Home Blog Page 3879

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 11 பேர் இன்று குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில்  மேலும் 11  பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,879 ஆக அதிகரித்துள்ளது.

180 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெற்றிநடைபோடுமா இங்கிலாந்து? இன்று பலப்பரீட்சை!

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3ஆவது மற்றும் கடைசி  ரி -20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

2ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று  செவ்வாய்க்கிழமை நடைபெறுகி;றது.

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த முழுமுயற்சி மேற்கொள்ளும். அதேநேரத்தில் இந்த போட்டி தொடரில் ஆறுதல் வெற்றியை சுவைக்க பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி போராடும்.

எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

மலையக உதவி ஆசிரியர் நியமனம் – ஜீவனிடம் ஆளுநர் வழங்கிய உறுதிமொழி!

ஆசிரியர் பயிற்சிகளை நிறைவுசெய்த மத்திய மாகாணத்திலுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளிடம், மத்திய மாகாண ஆளுநர் லலித் கமகே தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும், மத்திய மாகாண ஆளுநருக்குமிடையிலான கலந்துரையாடலொன்று கண்டியிலுள்ள ஆளுநரின் வதிவிடத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது மலையக ஆசிரியர் உதவியாளர்கள் விவகாரம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட பயிற்சிகளை நிறைவுசெய்துள்ள போதிலும் மத்திய மாகாணத்திலுள்ள சுமார் 420 ஆசிரியர் உதவியாளர்கள் இன்னும் உரிய வகையில் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய இ.தொ.கா. பிரதிநிதிகள், அவர்களுக்கு நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா. பிரதிநிதிகளின் கோரிக்கையைஏற்ற ஆளுநர், விரைவில் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.

பிரதம அமைச்சரின் இணைப்பு செயலாளரும், ஊவா மாகாண முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமான்,  மத்திய மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் துரை மதியுகராஜா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கணபதி கணகராஜ் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

க.கிசாந்தன், எஸ்.சதீஸ்

கொட்டகலையில் கொள்ளை! பலகோணங்களில் விசாரணை!!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பிரதான நகரில் அமைந்துள்ள கம்மினிகேசன் (தொடர்பாடல்) கடையினை உடைத்து பணம் மற்றும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளை கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று (01) அதிகாலை 2.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவத்தின் போது ஒரு லட்சத்து பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பணம் மற்றும் மீள் நிரப்பு அட்டைகளை கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.

குறித்த நபர் கோயில் பக்கமாக வந்து பூட்டினை இரும்பு கம்பியால் உடைக்கப்படுவது மற்றும் பணம் மற்றும் மீள் நிரப்பும் அட்டைகள் எடுத்துச்செல்லும் காட்சிகள் அக்கடையில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.

அண்மைக் காலமாக கொட்டகலை பகுதியில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதனாலும் இது குறித்து எவரும் இது வரை கைது செய்யப்படாமையினால் மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளன.

குறித்த கொள்ளைச் சம்பவம் குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் மற்றும் நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவு ஆகியன இணைந்து சம்பவத்துடன் தொடர்புடைய திருடர்களை பிடிப்பதற்கு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

விக்னேஸ்வரனை உடன் கைது செய்க! நவ சிங்கள ராவய வலியுறுத்து

புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்கேஸ்வரனை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் வலியுறுத்தினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

” அரசியல் இலாபத்துக்காக இனவாதத்தை தூண்டும் நடவடிக்கையில் விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். அவரின் இந்த முயற்சியை தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் ஓரணியில் திரளவேண்டும்.

அதுமட்டுமல்ல விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்து, வாக்குமூலம் பதிவுசெய்யவேண்டும். நாடாளுமன்றத்துக்குள் மட்டுமல்ல வெளியிலும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுகின்றார்.

புலிகளின் பிரிவினைவாத முகாமையே அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவரின் அறிவிப்புகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – என்றார்.

மலையகத்தில் ‘குட்டி லண்டனில் வாழும் மக்களின் கண்ணீர் கதை’

எழில் கொஞ்சும் மலைநாட்டின் நுவரெலியாவே குட்டி லண்டன் என அழைக்கப்படுகின்றது. இங்கு அனைத்து காட்சிகளும் ரம்மியமாக காணப்பட்டபோதிலும் நகரத்தின் மத்தியில் காணப்படும் குதிரை பந்தய திடலில் வாழ்ந்து வரும் மக்கள், அடிப்படை வசதிகள் இன்றி தொடர்ந்து 4 தலைமுறைகளாக 150 வருடங்களுக்கு ‘வலி சுமந்த வாழ்க்கை’ வாழ்ந்து வருகின்றனர்.

தற்போதும் 55 தற்காலிக வீடுகளில் சிறுவர்கள் , முதியோர்கள் உட்பட 300 பேர் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

ஆங்கிலேயர் காலத்திலேயே இக்குதிரைப் பந்தய திடல் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது அங்கு வேலை செய்வதற்கும்,குதிரைகளைப் பராமறிப்பதற்கும் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதன் நிர்வாகம் ஆங்கிலேயரினாலும் பின்னர் நுவரெலியா நகர சபையும் 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் விiயாட்டுத்துறை அமைச்சும் நடாத்தி வருகின்றது.

இந்த காலப்பகுதியில் அங்குவாழும் மக்களின் அடிப்படை தேவைகளை எவரும் பூர்த்தி செய்யாத நிலையில் பல்வேறுப்பட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.  தற்போதும் தற்காலிக இறப்பர் சீட் மூலம் வேயப்பட்ட வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். குடிப்பதற்கு முறையான நீர்¸ மலசலகூடம்¸ மின்சாரம்¸ போக்குவரத்து¸ சுகாதாரம்¸ சிறுவர் பாரமரிப்பு¸ மற்றும் வசதிகள் இன்றியும் பல சமூகப்பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.

இப்பகுதியை மறுசீரமைப்பதற்கு வியாட்டுத்துறை அமைச்சு அனுமதி வழங்க மறுக்கின்றது. இதனால் தமது வீடுகளைக்கூட புனரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மழைக் காலங்களில் வெள்ளநீரால் நிர்க்கதியாகின்றனர்.எனவே, சுதந்திரமாகவும், சுகாதாரமாகவும் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிதருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.

அதேவேளை இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி வே. இராதாகிருஸ்ணன் கவனத்திற்கும் மக்கள் அப்போது கொண்டு சென்றிருந்தனர். அதன்பயனாக விளையாட்டுதுறை அமைச்சின் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேச்சுவார்ததை நடாத்தி வேறு இடத்தில் 46 புதிய வீடுகளை நிர்மாணிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனவே, இனியாவது அங்குவாழும் மக்களுக்கு சுதந்திரமாகவும், சுகாதாரமாகவும் வாழும் சூழ்நிலையை அரசியல்வாதிகள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். புதிய ஆட்சிலாவது அம்மக்களுக்கு விடிவு பிறக்கட்டும்.

மக்கள் செய்தியாளர் – பா.திருஞானம்

‘கொரோனாவை கட்டுப்படுத்தாமல் தளர்வுகளை அறிவிப்பது அழிவுக்கு வழிவகுக்கும்’

கொரோனாவை கட்டுப்படுத்தாமல் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் முதன் முதலில் வெளிப்பட்டு ஏறத்தாழ 9 மாதங்கள் ஆகியுள்ள போதிலும், வைரஸ் தொற்று பரவல் பல நாடுகளில் இன்னும் உச்சகட்டமாக உள்ளது.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதலில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டு வந்த நாடுகள், பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு தளர்வுகளை அறிவித்து திறந்து விட்டன. இந்தியாவிலும் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தாமல் கட்டுப்பாடுகளை தளர்த்தி திறந்து விடுவது பேரழிவிற்கான செயல் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் ஆதனோம் கேப்ரியேசுஸ் கூறுகையில்,

“ பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக எந்த நாடும் சொல்ல முடியாது. உண்மை என்னவெனில் இந்த வைரஸ் மிக எளிதாக பரவும். எனவே, கொரோனாவை கட்டுப்படுத்தாமல், திறந்து விடுவது என்பது பேரழிவிற்கான செயலாகும். மக்கள் அதிக அளவு கூடும் இடங்களில் இருந்தே பெரிய அளவில் தொற்று பரவல் ஏற்படுகிறது” என்றார்.

அடுத்து என்ன? சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் அனுசா ஆலோசனை!

மலையக மக்கள் முன்னணியின் யாப்பை நான் மீறவில்லை. தேசிய சபை எடுத்த முடிவு தொடர்பில் எனது சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் ஆலோசனை நடத்திவருகின்றேன். கட்சியின் முடிவு எனக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – என்று மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளர் அனுசா சந்திரசேகரன் தெரிவித்தார்.

தலவாக்கலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

” மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபையால் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் எனக்கு இன்னும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

நானும் தேசிய சபையில் அங்கம் வகிக்கின்றேன், கூட்டம் தொடர்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனது தந்தையின் ஆதரவாளர்களும் தேசிய சபையில் இருக்கின்றனர். அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுபவர்களுக்கு அழைப்பு விடுத்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தனித்துவ அடையாளத்தை நிரூபிக்கும் நோக்கிலேயே பொதுத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கினேன். அதனை செய்தும் காட்டினேன். மக்களும் ஆதரவு வழங்கினார்கள்.

மக்கள் என்பதே மலையக மக்கள் முன்னணி, என்னை கட்சியைவிட்டு சாதாரணதொரு குழுவால் தீர்மானிக்கமுடியாது. மக்கள் எனது பக்கமே இருக்கின்றனர், அவ்வாறு இல்லாவிட்டால் எனக்கு 17 ஆயிரத்து 107 வாக்குகள் கிடைத்திருக்காது.

மலையக மக்கள் முன்னணியின் நிதி அறிக்கை எங்கே? தலைவர்களுக்கு கொடுக்கவேண்டிய கோட்டா பணம் வழங்கப்பட்டதா, அமைப்பாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டதா, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டதா, அவற்றை சுட்டிக்காட்டினால் பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

கட்சி எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் எனக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு அறிவிக்கப்பட்டதும் எனது சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வேன். அது மக்கள் தொடர்பாகவும், சட்டரீதியாகவும் இருக்கும்.

மலையக மக்கள் முன்னணி மண்வெட்டி சின்னத்தில் களமிறங்கியிருந்தால், நான் சுயேட்சையாக போட்டியிட்டிருந்தால்தான் கட்சி யாப்பைமீறுவதாக அமையும். எனவே, நான் யாப்பை மீறவில்லை.” – என்றார்.

க.கிசாந்தன்

குப்பை குழியாக மாறியுள்ள டன்சின் தோட்ட பஸ் நிலையம்!

கொத்மலை பிரதேசசபைக்குட்பட்ட பூண்டுலோயா நகலில் இருந்து நுவரெலியாவுக்கு செல்லும் பிரதான பாதையில் டன்சினன் தோட்டத்தில் காணப்படும் பஸ் நிலையமே இது.

இந்த பஸ் நிலையத்தை டன்சினன் தோட்டம் விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்க வரும் நூற்றுக் கணக்கான மாணவர்கள் உட்பட ஆசிரியர்களும், தோட்ட மக்களும் நாளாந்தம் பாவித்து வருகின்றனர்.

தற்போது இந்த பஸ் நிலையம் உடைவடைந்து கூரைகள் பாதிக்கபட்ட நிலையில் சுற்றுபுரங்களும் கும்பைளினால் மூடப்பட்டு காணப்படுகின்றது. இதனை திருத்தி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கபட்ட போதும் இது வரைக்கும் புனரமைப்பு பணி இடம்பெறவில்லை.

குறிப்பாக பூண்டுலோயா நகரத்தில் இருந்து நுவரெலியாவிற்கு செல்லும் இந்த பிரதான பாதையின் அதிகளவிலான பகுதிகள் பாதிக்கபட்டு குன்றும் குழியுமாகவே காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் இந்த பஸ் நிலையமும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது வேதனைக்குறியது. மழை காலங்களில் எந்த ஒரு பயணியும் இந்த பஸ் நிலையத்திற் நிற்க கூட முடியாது.

இவ்வாறான நிலையில் இந்த பஸ் நிலையத்தை உடனடியாக திருத்தி அமைத்து கொடுக்க வேண்டியது மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையின் கடமையாகும். இதனை உடனடியாக திருத்தி அமைத்து தருமாறு இப் பிரதேச பெருந்தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மக்கள் செய்தியாளர் – பா.திருஞானம்

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி கோட்டாவுடன் முக்கிய பேச்சு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் மார்க் டி. எஸ்பருக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.தொலைபேசி மூலம் நேற்று இந்தக் கலந்துரையாடல் நடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் விடயத்தில் இலங்கை அரசு முன்னெடுத்துள்ள வெற்றிகரமான செயற்பாடுகளுக்கும், பொதுத்தேர் தலில் ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெற்றுக்கொண்ட வெற்றிக்கும் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் இதன்போது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இ ந் த க் க ல ந் து ரையாடலில் இலங்கை – அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான நட்புறவு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

உறுதியான அரசு ஒன்று உருவாகியுள்ள நிலையில், இன நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விடயங்களில் அரசுகவனம் செலுத்த வேண்டும் என்ற காரணியையும் அமெரிக்கப் பாதுகாப்பு செயலாளர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இந்து – பசுபிக் வலய நாடுக ளுக்கு இடையிலான இறையாண்மையுடனான நட்புறவைப் பலப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள இரு தரப்பினரும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள், இரு தரப்புப் பாதுகாப்புச் செயற்பாடுகள், இராணுவம் மற்றும் கடற்படை கூட்டு வேலைத்திட்டங்கள் என்பனகுறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

இதில் பயங்கரவாதச் செயற்பாடு களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடை யிலான பாதுகாப்பு நட்புறவைப் பலப்படுத்துதல், இரு இருதரப்பு இணக்கப்பாட்டு நலன்களை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இரு கப்பல்களை சிறைபிடித்தது ஈரான்!

0
ஹார்முஸ் நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. முறையான அனுமதியின்றி இயங்கியது மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, இந்த அதிரடி நடவடிக்கையை ஈரான் கடற்படை...

காவத்தை சம்பவம் மிலேச்சத்தனம்: திகா கண்டனம்!

0
காவத்தை சம்பவம் மிலேச்சத்தனமானது என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

டித்வா சூறாவளி: இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு...