Home Blog Page 3890

‘கொரோனா’வால் நடுத்தெருவுக்கு வந்துள்ள நடிகர்கள்

கொரோனா அச்சுறுத்தலால் திரையுலகம் 5 மாதங்களுக்கு மேலாக முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் நடிகர்கள் வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள்.

இந்தி நடிகர் சோலங்கி திவாகர் டெல்லியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்கிறார். தமிழில் ஒரு மழை நான்கு சாரல், மவுனமழை, பாரதிபுரம், நானும் ஒரு பேய்தான் ஆகிய படங்களை இயக்கி உள்ள டைரக்டர் ஆனந்த் முகலிவாக்கத்தில் மளிகை கடை திறந்துள்ளார். பிரபல மராத்தி நடிகர் ரோஹன் பட்னேகர் கருவாடு வியாபாரம் செய்கிறார்.

இந்த நிலையில் மலையாள நடிகரான வினோத் கோவுர் மீன் வியாபாரியாக மாறி இருக்கிறார். இவர் கழநோல் கனவு, ஆதாமின்டே மகன், புதிய தீரங்கள், உஷ்தக் ஓட்டல், வர்ஷம், படடம்போல், பிரேமம் உள்பட பல மலையாள படங்களில் நடித்துள்ளார்.

வினோத் கூறும்போது, கொரோனாவால் திரையுலகம் முடங்கி வேலை இல்லாமல் இருக்கிறேன். இதனால் நண்பர்கள் ஆலோசனையின் பேரில் மீன் கடை திறந்து இருக்கிறேன்” என்றார்.

கூட்டணியின் பங்காளியொருவர் விரைவில் ‘பல்டி’!

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சியொன்றின் பிரமுகர் ஒருவர் விரைவில் கட்சி தாவவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணியில் நிதி விவகாரத்துக்கு பொறுப்பாக இருக்கும் அரசியல்வாதியொருவரே இவ்வாறு கட்சிமாறவுள்ளார் எனவும், இதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருவதாகவும் அறியமுடிகின்றது.

நிதி அறிக்கையை சமர்ப்பிக்காமல் நீண்டகாலமாக இழுத்தடிப்புசெய்துவரும் குறித்த அரசியல்வாதிக்கு எதிராக கட்சி உறுப்பினர்கள் சிலர் தலைமைப்பீடத்திடம் முறையிட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் அவரை கட்சியைவிட்டு நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

உலகளவில் 2 கோடியே 53 லட்சம் பேருக்கு கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 35 லட்சத்து 86 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 35 லட்சத்து 86 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 60 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 8 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

மாகாணசபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சி தனிவழி?

மாகாணசபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆராய்ந்துவருவதாக அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இலங்கையில் வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள அரசாங்கம், அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன்படி இடைக்கால கணக்கறிக்கையில்  மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன. இந்நிலையிலேயே தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் அவதானம் செலுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற சு.கவின் மத்தியசெயற்குழுக் கூட்டத்திலும் இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் நுவரெலியா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் மொட்டுடனும் இணைந்து சுதந்திரக்கட்சி போட்டியிட்டது. எனினும், மொட்டு கட்சியால் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு கடும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. பிரச்சாரங்களின்போது சரமாரியாக சொற்களைகள் தொடுக்கப்பட்டன. ஆசனபங்கீட்டிலும் அநீதி இழைக்கப்பட்டது என்ற கருத்து நிலவுகின்றது.
 
எனவேதான் மாகாணசபைத் தேர்தலில் தனிவழி செல்வது பற்றி ஆராயப்பட்டுவருகின்றது. இதன்படி சில மாகாணங்களில் தனித்தும் சில மாகாணங்களில் கூட்டு பயணத்தையும் சு.க. மேற்கொள்ளலாம் என நம்பப்படுகின்றது.
சுதந்திரக்கட்சியின் வருடாந்த மாநாடு செப்டம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பிலும் தீர்மானமொன்று நிறைவேற்றப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

பஸிலுக்காகவே அவசரமாக திருத்தப்படுகின்றது ’19’!

அமெரிக்க பிரஜையான பஸில் ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்காகவே அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் அவசர அவசரமாக திருத்தப்படுகின்றது – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” ராஜபக்சக்களின்கீழ் 141 அரச நிறுவனங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக்கூட வகிக்காத பஸில் ராஜபக்சவின்கீழ் உத்தியோகப்பூர்வமற்ற ரீதியில் 7 திணைக்களங்கள் உள்ளன. ஜனாதிபதி செயலணி பிரதானியாக அவரே செயற்படுகின்றார்.

இந்நிலையில் அமெரிக்க பிரஜையான பஸில் ராஜபக்சவை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவந்து பொருளாதாரத்தை இயக்கும் அமைச்சை அவரிடம் ஒப்படைப்பதற்காகவே 19 ஆவது திருத்தச்சட்டம் அவசர அவசரமாக திருத்தப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் எனக்கூறியவர்கள் அவசரமாக 19 ஐ திருத்துவதன் நோக்கமும் இதுதான்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘அலையில் அள்ளுண்டுச்சென்ற பூண்டுலோயா இளைஞர்கள்’ –

கொழும்பு, கல்கிஸ்ஸை கடற்பகுதியில் நீராடச்சென்ற இளைஞர்கள் இருவர் அலையில் அள்ளுண்டுச்சென்று காணாமல்போயுள்ளனர்.

பூண்டுலோயா ஹெரோ தோட்டத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர்கள் இருவரே இன்று இவ்வாறு அலையில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

கொழும்பில் தொழில்புரியும் பூண்டுலோயா பகுதியைச் சேர்ந்த சுமார் 17 இளைஞர்கள் இன்று கல்கிஸ்ஸை கடற்பகுதிக்கு நீராடச்சென்றுள்ளனர். அவ்வேளையிலேயே ராட்சத அலையில் சிக்கி இருவர் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் உயிர்தப்பினர்.

காணாமல்போயுள்ள இருவரை தேடும் பணியில் சுழியோடிகளும், கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

பதவி துறக்கிறார் ஜயந்த! பாராளுமன்றம் வருகிறார் பஸில்!!

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் மாற்றியமைக்கப்பட்ட பின்னர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வரவுள்ளார் எனவும், அவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக மொட்டு கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட எம்.பி. பதவியை துறக்கவுள்ளார் என மொட்டு கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் இரட்டை பிரஜாவுரிமைகொண்ட நபரொருவர் தேர்தலில் போட்டியிடமுடியாது. இதனால் எம்.பி. பதவியை வகித்த கீதா குமாசிங்கவுக்கு கடந்தமுறை பதவியை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் போட்டியிடலாம் என்ற வகையில் 19 மாற்றியமைக்கப்படவுள்ளது. சுமார் மூன்று மாதங்களில் இதற்கான பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்பின்னரே பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவார் எனவும், அவருக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

கண்காட்சியை பார்வையிட்ட ஜீவன் – கலைஞர்களின் கோரிக்கையையும் ஏற்றார்

மலையகத் தமிழர்களின் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு விழுமியங்களையும், வாழ்வியலையும் பிரதிபலிக்கும் வகையிலான புகைப்பட கண்காட்சி  இன்று 23 ஆம் திகதி தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

மலையக மக்களின் மண் வாசனை தரும் இது போன்ற செயற்பாடுகளால் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் என இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், கண்காட்சியை  ஏற்பாடு செய்த குழுவினருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அத்தோடு கண்காட்சியில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகள் தங்களுடைய திறமையை விருத்தி செய்ய புகைப்படக் கருவி ஒன்றினை வழங்குமாறு அமைச்சருக்கு கோரிக்கை வைத்தனர், அவர்களுடைய கோரிக்கையை ஏற்று இன்னும் ஓரிரு மாதங்களில் அவர்களுக்கான புகைப்பட கருவியை பெற்றுத்தருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

க.கிசாந்தன்

எந்த கொம்பனாலும் முற்போக்கு கூட்டணியை அழிக்க முடியாது – ராதா

” எந்த கொம்பன் வந்தாலும் மலையக மக்களின் மாபெரும் அரசியல் இயக்கமான தமிழ் முற்போக்கு கூட்டணியை அழிக்கவே முடியாது.” – என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா, பதுளை, கண்டி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு 23.08.2020 அன்று மதியம் அட்டன் நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியாகவே நாம் போட்டியிட்டோம். அதில் வெற்றிபெற்று ஐந்து ஆண்டுகளாக எமது மக்களுக்கு பல சேவைகளை முன்னெடுத்தோம். அவற்றை முன்னிலைப்படுத்தியே பிரச்சாரம் செய்தோம். எமது சேவையை அங்கீகரித்திருப்பதாலேயே இரண்டாவது முறையும் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களை மக்கள் வெற்றிபெற வைத்துள்ளனர்.

கொழும்பிலும், கண்டியிலும், பதுளையிலும், நுவரெலியாவிலும் வாக்குகளை சிதறடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தம் தமிழ் முற்போக்கு கூட்டணி நூறுவீத வெற்றியை பெற்றுள்ளது. எம்.பியாக இருந்த எவரும் தோல்வியடையவில்லை. எனவே, எமது மக்களை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதிக்கு உரிய வகையில் சேவைகள் தொடரும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியாக பயணித்து எமது மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்போம். எந்த கொம்பன் வந்தாலும் தமிழ் முற்போக்கு கூட்டணியை அசைக்கமுடியாது.” – என்றார்.

க.கிசாந்தன்

‘சின்ன பையன் எங்களை சீண்டினால் பதிலடி கொடுப்போம்’ – திகா முழக்கம்

” எதிர்க்கட்சியில் இருந்தாலும் மலையக மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம். எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் அதற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணியாக போராடுவோம்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வரவேற்கும் நிகழ்வு 23.08.2020 அன்று அட்டனில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே திகாம்பரம் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.

” தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக பாடுபட்ட, பிரச்சாரங்களில் ஈடுபட்ட அதேபோல் வாக்களித்த மக்கள் என அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நான் எனது தந்தை, தாத்தாமாரின் போஸ்டர்களை ஒட்டி அனுதாப வாக்கு கேட்கவில்லை. குறைகூறும் அரசியலையும் முன்னெடுக்கவில்லை. கடந்த நான்கரை வருடங்களில் முன்னெடுத்த சேவைகளை சுட்டிக்காட்டியே மக்கள் மத்தியில் வாக்கு கேட்டேன். எமது மக்களும் அங்கீகாரம் வழங்கினர்.

500 வீடுகள்கூட கட்டப்படவில்லை என சின்னப்பையன் ஒருவர் பாராளுமன்றத்தில் பேசுகின்றார். அந்த சின்ன பையனுக்கு கண் தெரிகின்றதா, காது கேட்கின்றதா என தெரியவில்லை. அவ்வாறு தெரிந்திருந்தால் பாராளுமன்றத்தில் அப்படியொரு உரையாற்றவேண்டிய தேவை வந்திருக்காது. ஆனால் நாம் என்ன செய்தோம் என்பது மக்களுக்கு தெரியும்.

நாங்கள் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. ஆனால் எங்களை சீண்ட நினைத்தால் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம்.

இந்த அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருக்கின்றது. அதனை வைத்து தேர்தல்முறையைக்கூட மாற்றலாம். அவ்வாறு மாற்றினால் அது மலையக பிரதிநிதித்துவத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் வீதியில் இறங்கி முற்போக்கு கூட்டணியாக போராடுவோம்.” – என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

அமைதி பேச்சுக்கு ஈரான் நிபந்தனை விதிப்பு!

0
பொருளாதாரத் தடைகள் மற்றும் முற்றுகையை அமெரிக்கா விலக்கிக் கொண்டால் மட்டுமே, அமைதி பேச்சில் ஈரான் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவுக்கான ஈரானின் தூதுவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமைதியான அரசியல் தீர்வு அல்லது போர்ச் சூழல்...

எல்ல நகரில் கஜமுத்துடன் இளைஞன் கைது!

0
எல்ல நகரில், 2 கோடி ரூபா மதிப்பில் விற்கத் தயாராக இருந்த “கஜமுத்து” (யானை முத்து) ஒன்றுடன் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார் ஹப்புத்தலை விசேட அதிடிப்படைனருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் எல்ல...