Home Blog Page 3886

மத்திய மாகாண பாடசாலைகளில் பயனற்ற நிலையில் சூரிய மின்சக்தி கட்டமைப்புகள்

மத்திய மாகாணத்தில் தமிழ், சிங்கள மொழி மூலமான பல பாடசாலைகளுக்கு தொண்டர் நிறுவனங்களால் சூரிய மின்சக்தி கட்டமைப்புகள் வழங்கப்பட்டன. பெரும் தொகை பணச்செலவில் இவை இலவசமாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.சூரிய மின்சக்தியில் இயங்கக் கூடிய தொலைக்காட்சிகள், கணினி மற்றும் மின்சார உபகரணங்களும் வழங்கப்பட்டது.

பாடசாலைகளுக்கும் அதிபர், ஆசிரியர் விடுதிகளுக்கும் சூரிய மின்சக்தி கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

இவற்றுக்குத் தேவையான மின்சுற்றுகள் தரமானதாக அமைக்கப்பட்டன. சூரிய மின்சக்தியை சேமிக்கக் கூடிய பெருமதியானதும் மின்கொள்ளவு அதிகமுடையதுமான மின்சேமிப்பு பற்றரிகளும் பொருத்தப்பட்டிருந்தன. கடும் மழை காலத்திலும் சூரியமின்சக்தி கிடைக்கக் கூடியதான அதிசக்தி மிக்க கட்டமைப்புகள் பொருத்தப்பட்டு பல வருடங்கள் சிறந்த பாவனையும் இருந்து வந்தது.

இக்காலப் பகுதியில் மினசாரத்திக்கான செலவு இருக்கவில்லை. பாடசாலைக்கோ அரசுக்கோ மின்சாரச் செலவு இருக்கவில்லை. அதிபர், ஆசிரியர் விடுதிகளில் தங்கி இருந்தவர்களுக்கும் மின்சாரத்திற்கான செலவு சிறிதேனும் இருக்கவில்லை. மின்துன்டிப்பின் போதும் இவர்களுக்கு எதுவிதமான பாதிப்பும் இருக்கவில்லை. இன்று இந்த சூரியமின்சார கட்டமைப்புகள் பயனற்று செயலிழந்து போய்க் கிடக்கின்றன.

சூரியமின்சக்தி கட்டமைப்பின் பிரதான அங்கமாக காணப்படும் தட்டுகள் தாழ்வாக நிலத்தில் பொருத்தப்பட்டமையால் ஆடுகள், நாய்கள் போன்ற விலங்குகள் இவற்றின் மீது ஏறுவதால் இந்ந தகடுகள் உடைந்து பாதிப்படைந்துள்ளன. சிறுவர்கள் இவற்றின் மீது ஏறி விளையாடியும் இவை பாதிப்புகளுக்கு உள்ளாகின.

கஷ்டப் பகுதி பாடசாலைகளுக்கே இந்த சூரியமின்சக்தி கட்டமைப்புகள் வழங்கப்பட்டன.இவ்வாறான பாடசாலைகளில் பாடசாலை வளவுக்கான வேலி இன்மையால் இவற்றை பாதுகாக்க முடியாது போனது.இந்த சூரிய மின்கட்டமைப்புகளை சீர்செய்தால் மீண்டும் பாவனைக்கு கொண்டு வர முடியும்.

நிருபர் – ஆர்.நவராஜா

பொகவந்தலாவையில் 82 வயது பாட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட கீழ்பிரிவு தோட்டத்தில், 82 வயதுடைய வயோதி பெண்ணொருவர் நேற்றிரவு முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.

பி. சின்னம்மா என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

” கடந்த 45 வருடங்களாக வாழ்ந்து வந்த வீட்டை விட்டு
வெளியேருமாறு எனது மருமகன் அச்சுறுத்துகிறார். இதற்கு தோட்ட தலைவரும், நிர்வாகமும் துணைநிற்கின்றது. என்னால் வெளியேற முடியாது. நீதி வேண்டும்.” என அவர் குறிப்பிடுகின்றார்.

இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்திடம் வினவியபோது, இவ்விவகாரம் தொடர்பில் இன்று கலந்துரையாடப்படும் என குறிப்பிட்டார்.

பொகவந்தலாவ நிருபர் -சதீஸ்

700 விக்கெட்டுகளை வீழ்த்துவேன் – ஆண்டர்சன் சபதம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னால் 700 விக்கெட் வீழ்த்த முடியும் என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

சவுதம்டனில் நடந்த இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிந்தது. இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த போதிலும் மழை புகுந்து கெடுத்து விட்டது. தொடரை 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

இந்த டெஸ்டின் கடைசி நாளில் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலியின் விக்கெட்டை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாய்த்தார். இது ஆண்டர்சனின் 600ஆவது (156 டெஸ்ட்) விக்கெட்டாகும்.

இதன் மூலம் இலங்கையின் முரளிதரன் (800 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் சேன் வோன்  (708 விக்கெட்), இந்தியாவின் கும்பிளே (619 விக்கெட்) ஆகியோருக்கு பிறகு 600 விக்கெட் மைல்கல்லை எட்டிய 4ஆவது பந்துவீச்சாளர் , வேகப்பந்து வீச்சாளர்களில் இச்சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற சிறப்பை ஆண்டர்சன் பெற்றார்.

சாதனைக்கு பிறகு பேட்டி அளித்த 38 வயதான ஆண்டர்சன் கூறுகையில்,

‘டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிடம் சிறிது நேரம் விவாதித்தேன். ஆஸ்திரேலியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டியின் போது (2021-22-ம் ஆண்டு ஆஷஸ் தொடர்) நான் அணியில் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். அதில் என்னால் ஏன் விளையாட முடியாது? உடல்தகுதியை சீரியமுறையில் பராமரிக்கவும், ஆட்டத்திறனை மேம்படுத்தவும் கடினமாக உழைக்கிறேன். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு அணித்தேர்வுக்கு தயாராக இருப்பேன்.

இங்கிலாந்து அணிக்கு இன்னும் என்னால் நிறைய பங்களிப்பு அளிக்க முடியும் என்று நம்புகிறேன். இங்கிலாந்து அணிக்காக எனது கடைசி டெஸ்ட் போட்டி வெற்றியை பெற்று விட்டதாக நினைக்கவில்லை. என்னால் 700 விக்கெட் இலக்கை எட்ட முடியுமா? என்றால் ஏன் முடியாது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பில் நாங்கள் நீடிக்கிறோம். எங்களுக்கு நிறைய டெஸ்ட் போட்டிகள் வர உள்ளன. அதில் நாங்கள் வெற்றி பெற வேண்டும். அதுவே எனது ஆர்வமாக இருக்கிறது. இப்போதும் ஒவ்வொரு நாளும் பயிற்சியில் ஈடுபடுவதை விரும்புகிறேன்’ என்றார்.

எங்கள் பக்கம் வாருங்கள் – கருவுக்கு சஜித் அழைப்பு

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பிரிவினர், கரு ஜயசூரியாவுக்கு எதிராக கடுமையாகவிமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையிலேயே, சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

19 ஐ பாதுகாக்க படை திரட்டுகிறது சஜித அணி – நாளை முக்கிய கூட்டம்!

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்கும் அரசியல் சமரை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி நாளை (28) மாலை 3 மணிக்கு கொழும்பில் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளது.

இச்சந்திப்பில் பங்கேற்குமாறு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்க தலைவர்கள், புத்திஜீவிகள் உட்பட ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்கும் தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாச தலைமையிலேயே இக்கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ராஜித சேனாரத்ன மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சி காலம் அதன்பின்னர் 1978 இல் ஜே.ஆர். ஆட்சி ஆகியவற்றின்போது கட்சியையும், ஆட்சி அதிகாரத்தையும் முன்னிலைப்படுத்தியே அரசியலமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்நிலைமை நல்லாட்சியின்போதே மாற்றப்பட்டது.

மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பங்களிப்புடன் 19ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதன்மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் சர்வாதிகார அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. உயர் நியமனங்களை வழங்கும் பொறுப்பு அரசியலமைப்பு சபைக்கு வழங்கப்பட்டது. சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. இவை பாதுகாக்கப்படவேண்டும்.

எனவே, 19 இல் ஏதேனும் குறைப்பாடுகள் இருப்பின் கலந்துரையாடலின் பின்னர் அவற்றை மாற்றியமைக்கலாம். ஆனால் நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய சரத்துகளை நீக்குவதற்கு இடமளிக்ககூடாது. அதனை பாதுகாப்பதற்காக மக்களை அணிதிரட்டி நாம் போராடுவோம். அதன் ஆரம்பகட்டமாக 28 ஆம் திகதி சஜித் பிரேமதாச தலைமையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது” – என்றார்.

செப்டம்பர் 3 ஆம் திகதி அமைச்சரவையில் ’20’ முன்வைப்பு!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் செப்டம்பர் 3 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போதே நீதி அமைச்சர் அலிசப்ரி மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமைப்பதற்காகவே 20 முன்வைக்கப்படவுள்ளது.

19 ஐ பாதுகாக்க மக்களை அணிதிரட்டும் ஐக்கிய மக்கள் சக்தி!

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” பல தியாகங்களுக்கு மத்தியிலேயே 19 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவை பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

எனவே, குறித்த சட்டத்தில் ஏதேனும் குறைப்பாடு இருந்தால் அதனை மாற்றியமைக்கலாம். மாறாக 19 ஐ முழுமையாக நீக்குவதற்கு இடமளிக்கமுடியாது. 19 ஐ பாதுகாப்பதற்காக மக்களை அணிதிரட்டி போராடுவோம்.

தகவல் அறியும் சட்டம், சுயாதீன ஆணைக்குழுக்கள் என்பன தொடரவேண்டும்.” – என்றும் ராஜித கூறினார்.

எஸ்.பி.பியின் உடல்நிலை சீராக உள்ளது – வெளியானது மருத்துவ அறிக்கை

பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் நிலை சீராக உள்ளது என்று வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 15 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி பொருத்தி, டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள்.

அதையடுத்து வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையும் கேட்கப்பட்டது. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று மாலை எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில், பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் நிலை சீராக உள்ளது. தொடர்ந்து எக்கோ மற்றும் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எஸ்.பி.பி. சரண் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

பாடல்களை கேட்கிறார், பாட முயற்சிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட இன்று எஸ்.பி.பி. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுவதுமாக உடல்நலம் தேறுவார் என எதிர்பார்க்கிறோம் என்று எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.

கோப் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழு (Cope), அரச கணக்குகுழு (Copa) ஆகியவற்றில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரிக்கப்படவுள்ளது.

இவ்விரு குழுக்களிலும் ஆளுங்கட்சியின் சார்பில் 10 பேரும், எதிரணிகளின் சார்பில் அறுவருமாக மொத்தம் 16 பேர் அங்கம் வகித்தனர்.

இந்நிலையில் ஆளுங்கட்சியின் சார்பில் மேலும் ஐவரையும், எதிரணிகளின் சார்பில் மேலும் மூவரையும் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேற்படி குழுக்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

9 ஆவது நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வின்போது மேற்படி குழுக்களுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவ்விரு குழுக்களினதும் தலைமைப்பதவி எதிரணிக்கு அவசியம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின்போது கோப் குழுவின் தலைவராக சுனில் ஹந்துனெத்தி செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுத்தையால் தோட்ட தொழிலாளிக்கு ஏற்பட்ட கதி….!

சிறுத்தைப்புலியொன்று மரத்திலிருந்து கீழே பாய்வதைக்கண்டு அச்சத்தால் ஓட்டமெடுத்த இரு பெண் தோட்டத் தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.

பொகவந்தலாவை கிவ்தோட்ட பகுதியிலுள்ள 05 ஆம் இலக்க தேயிலை மலையிலேயே இன்று (26) முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழுந்து கொய்துகொண்டிருக்கையில் மரமொன்றிலிருந்து சிறுத்தைப்புலியொன்று கீழே பாய்வதை கண்ட தொழிலாளர், பதறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளார். பின்னர் தடுமாறி விழுந்தால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

இப்பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் காணப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் தேடுதலில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

காவத்தை சம்பவம் மிலேச்சத்தனம்: திகா கண்டனம்!

0
காவத்தை சம்பவம் மிலேச்சத்தனமானது என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

டித்வா சூறாவளி: இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு...

காவத்தையில் காடையர் கும்பல் அடாவடி: இதொகா தலைவர் கண்டனம்!

0
இரத்தினபுரி காவத்தை நீலகாமம் இல 1 தோட்டத்தில் தோட்ட தொழிலாளியால் அமைக்கப்பட்ட வீடு ஒன்றை காடையர்கள் உடைத்து தரைமட்டம் ஆக்கியமைக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். தோட்டங்களில் பாதுகாப்பு கடமைகளுக்கு...