Home Blog Page 3887

சம்பந்தனுக்கு திடீர் சுகயீனம் – கூட்டமைப்பின் கூட்டம் ஒத்திவைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் திடீர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், கொறடா தொடர்பான பதவிகள் குறித்த இறுதித் தீர்மானம் குறித்த அறிவிப்பு என்ன? என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாளையும் நாளைமறுதினமும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. குறித்த கூட்டத்தில் சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அவை அறிக்கப்படும் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் இரா.சம்பந்தனுக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நிலை பாதிப்பால் குறித்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது” – என்றார்.

1,747 பில்லியன் ரூபா நிதி அறிக்கை – சபையில் நாளை விவாதம்

பாராளுமன்றம் நாளை முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

அடுத்த நான்கு மாதங்களுக்கு அரச செலவீனங்களை ஈடுசெய்வதற்காக 1747.68 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கைமீது விவாதம் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 6.30 மணிவரை விவாதம் தொடரும்.

மறுநாள் 28 ஆம் திகதியும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை இடைக்கால கணக்கறிக்கைமீதான விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால கணக்கறிக்கை அண்மையில் பாராளுமன்ற செயலகத்தில் கையளிக்கப்பட்டு ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கஹவத்தையில் குடிநீரின்றி தவிக்கும் 150 குடும்பங்கள்

கஹவத்தை ஒபாத இரண்டாம் பிரிவு தோட்டப் பகுதியில் வசிக்கும் 150 குடும்பங்கள் குடிநீர் வசதியின்மையால் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

இப்பகுதியில் நீரினை சேகரித்து வைத்து அமைக்கப்பட்ட இரண்டு நீர்த்தாங்கிகளும் பழுதடைந்துள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டினர்.

கொடக்கவெல பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இப் பிரதேசத்தில் உள்ள நீர் ஊற்றினால் நீரினை பெற்றுக்கொள்ள சுமார் இரண்டு , மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

ஓபாத இரண்டாம் இலக்க பிரிவில் அமைந்துள்ள தமிழ் பாடசாலையில் சுமார் 49 மாணவ மாணவிகள் கல்விகற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான குடிநீரை பெற்றுக்கொள்ள நீரூற்றை தேடி 200 மீற்றர் தூரம் பயணிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. அதேசமயம் கிராம மக்களும், பாடசாலை மாணவர்களும் இந்த நீரூற்றின் அருகில் குடிநீரைப் பெறுவதற்காக வரிசையில் நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்த நீரூற்று சாக்கடை வழியாக ஓடுவதால் சுத்தமான தன்மை குறைவாக உள்ளதாகவும் இதற்கு மாற்று வழியாக நீரினை சேகரிக்கும் நீர்த்தாங்கியினை புனரமைத்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நீரூற்றின் மூலம் தேவையான நீர் குழாய்களைப் பொருத்தி பாடசாலைக்கும் கிராமத்திற்கும் நீரினைப் பெற்றுத் தருமாறும் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பசறையில் ஹெரோயினுடன் நால்வர் கைது!

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை- செங்கலடி வீதியின் 13 ஆம் கட்டை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் பசறை பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் அதிகாரி அஞ்சுல இஷார குமார தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று  (25)இரவு இடம்பெற்றுள்ளது.

பசறை பொலிஸாருக்கு கிடைத்துள்ள இரகசிய தகவலொன்றை அடிப்படையாக வைத்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போதே மேற்படி சந்தேக நபர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை பதுளை மஜிஸ்ட்ரேட் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.பசறை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

டும்…டும்…டும் எப்போது?

நயன்தாராவுடன் திருமணம் எப்போது? என்பது குறித்து டைரக்டர் விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன்பிறகு வெளிநாடுகளிலும், கோவில்களிலும் ஜோடியாக சுற்றி புகைப்படங்களை வலைத்தளத்தில் பகிர்ந்து காதலை வலுப்படுத்தி வந்தனர்.

இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பின. இதுகுறித்து விக்னேஷ் சிவன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

“எனக்கும், நயன்தாராவுக்கும் இணையதளத்தில் மட்டும் 22 தடவை கல்யாணம் செய்து வைத்து விட்டனர். மூன்று மாதத்துக்கு ஒரு முறை இந்த திருமண வைபவம் நடக்கும். எங்களுக்கு சில நோக்கங்கள் இருக்கிறது.

அதை முடித்து விட்டுத்தான் சொந்த வாழ்க்கைக்கு வரவேண்டும் என்று நினைத்துள்ளோம். இப்போது எங்கள் முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. காதல் போரடிக்கும்போது திருமணம் செய்து கொள்ளலாம். அந்த நேரம் வரும்போது எல்லோருக்கும் தெரியப்படுத்துவோம். நயன்தாரா தனது படங்களை விளம்பரப்படுத்துவது இல்லை என்று பேசுகிறார்கள்.

அஜித்குமார் ஒரு முறை நல்ல படங்களுக்கு விளம்பரம் தேவை இல்லை என்று சொல்லி இருப்பார். நீங்கள் வேலையை ஆரம்பித்து விட்டால் பேசுவதை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக படம் பேசவேண்டும் என்ற உணர்வுக்கு வந்து விடுவீர்கள். நயன்தாரா கடின உழைப்பாளி. வேலையில் நேர்மையாக இருப்பார்.”

இவ்வாறு விக்னேஷ் சிவன் கூறினார்.

ஆப்பிரிக்காவில் போலியோ வைரஸ் முடிவுக்குவந்துவிட்டது!

ஆப்ரிக்காவில் போலியோ வைரஸ் நோய் முற்றிலும் முடிவுக்கு வந்து விட்டதாகவும், அங்கு போலியோ வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

போலியோ என்னும் இளம் பிள்ளைவாத நோய் 1952 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் இந்த போலியோ வைரஸ் நோயால் இளம் வயதிலேயே முடக்குவாதம்  ஏற்படுகிறது. இந்த நோய் பாதிக்கப்படும் குழந்தைகள் வளர்ச்சி குறைவாகவும், பிற்காலங்களில் ஊனமுற்ற நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.

இந்த நோய்க்கு தடுப்பூசி 1955 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி போலியோ சொட்டு மருந்தாக உலகின் பல நாடுகள் வழங்கி வருகின்றன. இந்த சொட்டு மருந்தால் போலியோ நோய் உலகின் பல நாடுகளில் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், உலகிலேயே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆப்ரிக்காவின் சில நாடுகளில் மட்டும் போலியோ ஒழிக்கப்படாமல் இருந்தது. இங்கு போலியோ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

ஆப்ரிக்க நாடுகளில் நைஜீரியாவில் மட்டும் போலியோ நோய் கண்டறியப்பட்டு வந்தது. அங்கு மருத்துவத்துறையினருடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு மற்றும் உள்நாட்டு அரசு, தன்னார்வளர்கள் என பலத்தரப்பட்ட துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் தற்போது போலியோ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்ரிக்காவில் போலியோ கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவும், போலியோ இல்லாத பகுதியாக ஆப்ரிக்கா மாறிவிட்டதாகவும் உலக சுகாதார அமைப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அங்கு யாருக்கும் போலியோ பரவவில்லை என்பதால் ஆப்ரிக்காவில் போலியோ முடிவுக்கு வந்துவிட்டது என்ற இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகிலேயே தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் மட்டும்தான் போலியோ நோய் பரவல் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர்! குவியும் பாராட்டுகள்

டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்து வீர‌ர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்தார்.

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்ப்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அதிகமான விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். பந்தை ஸ்விங் செய்வதில் மன்னன் ஆவார்.

இந்தநிலையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் சௌதாம்படனில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தின் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 599 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் ஆண்டர்சன்.

இந்நிலையில், நேற்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. மழை காரணமாக நீண்ட நேரத்துக்குப் பிறகே,  ஆட்டம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, 31 ரன்கள் எடுத்திருந்த அசார் அலியை ஆண்டர்சன் வீழ்த்தினார். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்து வீர‌ர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில், முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்ன் (708) மற்றும் அனில் கும்ப்ளே (619) ஆகியோருக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தில் ஆண்டர்சன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டர்சனுக்கு விளையாட்டு வீரர்களும், பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

இன்னும் 80 ஆண்டுகளில் இலங்கையின் சனத்தொகை – வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

இலங்கையின் சனத்தொகை தற்போதுள்ள எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு நோக்கும் போது 2100ஆம் ஆண்டளவில் அதாவது இன்னமும் 80 ஆண்டுகளில் சரிபாதியாக குறைவடைந்தவிடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இலங்கையின் குழந்தைகள் பிறப்புவீதம், இறப்பு எண்ணிக்கை, குடிப் பெயர்வு மற்றும் சனத்தொகையில் தாக்கம் ண்தக்கூடிய ஏனைய காரணிகள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு 195 நாடுகளில் நடத்தப்பட்ட உலகளாவிய ஆய்வின் நிறைவில் தி லான்செற் “the Lancet”என்ற முன்னணி ஜேர்னல் இதழ் இந்த எதிர்வுகூறலை விடுத்துள்ளது.

இந்த ஆய்விற்கமைய 2100 ஆம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகை 10.45 மில்லியன்களாக அதாவது ஒரு கோடியே 4 லட்சத்து 50 ஆயிரமாக குறைவடையும் என்ற அதிர்ச்சியளிக்கும் எதிர்வுகூறல் வெளியாகியுள்ளது.

2017ஆம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகை 21.60 மில்லியன்களாக அதாவது இரண்டு கோடியே 6 லட்சமாக காணப்பட்டது. 2031ம் ஆண்டளவில் இலங்கையின் சனத்தொகை அதிக பட்சமான உச்சத்தை தொடும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளதுடன் அப்போது 22.34 மில்லியன்களாக அதாவது இரண்டு கோடியே 3 லட்சத்து 40 ஆயிரமாக காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் படி 2017ஆம் ஆண்டில் இலங்கையிலுள்ள பெண்ணொருவர் சராசரியாக பெற்றெடுத்துள்ள பிள்ளைகளின் அளவு 1.80 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை 80 ஆண்டுகளில் 1.46 ஆக குறைவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார பரிந்துரைகளின் குழந்தைகள் பிறப்பு வீதம் 2.1 என்ற சராசரி எண்ணிக்கையை காணப்படின் அந் நாட்டின் சனத்தொகை வீழ்ச்சிகாணும் என தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி – Globetamil

முழுமையான அறிக்கையை வாசிக்க

Full report: https://www.thelancet.com/article/S0140-6736(20)30677-2/fulltext

3 மணிநேரம் முகாமிட்டு பேச்சு நடத்தியும் முடிவின்றி முடிந்த கூட்டம்!

மூன்று மணிநேரம் சிறிகொத்தவில் முகாமிட்டு பேச்சு நடத்தியபோதிலும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படாமல் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று சிறிகொத்தவில் கூடியது.

தலைமைப்பதவி உட்பட கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கை, தேசிய பட்டியல் ஆசனத்துக்கான உறுப்பினர் நியமனம், கரு ஜயசூரியவின் அழைப்பு ஆகியன தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவை எடுக்கும் நோக்கிலேயே செயற்குழு கூட்டப்பட்டிருந்தது.

சுமார் 3 மணிநேரம் இவ்விவகாரம் தொடர்பில் அலசி ஆராய்ந்திருந்தாலும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் செம்டம்பர் முதல் வாரத்துக்கு பின்னரே ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு மீண்டும் கூடவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சபாநாயகர் பதவியை வகிப்பதற்காக கருஜயசூரிய ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகியதால், தலைமைப்பதவியை ஏற்கவேண்டுமென்றால் முதலில் அவர் கட்சி உறுப்புரிமையை பெறவேண்டும் என ஐ.தே.க.வின் சட்ட விவகார செயலாளர் சுட்டிக்காட்டினார்.

தொண்டமானின் மகள் தேர்தலில் போட்டியா? இ.தொ.கா. மறுப்பு

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகளான விஜயலட்சுமி தொண்டமான் போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்று (25) நிராகரித்துள்ளது.

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகள் விஜயலட்சுமி, மத்திய மாகாணத்தில் போட்டியிடவுள்ளார் என ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே அதற்கு மறுப்பு தெரிவித்து இ.தொ.காவால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

” விஜயலட்சுமி தொண்டமானின் அரசியல் பயணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானதாகும். இ.தொ.காவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடும் நோக்கிலேயே இவ்வாறு திட்டமிட்ட அடிப்படையில் போலி தகவல் பரப்பட்டுள்ளது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மாகாணசபைத் தேர்தலுக்கான அறிவித்தல் இன்னும் வெளியாகிவில்லை. அது தொடர்பில் இ.தொ.கா. எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை. எனவே, போலியான தகவல்களை நம்பவேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். உரிய நேரத்தில் – உரிய முடிவுகளை எடுத்து – உரிய வகையில் மக்களுக்கு அறிவிக்கும் அரசியல் இயக்கமே இ.தொ.காவாகும்.” – என்றுள்ளது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

காவத்தையில் காடையர் கும்பல் அடாவடி: இதொகா தலைவர் கண்டனம்!

0
இரத்தினபுரி காவத்தை நீலகாமம் இல 1 தோட்டத்தில் தோட்ட தொழிலாளியால் அமைக்கப்பட்ட வீடு ஒன்றை காடையர்கள் உடைத்து தரைமட்டம் ஆக்கியமைக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். தோட்டங்களில் பாதுகாப்பு கடமைகளுக்கு...

காவத்தை பிரச்சினையை கையிலெடுத்தார் பிரதீப்!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்துக்குள் நுழைந்த ‘கறுப்பு ஆடை கும்பலுக்கு’ எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்தியுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் காவத்தை பொலிஸ்...

மாத்தளை மாவாட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பாடசாலைகளுக்கு உதவிகள்!

0
🙏"மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் மாத்தளை மாவாட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பாடசாலைகளுக்கு உதவிகள் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின்" ஊடாக சித்திரைப் புத்தாண்டின் முதலாவது நிகழ்வாக மாத்தளை கல்வி வலயத்தைச் சேர்ந்த இரண்டு...