Home Blog Page 3885

பாராளுமன்றம் வருகிறார் உதித்த லொக்கு பண்டார! பதவி துறக்கும் முக்கிய புள்ளி!!

ராஜபக்சக்களின் உறவினரான உதித்த லொக்கு பண்டார விரைவில் பாராளுமன்றம் வரவுள்ளார் என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதற்காக பதுளை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினரொருவர் பதவி துறக்கவுள்ளார் எனவும், அவர் ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார் எனவும் அரச உயர்மட்ட பிரமுகர் ஒருவர் ‘மலையக குருவி’யிடம் தகவல் வெளியிட்டார்.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட உதித்த லொக்கு பண்டார விருப்பு வாக்கு பட்டியலில் ஏழாம் இடத்தில் இருக்கின்றார். எனினும், மொட்டு கட்சிக்கு 6 ஆசனங்களே கிடைக்கப்பெற்றன. எனவே, எம்.பியொருவர் பதவி துறந்தால் பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பவருக்கு சபைக்கு வருவதற்கான வாய்ப்பு கிட்டும்.

ஊவா உட்பட 9 மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள அரசாங்கம் அதற்கான நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விக்னேஸ்வரனால் சபையில் இன்றும் சர்ச்சை! பதவி பறிபோகுமா?

பாராளுமன்றத்தில் மேற்கொண்ட சத்திய பிரமாணத்தை மீறும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள விக்னேஸ்வரனை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றவேண்டும் என்று சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகலை மாவட்ட எம்.பியான நளின் பண்டார வலியுறுத்தினார்.

நாடாளுமன்றம் இன்று (27) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. சபாநாயகரின் அறிவிப்பு முடிவடைந்தகையோடு விக்னேஸ்வரன் விவகாரம் சபையில் சூடுபிடித்தது.

ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய சஜித் அணி உறுப்பினரான மனுச நாணயக்கார,

” சபாநாயகருக்கு நன்றி தெரிவிக்கும் உரையின்போது இலங்கையின் பூர்வீக மொழி பற்றியும் சுயநிர்ணய உரிமை சம்பந்தமாகவும் விக்கேஸ்வரன் வெளியிட்ட கருத்துகளை ஹென்சாட்டில் இருந்து நீக்குமாறு கோரிருந்தேன். இது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால் அவரின் உரை ஹென்சாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது.” என சுட்டிக்காட்டி சர்ச்சைக்கு பிள்ளையார்சுழி போட்டார்.

”  ஆளுங்கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது கருத்தை வெளியிடும் சுதந்திரம் இருக்கின்றது. ” என சபாநாயகர் சுட்டிக்காட்டியபோது,

ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சாந்த பண்டார,

” நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து அரசியலமைப்பைமீறும் விதத்தில் இருந்தால் அது ஹென்சாட்டில் இருந்து இதற்கு முன்னரும் நீக்கப்பட்டுள்ளது. எனவே, இவரின் உரையில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்துகளும் நீக்கப்படவேண்டும்” – என வலியுறுத்தினார்.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட நளின் பண்டார எம்.பி.,

” பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபடமாட்டோம் என சபையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளோம். இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்து ஒரு மணிநேரத்துக்குள்ளேயே அதனைமீறும் வகையில் விக்னேஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவரின் உரை இனவாதம் கொண்டது. சபையில் செய்த சத்தியப்பிரமாணத்தைமீறும் வகையில் உள்ளது. எனவே, அவரை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றவேண்டும்.”  – என்றார்.

மாகாணசபைத் தேர்தலுக்கான திகதி நிர்ணயம்!

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தும் திகதியை நிர்ணயிக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதன்படி 2021 பெப்ரவரி முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறலாம் எனவும், பழைய முறைமையின்கீழ் 9 மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் இடம்பெறும் எனவும் அவ்வட்டாரங்களில் இருந்து மேலும் தெரியவருகின்றது.

அடுத்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையில் மாகாணசபைகள் அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

கூட்டமைப்புக்குள் மோதல்! ரெலோ, புளொட் வெளியேறும் அறிகுறி!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியும் கொறடா பதவியும் ரெலோ மற்றும் புளொட் ஆகிய பங்களிக்கட்சிகளுக்கு தரப்படாமல் அந்தப் பதவிகள் மீளவும் சுமந்திரனுக்கும் சிறி தரனுக்கும் வழங்கப்படுமாக இருந்தால் இரண்டு கட்சிகளும் (ரெலோ, புளொட்) நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கவோ அல்லது விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் அணிகளுடன் இணையவோ வாய்ப்புள்ளது.

– இவ்வாறு புளொட் கட்சியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன்மற்றும் ரெலோவின் லண்டன் மற்றும் தலைமைக்குழு உறுப்பினர் சாம் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறியதாவது,

இலங்கைத் தமிழரசுக்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்தி தன்னை வளர்த்து வருகின்றது.எனவே, இலங்கை தமிழரசுக் கட்சியின் தான்தோன்றித்தனமான முடிவுகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுக்குக் காரணமாகும்.

சுமந்திரனின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே தற்போதைய பாரிய பின்னடைவுக்குக் காரணம்.

எனவே, கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியும் கொறடா பதவியும் ரெலோ மற்றும் புளொட்டுக்குத் தரப்படாமல் மீளவும் சுமந்திரனுக்கு, சிறிதரனுக்கும் வழங்கப்படுமாக இருந்தால் இரண்டு கட்சிகளும் (ரெலோ, புளொட்) நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கவோ அல்லது விக்கி னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார்
அணிகளுடன் இணையவோ வாய்ப்புள்ளது – என்றனர்.

‘1000 ரூபாவுக்காக மூன்றிலிரண்டு பலத்தை பயன்படுத்துங்கள்’ – அரவிந்தகுமார்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை முன்னெடுக்கவேண்டும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெறும் இடைக்கால கணக்கறிக்கைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி தேர்தலின்போது இரு பிரதான கட்சிகளும் உறுதியளித்தன. தற்போது தேர்தல் முடிவடைந்துவிட்டது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசாங்கமும் வந்துள்ளது. ஆனாலும் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு இன்னும் வழங்கப்படவில்லை. இது வேதனைக்குரிய விடயமாகும்.

பொதுத்தேர்தல் ஊடாக ஜனாதிபதியின் கரம் பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும்.” -எனவும் அரவிந்தகுமார் வலியுறுத்தினார்.

மலையகத்தில் தனி வீடுதான் கட்டுவோம் – சபையில் ரமேஷ் உறுதி

மலையகத்தில் தனி வீட்டுத்திட்டத்தையே  நாம் முன்னெடுப்போம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

“மாடி வீட்டுத் திட்டத்தை கொண்டுவரும் எண்ணம் எமக்கு இல்லை. கொங்றீட் வீடுகளைதான் கொண்டுவரவுள்ளோம்.

அதேபோன்று உதவி ஆசிரியர்களை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஆசிரியர் சேவையில் உள்வாங்கியிருக்க வேண்டும். அதனை செய்யாத குறையால்தான் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் நாம் கூறியவற்றை மக்களுக்கு நிச்சயம் செய்வோம்.” -என்றார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அறிவிப்புக்கு டயலொக் வரவேற்பு

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் ( TRCSL) அறிவித்தலைத் தொடர்ந்து, சர்வதே சரீதியில் நடைமுறையில் உள்ள வாடிக்கையாளர்கள் தேர்வுசெய்யும் சிறந்த பயிற்சியான எண்பெயர்வுத்திறன் (Number portability) செயல்படுத்தலினை இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசி ஆட்டாபி எல்சி (டயலொக்) வரவேற்கின்றது.

மொபைல் மற்றும் நிலையான தொலைபேசி இலக்கங்களில் போட்டியிடும் சேவைவழங்குனர்களிடையே மாற்றுவதற்கு உதவும் எண்பெயர்வுத்திறன் (Number portability) என்பது சர்வதேச அளவில் பரவலாக நடைமுறையில் உள்ள ஒருவாடிக்கையாளர் வசதியாக காணப்படுவதுடன் தாராளமயமாக்கப்பட்ட தொலைத்தொடர்பு சந்தையின் முக்கிய அம்சமாகும்.

எண் பெயர்வுத்திறன் உள்ளிட்ட வாடிக்கையாளர் தேர்வு சிக்கல்களைத் தணிக் கடயலொக் முதன் முதலில் 2008 ஜூலை மாதத்தில் அதற்கான தீர்வுகளை முன்மொழிந்தது. நிறுவனம் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர் தேர்வை அதிகரிப்பதன் மூலம் தொழில்துறையின் மேம்பாட்டினை ஒட்டு மொத்தமாக அனைத்து சேவை வழங்குனர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும் நன்மைகளைத்தரும் என்ற முன்னுதாரணம் தொடர்கிறது

15 மில்லியனுக்கும் அதிகமான இலங்கை வாடிக்கையாளர்கள், வர்த்தக நாமத்திலும் அதன் சேவைகளிலும் வைத்திருக்கும் நம்பிக்கையால் டயலொக் என்றும் கௌரவப்படுகின்றது.

எங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பப்படி நாங்கள் செயல்படாவிட்டால் நிறுவனத்தின் வெற்றியும் வளர்ச்சியும் சாத்தியமற்றதாகியிருக்கும். திறந்த போட்டி மற்றும் வாடிக்கையாளர் தேர்வு ஆகியவையே எங்கள் வெற்றிக்கு மூல காரணமாகும் அதுவே எங்கள் மரியாதையுமாகும்.

மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மேம்பட்ட வசதிகளின் தொகுப்பை மட்டுமல்லாமல், சிறந்தவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கான வாடிக்கையாளர் சுதந்திரத்திற்கும் உதவுகின்றன” என்று டயலொக்ஆசி ஆட்டாபி எல்சியின் இயக்குனர்/குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன்வீரசிங்ஹ தெரிவித்தார்.

டயலொக், மொபைல் துறையில் 4 வது இடத்தில் இலங்கையின் தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்தது. இலங்கை நுகர்வோர் 2000 ஆம் ஆண்டில் மொபைல் சந்தையின் உச்சத்திற்கு டயலொக் இனை உயர்த்தினார்கள். அதன் பின்னர் நிறுவனம் மொபைல், நிலையான தொலைபேசி இணைப்பு, அதிவேக பிராட்பேண்ட் மற்றும் தொலைக்காட்சி சேவையில் இலங்கையின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த இணைப்பு வழங்குனராகவளர்ந்துள்ளது.

ஸ்லீம் – நீல்சன் மக்கள் விருதுகளில் இந்நிறுவனம் இலங்கை மக்களால் முதற்தர தொலைத் தொடர்பு சேவை வழங்குனராகவும் மற்றும் இணைய சேவை வழங்குனராகவும் 9 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வாக்களிக்கப்பட்டது.

சேவைகளின் மலிவு, தரம்,தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட வசதிகள் ஆகியவற்றிற்காக இலங்கையின் தொலைத்தொடர்பு சந்தை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், வலையமைப்புகள் முழுவதும் மொபைல் மற்றும் நிலையான இலக்கங்களின் பெயர்வுத்திறனை செயல்படுத்துவது இன்றுவரை செயல்படுத்தப்படவில்லை.

“தொழில்துறை தாராளமயமாக்கலுக்காக ஒழுங்குமுறை ஆணைக்குழுமேற்கொள்ளும் அடுத்தக்கட்டபடி முறைகளுக்கு பார்த்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். மற்றும் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் இலங்கையில் எண்பெயர்வுத்திறன் அமல்படுத்தும் நிகழ்முறை தொடக்கதிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஒழுங்குமுறை ஆணைக்குழு இதேபோன்ற ஏனைய வாடிக்கையாளர்களின் தேர்வு சம்பந்தமான விடயங்களுக்கும் விரைவாக செயற்படும் என்று டயலொக் நம்பிக்கையுடன் உள்ளது ”என்று வீரசிங்க மேலும்தெரிவித்தார்.

இலங்கையின்தொலைதொடர்புஉட்கட்டமைப்புமேம்பாட்டில்இயக்கப்பட்ட 2.7 பில்லியன் அமெரிக்கடாலர் மொத்த முதலீட்டில் இலங்கையின் மிகப் பெரிய அன்னிய நேரடி முதலீடு என்ற பெருமையையும் டயலொக் மற்றும் அதன் முதன்மை பங்குதாரர் ஆசி ஆட்டாகு ழுமமும் பெற்றுக்கொள்கின்றது.

‘பெருந்தோட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்தால் குறைவு’

தனியாருக்குச் சொந்தமான 23 பெருந்தோட்டக் கம்பனிகளில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, கடந்த ஒன்பது வருடங்களில், 68 ஆயிரத்தால் குறைந்திருப்பது, தகவலறியும் உரிமைச் சட்டத்தினூடாகத் தெரியவந்துள்ளது.

தேயிலை, தென்னை, இறப்பர் ஆகிய பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில், தனியாருக்குச் சொந்தமான 23 பெருந்தோட்டக்கம்பனிகள் ஈடுபடுகின்றன.

இந்தக் கம்பனிகளில்பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் காணப்பட்ட பெருந்தோட்டக் கைத்தொழில், ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சிடம், 2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI) தகவல்கள் கோரப்பட்டிருந்தன.

தமிழ் மொழியில் தகவல்கள் கோரப்பட்டிருந்த போதிலும், ஆங்கில மொழியில் வழங்கப்பட்டிருக்கும் பதில்களிலேயே, பெருந்தோட்டத் துறையில், கடந்த ஒன்பது வருடங்களில், சுமார் 68 ஆயிரம் தொ ழிலாள ர்கள் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

அத்துடன், சிலாபம், குருநாகல் ஆகிய இரு பெருந்தோட்டக்கம்பனிகள், தேயிலை உற்பத்தியில் ஈடுபடவில்லை என்றும் அக்கரபத்தன, சிலாபம் ஆகிய இரு பெருந்தோட்டக் கம்பனிகள், இறப்பர் உற்பத்தியில் ஈடுபடவில்லை என்றும், RTI பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கரபத்தன, மத்துரட்ட, மடுல்சீம ஆகிய மூன்று பெருந்தோட்டக் கம்பனிகளும், தென்னை பயிர்ச்செய்கையில் ஈடுபடவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, 23 பெருந்தோட்டக் கம்பனிகளிலும், கடந்த 2009ஆம் ஆண்டில் இரண்டு இலட்சத்து 439 தொழிலாளர்கள் பணிபுரிந்துள்ளதோடு, 2018ஆம் ஆண்டு வரையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், 2018 ஆம் ஆண்டில், வெறும் ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 445 தொழிலாளர்களே பணிபுரிகிறார்கள்.

இதனடிப்படையில், கடந்த ஒன்பது வருடங்களில், சுமார் 68 ஆயிரம் தொழிலாளர்கள் குறைந்திருக்கிறார்கள் என்பது, RTI பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பா.நிரோஷ்

நன்றி தமிழ்மிரர்

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 11 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில்  மேலும் 11 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,830 ஆக அதிகரித்துள்ளது.

142 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கண்ணாம்மூச்சு விளையாடுகிறாரா வடகொரிய ஜனாதிபதி?

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒரு சூறாவளியால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்கு தயார் நிலையில் இருக்குமாறு கிம் ஜாங்-உன் வட கொரிய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் தீவிர மன அழுத்தம் காரணமாக தன்னுடைய பொறுப்புகள் சிலவற்றை சகோதரியிடம் ஒப்படைத்துள்ளதாக செய்தி வெளியானது.

அதைத் தொடர்ந்து தென் கொரியாவின் மறைந்த ஜனாதிபதி கிம் டே ஜாங் முன்னாள் உதவியாளரான ஜாங் சாங் மின் வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருக்கிறார். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறாரா என்பது குறித்து உறுதியாக கூற முடியவில்லை என்று கூறினார்.

இதையடுத்து தற்போது அவர் இறந்திருக்கலாம் என்ற ஊகங்கள் மீண்டும் எழுந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு இப்படி தான் பொது வெளியில் கிம் ஜாங் உன் தென்படாததால், அவர் இறந்துவிட்டார் என்று செய்தி வெளியானது.

இந்த நிலையில் ஒரு கட்சி கூட்டத்தில் திடீர் என தோன்றிய கிம் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒரு சூறாவளியால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்கு தயார் நிலையில் இருக்குமாறு கிம் ஜாங்-உன் வட கொரிய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவை எதிர்கொள்ளும் வட கொரியாவின் நடவடிக்கையில் குறைபாடு இருப்பதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்-உன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுவரை ஒரு கொரோனா வழக்கு கூட தங்கள் நாட்டில் பதிவாகவில்லை என வட கொரியா கூறிவருகிறது, இருப்பினும் இது கண்காணிப்பாளர்களால் சந்தேகிக்கப்படுகிறது.

நாட்டில் நோய்த்தொற்றுகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் நீண்ட காலமாக வலியுறுத்தினாலும், அரசு ஊடகங்கள் பல வாரங்களாக அதுபோன்ற செய்தியை மீண்டும் வெளியிடவில்லை.

ஏற்கனவே வறுமையில் வாடும் வட கொரியாவில் வைரஸின் பெரிய பரவல் பேரழிவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில், ‘பவி’ சூறாவளி இந்த வார இறுதியில் நாட்டைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ‘பவி’ சூறாவளி ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு கிம் ஜாங்-உன் வட கொரிய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

செவ்வாயன்று நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய கிம், வீரியம் மிக்க வைரஸ் “குறித்த நாட்டின் அணுகுமுறையில் சில குறைபாடுகள் இருந்ததாக ஒப்புக் கொண்டார், ஆனால் குறைபாடுகள் குறித்த எந்த விவரமும் வழங்கவில்லை என அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இரு கப்பல்களை சிறைபிடித்தது ஈரான்!

0
ஹார்முஸ் நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. முறையான அனுமதியின்றி இயங்கியது மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, இந்த அதிரடி நடவடிக்கையை ஈரான் கடற்படை...

காவத்தை சம்பவம் மிலேச்சத்தனம்: திகா கண்டனம்!

0
காவத்தை சம்பவம் மிலேச்சத்தனமானது என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

டித்வா சூறாவளி: இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு...