Home Blog Page 3883

மாகாணசபைத் தேர்தலில் அரசியல் வாரிசுகள் போட்டி!

2021 முற்பகுதியில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும்,அரசியல் வாரிசுகளும் போட்டியிடவுள்ளனர் என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட மேலும் சில கட்சிகளின் சார்பிலேயே வாரிசுகள் களமிறங்குகின்றனர் எனவும் தற்போதிருந்தே அவர்கள் தேர்தலுக்கு தயாராகிவருகின்றனர் எனவும் தெரியவருகின்றது.

மஹிந்த அணியில் போட்டியிட்டு ஊவா மாகாணசபைக்கு தெரிவாகியிருந்த முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவின் மகன் இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஊவாவில் போட்டியிடவுள்ளார்.

அமரர் சந்திரசேகரனின் மகள் அனுசா சந்திரசேகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். இராஜரட்னத்தின் மகன் ஜனா ஆகியோர் மத்திய மாகாணத்தில் போட்டியிடவுள்ளனர். அதேபோல் அரசியல் பிரமுகர்களின் உறவினர்களும் போட்டியிடுகின்றனர்.

அதேவேளை பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முக்கிய அரசியல் பிரமுகர்களும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

’20’ ஐ முன்வைத்ததும் – மலையக எம்.பிக்களும் ‘பல்டி’!

பாராளுமன்றத்தில் சிறுகட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிரணி உறுப்பினர்கள் நால்வர் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளனர் என்று ‘திவயின’ வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசிலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இவர்கள் அரசாங்கத்துக்கான ஆதரவை வெளிப்படுத்தவுள்ளனர்.

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க உள்ளவர்களில் மலையகம் மற்றும் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் உள்ளனர் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே வயதான தம்பதியினர் – கின்னஸ் சாதனை!

எக்குவடோர் (Ecuador) தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஒரு குடியரசு ஆகும். இந்த நாட்டைச் சேர்ந்த 110 மற்றும் 104 வயதுடைய தம்பதியினர்தான் உலகிலேயே மிக பழமையான ஜோடியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி, ஜூலியா மோரா. தனது பெற்றோருக்குத் தெரியாமல் 1941 ஆம் ஆண்டு வால்ட்ராமினா குயின்டெரோஸை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 79 ஆண்டுகள் ஆகிறது.

இப்போது ஜூலியா மோராவுக்கு 110 வயது.வால்ட்ராமினா குயின்டெரோஸ்க்கு 104 வயது. இவர்கள் தான் உலகிலேயே மிக பழமையான ஜோடியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

தங்களுடைய பெரிய குடும்பத்தை பிரிந்திருப்பதால் கொஞ்சம் மனச் சோர்வடைந்திருந்தாலும் இருவரும் நல்ல ஆரோக்கியத்துடனும், தெளிவாகவும் இருக்கின்றனர்.

கின்னஸ் சாதனைகளில் நீண்டகால திருமண தம்பதிகள் என இடம்பெற்றிருந்தாலும், இருவருக்கும் இடையே எந்த சச்சரவும் இல்லாமல் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
இவர்களின் இருவரின் மொத்த வயது 215க்கு உட்பட்டது. மோரா மார்ச்10, 1910இல் பிறந்திருக்கிறார்.

குயின்டெரோஸ் அக்டோபர் 16, 1915இல் பிறந்திருக்கிறார். இவர்கள் இருவரும் 1941ஆம் ஆண்டு குயிட்டோலா இக்லெசியா டி எல் பெலென் ஆலயத்தில் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள். எக்குவடோர் தலைநகரான குயிட்டோவில் வசித்துவருகின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் இவர்கள் கின்னஸ் சான்றிதழைப் பெற்றனர்.

இருவரும் முன்பு மிகவும் சுறுசுறுப்பானவர்களாக இருந்தார்கள் எனவும், ஆனால் இப்போது சற்று தளர்ந்துவிட்டார்கள். குறிப்பாக ஒரு மாத காலமாகத்தான் இப்படி இருப்பதாகவும், தங்கள் பெரிய குடும்பத்தை பிரிந்திருப்பதால் வருத்தத்தில் உள்ளதாகவும் அவரது மகள் சிசிலியா கூறுகிறார்.

இவர்களுடைய 4 குழந்தைகள், 11 பேரக்குழந்தைகள், அவர்களுடைய 21 குழந்தைகள், அவர்களுடைய 1 குழந்தை என ஐந்து தலைமுறைகள் இருப்பதாக கூறுகிறார். ஆனால் எப்போதும் குடும்பத்துடன் இருக்க விரும்பும் இந்த தம்பதிக்கு மார்ச் மாதத்திலிருந்து யாரையும் பார்க்கமுடியவில்லை.

தனது தந்தை தினமும் டிவி பார்த்துக்கொண்டு, பால் குடிப்பது, இனிப்பு வகைகளை விரும்பி சாப்பிடுவது என இருப்பார், தாய் செய்தித்தாள்களை விரும்பி படிப்பார் எனவும் சிசிலியா கூறுகிறார்.

முன்னதாக வயதான தம்பதியர் பட்டியலில் 212 வயது 52 நாட்கள் வாழ்ந்த டெக்சாஸ் தம்பதியினர் சார்லட் மற்றும் ஜான் ஹேன்டர்சன் இருந்தனர். இப்போது அந்த சாதனையை எக்குவடோர் தம்பதியினர் முறியடித்துள்ளனர்.

‘கொரோனா’வில் இருந்து காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிலியா, கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில் நடிகை ஜெனிலியா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், தற்போது அதிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது, ‘கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 21 நாட்களாக எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. கடவுளின் ஆசிர்வாதத்தால் இன்று எனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது.

இந்த நோய்த்தொற்றுக்கு எதிராக என்னுடைய போராட்டம் எளிமையானதாக இருந்ததற்கு கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.

இரு வாரங்களில் மாற்றம் வருகிறது : 19ஆவது அரசியலைப்பில் மாற்றம்

19 ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்து, பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட குழு, இரு வாரங்களில் தனது அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கும் என அரசாங்கத் தரப்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பின் 19 வது திருத்தம் குறித்து ஆராயவும் மாற்றப்பட வேண்டிய பகுதிகளை அடையாளம் காணவும் அரசாங்கம் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் குழு ஒன்றினை நியமித்தது.

இதில் நீதி அமைச்சர் அலி சப்ரி, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் அடங்குவர்.

இந்நிலையில் குறித்த திட்டங்கள் அடங்கிய வரைவு இரண்டு வாரங்களில் குழுவுக்கு பரிந்துரைக்கப்படும் என குழுவுக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் அமைச்சரவை அவற்றைப் பற்றி முழுமையான ஆராய்ந்து 20 ஆவது திருத்தத்தில் இணைக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் பரிசீலனை செய்யும்.

இதில் பாதுகாப்பு போன்ற அமைச்சு பதவிகளை வைத்திருப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரம் தொடர்பான 19 வது திருத்தத்தில் உள்ள தெளிவின்மையை சரிசெய்ய அரசாங்கம் முயற்சிக்கும் என்றும் அறிய முடிகின்றது.

19 வது திருத்தத்தில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் மற்றும் பின்னர் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது குறித்து தொடர்ச்சியான கலந்துரையாடல்களை தேர்தல்களில் அரசாங்கத்தை ஆதரித்த அமைப்புகள் மேற்கொள்ளவுள்ளன.

2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 100 திட்டத்தின் மூலம் 19 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது ஒரு வருடம் கழித்து நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை பறித்தது.

மேலும் சுயாதீன ஆணைக்குழுக்கள் உறுப்பினர்களை நேரடியாக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரத்தையும் இது இரத்து செய்தது. இதன் காரணமாக தற்போது பிரதமருடன் கலந்தாலோசித்து மட்டுமே அமைச்சர்களை ஜனாதிபதி நியமிக்க முடியும்.

எவ்வாறாயினும், அமைச்சர்களுக்கு அமைச்சு பதவிகளை ஒதுக்குவது ஜனாதிபதியின் விருப்பப்படியே என்றாலும் 19 ஆவது திருத்தத்தின் காரணமாக அதன் ஆளுகை முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில்13 பேருக்கு கொரோனா!

ஐ.பி.எல். ரி-20 தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில், வேகப்பந்து வீச்சாளர் உள்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், அணியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களும் அடங்குவதாக ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது அரசாங்கத்தின் கொள்கையைப் பின்பற்றும், தற்போது 14 நாட்கள் ஆகும். 14 நாள் தனிமைப்படுத்தலின் போது, தனிநபர் 10 ஆம் நாள், 13 ஆம் நாள் மற்றும் 14 ஆம் நாளில் சோதிக்கப்படுவார் என ஐ.பி.எல். நெறிமுறை கூறுகிறது.

இந்தநிலையில், கொவிட்-19க்கு சாதகமாக சோதனை செய்த சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சாஹர், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிறகுதான் பயிற்சிக்கு திரும்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், செப்டம்பர் 19ஆம் திகதி முதல் தொடங்கவுள்ள ஐ.பி.எல். தொடருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ) தெரிவித்துள்ளது.

 

நிரந்தர கிராம சேவகர் வேண்டும் : சாமிமலை கவரவில மக்கள் கோரிக்கை

 

மஸ்கெலிய பிரதேச சபைக்கு உற்பட்ட சாமிமலை கவரவில 320/c பிரிவிற்கு நிரந்தர கிராம சேவகர் ஒருவரை சேவையில் அமர்ந்துமாரு இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித பிரிவில் சேவையாற்றி வந்த கிராம சேவகர் கடந்த 11 திகதி ஓய்வு பெற்று சென்றதை தொடர்ந்து 320/m மஸ்கெலிய பிரிவு கிராம சேவகர் தற்காலிகமாக குறித்த பிரிவை பார்வையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 11 ம் திகதி முதல் இன்றுவரை 320/c பிரிவு காரியாலயம் இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கபட்டுள்ளதாகவும் இதனால் தமது முக்கிய விடயங்களை செய்து கொள்ளமுடியவில்லை எனவும் காரியாலய நாட்கள் கிராம சேவகரின் சேவை நேரம் என்பன காட்சிப்படுத்த பட்டிருந்த போதிலும் அது முறையாக நடைமுறை படுத்த படவில்லை எனவும் இது குறித்து மஸ்கெலிய பிரதேச சபை தலைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரிவில் கிலனுஜி டீசைட் பாக்றோ சோளங்கந்தை கவரவில போன்ற தோட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் சுமார் 5800 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டு என இப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்

(சாமிமலை நிருபர் ஞானராஜ்)

மைத்திரிக்கு உரிய பதவி கிடைக்கும் : தயாசிறி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, கௌரவ பதவியை பெற்றுக்கொடுக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்ததொரு கோரிக்கையையும் விடுக்கவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தயாசிறி ஜயசேகர மேலும் கூறுகையில்,

“மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறந்த பதவியொன்றை வழங்குமாறு கோரி எந்தவித கடிதத்ததையும் நாம் அனுப்பவில்லை.

எனினும், அவருக்கு உரிய பதவியொன்றை அரசாங்கம் வழங்குமென நம்புகிறோம்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினை கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டினை இம்முறை நடத்தாமல் இருக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களை ஒன்றுதிரட்டாமல் சமய வழிபாடுகளை பெல்லன்வில விகாரையில் எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மைத்திரிக்கு பரிசளிக்கும் வகையில், பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சுக்கு 17,400 கோடி : அமைச்சர் யார்? கேள்வியெழுப்புகிறார் அநுரகுமார

இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யார் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வியெழுப்பினார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 68 அமைச்சுக்கள் இருக்கின்ற போதிலும், அரச பாதுகாப்பு அமைச்சர் யார் என்பதை அறிந்துகொள்ள விரும்புவதாகவம் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வரும் நான்க மாதங்களுக்கு 17,400 கோடி ரூபா பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அநுர குமார திஸாநாயக்க, இந்தத் தொகை பித்தலை, களிமண் ஆகிய அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையுடன் ஒப்பிடும் போது 300 மடங்கு அதிகம் எனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பிற்காக 174 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள போதிலும், இதுகுறித்து நாடாளுமன்றத்திற்கு பொறுப்பு கூறும் அமைச்சர் யார்? தேசிய பாதுகாப்பின் இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு தேசிய புலனாய்வுப் பிரிவு சொந்தமாகாது. பொலிஸ், மாவட்ட அலுவலகங்கள் ஆகியவை மட்டுமே அவரின் கட்டுப்பாட்டில் உள்ளன என்றும் அநுரகுமார திஸாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு அமைச்சர் யார் என்பதை இவர்கள் கூறவில்லை. ஆனால் அதிகாரமற்ற முறையில் ஜனாதிபதி பணியாற்றுகிறார். இது அரசியலமைப்பிற்கு முரணானதாகும். எனவே, அரசியலமைப்பை மீறும் செயலாகும். அமைச்சர் யார் என்று தெரியாத அமைச்சுக்கு 174 பில்லியன் ரூபாவை பாராளுமன்றத்தில் இருந்து கோரியிருப்பதை ஏற்க முடியாது. என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

 

நடிகர் சட்விக் போஸ்மேன் திடீர் மரணம்!

மார்வெல் சூப்பர்ஹீரோ கதாபாத்திரமான பிளாக் பாந்தர் ரோலில் நடித்த சட்விக் போஸ்மேன் புற்றுநோய் காரணமாக 43 வயதில் மரணம் அடைந்தார்.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற பிளாக் பாந்தர் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சட்விக் போஸ்மேன் (Chadwick Boseman). Marvel cinematic universeல் இவர் நடித்த பிளாக் பாந்தர் கதாபாத்திரம் மிக முக்கிய ஒன்று.

43 வயதாகும் சட்விக் போஸ்மேன் அவர் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் தற்போது மரணமடைந்துவிட்டதாக அவரது பிரதிநிதி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அவர் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள வீட்டில் இருக்கும் போது தான் உயிர் பிரிந்தது. அவர் அருகில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் இருந்தனர்.

சட்விக் போஸ்மேன் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பே பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது என அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர் இதுவரை பொதுவெளியில் தனக்கு புற்றுநோய் இருப்பது பற்றி அவர் எப்போதும் பேசியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சட்விக் போஸ்மேன் மரணம் பற்றி அவரது குடும்பத்தினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறி இருப்பதாவது..

“சட்விக் போஸ்மேன் மறைந்துவிட்டார் என்பதை அளவிட முடியாத துயரத்துடன் நாங்கள் அறிவிக்கிறோம். சட்விக்கிற்கு மூன்றாம் நிலை Colon Cancer இருப்பது 2016ல் உறுதி செய்யப்பட்டது. இந்த நான்கு வருடங்களாக அவர் அதனுடன் போராடி கொண்டிருந்தார், அது நான்காம் நிலைக்கு சென்றுவிட்டது.

ஒரு உண்மையான போராளி, சட்விக் இதெயெல்லாம் கடந்து நீங்கள் அதிகம் ரசித்த பல படங்ளை கொடுத்தார். மார்ஷல் முதல் da 5 bloods படம் வரை பல படங்களின் ஷூட்டிங் எண்ணற்ற அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபிக்கு இடையில் தான் நடைபெற்றது. கிங் T’challa வின் கதாபாத்திரத்தில் அவர் நடித்துது அவரது கெரியரில் மிகப்பெரிய கெளரவம்.

மனைவி மற்றும் குடும்பத்தினர் அருகில் இருக்க அவர் வீட்டிலேயே இன்று மரணம் அடைந்தார். உங்கள் அன்பிற்காகவும் பிரார்த்தனைக்காகவும் குடும்பம் நன்றி தெரிவித்து கொள்கிறது.”

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

சட்விக் போஸ்மேன் திடீர் மரணம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிர்ச்சி மற்றும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

மார்வெல் ஸ்டூடியோவின் தலைமை அதிகாரி Kevin Feige வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சாட்விக் மரணம் உண்மையில் பேரதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்து இருக்கிறார். அவர் ஒவ்வொரு முறை செட்டிற்கு வரும் போதும் அவர் மகிழ்ச்சியை அனைவருக்கும் பரப்புவார். அவர் திரையில் தோன்றி நடித்தால் அது அழிவில்லாத ஒன்றாக இருக்கிறது. அவரது இழப்புக்கு மார்வெல் ஸ்டூடியோ குடும்பம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது. அவரது குடும்பத்தினருடன் நாங்களும் இன்று அதிக வருத்தத்தில் இருக்கிறோம்” என தெரிவித்திருக்கின்றனர்.

மார்வெலின் பிளாக் பாந்தர் ரோலில் நடிக்கும் முன்பு அவர் 2013ல் வந்த 42 படத்தில் ஜாக்கி ராபின்சன் மற்றும் 2014ல் வந்த Get on up என்ற படத்தில் ஜேம்ஸ் பிரவுன் ஆகிய ரோல்களில் நடித்து புகழ் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்விக் மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இரு கப்பல்களை சிறைபிடித்தது ஈரான்!

0
ஹார்முஸ் நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. முறையான அனுமதியின்றி இயங்கியது மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, இந்த அதிரடி நடவடிக்கையை ஈரான் கடற்படை...

காவத்தை சம்பவம் மிலேச்சத்தனம்: திகா கண்டனம்!

0
காவத்தை சம்பவம் மிலேச்சத்தனமானது என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

டித்வா சூறாவளி: இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு...