Home Blog Page 3881

30 ஆண்டுகளுக்கு பிறகு மாகாணசபைத் தேர்தலில் ஏற்படவுள்ள மாற்றம்

 இலங்கை அரசியல் வரலாற்றில் மூன்று தசாப்தங்களுக்கு பிறகு இரு புதிய அரசியல் கட்சிகளின் ‘அரசியல் அதிகார போட்டி’க்கு மத்தியிலேயே இம்முறை மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இலங்கையில் 1988 ஏப்ரல் 28 ஆம் திகதியே முதன்முதலாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. வடமேல், வடமத்திய, ஊவா, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளுக்கே அத்தினத்தில் தேர்தல் இடம்பெற்றது.

அத்தேர்தலில் களமிறங்கி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக்கட்சி நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் வரலாறுகாணாத தோல்வியை சந்தித்தது.

இதனால் ‘ஆளும்கட்சி’ மற்றும் ‘பிரதான எதிர்க்கட்சி’ என்ற இரு அந்தஸ்த்துகளையும் அக்கட்சி இழந்துள்ளது. எனவே, மாகாணசபைத் தேர்தலில் ‘பிரதான’ எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியே இம்முறை களமிறங்கவுள்ளது.

(சிலவேளை ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து யானை சின்னத்தின்கீழ் போட்டியிட்டால்கூட அது புதிய கூட்டணியாகவே அமையும்)
1988 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி புறக்கணித்திருந்தாலும் அதன்பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி போட்டியிட்டது.

மாகாணசபைகளின் ஆட்சி அதிகாரத்தையும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி கைப்பற்றியிருந்தது. கடைசியாக நடைபெற்ற தேர்தலில்கூட வடக்கு, கிழக்கு மாகாணங்களைத்தவிர ஏனையவற்றை சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே கைப்பற்றி ஆட்சியமைத்தது.

எனினும், அக்கட்சியும் இன்று ‘ஆளும்கட்சி, ‘பிரதான எதிர்க்கட்சி’ என்ற அந்தஸ்த்தை இழந்துள்ளது. மொட்டு கட்சியுடன் இணைந்தே போட்டியிட உத்தேசித்துள்ளது. ஆகவே, ஆளுங்கட்சி என்ற அந்தஸத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே போட்டியிடவுள்ளது.

கடைசியாக நடைபெற்ற தேர்தலில் வடக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும், கிழக்கு மாகாணசபையின் அதிகாரம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடமும் இருந்தது.

அதேவேளை, 2021 முற்பகுதியில் மாகாணசபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பழைய முறைப்படியே தேர்தல் நடத்தப்படும். அதற்கேற்றவிதத்தில் சட்டத்திருத்தமும் மேற்கொள்ளப்படவுள்ளது.

8 மாதங்களில் மத்திய மாகாணத்தில் 6 சிறுத்தைகள் உயிரிழப்பு!

இவ்வருடத்தில் கடந்துள்ள 8 மாதங்களில் மாத்திரம் மத்திய மாகாணத்தில் 6 சிறுத்தைப் புலிகள் உயிரிழந்துள்ளன.

மான், பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் போடப்படும் கம்பி வலையில் சிக்குண்டே இவை உயிரிழந்துள்ளன.

நாவலப்பிட்டிய, கம்பளை, புஸல்லாவை , மஸ்கெலியா மற்றும் நல்லதண்ணி ஆகிய பகுதிகளிலேயே வலையில் சிக்கி சிறுத்தைகள் உயிரிழந்துள்ளன என்றுநல்லதண்ணி வனத்துறை அதிகாரி பிரகாஸ் கருhதிலக்க கூறினார்.

கடந்த 8 மாதங்களில் வலையில் சிக்கிய 5 சிறுத்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார். உயிரிழந்துள்ள 6 சிறுத்தைகளில் கருஞ்சிறுத்தையொன்றும் உள்ளடங்குகின்றது.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

லாஸ்லியா காட்டில் அடை மழை…

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது ‘பிரெண்ட்ஷிப்’ என்ற திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கிறார்.

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு கூட இன்னும் முடியாத நிலையில், லாஸ்லியா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மரகத நாணயம், ஓ மை கடவுளே போன்ற படங்களை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். லாஸ்லியாவுக்கு ஜோடியாக அறிமுக நடிகர் பூரணேஷ் நடிக்க உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ராஜா சரவணன் இயக்க உள்ளார்.

மூக்குத்தி அம்மன் குறித்து வெளியாகியுள்ள தகவல்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் 5 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன. இதனால் புதிய படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே பொன்மகள் வந்தாள், பெண்குயின், டேனி, லாக்கப் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வந்தன. அடுத்ததாக சூர்யாவின் சூரரைப் போற்று வருகிற அக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஓடிடியில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.

மேலும் சில படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அந்த வகையில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படமும் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. படக்குழு தரப்பில் இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி உள்ள இப்படத்திற்காக நயன்தாரா, 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார். முழுக்கதையும் அவர் மீது பயணிப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

‘மாடி வீடு என்பது கட்டுக்கதை – தனி வீடுகளையே அமைப்போம் என்கிறார் ஜீவன்!

” மாடிவீடு என்ற போலி கதைகளை நம்பவேண்டாம். தனி வீடுகளையே நாம் அமைப்போம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின்கீழ் இயங்கும் தொண்டமான் கலாச்சார நிலையத்தில் 9ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் ஐயாவின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு இவ்விடத்துக்கு வருவோம். அன்று எனது தந்தை எம்மை அழைத்துவந்தார். இன்று அவர் இல்லை. அது பெரும் துயரை தருகின்றது. இருந்தாலும் நல்லுள்ளங்களை தேடிவைத்துவிட்டே எனது தந்தை சென்றுள்ளார். அவர்கள் இன்று என்னை அரவணைக்கின்றனர்.

மலையகத்துக்கான வீட்டுத்திட்டம் தொடர்பில் பிரதமருடன் அண்மையில் கலந்துரையாடல் நடத்தினோம். எனினும், மாடி வீடு, மாடி வீடு என அது தொடர்பில் தவறான கருத்து பரப்பட்டுவருகின்றது. கூரைக்கு பதிலாக ‘கொங்ரீட்’ போட்ட தனி வீடுகளையே நாம் அமைக்கவுள்ளோம். எனவே, போலித்தகவல்களை நம்பவேண்டாம். விரைவில் உண்மை என்னவென்பதை உங்களால் நேரில் காணமுடியும்.
சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மண்டபத்தின்கீழ் நான்கு நிறுவனங்கள் வருகின்றன. அவை தொடர்பிலும் கலந்துரையாடினோம். மேற்படி நிறுவனங்களில் வளப்பற்றாக்குறை இருந்தது. அவை குறித்து சுட்டிக்காட்டினோம்.
அதேவேளை, கலைஞர்களை நாம் ஊக்குவிக்கவேண்டும் என்பதுடன் அவர்களுக்கான களத்தை அமைத்துக்கொடுத்து உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும். கலைஞர்கள் வாழ்ந்தால் மட்டுமே கலைகள் வாழும். அவ்வாறு இல்லாவிட்டால் கலைகள் அழிந்துவிடும். எனவே, கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்காமல் கலைகளை பாதுகாக்கமுடியாது. அதனை நாம் நிச்சயம் செய்வோம்.
க.கிசாந்தன்

‘கொரோனா’ அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று ஆரம்பம்

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிவ்யோர்க் நகரில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகி 13ஆம் திகதிவரை நடைபெறுகின்றது. கொரோனா வைரஸ் பரவலால் விம்பிள்டன் உட்பட பல தொடர் ரத்தான நிலையில் நடக்கும் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டி இதுவாகும்.

கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்கும் இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. வீரர், வீராங்கனைகள் தங்கியிருக்கும் ஹோட்டல், விடுதி மற்றும் ஸ்டேடியம் தவிர்த்து வேறு எங்கும் செல்லக்கூடாது,

விளையாடும் போது, சாப்பிடும் போது தவிர எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், ஸ்டேடியம் பகுதியில் நுழையும் போது உடல் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும், எழுத்துப்பூர்வ ஒப்புதல் இன்றி வெளியே சென்றால் போட்டியை விட்டு நீக்கப்படுவார்கள் உள்ளிட்ட கடும் பட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) பட்டம் வெல்வதற்கே பிரகாசமான வாய்ப்புள்ளது. காயத்தால் சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரரும், கொரோனா அச்சத்தால் நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் ரபெல் நடால், முன்னாள் சாம்பியன் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா ஆகியோரும் விலகியிருப்பது ஜோகோவிச்சுக்கு நிச்சயம் அனுகூலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஆண்டில் தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து 23 ஆட்டங்களில் வெற்றி பெற்று வீறுநடை போட்டு வரும் அவர் முதல் சுற்றில் டாமிர் ஜூம்ஹரை (போஸ்னியா) சந்திக்கிறார்.

இந்த பட்டத்தை ஜோகோவிச் வசப்படுத்தினால், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் வரிசையில் முதல் 2 இடங் களில் உள்ள பெடரர் (20 கிராண்ட்ஸ்லாம்), நடால் (19 கிராண்ட்ஸ்லாம்) ஆகியோரை 18 கிராண்ட்ஸ்லாமுடன் வெகுவாக நெருங்கி விடுவார்.

அவருக்கு 3-ம் நிலை வீரர் டொமினிக் திம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டேனில் மெட்விடேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), பெரேட்டினி (இத்தாலி), பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்), மிலோஸ் ராவ்னிக் (கனடா) ஆகியோர் கடும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒற்றையரில் களம் காணும் ஒரே இந்தியரான சுமித் நாகல் முதல் சுற்றில் உள்ளூர் வீரர் பிராட்லி கிளானை எதிர்கொள்கிறார்.

பெண்கள் பிரிவிலும் நடப்பு சாம்பியன் பியான்கா (கனடா), ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), உக்ரைனின் ஸ்விடோலினா உள்ளிட்டோர் கொரோனா பீதியால் ‘ஜகா’ வாங்கி விட்டனர். இருப்பினும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), நவோமி ஒசாகா (ஜப்பான்), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சோபியா கெனின் (அமெரிக்கா), ஜோஹகன்னா கோன்டா (இங்கிலாந்து), சபலென்கா, அஸரென்கா (பெலாரஸ்) உள்ளிட்டோர் வரிந்து கட்டி நிற்பார்கள்.

இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள 38 வயதான செரீனா வில்லியம்ஸ் இங்கு வாகை சூடினால், அதிக கிராண்ட்ஸ்லாம் ருசித்தவரான ஆஸ்திரேலியாவின் மார்க்கரேட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்து விடுவார். ஆனால் குழந்தை பெற்றுக்கொண்டு மறுபிரவேசம் செய்த செரீனாவிடம் ஆக்ரோஷம் இருக்கிறதே தவிர, அதை வெற்றியாக மாற்றக்கூடிய சாமர்த்தியம் இப்போது குறைந்து விட்டது. 4 முறை கிராண்ட்ஸ்லாம் இறுதி ஆட்டத்தில் தோற்று இருக்கிறார்.

முன்னணி நட்சத்திரங்கள் விலகியுள்ள நிலையில் செரீனா அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். செரீனா முதல் சுற்றில் சக நாட்டவர் கிறிஸ்டி அன்னை சந்திக்கிறார்.

இலங்கை நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகும்.

‘கொரோனா’ – உலகளவில் எட்டரை லட்சம் பேர் பலி!

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 53 லட்சத்து 81 ஆயிரத்து 579 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 77 லட்சத்து 6ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை….

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2 ஆயிரத்து 860 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். 140 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

களுத்துறை உதைப்பந்தாட்ட அணி மாகாண மட்ட போட்டிக்கு தேர்வு

46ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கீழ் களுத்துறை மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இடையே நடைபெற்ற தகுதி காண் இறுதிப் போட்டியில் களுத்துறை செயலாளர் பிரிவைச் சேர்ந்த ஆண்-பெண் இரு அணிகளும் அடுத்த மாத இறுதியில் மேல் மாகாண மாவட்டங்களுக்கு இடையே நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்வதற்கான தகுதியைப் பெற்றன.

களுத்துறை மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டிகளின் போது அதிரடியாக விசேட திறமைகளை வெளிப்படுத்திய களுத்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஆண்கள் அணியினர் பாணந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஆண்கள் அணியினரை 4-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபாரமாக ஆடி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றனர்.

இதேவேளை களுத்துறை பிரதேச செயலாளர் பிரிவு பெண்கள் அணிக்கும் பண்டாரகம பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பெண்கள் அணிக்கும் இடையே நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் பிரபல களுத்துறை பிரதேச செயலாளர் பிரிவு பெண்கள் அணியினர் 7-0 என்ற கோல்கள் அடிப்படையில் மாபெரும் வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘விக்கியின் உரையை இனவாதமாக்க வேண்டாம்’

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் பாராளுமன்ற உரையை இனவாதக் கருத்தாக கருதி, மக்களை குழப்பக்கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

” சி.வி.விக்னேஸ்வரனின் பாராளுமன்ற உரையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது அவரது தனிப்பட்ட கருத்து என்றே நான் கூறவேண்டும். சபாநாயகரே அதற்கு பதிலளித்து விட்டார். எனவே, இனியும் இதனை விவாதப் பொருளாக கருதக்கூடாது.ஏனெனில், இதற்கு முன்னரும் பாராளுமன்றில் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சஜித்துடன் கூட்டுசேர தயார்! ரணில் அணி அறிவிப்பு!!

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கூட்டணியாக செயற்படுவதற்கு தயார் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன  தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவி தன்னிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ருவான், அதனை பெற்றுக்கொள்வதற்கான நகர்வுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று (30) முற்பகல் கண்டிக்கு பயணம் மேற்கொண்ட அவர் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்றார்.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

” ஐக்கிய தேசியக் கட்சிக்கு இளம் தலைவரொருவர் தேவை என்று மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். அதனை ஏற்று தலைமைப்பதவிக்கு நானும் போட்டியிடுகின்றேன்.

அடுத்தவாரம் கட்சியின் செயற்குழு கூடும்போது இறுதி முடிவெடுக்கப்படும். கலந்துரையாடல்மூலம் புதிய தலைவரை தெரிவுசெய்யமுடியாமல்போகும் பட்சத்தில் வாக்கெடுப்புமூலம் தேர்வு இடம்பெறும்.” – என்றார்.

அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவி வழங்கப்பட்டால் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாரா என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ருவான் விஜேவர்தன,

” ஆம். ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்தவர்கள்தான் இன்று அந்த பக்கம் இருக்கின்றனர். எனவே, கூட்டணியாக இணைந்து செயற்படுவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது. பேச்சு நடத்தி , உரிய வகையில் பயணத்தை மேற்கொள்ளலாம்.” – என்றார்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இரு கப்பல்களை சிறைபிடித்தது ஈரான்!

0
ஹார்முஸ் நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. முறையான அனுமதியின்றி இயங்கியது மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, இந்த அதிரடி நடவடிக்கையை ஈரான் கடற்படை...

காவத்தை சம்பவம் மிலேச்சத்தனம்: திகா கண்டனம்!

0
காவத்தை சம்பவம் மிலேச்சத்தனமானது என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

டித்வா சூறாவளி: இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு...