Home Blog Page 3884

யாழ் கோட்டை இந்திய வம்சாவளி மக்களின் துயரச் சின்னமா?

கூலிகளாக இங்கே அழைத்துவரப்பட்ட அப்பாவி இந்தியத்தமிழர் அனுபவித்த துயரத்திற்கும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் இலங்கையில் அமையப்பெற்ற ஒரு கோட்டை சாட்சிப்பதிவாக உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

காரைநகர் தீவுக்கும், வேலணைத் தீவுக்கும் இடையில் அமைந்துள்ள ஒடுங்கிய கடற்பகுதியில் சிறிய மணற்திட்டு ஒன்றில் அமைந்துள்ளது அம்மன்னீல்கோட்டை. பாக்கு நீரிணைப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் வருவதற்கான மிக முக்கிய கடல்வழிப்பாதையாக இது அமைந்துள்ளது.

எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்பு அரணாக அம்மன்னீல் கோட்டை போர்த்துகேயர்களால் அமைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. 1620 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசர் யாழ்ப்பாண இராச்சியத்தை முழுமையாகக் கைப்பற்றித் தமது ஆட்சியின்கீழ் கொண்டுவந்த பின்னர் இக்கோட்டை அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இன்று மிக அழகான சுற்றுலாத்தலமாக காட்சித்தரும் இந்த கோட்டை இந்திய வம்சாவளி மக்களைப் பொறுத்தவரை ஒரு துயரச்சின்னம் என்பது நம்மில் பலர் அறியாத உண்மை.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கூலி தொழில்களுக்காக வரவழைக்கப்பட்ட இந்திய வம்சாவளியினர் பாக்கு நீரிணை வழியாக வந்து இறங்கிய இடம் தான் அம்மன்னீல் கோட்டை.

இங்கேதான் நாட்டுக்குள் நுழையத் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். வெகு தூரம் கடல் பயணம் செய்து நொந்து போயிருந்த இவர்கள் பல நோய்களால் பீடிக்கப்பட்டார்கள்.

அம்மை, கொலரா போன்ற நோய்களுக்கு ஆட்பட்டார்கள். இந்த நோய்கள் ஒருவரில் இருந்து மற்றொருவருக்கு பரவாமல் இருக்க நோயுற்றவர்கள் தனிமைப் படுத்தப்பட்டனர். அதாவது நோயுற்றவர்கள் அம்மன்னீல் கோட்டையின் இருண்ட அறைகளில் அடைக்கப்பட்டனர். நோயுற்ற தம் உறவுகளை அங்கேயே விட்டுவிட்டு கண்ணீரோடும் ஆற்றாமையோடும் மற்றவர்கள் மலையகம் நோக்கி பயணம் செய்தார்கள்.

நோயுற்றவர்களுக்கு இங்கே சிகிச்சை வழங்கப்பட்டது என்று நினைத்து விடாதீர்கள். சிகிச்சை எதுவும் கிடையாது. தனிமையிலும் நோயிலும் வாடும் இவர்கள் தானாக குணமடைந்தால் மட்டுமே உறவுகளுடன் வந்து சேர்ந்து வாழ முடியும் இல்லையென்றால் அந்த சிறைக்குள்ளேயே இறந்துவிடவேண்டியதுதான்.

இப்படி மனிதாபிமானமின்றி நடத்தப்பட்ட நம்மவர்கள் பட்ட துயரங்களை அங்குள்ள சுவர்களுக்கு கூட வாயிருந்தால் சொல்லும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை அழகுடன் கடலின் மத்தியில் கம்பீரமாக தோற்றமளிக்கும் இந்தக்கோட்டை தற்போது ஒரு சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

தகவல் – உதயசூரியன்

சர்வதேசத்தின் மேற்பார்வையில் சர்வஜன வாக்கெடுப்பைக் கோருகிறார் விக்கி!

தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பது தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு கிழக்கில் நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு இதுவே சரியான சந்தர்ப்பம் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இடைக்காலக் கணக்கறிக்கை பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய விக்னேஸ்வரன், ஒற்றை ஆட்சியின் கீழ் பொருளாதார நலன்கள் மட்டுமே தமிழ் மக்களுக்கு வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தால் தான் அரசியலில் இருந்து உடனே விலகுவதாகவும் குறிப்பிட்டார்.

இல்லைனில் எமது தலைவர்கள் புதிதாகச் சிந்தித்து அரசியல் மேதகைப் பண்புகளுக்குரிய முடிவுகளை எடுத்து தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆகவே, தமிழர்களுக்கான அதிகாரத்தையும் அங்கீகாரத்தையும் தாருங்கள் என்றும் தாம் ஏனையோருடன் இணைந்து இந்த நாட்டை அமைதியும் செழிப்பும் மிக்கதாக ஆக்குவோம் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.

நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்று ஜனாதிபதி மற்றும் அரசாங்க தரப்பினர் மேற்கொண்டுவரும் வாதங்களுக்கு தக்க பதிலடி கொடுத்த விக்னேஸ்வரன், சுதந்திரத்துக்கு பின்னர் மாறிமாறி ஆட்சிக்கு வந்த இரண்டு கட்சிகளுமே இனப்பிரச்சனை இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொண்டே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

‘தேர்தல்முறை மாற்றம் தமிழ்பேசும் மக்களுக்கு ஆபத்தாக அமையக்கூடாது’ – வேலுகுமார்

புதிய தேர்தல்முறை மாற்றமானது தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் இருப்பை, பிரதிநிதித்துவத்தை பாதிக்காத வகையிலேயே முன்னெடுக்கப்படவேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (28.08.2020) நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட வேலுகுமார் எம்.பி., மேலும் கூறியதாவது,

” கண்டி மாவட்டத்திலிருந்து தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டாவது தடவையும் அதிஉயர் சபைக்கு தெரிவாவது இதுவே முதன்முறையாகும். எனவே, தமிழ் பேசும் சமுகமாக ஒன்றிணைந்து எனக்கு வாக்களித்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவருக்கும், கூட்டணியின் பிரதித் தலைவர்களுக்கும், எனது குடும்ப உறுப்பினர்களுக்கும், தோழர்களுக்கும் இத்தருணத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
எந்தவொரு சட்டதிருத்தத்தையும் மேற்கொள்வதற்கான பெரும்பான்மைப்பலத்தை  9ஆவது பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி கொண்டுள்ளது.எனவே, அந்த பலத்தை ஆளுந்தரப்பு எவ்வாறு, எதற்காக பயன்படுத்தப்போகின்றது என்பதே பிரதான கேள்வியாகும்.

அதேவேளை, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக கொண்டுவர்படப்ட 19ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் எனவும், 13ஆவது திருத்தச்சட்டம் மறுசீரமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக புதிய அரசியலமைப்பில் புதிய தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் இருப்புக்கும், பிரதிநிதித்துவத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத விதத்திலேயே புதிய தேர்தல் முறையை உருவாக்கப்படவேண்டும்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூலி என்ற அடையாளத்தை மாற்றியமைத்து ஏனைய சமூகங்களுக்கு சமனான நிலையில் அவர்களை மேம்படுத்தவதே எமது திட்டமாக இருந்தது. அதற்கான அடித்தளத்தை கடந்த ஆட்சியில் இட்டிருந்தோம். எனவே, சமுகமாற்றத்துக்காக எம்மால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் புதிய ஆட்சியிலும் தொடரவேண்டும்.” – என்றார்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் பெரும் அநீதி!

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் தொழிற்சங்க ஊழியர்களாகப் பணியாற்றும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு, அடிப்படைச் சம்பளமாக 11,800 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் சம்பளமும் உரிய தினத்தில் வழங்கப்படுவதில்லை என்றும் தொழிற்சங்கப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் என்று தமிழ்ழிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படித் தொழிற்சங்கத்துக்கு 40இற்கும் மேற்பட்ட அலுவலகங்கள் காணப்படுகின்றன என்றும் இந்த அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கே போதிய சம்பளம் உரிய தினத்தில் வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படித் தொழிற்சங்கத்தில் சுமார் 20,000 தொடக்கம் 30,000 சந்தாதாரிகள் அங்கம் வகிக்கின்றனர் என்றும் இவர்கள் தலா 150 ரூபாயை மாதச் சந்தாவாக
செலுத்துகின்றனர் என்றும் எனவே இந்தத் தொழிற்சங்கத்துக்கு மாதமொன்றுக்கு, 4,500,000ரூபாய் வருமானம் கிடைக்கின்றப் போதிலும் தொழிற்சங்க ஊழியர்களுக்கு எவ்விதச் சலுகைகளும் வழங்கப்படவில்லை என்றும் மேற்படி ஊழியர்கள் தெரிவித்தனர்.

கொரோனா தொற்று காரணமாக, மார்ச் முதல் மூன்று மாதங்களாக நீடிக்கப்பட்ட ஊரடங்குச்சட்டம் காரணமாகதொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தலா ஒரு குடும்பத்துக்கு 500 ரூபாய்க்கான நிவாரணங்களை வழங்குமாறு, தொழிற்சங்க ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகத்தைக் கோரியிருந்த போதிலும் நிவாரணம் வழங்குவதற்கு நிர்வாகம் மறுத்துவிட்டதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படித் தொழிற்சங்கத்தின்அலுவலகங்கள்கூட எவ்விதஅபிவிருத்தியுமின்றிக் காணப்படுகின்றன என்றும் இந்தத் தொழிற்சங்கத்தை நிர்வகித்துவருபவர்களுக்கு, சந்தா செலுத்தும் தொழிலாளர்கள்மீதும் தொழிற்சங்க ஊழியர்கள்மீதும் எவ்வித அக்கறையும்இல்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில்,தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளரை தொடர்புகொண்டு கேட்க
முயற்சித்த போதிலும் முயற்சி பலனளிக்கவில்லை என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் பிரதமர் ராஜினாமா!

உடல் நலப்பிரச்சினை காரணமாக ஜப்பான் பிரதமர் அபே இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே உடல் நலப் பிரச்சினைகள் தொடர்பாக தனது ராஜினாமாவை அறிவிக்க உள்ளதாக வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்க உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

“அபே தனது நோய் மோசமடைந்துள்ளதால் ராஜினாமா செய்ய விரும்புகிறார்,நாட்டை வழிநடத்துவதில் அது சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர் கவலைப்படுகிறார் என உள்ளூர் ஊடகம் தெரிவித்து உள்ளது.

பிரதமரின் உடல்நிலை குறித்த ஊகங்கள் பல வாரங்களாக பரவி வருகின்றன, ஆனால் குறிப்பிடப்படாத நோய் மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு இரண்டு தனித்தனி பயணங்களை மேற்கொண்டார். பின்னர் சமீபத்திய நாட்களில் காய்ச்சல் அதிகரித்து உள்ளது என கூறப்படுகின்றது.

பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2020 ஒக்டோபர் 11 ஆம் திகதி நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் க.பொ.த. உயர்தரப்பரீட்சை 2020 ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் நவம்பர் 6 ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை 2021 ஜனவரி 18 முதல் 27 ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் விசேட அறிக்கையொன்றை விடுத்து கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, பாடசாலை விடுமுறை காலப்பகுதிக்கான திகதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் நவம்பர் 8 ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 9 ஆம் திகதி ஆரம்பமாகும் என்பதுடன் டிசம்பர் 23 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படும்.

2021 ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கை ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகும்.

மருதானையில் ரயிலில் மோதுண்டு பொகவந்தலாவ இளைஞன் பலி!

கொழும்பு, மருதானை பகுதியில் ரயிலில் மோதுண்டு பொகவந்தலாவை சீனாகலை
தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். இவ்விபத்து நேற்று (27) மாலை இடம்பெற்றதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.

செல்வராஜ் கஜேந்திரன் (வயது – 24) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பிலுள்ள புத்தக விற்பனை நிலையமொன்றில் அவர் தொழில் புரிந்துள்ளார். இது தொடர்பில் மருதான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

‘கொரோனா’ – உலகளவில் 8 லட்சத்து 35 ஆயிரம்பேர் பலி!

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 46 லட்சத்து 25 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 46 லட்சத்து 25 ஆயிரத்து 149 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 70 லட்சத்து 93 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 8 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் – 9 பேர் பலி!

இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார அத்தியட்சகர் லக்மால் கோணார தெரிவித்தார்.

எலிக்காய்ச்சல் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயமாக அவர் தொடர்ந்து தகவல் தருகையில்,

2019ஆம் ஆண்டு முதல் ஏழு மாதங்களில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1250 ஆக காணப்பட்ட போதிலும் 2020 ஆம் ஆண்டு முதல் 7 மாதங்களில் மாத்திரம் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1085 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று நோய் அச்சுறுத்தல் நிலவிய காலத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் நிலவியதாக இதன்போது தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் பொதுமக்கள் தொழில் வாய்ப்புகளுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கிக் கிடந்தமையினால் பொது மக்கள் விவசாயக் கமத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் எலியின் எச்சங்கள் மூ லம் இக்காய்ச்சல் பரவுகின்றது.

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தில் விவசாய வயல்கள் ,கமத் தொழில் நிலங்கள் மற்றும் கைவிடப்பட்ட இரத்தினக்கல் குழிகள் ஆகியவற்றின் அண்மித்த பகுதிகளில் எலிக்காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை – 158 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

மத்திய அதிவேக வீதியின் கடவத்த முதல் மீரிகம வரையான பகுதியின் புனரமைப்பு பணிகள் கடந்த 05 வருடங்களாக தடைப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நெடுச்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடவத்த முதல் மீரிகம வரையான பகுதியின் தூரம் சுமார் 36.54 கிலோ மீற்றர் என்பதோடு அதன் அகலம் 24.4 மீற்றராகும்.

04 வழிதடங்களை கொண்டு அமையவுள்ள இந்த வீதியில் அமைக்கப்படவுள்ள மேம்பாலம் ஒன்றின் நீளம் 13.24 கிலோ மீற்றர் என்பதுடன், வீதியை அமைப்பதற்கு 158 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

‘சுபிட்சத்தின் நோக்கு’ என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கமைய எதிர்வரும் 03 வருடங்களில் கடவத்த முதல் மீரிகம வரையான வீதியை புனரமைத்து மக்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இரு கப்பல்களை சிறைபிடித்தது ஈரான்!

0
ஹார்முஸ் நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. முறையான அனுமதியின்றி இயங்கியது மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, இந்த அதிரடி நடவடிக்கையை ஈரான் கடற்படை...

காவத்தை சம்பவம் மிலேச்சத்தனம்: திகா கண்டனம்!

0
காவத்தை சம்பவம் மிலேச்சத்தனமானது என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

டித்வா சூறாவளி: இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு...