Home Blog Page 3889

சஜித்துடன் இணைகிறது ஐ.தே.க.! ஆட்டத்தை ஆரம்பித்தார் கரு!!

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி கவனம் செலுத்தியுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியை கருஜயசூரியவிடம் ஒப்படைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க பச்சைக்கொடி காட்டியதையடுத்தே கரு ஜயசூரியவால் இன்று விசேட அறிக்கையொன்று விடுக்கப்பட்டது.

கருவை தலைவராக்கும் திட்டத்துக்கு ஐ.தே.கவுக்கு சார்பான சிவில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

எனவே, விரைவில் ஐ.தே.கவின் தலைமைப்பதவியை கருஜயசூரிய பொறுப்பேற்பார் என நம்பப்படுகின்றது.

கருஜயசூரிய ஐ.தே.க. தலைவரான பின்னர் சஜித் அணியுடன் கூட்டணி அமைக்கப்படவுள்ளது. கூட்டணியின் தலைவராக சஜித்தும், ஐ.தே.கவின் தலைவராக கருவும் செயற்படவுள்ளனர். இரு அணிகளையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.

இதன்படி இரு அணிகளும் தோழமைக்கட்சிகளும் இணைந்து பலமான அணியாக மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளன.

பதுளையில் வைத்தியரை இரும்புக் கம்பியால் தாக்கிய ஊழியருக்கு மறியல்!

பதுளை வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணரொருவரை, இரும்புக் கம்பியினால் தாக்கிய வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிபதியின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 28ஆம் திகதிவரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பதுளை வைத்தியசாலை வளவில் இடம்பெற்ற, மேற்படித் தாக்குதல் சம்பவத்தையடுத்து, பதுளைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட மருத்துவமனை ஊழியர் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சமிந்த கருணாதாச முன்னிலையில், இன்று (24-08-2020) ஆஜர் செய்யப்பட்டார்.

ஆஜர் செய்யப்பட்ட அவ் ஊழியரை எதிர்வரும் 28ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

குறிப்பிட்ட விசேட வைத்திய நிபுணர் தமது வாகனத்தில் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தபோது, அவ் வாகனத்தின் பின்னால் மருத்துவமனை ஊழியர் தமது ஆட்டோவை செலுத்திக் கொண்டு வந்து கொண்டிருந்தார். இவ் ஆட்டோவை வைத்திய நிபுணரின் வாகனத்திற்கு முன்னால் செலுத்த முயற்சித்த போதிலும், அதற்கு வைத்திய நிபுணரின் வாகனம் இடம் கொடுக்கவில்லை.

இதனால், ஆத்திரம் கொண்ட ஆட்டோ சாரதி, தமது ஆட்டோவை, வைத்திய நிபுணரின் வாகனத்துடன் மோதச் செய்தார். இதையடுத்து, மருத்துவமனை வளவில் இருவருக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு,  வாய்த்தர்க்கம் முற்றவே, ஆட்டோவை செலுத்தி வந்த மருத்துவமனை ஊழியர் தமது ஆட்டோவில் இருந்த இரும்புக் கம்பியொன்றினால், வைத்திய நிபுணரை தாக்கியுள்ளார்.

இத்தாக்குதலினால், வைத்திய நிபுணர் கடுங்காயங்களுக்குள்ளாகி, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்விருவருக்குமே வைத்திய நிபுணர், மருத்துவமனை ஊழியர் என்று இனங் கண்டு கொள்ளவில்லையென்பதும், ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
பதுளைப் பொலிசார் இச் சம்பவம் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எம். செல்வராஜா, பதுளை

அங்கஜன், அதாவுல்லாவுக்கு அமைச்சு பதவிகள் – விமல் யோசனை!

அங்கஜனுக்கு அமைச்சுப்பதவியை வழங்கி அவரைப்பலப்படுத்தினால் சம்பந்தன், விக்னேஸ்வரன் போன்றவர்களின் அரசியல் பயணத்தை தோற்கடிக்க கூடியதாக இருக்கும் – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல்வீரவன்ஸ ஆலோசனை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொழும்பில் வாழ்ந்து, ரோயல் கல்லூரியில் பயின்று, பிள்ளைகளை சிங்களவர்களுக்கு மணம் முடித்துவைத்த விக்னேஸ்வரன், பூர்வீகம் பற்றியும், பூர்வீக மொழி குறித்தும் கதைக்கின்றார். இவ்விடயங்களில் அவருக்கு அந்தளவுக்கு பற்று இருக்குமானால் எதற்காக பிள்ளைகளை சிங்களவர்களுக்கு திருமணம் முடித்துவைக்க வேண்டும்? எனவே, இவையெல்லாம் பொய் நாடகம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

சம்பந்தனைவிடவும் தான்தான் தமிழ் தேசியவாதி, வீரன் என்பதை காட்டிக்கொள்வதற்கான முயற்சியிலேயே விக்னேஸ்வரன் இறங்கியுள்ளார். அதற்காகவே அடிப்படை வாதத்தைக் கையில் எடுத்துள்ளார். உலகில் பழமையான மொழி தமிழ் என்றெல்லாம் கூறினால் இலகுவில் மக்களை கவர்ந்துவிடலாம் என எண்ணியே அவ்வாறு உரையாற்றியுள்ளார்.

வடக்கு மக்கள் இன்று பிரிவினைவாதத்தை நிராகரித்துள்ளனர். 16 ஆக இருந்த கூட்டமைப்பின் எம்.பிக்கள் எண்ணிக்கை 10 ஆக குறைவடைந்துள்ளது. யாழ்.மாவட்டத்திலிருந்து சுதந்திரக்கட்சி ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவாகியுள்ளார். அதேபோல் ஹக்கீம் போன்றவர்களின் அழுத்தம், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அதாவுல்லா வெற்றிபெற்றுள்ளார். இதன்மூலம் தமிழ், முஸ்லிம் மக்கள் பிரிவினைவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் நிராகரிக்கின்றமை புலனாகின்றது.

எனவே, அங்கஜனுக்கும், அதாவுல்லாவுக்கும் அமைச்சுப்பதவிகளை வழங்கவேண்டும். நடுநிலையாக செயற்படக்கூடிய அரசியல்வாதிகளை நாம் பலப்படுத்தவேண்டும். அப்போதுதான் சம்பந்தன், விக்னேஸ்வரன், ஹக்கீம், ரிஷாட் போன்றவர்களின் இனவாத, அடிப்படைவாத அரசியலை தோற்கடிக்ககூடியதாக இருக்கும்.” – என்றார்.

கட்சி உறுப்பினர்களுக்கு திகா வாய்ப்பூட்டு! 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாக சபைக் கூட்டம் அதன் தலைவரும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவருமான பழனி திகாம்பரம் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) அட்டன் பீக்ரெஸ்ட் விருந்தகத்தில் நடைபெற்றது. இதில் பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

· தொழிலாளர் தேசிய சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை வினைத்திறன் மிக்க சேவைகளினூடாக மேற்கொள்ள அங்கத்தவர்களும் உத்தியோகத்தர்களும் திடசங்கற்பம் பூணுதல்.

· நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் பழனி திகாம்பரம், மயில்வாகனம் உதயகுமார் ஆகிய இருவரும் வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்து ஒத்துழைப்பு வழங்கிய அங்கத்தவர்கள், உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சகோதர தொழிற்சங்க அமைப்புகள் உட்பட பலருக்கும் நன்றி தெரிவித்தல்.

· தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி ஆகியவற்றுக்கு விரைவில் பேராளர் மாநாட்டை நடத்தி, ஜனநாயக ரீதியில் தேர்தல் ஊடாக முக்கிய பதவிகளுக்கு உத்தியோகத்தர்களை நியமித்தல்.

· கட்சியின் கட்டுப்பாட்டையும் ஒற்றுமையையும் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அனைவரது செயற்பாடுகளும் அமைய வேண்டும். அதேநேரம், கட்சியின் உள்விவகாரங்கள் தொடர்பாக தன்னிச்சையாக யாரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

· கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்பவர்களுக்கு எதிராக எந்த விதமான பாகுபாடும், பாரபட்சமும் இன்றி பதவி நிலைக்கு அப்பால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல்.

· தொழிலாளர் தேசிய சங்கத்தின் யாப்புக்கு அமைய, அதன் உள்ளடக்கத்தை தெரிந்து கொள்ளாமல் சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். எனவே, இனிமேல் யாப்பின் அடிப்படையில் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்தல்.

மேற்படி நிர்வாக சபையில் உள்ள 21 உறுப்பினர்களில் பின்வருவோர் கலந்து கொண்டார்கள்.

பழனி திகாம்பரம் – தலைவர், மயில்வாகனம் உதயகுமார் – பிரதித் தலைவர், எஸ். பிலிப் – பொதுச் செயலாளர், ஜே.எம். செபஸ்டியன் – நிதிச் செயலாளர், சோ. ஸ்ரீதரன் – பிரதி நிதிச் செயலாளர் உட்பட உபதலைவர்களான வீ.கே. ரட்னசாமி, ஓ.எஸ். மாணிக்கம், எஸ். இராசமாணிக்கம், வீ. சிவானந்தன், ஏ. இராஜமாணிக்கம், உதவிச் செயலாளர்களான எஸ். வீரப்பன், ஏ. வைல்ட்மேரி,

பி. கல்யாணகுமார், ஆர். சிவகுமார், தேசிய அமைப்பாளர் ஜீ, நகுலேஸ்வரன், பிராந்திய தேசிய அமைப்பாளர்களான ஆர். விஜயவீரன், கே. கல்யாணகுமார், ஏ. பிரசாந்த், நிர்வாக இயக்குனர் டாக்டர் அழகமுத்து நந்தகுமார் ஆகியோர்.

கருவை இயக்கும் மங்கள! பொதுச்செயலாளர் பதவியும் குறிவைப்பு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் இடைக்கால தலைவராக கருஜயசூரிய நியமிக்கப்படும் பட்சத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக மங்கள சமரவீர தெரிவுசெய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பொதுத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் மங்கள சமரவீரவுக்கு அழைப்பை ஏற்படுத்திய ரணில் விக்கிரமசிங்க அவரை உடனடியாக கொழும்புக்கு அழைத்து, கட்சி மறுசீரமைப்பு பற்றி கலந்துரையாடியுள்ளார்.

இதன்படி மங்கள சமரவீரவால் மறுசீரமைப்பு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கட்சியின் தலைமைப்பதவியை கருஜயசூரியவுக்கு வழங்குமாறும் கோரியுள்ளார். எனவே, கருஜயசூரிய தற்போது தலைமைப்பதவி தொடர்பில் விடுத்துள்ள அறிவிப்பின் பின்னணியில் மங்கள சமரவீரவே செயற்படுகின்றார் எனக் கூறப்படுகின்றது.

கருஜயசூரியவின் கோரிக்கையை ஏற்று அவருக்கு தலைமைப்பதவி வழங்கப்படும் பட்சத்தில் பொதுச்செயலாளர் பதவி மங்களவுக்கு வழங்கப்படலாம் எனவும், இது தொடர்பான கோரிக்கையை அவர் ஏற்கனவே முன்வைத்துள்ளார் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

திலகர்மீது கை வைக்க அஞ்சும் திகா! நேற்றைய கூட்டத்தில் ‘கப்சிப்’!!

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் நிர்வாகக் குழு அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் நேற்று கூடியதுடன், பல முக்கியமான தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

நிர்வாகக் குழுவுக்குள் இரண்டு பேர் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.அத்துடன், தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பேராளர் மாநாடு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

பேராளர் மாநாட்டில் கட்சியின் உயர் பதவிகள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்க ஏகமானதாக முடிவுசெய்யப்பட்டது.

இங்கு கருத்து வெளியிட்டிருந்த பழனி திகாம்பரம்,

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் அதன் அரசியல் பிரிவு என்பன ஒரு ஜனநாயக பண்பை பேணும் கட்டமைப்பாகும். அனைவருக்கும் இங்கு சுதந்திரமாக கருத்துகளை வெளியிட முடியும்.

எமது பேராளர் மாநாட்டில் கட்சியின் தலைவர் பதவி, பொதுச் செயலாளர் பதவி, தேசிய அமைப்பாளர் பதவி, நிதி செயலாளர் பதவி மற்றும் கட்சியின் ஏனைய உயர் பதவிகளுக்கு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எவர் வேண்டுமானாலும் போட்டியிடலாம். பேராளர் மாநாட்டில் பதவிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிலாளர் தேசிய முன்னணின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து திலகரை நீக்குவது பற்றியோ அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாகவோ விரிவாக ஆராயப்படவில்லை எனவும், பேராளார் மாநாட்டை கூட்டி பொதுச்செயலாளரை தெரிவுசெய்யும்வரையில் புதியவர் நியமிக்கப்படமாட்டார் எனவும் கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

போலி 5 ஆயிரம் ரூபா நாணயத்தாளுடன் எல்லயில் இருவர் கைது

எரிபொருள் நிலையமொன்றில் போலி ஐயாயிரம் ரூபா நோட்டினைக் கொடுத்த இரு இளைஞர்களை,எல்ல பொலிஸார் இன்று (24) கைது செய்துள்ளனர்.

எல்ல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஹெலஹல்ப்பே எரிபொருள் நிலையத்தில், மோட்டார் சைக்கிளொன்றிற்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டு, அம் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் தம்மிடமிருந்த ஐயாயிரம் ரூபா நோட்டினை எரிபொருள் நிலையத்திற்கு வழங்கினர்.

பணத்தை பெற்ற எரிபொருள் நிலையத்தினர், அந் நோட்டில் மாற்றமொன்றினைக் கண்டு,அது குறித்து எல்ல பொலிஸாருக்கு அறிவித்தனர். உடனடியாக அங்குவிரைந்த பொலிசார் பணநோட்டினைப ரிசீலனைசெய்தபோது, அப் பணநோட்டுபோலிநோட்டென்பதைஉறுதிப்படுத்தி, அந் நோட்டினைவழங்கிய இரு இளைஞர்களையும் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட இவ்விருவரும்,விசாரணையின் பின்னர் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று,எல்லபொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிஏ.கே.எம். அலகியவன்ன தெரிவித்தார்.

எம். செல்வராஜா, பதுளை

இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து 2,811 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில்  மேலும் 6 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,811 ஆக அதிகரித்துள்ளது.

130 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிசென்ற பஸ் விபத்து – ஐவர் படுகாயம்!

கொழும்பிலிருந்து பதுளையை நோக்கிவந்து கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்று வீடொன்றின் மீது மோதிவிபத்துக்குள்ளாகியதில், பயணிகள் ஐவர் கடுங் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இவ் விபத்து, இன்று காலை, ஹல்துமுள்ளை நகரில் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் கடுங்காயங்களுக்குள்ளானவர்களில் நான்குபேர் தியத்தலாவை அரசினர் மருத்துவமனையிலும், மற்றவர் ஹல்துமுள்ளை அரசினர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

காயமுற்றஐவரும்,விபத்துக்குள்ளான பஸ்சில் பயணித்தவர்களாவர். பஸ் மோதி யவீட்டில் எவரும் இல்லாதலால்,எவருக்கும் காயம் ஏற்படாதபோதிலும் ,குறிப்பிட்டவீட்டிற்கு பலத்தசேதங்கள் ஏற்பட்டுள்ளன.

பஸ்ஸின் வேகம் கட்டுப்படுத்தப்படாதலாலேயே, இவ் விபத்து இடம்பெற்றதாக,விசாரணைகளைமேற்கொண்டபொலிசார் தெரிவித்தனர்.

எம். செல்வராஜா, பதுளை

‘நிழல் ஓவியம்’ – 29 ஆம் திகதி பண்டாரவளையிலும் புகைப்பட கண்காட்சி

புகைப்படக் கலையில் பயிற்சியை முடித்துக்கொண்ட நாற்பது மலையக இளைஞர், யுவதிகளினால் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களின் கண்காட்சி ” நிழல் ஓவியம்” என்ற தொனிப் பொருளில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை மு.ப.8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை பண்டாரவளை கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஊவா ஹைலண்ட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் இக்கண்காட்சி இடம்பெறும் என ஊவா சக்தி பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் சுரேஷ் நடேசன் தெரிவித்தார்.

மலையக இளைஞர், யுவதிகளின் புகைப்பட கலை ஆர்வத்தை தூண்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டாவது கண்காட்சி இதுவாகும்.

இக் கண்காட்சிக்கு மாற்று கொள்கை நிலையம், ஊவா சக்தி பவுண்டேஷன் மற்றும் ஜி.டீ.ஸ்ஸட் என்பவை அனுசரணை வழங்குகின்றன.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

தோட்ட தொழிலாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய கறுப்பு ஆடை கும்பல்!

0
இரத்தினபுரி காவத்தை நீலகாமம் இல 01 பிரிவில், தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீடு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் 22.04.2026 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தோட்டங்களில் பாதுகாப்பு கடமைகளுக்கு என பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என கூறிக்கொண்டு...

பிரேமலால் ஜயசேகரவுக்கு பிணை: வெளிநாடு செல்லத் தடை!

0
டி.சந்ரு நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நுவரெலியாவில் நபரொருவருக்கு துப்பாக்கி முனையில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக, நுவரெலியா காவல்துறையினரால்...

அமைதி பேச்சுக்கு ஈரான் நிபந்தனை விதிப்பு!

0
பொருளாதாரத் தடைகள் மற்றும் முற்றுகையை அமெரிக்கா விலக்கிக் கொண்டால் மட்டுமே, அமைதி பேச்சில் ஈரான் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவுக்கான ஈரானின் தூதுவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமைதியான அரசியல் தீர்வு அல்லது போர்ச் சூழல்...