளர்கள் காயம்!
ஊவா – வெல்லச பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஐவர் பயணித்த கார், வீதியைவிட்டுவிலகி 40 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவரும் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை – மஹியங்கனை வீதியில் சொரனாதொட்ட பகுதியில் வைத்தே இன்று (02.09.2020) அதிகாலை 2.50 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது எனவும், விபத்துக்குள்ளான ஐவரில் நால்வர் பெண்கள் என்றும், அவர்களில் ஒருவர் கர்ப்பணி தாயென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
காரை செலுத்திய விரிவுரையாளர் நித்திரை கலக்கத்தில் இருந்தாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
க.கிசாந்தன்





