Home Blog Page 3888

13 ஐ ஒழிக்க இடமளிக்கமாட்டோம் – ராதா சூளுரை

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கருத்தை ஏற்கமுடியாது. 13 முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடாகும் என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (25) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கையில் மாகாணசபை முறைமையை உருவாக்குவதற்காக 13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனவே, இதுவிடயத்தில் இலங்கையில் தன்னிச்சையாக செயற்படமுடியாது. குறிப்பாக இந்தியாவை பகைத்துக்கொண்டு இதனை நீக்கினால் நெருக்கடிகள் ஏற்படக்கூடும்.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும்போது 13 பிளஸ் எனக்கூறினார். இன்றுகூட அவரோ அல்லது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ 13 ஐ நீக்குவது தொடர்பில் கருத்து வெளியிடவில்லை. தமது வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்வதற்காகவே 13 நீக்கப்படவேண்டும் என சிலர் வலியுறுத்திவருகின்றனர். இதற்கு நாம்இடமளிக்கமாட்டோம்.

வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல நாட்டில் ஏனைய 7 மாகாணங்களிலும் மாகாண சபைகள் இயங்கின. முதல்வர்கள் தெரிவானார்கள். எனவே, மாகாணசபை முறைமையை பலப்படுத்தவேண்டுமே தவிர அதனை பலவீனப்படுத்தக்கூடாது. எவ்வித அதிகார குறைப்பும் இன்றி 13 முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடாகும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இம்மூன்று கட்சிகளும் இணைந்து பயணித்தாலேயே எமக்கான பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ளக்கூடியதாக இருந்து. எனவே, வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் கட்சிகளும் இணைந்து செயற்படவேண்டும்.” – என்றார்.

க.கிசாந்தன்

மாகாண தேர்தலில் தொண்டமானின் மகள் போட்டி?

மாகாணச் சபைத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில், மத்திய மாகாணத்தில் அறுவர் களமிறங்கவுள்ளனர் என்றும் அவர்களில் இருவர் பெண்கள் என்றும், அக்கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று ‘தமிழ்மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் இ.தொ.காகாவின் சார்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களை, மீண்டும் தேர்தலில் களமிறக்குவதா என்பது தொடர்பில் ஆராயப்படுகின்றது.

அத்துடன், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வியான விஜயலக்‌மி மற்றும் இ.தொ.காவின் முக்கியஸ்தர் ஒருவரின் புதல்வியும் இம்முறைத் தேர்தலில் களமிறங்கவுள்ளனர் என்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஊவா மாகாணசபையின்முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் களமிறங்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சிரார்த்த தின நிகழ்வின் பின்னர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தெரிவும் இடம்பெறவுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.

நன்றி – தமிழ்ழிரர் (25.08.2020)

இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து 2,816 பேர் தப்பினர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில்  மேலும் 5 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,816 ஆக அதிகரித்துள்ளது.

131 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட தங்க நாணயங்கள் மீட்பு

மத்திய இஸ்ரேலில் நடந்து வரும் அகழாய்வு ஒன்றில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட 425 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய அரசின் தொடக்கக் காலத்தில் அந்த பகுதி அப்பாஸில் காலிஃபட்டின் ஆட்சியின் கீழ் இருந்த போது பயன்படுத்தப்பட்ட நாணயங்களாக அவை இருக்கலாம் என கருதப்படுகிறது.

845 கிராம் எடை உள்ள அந்த நாணயங்கள் புதைக்கப்பட்ட காலத்தில் பெரும் மதிப்பு உடையதாக இருக்கலாம். அந்த நாணயங்களை கொண்டு காலிஃபட்டின் அட்சியின் கீழ் உள்ள ஒரு நகரத்தில் சொகுசு வீடு ஒன்றை வாங்கி இருக்க முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.

அந்த நாணயங்களுக்கு சொந்தக்காரர்கள் யார்? ஏன் அவர்கள் அதனை புதைத்து வைத்தனர் அல்லது ஏன் அதனை மீண்டும் எடுக்க வரவில்லை என்பது ஒரு புதிராகவே உள்ளது.

1100 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாணயங்களை புதைத்து வைத்த நபர், மீண்டும் எடுக்கும் நோக்கத்துடனே புதைத்து வைத்திருக்கிறார். நாணயங்கள் உள்ள அந்த பாத்திரத்தை ஆணி அடித்து மூடி வைத்திருக்கிறார் என்கிறார் அகழாய்வின் இயக்குநர் லியாட் நடாவ் ஜிவ்.

மாகாண தேர்தலுக்கு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் போர்க்கொடி

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயத்துக்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில்  கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறியவை வருமாறு,

” அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றிலுள்ள சில அதிகாரங்கள் அச்சுறுத்தலானவை. தற்போது அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றபோதிலும் சட்டத்தில் உள்ளன.

எனவே, அவற்றில் திருத்தம் மேற்கொள்ளாது மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றோம். மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தல் உட்பட நாட்டுக்கு தேவையான அரசியலமைப்பொன்றை உருவாக்கிய பின்னரே தேர்தல் நடத்தப்படவேண்டும்.

நாட்டில் இரண்டாண்டுகளாக மாகாணசபைகள் இயங்கவில்லை.இதனால் யாருக்கும் எந்தவித இழப்புகளும் இல்லை. எனவே, புதிய அரசியலமைப்பு இயற்றப்படும்வரை தேர்தலை நடத்தாமல் இருப்பதே சிறப்பு.” – என்றார்.

பதுளையில் 70 வயது முதியவரின் மூக்கிலிருந்து 11 குளவிகள் மீட்பு!

குளவிக் கொட்டுக்கு இலக்காகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபரொருவரின் மூக்கின் ஊடாக பதினொரு குளவிகளை, வைத்தியர்கள் வெளியில் எடுத்தசம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

கலவுட பிரதேசவைத்தியசாலையிலிருந்து மேலதிகசி கிச்சைகளுக்காக குளவிக் கொற்றலுக்கிலக்கான 70 வயதுநிரம்பிய வயோதிபர்,பதுளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.

அந் நிலையில் அவ் வயோதிபர் தீவிரசிகிச்சைப் பிரிவிற்குற்படுத்தி,சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவ்வேளையில், அந் நபரின் மூக்கின் ஊடாகபதினொருகுளவிகள் வெளியில் எடுக்கப்பட்டன. அத்துடன் நூற்றுக் கணக்கானகுளவிகள் கொற்றியதினால் குளவி ஆணிகள் அந் நபரின் உடம்பெங்கும் இருந்ததை,டாக்டர்கள் அகற்றினர்.

(குளவிகள் கொற்றியதும் அதற்கு அறிகுறிகளாக வெள்ளை நிறத்தில் ஆணிகள் உடம்பெங்கும் பதியப்படும். அவ் ஆணிகளேஅகற்றப்பட்டனவாகும்)

மூன்று விசேட வைத்திய நிபுணர்கள், ஆறு தாதிகள் இணைந்துகுளவிக் கொற்றலுக்கு இழக்கானநபரை மூன்று மணித்தியாலங்களாக தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகபதுளைஅரசினர் மருத்துவமனை விசேட வைத்தியநிபுணர் பாலித்த ராஜபக்ச தெரிவித்தார்.

கலவுடையைச் சேர்ந்த சியதோரிஸ் என்ற 70 வயதுநிரம்பியநபர், மூலிகை மருந்தொன்றை எடுக்கவனப் பகுதிக்கு சென்றுள்ளார். அவ்வேளையில் மூலிகை மருந்தை எடுத்தபோதே, குளவிக்கூடொன்று கலைந்து,குளவிகள் அந் நபரைக் கொற்றின.

மஞ்சள் தூள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது சந்தையில் விற்பனையாகும் மஞ்சள் தூள் மனித பாவனைக்கு பொருத்தமற்றது என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் தூள் மாதிரி பெற்றுக்கொண்டு பரிசோதிப்பதற்கு நுகர்வோர் அதிகாகர சபை அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அது தொடர்பான ஆய்வு அறிக்கை தற்போது கிடைத்துள்ளது. அதற்கமைய மஞ்சளில் பல்வேறு நிறங்கள்பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மஞ்சளுக்கு நிறம் பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கு புற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.

புற்றுநோய் மற்றும் ஏற்படவுள்ள ஆபத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளது.

அத்துடன் நுகர்வோருக்கு பொருத்தமற்ற வகையில் மஞ்சள் தயாரிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திலகர், சண்.பிரபாவின் பதவிகள் யாருக்கு? 28 இல் இறுதி முடிவு!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல்குழுக் கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது என அறியமுடிகின்றது.

இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அரசியல்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்துக்கு முன்னர் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளின் தலைவர்களும் எதிர்வரும் 26 ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

புதிய அரசியலமைப்பு, மாகாணசபைத் தேர்தல் உட்பட முற்போக்கு கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றி விரிவாக அலசிஆராயப்படவுள்ளன.

அத்துடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பதவிகளை வகித்த திலகராஜ், சண். பிரபாகரன் போன்றவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர்கள் வகித்த பதவிகளுக்கு புதியவர்களை நியமிப்பது சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

அங்குசத்தை கருவிடம் கையளிப்பாரா ரணில்? அவசரமாக இன்று கூடுகிறது ஐ.தே.க.!

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (25) சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.

கட்சிமறுசீரமைப்பு நடவடிக்கை, தேசியப்பட்டியல் விவகாரம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை ஏற்பதற்கு தயார் என அக்கட்சியின் உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான கருஜயசூரிய நேற்று விசேட அறிக்கை ஊடாக அறிவித்தார்.

இந்நிலையில் கருவின் இந்த அறிவிப்பு தொடர்பிலும் ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

உசைன் போல்டுக்கும் கொரோனா தொற்று

ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து உசைன் போல்ட் தமது டுவிட்டர் பக்கத்தில் காணொளி பதிவென்றை விடுத்துள்ளார்.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்துள்ள உசைன் போல்ட் ஜமைக்காவில் வசித்து வருகிறார். இவர் கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுகளை முன்னெடுத்து வந்தார்.

எனினும் சில தினங்களுக்கு முன் அவர் தன் 34வது பிறந்த நாள் விழாவை கொரோனா விற்கான எவ்வித பாதுகாப்பு நவடிக்கைகளும் முன்னெடுக்காது நண்பர்களுடன் இணைந்து கொண்டாடியிருந்தார். இவரின் இச் செயல்மூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதன் காரணமாக அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

தோட்ட நிர்வாகம் குண்டர் படை அமைக்க இடமளிக்ககூடாது!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு! " கோதாபய ஆட்சியில் இப்படியான பல அராஜக சம்பவங்களை நான் நேரில் போய் நிறுத்தி உள்ளேன். இப்போது அனுர ஆட்சியிலும் அதே ஹெல்மட் குண்டர்கள்...

தோட்ட தொழிலாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய கறுப்பு ஆடை கும்பல்!

0
இரத்தினபுரி காவத்தை நீலகாமம் இல 01 பிரிவில், தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீடு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் 22.04.2026 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தோட்டங்களில் பாதுகாப்பு கடமைகளுக்கு என பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என கூறிக்கொண்டு...

பிரேமலால் ஜயசேகரவுக்கு பிணை: வெளிநாடு செல்லத் தடை!

0
டி.சந்ரு நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நுவரெலியாவில் நபரொருவருக்கு துப்பாக்கி முனையில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக, நுவரெலியா காவல்துறையினரால்...