Home Blog Page 3878

கொத்மலையில் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்!

போனஸ் கொடுப்பனவை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலை வீ.டி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வருடாந்தம் தமக்கு ஏப்ரல் மாதம் போனஸ் வழங்கப்படும் எனவும், இம்முறை இதுவரையில் வழங்கப்படாமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியே நீதி கோரி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போராட்டக்காரர்கள்,

” காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து வந்து ,பிறகு மாலை 6 மணிக்கு வீடுகளுக்கு செல்கின்றோம். இடையில் ஆடைத்தொழிற்சாலையில் பல்வேறு இன்னல்கள்.
சம்பளம் குறைவாக காணப்பட்டாலும் பொருளாதார சிக்கலால் வேலைப்பார்கின்றோம்.

நாங்கள் கஸ்டப்பட்டு வேலைப்பார்த்து வருடத்தில் மிஞ்சுவது இந்த போனஸ் பணம் மட்டும் தான். அதையும் இம்முறை தரமுடியாது என நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.” – என குறிப்பிட்டனர்.

தகவல் – நீலமேகம் பிரசாந்த்

‘கொரோனா’- உலகளவில் 2 கோடியே 59 லட்சம் பேர் பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 59 லட்சத்து 741 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 59 லட்சத்து  741 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 81 லட்சத்து 93 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 8 லட்சத்து 61 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை….

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 92 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2 ஆயிரத்து 879  பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். 201  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

இலங்கையில் நேற்று மாத்திரம் 43 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கட்டார் உட்பட வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில், கொரோனா தடுப்பு மையங்களில் கண்காணிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலமே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

1000 ரூபா எங்கே? ஜனாதிபதி பணிப்புரை விடுத்தும் இன்னும் தீர்வு இல்லை!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் மாதம் முதல் குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைப்பதை தோட்டக் கம்பனிகள் உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு விடுத்திருந்தாலும் 5 மாதங்கள் கடந்தும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் கம்பனிகளின் பிரதிநிதிகளுக்கிடையில் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் இன்னமும் தீர்வு என்பது இழுபறி நிலையிலேயே இருக்கின்றது.

பெருந்தோட்டக் கம்பனிகள் ஆயிரம் ரூபாவை வழங்க தயாராக இருக்கின்றபோதிலும் மேலதிகமாக இரண்டு கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என நிபந்தனை விதிப்பதாகவும், இதனை ஏற்கமுடியாது எனவும் தொழிற்சங்கங்கள் தேர்தலுக்கு முன்னர் அறிவித்தன.

தற்போது தேர்தல் முடிவடைந்துவிட்டது, ஆனால் ஆயிரம் ரூபா தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பமாகவில்லை. இதனால் தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

இழுத்தடிப்புகள் இன்றி முறையாக இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கும்பட்சத்தில் இந்நேரம் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைத்திருக்ககூடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

’13’ இல் கைவைத்தால் மாத்திரமே ஒரே நாடு – ஒரே சட்டம் சாத்தியம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டுமெனில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் மாற்றியமைக்கப்படவேண்டும் – என்று ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பொன்றை இயற்றுவதற்கு காலமெடுக்கும் என்று அரசாங்கம் கருதும் பட்சத்தில் இதற்கான ஏற்பாடுகள் ’20’ஆவது திருத்தச்சட்டத்தின்மூலம் மேற்கொள்ளலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா மேலும் கூறியவை வருமாறு,

” அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம், 16 ஆவது திருத்தச்சட்டம் மற்றும் தேர்தல் முறை ஆகியவற்றிலுள்ள நாட்டுக்கு பொருந்தாத அதேபோல் தீங்குவிளைவிக்ககூடிய விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே அரசாங்கத்துக்கு நாட்டு மக்கள் ஆணை வழங்கினர்.

ஜனாதிபதியும், பிரதமரும் வெவ்வேறான கட்சிகளை சார்ந்தவர்களாக இருந்தபோதே 19ஆவது திருத்தச்சட்டம் நாட்டை நிர்வகிப்பதற்கு தடையாக இருந்தது.தற்போது அண்ணனும், தம்பியுமே இவ்விரு பதவிகளை வகிக்கின்றனர். எனவே, 19 சிக்கலாக அமையாது. எனினும், அது மறுசீரமைக்கப்படவேண்டும். ஆனால் 19 இற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தைவிடவும் 13 இற்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்.

ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கின்றது.அதனை நடைமுறை சாத்தியமான விடயமாக மாற்றியமைக்கவேண்டும். 13 ஐ மாற்றியமைக்காமல் இது சாத்தியப்படுமா என்ற கேள்வியும் எழுகின்றது.

ஏனெனில் தமது ஆட்சிஅதிகாரத்துக்குட்பட்ட பகுதிக்கு தேவையான சட்டம் இயற்றும் அதிகாரம் மாகாணசபைக்கு இருக்கின்றது, எனவே, ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற ஜனாதிபதியின் கொள்கையுடன் இது இவ்விடயம் ஒத்துபோகவில்லை.

அடுத்ததாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் சட்டம், ஒழுங்கு என்பது மாகாணபட்டியலில் உள்ளது. இதன்படி முதலமைச்சரின்கீழ் இயங்கும் பொலிஸொன்றை உருவாக்கலாம். இந்நிலைமையை மாற்றாமல் மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் பொலிஸ் அதிகாரத்தை பெறுவதற்கு முயற்சிக்கப்படலாம்.

விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், சுமந்திரன் ஆகியோரின் அண்மைக்கால அறிவிப்புகள் இதனையே வெளிப்படுத்தின.

அதேவேளை, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு காலமெடுக்கும் என அரசாங்கம் கருதுமானால் அதற்கு முன்னர் 20ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக 13 ஐ மாற்றியமைக்கலாம். இதன்படி மாகாணசபைக்கான சட்டம் இயற்றும் அதிகாரம், வடக்கு. கிழக்கு இணைப்பு, ஆயுதம் தாங்கிய பொலிஸ் படையை உருவாக்கும் அதிகாரம் ஆகிய சரத்துகளை நீக்கவேண்டும். ஒரு வசனத்தின் ஊடாக இதனை செய்யலாம்.” – என்றார்.

‘பஞ்சம், காணி சுவீகரிப்பால் சுதந்திரக்கட்சியை வெறுத்த மலையக மக்கள்’!

இலங்கை அரசியல் வரலாற்றில் ஐம்பெரும் சக்திகளையும் அணிதிரட்டி, மக்கள் மத்தியில் தேசிய உணர்வை விதைத்து, ஆட்சியைக்கைப்பற்றி – அரியணையேறி வெற்றிநடைபோட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது, தற்போது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

தேசிய மட்டத்தில் உதயமான பிரதான அரசியல் கூட்டணிகளுக்கு தலைமைத்துவம் வழங்கி ‘தலைமை’க் கட்சியாக வலம்வந்த சுதந்திரக்கட்சி இன்று மொட்டு கட்சியிடம் சரணடைந்து, பங்காளிக்கட்சியாக மாறியுள்ள நிலையிலேயே இன்று (02) 70ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது.

ஐக்கிய தேசியக்கட்சியுடன் கொள்கை ரீதியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறி 1951 செப்டம்பர் 2 ஆம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அமரர் எஸ்.டபிள்யூ.ஆர். டி. பண்டாரநாயக்க உருவாக்கினார். அவரின் பின்னால் மேலும் பலர் அணிதிரண்டனர்.

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை, சிங்கள மொழி, தேசிய பொருளாதாரம் உட்பட தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் பயணத்தை ஆரம்பித்ததால் மக்கள் மத்தியில் ஆதரவலை உருவாகியது.

1952 இல் நடைபெற்ற இலங்கையின் 2 ஆவது பொதுத்தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 15.52 சதவீத வாக்குகளைப்பெற்று 9 ஆசனங்களுடன் பிரதான எதிர்க்கட்சியானது. அதன்பின்னர் 1956 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 39.53 சதவீத வாக்குகளுடன் 51 ஆசனங்களை வென்று ஆட்சியையும் கைப்பற்றும் அளவுக்கு அரசு வளர்ச்சி கண்டது.

அதாவது ஐ.தே.கவிலிருந்து வெளியேறி 5 ஆண்டுகளுக்குள் பண்டாரநாயக்க இலங்கையின் பிரதமரானார்.1959 செப்டம்பர் 26 ஆம் திகதி பண்டாரநாயக்க (60 வயது) சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட பின்னர் தற்காலிக தலைவராக பொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்த சி.பி.டி. சில்வா நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவி பண்டாரநாயக்கவின் பாரியாரான ஶ்ரீமாவிடம் கையளிக்கப்பட்டது. அவரும் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தினார்.

இலங்கையில் 5ஆவது பொதுத்தேர்தல் 1960 ஜீலை 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றது.

ஐந்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு 1960 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெற்றது. உலகின் முதல் பெண் பிரதமராக ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க பதவியேற்றார்.

1970 இல் நடைபெற்ற இலங்கையின் 6ஆவது பாராளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பெற்றிபெற்றது.

1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் 1982 ஆம் ஆண்டே முதலாவது தேர்தல் நடைபெற்றது. ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்டதால் சுதந்திரக்கட்சியின் சார்பில் கை சின்னத்தில் கொப்பேகடுவவே போட்டியிட்டார்.

1988 இல் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதி தேர்தலிலும் சுதந்திரக்கட்சி கை சின்னத்தில் களமிறங்கியது.
ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க போட்டியிட்டார். 89 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் கை சின்னத்திலேயே சு.க. போட்டியிட்டது.

1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, கூட்டணி அமைத்து கதிரை சின்னத்தில் போட்டியிட்டது. பிரதம வேட்பாளராக சந்திரிக்கா களம்கண்டார். இறுதியில் ஐ.தே.கவின் 17 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது.

2000 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சு.கவின் தலைவர் சந்திரிக்கா தலைமையிலான கூட்டணியே கதிரை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றது. 2001 டிசம்பர் 05 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் சுதந்திரக்கட்சி சார்பிலேயே பிரதமர் வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.

2004 இல் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உருவாக்கப்பட்டதால் அவ்வாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பிறகு 2010, 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களிலும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்கீழ் வெற்றிலை சின்னத்தில் களமிறங்கியது. சுதந்திரக்கட்சி சார்பிலேயே பிரதமர் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

‘கதிரை’ மற்றும் ‘வெற்றிலை’ சின்னங்களின்கீழும் சுதந்திரக்கட்சி ஜனாதிபதி தேர்தல்களை எதிர்கொண்டிருந்தாலும் – கூட்டணியின் தலைமைப் பதவி , ஜனாதிபதி வேட்பாளர் ஆகியவற்றை பங்காளிகளுக்கு விட்டுக்கொடுத்தில்லை.

எனினும், 37 ஆண்டுகளுக்கு பிறகு 2019 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மேற்படி இரு விடயங்களையும் விட்டுக்கொடுத்தது மட்டுமல்லாது, ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்தாது, கூட்டணி என்ற போர்வையில் ‘மொட்டி’டம் கடந்தாண்டு சரணடைந்து சுதந்திரக்கட்சி.

கடைசியாக நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் மூன்று மாவட்டங்களில் அக்கட்சி தனித்து போட்டியிட்டிருந்தாலும் யாழ். மாவட்டத்தில் மாத்திரமே ஒரு ஆசனம் கிடைத்தது. களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண்கவ்வ வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனைய வேட்பாளர்கள் மொட்டு கட்சியின் பட்டியலின்கீழ்தான் போட்டியிட்டனர்.

ஆக இன்று 70 ஆவது ஆண்டில் காலடி வைக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டெழுமா அல்லது மாகாணசபைத் தேர்தலில் தனித்து களமிறங்கி பலத்தை நிரூபிக்குமா?

சுதந்திரக்கட்சியும் மலையகமும்

ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் காணி சுவீகரிப்பு, ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் காரணமாகவே மலையக மக்கள் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வெறுத்தனர் எனக் கூறப்படுகின்றது.

ஜோகோவிச், ஒசாகா முதல் சுற்றில் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், நவோமி ஒசாகா முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் டாமிர் ஜூம்ஹரை (போஸ்னியா) பந்தாடினார்.

இந்த ஆண்டில் தோல்வியே சந்திக்காத ஜோகோவிச் தொடர்ச்சியாக ருசித்த 24-வது வெற்றி இதுவாகும். ஜோகோவிச் அடுத்து கைல் எட்மன்டை (இங்கிலாந்து) சந்திக்கிறார்.

64-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சன், தன்னை எதிர்த்து ஆடிய தரவரிசையில் 22-வது இடம் வகிக்கும் ஜான் இஸ்னருக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்தார். 3 மணி 50 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் ஸ்டீவ் ஜான்சன் 6-7 (5-7), 6-3, 6-7 (5-7), 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.

இஸ்னர் 52 ஏஸ் சர்வீஸ்கள் போட்டும் பலன் இல்லாமல் போனது. 1991-ம் ஆண்டுக்கு பிறகு ஆட்டம் ஒன்றில் ஒரு வீரர் விளாசிய 2-வது அதிகபட்ச ஏஸ் சர்வீஸ் இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-2, 6-1, 6-1 என்ற நேர் செட்டில் ரமோஸ் வினோலசை (ஸ்பெயின்) விரட்டியடித்தார். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டேவிட் கோபின் (பெல்ஜியம்), ஜான் லினர்ட் ஸ்ரப் (ஜெர்மனி), டெனிஸ் ஷபோவலோவ் (கனடா), போர்னா கோரிச் (குரோஷியா) ஆகியோரும் முதல்தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் முன்னாள் சாம்பியன் ஜப்பானின் நவோமி ஒசாகா சக நாட்டவர் மிசாகி டோயை 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் 2 மணி 2 நிமிடங்கள் போராடி தோற்கடித்தார்.

‘தொடரில் முதல் சுற்று என்றாலே பதற்றம் இருக்கும். அதுவும் மிசாகி டோய், கடினமான எதிராளி. எனவே இந்த ஆட்டம் அதிக நேரம் நீடிக்க வாய்ப்பு உண்டு என்பதை அறிந்திருந்தேன். அதன்படியே ஆட்டம் கடினமாக இருந்தது’ என்று வெற்றிக்கு பிறகு ஒசாகா குறிப்பிட்டார்.

வளர்ந்து வரும் உள்ளூர் நட்சத்திரமான 16 வயதான கோரி காப்பின் கனவு முதல் சுற்றுடன் சிதைந்தது. அவரை லாத்வியா வீராங்கனை அனஸ்டசிஜா செவஸ்தோவா 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். 7-ம் நிலை வீராங்கனை பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 6-3, 6-2 என்ற நேர் செட்டில் கமிலியா பெகுவை (ருமேனியா) எளிதில் வென்றார்.

கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), அலிசன் ரிஸ்க் (அமெரிக்கா), எலினா ரைபகினா (கஜகஸ்தான்), அனெட் கோன்டாவிட் (எஸ்தோனியா), முகுருஜா(ஸ்பெயின்) ஆகியோரும் தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.

இங்கிலாந்தை பந்தாடியது பாகிஸ்தான்! ரி -20 தொடர் சமநிலையில் முடிவு

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரி – 20 தொடர் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3ஆவது மற்றும் கடைசி  ரி -20 போட்டி நேற்று நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களைப்பெற்றது. மொஹமட் ஹாபீஸ் 86 ஓட்டங்களையும், அலி 54 ஓட்டங்களையும் குவித்தனர்.

பின்னர் 191 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை பெற்றது. இதன்படி பாகிஸ்தான் அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

2ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 3ஆவது போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றதால் தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.

’19’ இல் கைவைக்க வேண்டாம் – சம்பந்தன் வலியுறுத்து!

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலை மையிலான புதிய அரசு கைவைக்க வேண்டிய அவசியமில்லை. புதிய அரசமைப்பே தேவைப்படுகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

19 ஆவது திருத்தத்தால்தான் கடந்த ஆட்சியில் நாடு ஜனநாயக வழியில் பயணித்தது. இடையில் நடந்த சதிப் புரட்சியால் 52 நாள்கள் தளம்பல் ஏற்பட்டது. எனினும், உயர்நீதிமன்றம் அந்தத் தளம்பல் நிலைக்கு முடிவு கட்டியது.

புதிய அரசும் ஜனநாயக வழியில் பயணிக்க வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். 19ஆவது திருத்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதை நாம் விரும்பவில்லை.

அரசியல் தீர்வுக்கும் அபிவிருத்திக்கும் வழிவகுக்கும் புதிய அரசமைப்பையே நாம் விரும்புகின்றோம். அதை இந்த அரசு உடன் கொண்டுவர வேண் டும் – என்றார்.

மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி அறிக்கை எங்கே? அனுசாவின் ஆட்டம் ஆரம்பம்!

” மலையக தொழிலாளர் முன்னணி ஊடாக சேகரிக்கப்படுகின்ற தோட்டத் தொழிலாளர்களின் சந்தா பணத்துக்கு என்ன நடக்கின்றது? நிதி அறிக்கை ஏன் சமர்ப்பிக்கப்படாமல் உள்ளது.” – என்று மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சந்திரசேகரனின் மகள் சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல், மோசடி அம்பலமாகிவிடும் என்ற அச்சம் காரணமாகவே நிதி அறிக்கை தொடர்ந்தும் மறைக்கப்பட்டுவருவதாகவும், இது பற்றி உயர்பீடம் வாய் திறப்பதே இல்லை எனவும் அனுசா சந்திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய சபைக் கூட்டத்தில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டதா, இல்லை. மக்களுக்கு சேவைசெய்யவேண்டிய இடத்தில் பணம் தேடுபவர்கள் இருந்தால் , பணம் மட்டுமே அவர்களின் குறியாக இருக்கும் எனவும் அனுசா விசனம் வெளியிட்டார்.

அத்துடன், தனக்கு வாக்களித்த அதேபோல் ஒத்துழைப்பு வழங்கிய அனைவரையும் அரவணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தை முன்னெடுப்பேன் எனவும் அனுசா குறிப்பிட்டுள்ளார்.

14 குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவித்தல்!

வௌிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள 14 சந்தேகநபர்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பிலிருந்து (Interpol) சிவப்பு அறிவிப்புகளை இலங்கை குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) பெற்றுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டுவரும் நிலையில் வெளிநாடுகளுக்குத் தப்பித்துள்ள அவர்கள், கைதுசெய்யப்படுவதிலிருந்து தப்பித்து வருக்கிறார்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல், கொலை மற்றும் பிற குற்றங்கள் தொடர்பாக இந்த 14 பேர் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாக சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன், விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருவதால் 14 சந்தேகநபர்களின் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படாது எனவும் அவர்களை விரைவில் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைவர்களுக்குச் சொந்தமான, மேல் மாகாணத்தில் உள்ள சுமார் நான்காயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான 900 பேர்ச்சஸ் காணியை அரசுடைமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு உரித்தான 12 சொகுசு கார்கள், 7 முச்சக்கர வண்டிகள் மற்றும் 7 மோட்டார் சைக்கிள்கள் ஆகியனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனைவிட, சந்தேகநபர்களின் 102 வங்கிக் கணக்குகளிலிருந்த 960 இலட்சம் ரூபாய் பணமும் அரசுடைமையாக்கப்படவுள்ளது.

மேலும், பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்ட 1917 என்ற சிறப்பு ஹொற்லைன் மூலமாகவே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பல குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இரு கப்பல்களை சிறைபிடித்தது ஈரான்!

0
ஹார்முஸ் நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. முறையான அனுமதியின்றி இயங்கியது மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, இந்த அதிரடி நடவடிக்கையை ஈரான் கடற்படை...

காவத்தை சம்பவம் மிலேச்சத்தனம்: திகா கண்டனம்!

0
காவத்தை சம்பவம் மிலேச்சத்தனமானது என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

டித்வா சூறாவளி: இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு...