Home Blog Page 3880

20 ஆவது திருத்தச்சட்டமூலம் நாளை மறுதினம் அமைச்சரவையில் முன்வைப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போதே நீதி அமைச்சர் அலி சப்ரியால் ’20’ சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அத்துடன் அமைச்சர்களின் கருத்துகளை பெறுவதற்கு ஒருவாரம் அவகாசம் வழங்கப்படலாம் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் நாளையே கலந்துரையாடி 20 இற்கு அமைச்சரவை அனுமதி வழங்கக்கூடும் எனவும் அறியமுடிகின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கும், சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைப்பதற்கும், ஜனநாயக கட்டமைப்பை பலப்படுத்துவதற்கும் கடந்த ஆட்சியின்போது 19 ஆவது திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

எனினும், அதிலுள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளிவைத்து ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரங்களை வழங்கும் வகையிலேயே 20ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளது என கூறப்படுகின்றது. உயர்நியமனங்களை வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படலாம் எனவும், அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி வகிக்கலாம்போன்ற விடயங்கள் உள்ளடக்கப்படலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும், ஜனாதிபதியின் பதவிகாலம், போட்டியிடும் தடவைகள் ஆகியவற்றில் மாற்றாம் வராது எனவும் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு முன்னர், 20ஆவது திருத்தச்சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

lankanewsweb இணையத்தின் ஆசிரியர் கைது!

lankanewsweb.org இணையத்தளத்தின் ஆசிரியராக கடமையாற்றிய சதுரங்க டி சில்வா, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று மனித உரிமை செயற்பாட்டாளரும், முன்னாள் ஆளுநருமான கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பிரகாரம் ஊடகவியலாளரைக் கைதுசெய்த குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவரது கணனியையும் கைப்பற்றிச்சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சதுரங்க டி சில்வா நீதித்துறையை அவமதிக்கும் வகையில் செய்தி ஆக்கங்களை பிரசுரித்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று காலமானார்.

டில்லியில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84) கடந்த 9 ஆம் திகதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். எனவே அவர் மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே வைத்தியர்கள் 5 மணி நேரம் சத்திரசிகிச்சை செய்து அதை அகற்றினர். ஆனால் சத்திரகிசிச்சைக்கு பிறகு பிரணாப்பின் உடல்நிலை மோசமடைந்தது.

எனவே வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்ற பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்று காரணமாக செப்டிக் ஷாக் ஏற்பட்டு உடல் நிலை கடும் பின்னடைவு அடைந்து இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்தது. ஆழ்ந்த கோமா நிலையிலேயே உள்ள பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையை மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று காலமானார். இதனை அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி உள்ளார்.

‘மாதம்பை கோவில் சர்ச்சை’ – தீர்வு பெற்றுக்கொடுத்த செந்தில் தொண்டமான்!

இறக்குவானை, மாதம்பை தோட்டத்தில் கோயில் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின்போது ஏற்பட்ட பிரச்சினைகளுக்கும் முறுகல் நிலைமைக்கும் உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடாத்தி, அதற்கான தீர்வினை செந்தில் தொண்டமான் இன்று பெற்றுக்கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் செந்தில் தொண்டமானின் தலையீட்டுக்கு அமைய, புதிய இடத்தில் கோயில் அமைப்பதற்கான அனுமதியை தோட்ட நிர்வாகம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக பெரும்பான்மை இனத்தவர்களுடனான முரண்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது.

எனினும் நிர்வாகத்தின் அனுமதியின்றி பலாத்காரமாக கையகப்படுத்திய முந்தைய இடத்திலேயே ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என தோட்ட மக்களால் தெரிவிக்கப்படுமானால் அது தொடர்பில் சட்ட ரீதியான சிக்கல்களை மக்கள் எதிர்நோக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். அத்துடன் அது இன முறுகல் ஏற்படுவதற்கான வாய்ப்பாக அமையும்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

மாதம்பை தோட்டத்தில், தோட்ட நிர்வாகத்தினரின் அனுமதி இன்றியும் பதிவு செய்யப்படாமலும் பலாத்காரமாக சிலையொன்று ஸ்தாபிக்கப்பட்டதையடுத்து பெரும்பான்மை இனத்தவர்களால் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.

இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள், சம்பவ இடத்துக்கு விரைந்து ஆராய்ந்துள்ளார். இந்த நிலையில் இவ்விடயத்தில் செந்தில் தொண்டமான் தலையிட்டு தீர்வினை பெற்றுக்கொடுத்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற பின்னர் இறக்குவானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடிய செந்தில் தொண்டமான், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.

அத்துடன் மாதம்பை தோட்டத்தை நிர்வகிக்கும் பெருந்தோட்ட கம்பனியின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். நிர்வாகத்தின் எந்தவித அனுமதியும் இன்றி தோட்ட மக்களால் சிலையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளதுடன் இது தொடர்பில் எந்தவிதமான கோரிக்கைகளும் எழுத்துமூலமாக வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் சிலை ஸ்தாபிப்பதற்கு அவர்கள் தெரிவு செய்த இடமானது, பெரும்பான்மை இனத்தவர்களின் வழிபாட்டு இடத்துக்கு அருகில் இருப்பதாகவும் அந்த இடம் ஏற்கனவே பெரும்பான்மை இனத்தவர்களால் வழிபாட்டுக்கென கோரப்பட்டு வந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இந்த நிலையில் அங்கு கோயில் அமைக்க அனுமதிப்பதானது இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலையை மேலும் அதிகரிக்கும் எனவும் நிர்வாகத்தினர் செந்தில் தொண்டமானிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய தோட்ட மக்களிடமும் செந்தில் தொண்டமான் தொடர்பு கொண்டுள்ளார். பாரம்பரிய இடம் தவிர புதிதாக ஓர் இடத்தில் கோயில் அமைப்பதற்கான அனுமதியை நிர்வாகத்தினரிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அந்த நிலையமையில் இவ்வாறான முறுகல் நிலையை தவிர்த்துக்கொண்டிருக்க முடியும்.

அவ்வாறு நிர்வாகம் மறுக்கும் பட்சத்தில், தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொருத்தமான இடத்தைப் பெற்றுக்கொடுத்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராயும் கூட்டம் கொடகவலை பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளரின் தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முதித்தா சொய்சா, பிரதேச சபை தலைவர், உறுப்பினர்கள், இறக்குவானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள், பௌத்த பிக்குகள், ஆலய பரிபால சபையினர், இளைஞர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்தின்போது ஆலய விவகாரம் தொடர்பில் பெரும்பான்மை இனத்தவர்களால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, செந்தில் தொண்டமான் தோட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதன் அடிப்படையில் கோயில் அமைப்பதற்கான புதிய இடத்தை 24 மணி நேரத்துக்குள் வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் உத்தியோகபூர்வமாக சம்மதித்துள்ளது.

எனினும் நிர்வாகத்தின் அனுமதியின்றி பலாத்காரமாக கையகப்படுத்திய முந்தைய இடத்திலேயே ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என தோட்ட மக்களால் தெரிவிக்கப்படுமானால் அது தொடர்பில் சட்ட ரீதியான சிக்கல்களை மக்கள் எதிர்நோக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.

செந்தில் தொண்டமானின் தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடியதற்கு அமைய, கிடைக்கப்பெற்ற இந்தத் தீர்வானது இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்புடையதாகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

தொழிலாளர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்த ஜீவன்!

ஹெரோ கீழ்பிரிவு தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று, தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வை வழங்குவதற்கு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பூண்டுலோயா ஹெரோ கீழ்ப்பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கடந்த வாரம் கொழும்பில் கடலில் மூழ்கி பலியாகினர். இதனால் குறித்த தோட்டம் சோகத்தில் மூழ்கியது. இளைஞர்களுக்கான இறுதிக்கிரியைகள் நடைபெற்ற தினத்தன்று ஊர் மக்கள் தொழிலுக்கு செல்லவில்லை.

இதனால் வெளியில் இருந்து ஆட்களை அழைத்துவந்து தோட்ட நிர்வாகம் கொழுந்து பறித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹெரோ கீழ்பிரிவு தோட்ட மக்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினர். தோட்ட நிர்வாகத்துடனும் முரண்பட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இதனையடுத்து குறித்த தோட்டத்துக்கு அவர் நேற்று நேரில் பயணம் மேற்கொண்டார்.

இதன்போது பொதுமக்கள் ஜீவன் தொண்டமானிடம் மூன்று கோரிக்கைகளை முன் வைத்தனர். அதன்படி மலைகளை சுத்தப்படுத்தி தரும் படியும் தோட்ட நிர்வாகத்தில் இரு அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தரும் படியும் வேலை நிறுத்தம் செய்த நாட்களில் சம்பளப்பணத்தை கழிக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டனர்

அதற்கு அமைய தோட்ட நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளார்.இதன்போது பொது மக்களின் நிபந்தனைகளை தோட்ட நிர்வாகம் ஏற்றுக்கொண்டு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது.

க.கிசாந்தன்

மக்கள் சக்தி என் பக்கமே! அதிரடிக்கு தயாராகிறார் அனுசா!!

” மத்தியகுழு, தேசியசபை என்பவற்றையெல்லாம்விடவும் மக்கள் சக்திக்கே வலிமை அதிகம். அந்தவகையில் மக்கள் என் பக்கமே நிற்கின்றார்கள். கடந்த பொதுத்தேர்தலின்போதும் இது உறுதியானது.” – என்று மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சந்திரசேகரனின் மகள் சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கட்சியிலிருந்து அனுசா சந்திரசேகரனை நீக்கும் வகையில் மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை இன்று எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

” மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை எடுத்துள்ளதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் எனக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு அறிவிக்கப்பட்டதும் எனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து தெளிவுபடுத்துவேன்.

யார், எப்படியான தீர்மானங்களை எடுத்தாலும் அரசியலில் அங்கீகாரம் வழங்கும் ‘சுப்ரீம் பவர்’ என்பது மக்களிடமே இருக்கின்றது. இதன்படி மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் எனது அரசியல் பயணத்தை அங்கீகரித்துள்ளனர்.இதன்காரணமாகவே எனக்கு 17 ஆயிரம் வாக்குகள் வழங்கப்பட்டன. மலையக இளைஞர், யுவதிகளும் புதிய அரசியல் தலைமைத்துவத்தை வரவேற்றுள்ளனர்.

எனவே, மக்களின் பேராதரவுடன் முன்நோக்கி பயணிப்பேன். தர்மத்துக்கும், அதர்மத்துக்குமிடையிலான போட்டியில் தர்மமே வெல்லும் என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.” – என்றார் அனுசா சந்திரசேகரன்.

ஆப்பு வைத்தார் ராதா! பதிலடி காத்திருக்கிறது என்கிறார் அனுசா!!

மலையக மக்கள் முன்னணியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலும் இருந்தும் பிரதி பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் அனுசா சந்திரசேகரன் வெளியேற்றப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஹட்டனிலுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்படுத்தி இந்த கருத்தை வெளியிட்டார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ், நிதிச் செயலாளர் பேராசிரியர் விஜயசந்திரன் கட்சியின் உயர்மட்ட அங்கத்தவர்களும் தேசிய சபை பொதுச் சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கட்சியின் உயர் பீடம் தேசிய சபை பொதுச் சபை ஆகியவற்றில் அங்கம் வகிக்கின்ற 245 அங்கத்தவர்களில் 204பேர் கலந்து கொண்டனர்.இவர்கள் அனைவரும் கீழ் கண்ட தீர்;மானங்களுக்கு ஏகமனதாக தங்களுடைய சம்மதத்தை வழங்கினர்.

1.அனுசா சந்திரசேகரன் கட்சியின் யாப்பிற்கு முரணாக செயற்பட்டதன் காரணமாக அவரை அனைத்து பதவிகளில் இருந்தும் வெளியேற்றுவது எனவும் எதிர்வரும் காலத்தில் அனுசா சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியின் கொடியையோ கட்சியின் நிறத்தையோ அல்லது அவர் ஏற்கனவே வகித்த பிரதி பொது செயலாளர் நாயகம் என்ற பதவியையோ எந்த சந்தர்ப்பத்திலும் பாவிக்க முடியாது.

2.ம.ம.முன்னணியின் ஒரு அங்கமாக செயற்பட்ட ஆசிரியர் முன்னணியின் செயலாளராக செயற்பட்ட எஸ்.ரவீந்திரன் கட்சியின்  அனைத்து பதவிகளில் இருந்தும் வெளியேற்றுவதாகவும் மிக விரைவில் புதிய ஆசிரியர் முன்னணி உருவாக்குவதற்கும் தீர்மானிக்கபட்டது.

3.மலையக மக்கள் முன்னணியின் ஒரு அங்கமாக தோட்ட சேவையார்களை உள்வாங்கி அவர்களுக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்துவது எனவும்

4.மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளராக செயற்பட்ட பேராசிரியர் விஜயசந்திரனை பிரதி பொதுச் செயலாளராக ஏகமனதாக நியமிக்கப்பட்டமை

5.கட்சியிக்கான 25 பேர் கொண்ட புதிய நிர்வாக சபை ஒன்றை ஏற்படுத்தல் ஆகிய விடயங்களுக்கே நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, உரிய நேரத்தில் உரிய பதிலடியை கொடுப்பதற்கு அனுசா சந்திரசேகரன் தயாராகிவருகிறார் என அவரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

க.கிசாந்தன்

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 8 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில்  மேலும் 8  பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,868 ஆக அதிகரித்துள்ளது.

132 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘கொட்டகலையில் ஓர் தோட்டத்தையே முடக்கிய குளவிகள்’

கொட்டகலை யுலிபீல்ட் தோட்டத்துக்குட்பட்ட வெளிங்டன் பிரிவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (31) காலை தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும்போதே குளவிகள் கொட்டியுள்ளன. அத்துடன், அவ்வீதியூடாக பயணித்தவர்களும் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர் எனக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து தோட்ட மக்கள் இன்று தொழிலுக்கு செல்லாது, குளவிக்கூடுகளை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர். இதனால் சிறுவர் முன்பள்ளியின் கற்பித்தல் நடவடிக்கையும் இன்று நிறுத்தப்பட்டது. மேற்படி தோட்டத்தின் இயல்பு வாழ்க்கை இன்று முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது.

குளவிக்கொட்டுக்கு இலக்கான இருவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். ஏனைய சிலர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். அத்துடன், மேற்படி தோட்டத்திலுள்ள குளவிக்கூடுகளை அகற்றி தமக்கான தொழில் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொடுக்குமாறு தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நாளாந்தம் குளவிக்கொட்டு சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன. இதனால் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால் இன்னும் உரிய தீர்வு கிடைக்கவில்லை. எனவே, இதுவிடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

பொகவந்தலாவ நிருபர் – எஸ்.சதீஸ்

119 இலக்கத்துடன் ‘விளையாடியவர்’ நோர்வூட்டில் கைது!

பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு தொடர்ச்சியாக அழைப்பை மேற்கொண்டு பொய்யான முறைப்பாடுகளை முன்வைத்துவந்த நபரொருவர் நேற்று (30) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

நோர்வூட், சென்ஜோன்டிலரி மேற்பிரிவு தோட்டத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ‘119’ என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி பல தடவைகள் பொய்யான முறைப்பாடுகளை முன்வைத்துள்ளார், இதனையடுத்து இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த நோர்வூட் பொலிஸார், நீதிமன்றத்தின் அனுமதியுடன் கைது செய்தனர். அவரிடமிருந்து தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது.

கைதானவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் செய்துள்ளனர்.

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இரு கப்பல்களை சிறைபிடித்தது ஈரான்!

0
ஹார்முஸ் நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. முறையான அனுமதியின்றி இயங்கியது மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, இந்த அதிரடி நடவடிக்கையை ஈரான் கடற்படை...

காவத்தை சம்பவம் மிலேச்சத்தனம்: திகா கண்டனம்!

0
காவத்தை சம்பவம் மிலேச்சத்தனமானது என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

டித்வா சூறாவளி: இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு...