Home Blog Page 3882

‘கோப்’தலைமைப்பதவியும் ஆளுங்கட்சி வசமாகிறது!

‘கோப்’ என்றழைக்கப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக ஆளுங்கட்சி அமைச்சரொருவரே நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.

நாடாளுமன்றத்தில் செயற்படும் குழுக்களில் மிகமுக்கிய குழுவாக கோப்குழு கருதப்படுகின்றது. கடந்த ஆட்சியின்போது இக்குழுவின் தலைமைப்பதவி எதிரணி உறுப்பினராக இருந்த சுனில் ஹந்துனெத்திக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதனை அடிப்படையாகக்கொண்டு அப்பதவியை இம்முறை எதிரணிக்கு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி சபையில் கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும், இதற்கு ஆளுங்கட்சி உடன்படவில்லை எனவும், அமைச்சர் ஒருவருக்கே அப்பதவி வழங்கப்படவுள்ளது எனவும் அரசியல் வட்டாரங்களில் அறியமுடிகின்றது.

அத்துடன், அரச கணக்குக்குழுவின் தலைமைப்பதவியும் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. 8ஆவது நாடாளுமன்றத்தில் இக்குழுவின் தலைவராக லசந்த அழகியவன்ன செயற்பட்டார். அவர் அப்போது சுதந்திரக்கட்சியில் சார்பில் அரசாங்கத்துடன் இணைந்திருந்தார். இம்முறை மொட்டு கட்சி உறுப்பினராக பாராளுமன்றம் தெரிவாகியுள்ளார்.

‘மலையக மறுமலர்ச்சியாம்’ – நவீன உலகில் இப்படியும் ஒரு பஸ் தரிப்பிடம்!

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மொக்கா தோட்ட பேருந்து தரிப்பிடம் மக்கள் பாவனைக்கு உதவாது, நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் இப்பகுதி மக்கள் போக்குவரத்தின் போது பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட குறித்த பேருந்து தரிப்பிடம் மூன்று வருடங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது .

இப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் பாடசாலை பிள்ளைகள் காட்மோர் மஸ்கெலிய போன்ற இடங்களுக்கு செல்வதற்காக குறித்த இடத்தில் ஒன்று கூடுவது வழக்கமாகும் .
தற்போது பேருந்து தரிப்பிடம் பழுதடைந்து காணப்படுவதால் மழை காலங்களில் பல்வேறு சிக்கல்களை எதிர் நோக்குவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் இதன் அருகாமையில் உயர்தர பிரிவு பாடசாலை ஒன்றும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர் ஒருவரும் இப்பகுதியிலே வசித்து வருகிறார்.

எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி பேருந்து தரிப்பிடம் ஒன்றை அமைத்து தர பொறுப்பானவர்கள் முன் வர வேண்டும்.

(சாமிமலை நிருபர் – எஸ்.ஞானராஜ் )

ஆலய நிர்வாகசபையை தெரிவுசெய்ய மஸ்கெலியாவில் வாக்கெடுப்பு!

ஆலய நிர்வாக சபைக்கான உறுப்பினர்களை ஜனநாயக முறைப்படி தெரிவுசெய்வதற்காக மஸ்கெலியாவில் இன்று (30) தேர்தல் நடைபெற்றுள்ளது.
மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரவுன்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கான நிர்வாக சபை உறுப்பினர்களே இவ்வாறு வாக்களிப்புமூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதி இளைஞர்களின் முயற்சியால் நடைபெற்ற இத்தேர்தலில் ஊர் மக்கள் வாக்களித்தனர். பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
கே.சுந்தரலிங்கம், ஹட்டன்

கட்டுத்துவக்கு வெடிப்பு – தந்தை பலி: மகள் படுகாயம்! பசறையில் சோகம்!!

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெமேரியா தோட்ட, மாத்தென்ன பிரிவுக்கு அண்மையில் அமைந்துள்ள ரிட்டிக்காதோவ கிராமத்தில் உள்ள வீடொன்றில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கி (கட்டுத் துவக்கு) தவறுதலாக இயங்கி வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதில் சுனில் சாந்த (வயது 29) என்ற குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.

அத்துடன் அவருடைய இரண்டரை வயது நிரம்பிய மகள் படுகாயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளது.

இவ்வெடிப்பு சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

சம்பவ தினமிரவு வீட்டிற்கு வெளியே ஏதோ சத்தம் கேட்கவே குடிபோதையில் இருந்த குடும்பஸ்தர் தனது இரண்டரை வயது நிரம்பிய மகளை கையில் தூக்கிக்கொண்டு சமையலறை பகுதியில் இருந்த துப்பாக்கியை எடுத்து நிலத்தில் தட்டிக் கொண்டு வெளியில் செல்லும் போதே துப்பாக்கி இயங்கி குறித்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததுள்ளது.

படுகாயமடைந்த இருவரும் பசறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதன் போதே குறித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பசறை நிருபர்

மிலிந்த மொரகொடவுக்கு கிடைக்கவுள்ள உயர் அந்தஸ்த்து!

இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ள மிலிந்த மொரகொட அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களுக்கு நிகரான தரத்தைப் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் வரலாற்றில் இராஜதந்திரி ஒருவருக்கு இத்தகைய கௌரவம் கிடைக்கவுள்ளமை இதுவே முதன்முறையாகும்.

வெளிநாட்டமைச்சுக்களுக்கு ஊடாக தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வழமையான இராஜதந்திர ஒழுங்குமுறையைத் தாண்டி இருநாடுகளின் தலைவர்களுடனும் நேரடியாக தொடர்பாடல்களை முன்னெடுக்க கூடிய அதிகாரத்தை அவர் கொண்டிருப்பார் என கூறப்படுகின்றது.

அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவராக நியமிக்கப்படுகின்றவர்கள் அந்நாட்டின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் தரத்திற்கு நிகரானவர்களாக கருதப்படுகின்றனர். இப்போது தான் இலங்கையில் இத்தகைய நியமனம் முதன்முறையாக வழங்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களின் ஒருவரான மிலிந்த மொரகொட இந்தியாவிற்கான இலங்கைத்தூதுவராக நியமிக்கப்பட்டாலும் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு ஒத்தாசையாக செயற்படுவார் என அறியமுடிகின்றது.

1964ம் ஆண்டில் பிறந்த அசோக மிலிந்த மொரகொட சர்வதேச விவகாவரரங்களில் சிறந்த அனுபவம் உடையவராக கருதப்படுகின்றார். 2001ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுவரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சராக 2009 முதல் 2010ம் ஆண்டுவரையும் சுற்றுலாத்துறை அமைச்சராக 2007ம் ஆண்டு முதல் 2009 ஆண்டு வரையும் அதற்கு முன்பாக பொருளாதார மறுசீரமைப்பு ,விஞ்ஞானம் தொழில்நுட்ப அமைச்சராகவும் இருந்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையே நோர்வேயின் அனுசரணையில் 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது முக்கிய பேச்சுவார்த்தையாளர்களில் ஒருவராக மிலிந்த மொரகொட விளங்கியிருந்தார்.

அவர் கடைசியாக கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித்தலைவராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசகராகவும் பதவிவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகளவில் இரண்டரை கோடி பேருக்கு கொரோனா – 8 லட்சத்து 47 ஆயிரம் பேர் பலி!

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 51 லட்சத்து 87 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 51 லட்சத்து 87 ஆயிரத்து 740 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 75 லட்சத்து 38ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 8 லட்சத்து 47 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

‘கொரோனா’ – இலங்கையில் 2,860 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில்  மேலும் 11 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,860 ஆக அதிகரித்துள்ளது.

123 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோர்வூட்டில் வாள்வெட்டு – பெண் படுகாயம்! சந்தேக நபர் தப்பியோட்டம்!!

நோர்வூட் பகுதியில் 50 வயதுடைய பெண்ணொருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.

வாள்வெட்டை மேற்கொண்ட நபர் தப்பியோடியுள்ளார். அவரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையில் நோர்வூட் பொலிஸார் இறங்கியுள்ளனர். நேற்றிரவே இக்கொடூரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எதற்காக குறித்த பெண் இலக்குவைக்கப்பட்டார் என்பது இன்னும் கண்டறியப்படாத நிலையில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

இ.தொ.காவின் தேசிய சபைக்கூட்டம் ஒத்திவைப்பு

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

இ.தொ.காவின் ஸ்தாபத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி 107ஆவது ஜனன தினம் இன்றாகும். அத்தினம் அனுஷ்டிக்கப்பட்ட பின்னர் இ.தொ.காவின் தேசிய சபைகூடி சமகால அரசியல் நிலைவரங்கள், தலைவர் தேர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் என முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது.

எனினும், இன்றைய தினம் தேசிய சபைக்கூடாது எனவும், பிரிதொரு நாளிலேயே அது நடைபெறும் எனவும் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அமரர்.செளமியமூர்த்தி தொண்டமானின் 107 ஆவது ஜனன தினம்

மலையக தந்தை என்றழைக்கப்படும் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானின் 107ஆவது ஜனன தினமான  இன்று கொழும்பு மற்றும் மலையகத்தின் பல பகுதிகளிலும் நினைவுகூரப்பட்டது.

ஜனன தினத்தை முன்னிட்டு பழைய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்தார்.

இந்நிகழ்வுகளில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் நிதி செயலாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன், முன்னாள் ஊவா மாகாண அமைச்சரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், முன்னாள் மத்திய மற்றும் ஊவா மாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் தோட்ட தொழிலாளர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானின் 107வது ஜனன தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவானில் மலையக வரலாறு பற்றிய பல அபூர்வ தகவல்களை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் காணொளி காட்சிகளுடன் கூடிய மாபெரும் ஆவணக் கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

க.கிசாந்தன்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இரு கப்பல்களை சிறைபிடித்தது ஈரான்!

0
ஹார்முஸ் நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. முறையான அனுமதியின்றி இயங்கியது மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, இந்த அதிரடி நடவடிக்கையை ஈரான் கடற்படை...

காவத்தை சம்பவம் மிலேச்சத்தனம்: திகா கண்டனம்!

0
காவத்தை சம்பவம் மிலேச்சத்தனமானது என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

டித்வா சூறாவளி: இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு...